குடைமிளகாய் பொரியல்

குடைமிளகாய் பொரியல்

தேதி: April 6, 2016

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்

மொத்த நேரம்: 20 நிமிடங்கள்

5
Average: 4.2 (15 votes)

 

குடைமிளகாய் - 3
வெங்காயம் - 1
பொட்டு கடலை - 3 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை
உளுத்தம் பருப்பு


 

குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சிறிதாக நறுக்கவும்.
பொட்டுக்கடலையை பொடித்து வைக்கவும்.
கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைப் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அத்துடன் தூள் வகைகளை சேர்த்து கிளறவும்.
பின் குடமிளகாயுடன் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
குடைமிளகாய் பொரியல்
பின் பொடித்து வைத்த பொட்டு கடலைப் பொடியை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
குடைமிளகாய் பொரியல்
சுவையான குடை மிளகாய் பொரியல் தயார்.
குடைமிளகாய் பொரியல்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குடை மிளகாயை சாம்பாரில் போடுவோம்.. இப்படி பொரியல் பண்ணினது இல்ல... செம டேஸ்ட்.. பண்ணி பார்த்து பிறகுதான் கருத்து சொல்ல நினைத்தேன்...

Na intha website a first time use panura epadi use pananum theriyala pls konja yarathum help panuga dobut kekuratha irutha epadi kekanum athukana answer enga irukum nu ena guide panuga friends

தோழி நன்றாக உள்ளது. ஆனால் சின் வெங்காயம் அல்லது பெரிய வெங்காயமா

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

(வெங்காயம் 1 என‌ எழுதி இருக்கிறாங்க‌ சின்ன‌ வெங்காயம் 1 பத்தது) பெரிய‌ வெங்காயமக‌ தான் இருக்கும்.

Tq

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

nanum 2days ah use panren onum puriyala