சுற்றிச் சுற்றி...

சென்ற வருட இறுதியில் பாடசாலையில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. சிலர் ஓய்வு பெற்றார்கள்; சிலர் வேலை மாற்றம் பெற்றுப் போனார்கள்.

இலங்கையைப் போலல்ல இங்கு. அங்கானால் ஒரு தடவை ஆசிரியையாக வேலை கிடைத்தால் அது அரச உத்தியோகம், பிறகு மாற்றங்கள் கல்வி இலாகாவினால் கொடுக்கப்படும். குடும்ப நலனுக்காகவோ வேறு தேவைக்காவோ நாமாக மாற்றம் பெறுவது சுலபம் அல்ல.

நான் வேலையில் இணைந்த காலத்தில் முதல் இரண்டு (மூன்றோ!! இப்போ நினைவுக்கு வர மறுக்கிறது.) வருடங்கள் கஷ்டப் பிரதேசப் பாடசாலை ஒன்றில் கற்பிக்க வேண்டும் என்றிருந்தது.

கர்ர்ர்... தடம் மாறிப் போகிறேன். ;D மீதியை வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்.

மாற்றங்கள், எதிர்காலத்திற்கான என் தொழில் தொடர்பான சேகரிப்புகளை எடிட் செய்ய வைத்திருக்கிறது. கிலோ கணக்கில் அச்சிட்ட தகவல்களும் பல்வேறு பாடங்கள் தொடர்பான அப்பியாசங்களும் மீள்சுழற்சித் தொட்டிக்குப் போயிற்று.

புத்தகங்கள் கட்டி வரும் ப்ளாஸ்டிக் பைண்டர்கள்... அழகாக இருப்பதால் வீசப் பிடிக்காமல் மீண்டும் என் சேகரிப்பில் சேர்ந்து கொண்டன. இம்முறை ஒரு மாறுதல் - கைவினைக்கான சேகரிப்புக் குவியலில்.

ஆரம்பத்தில் இவற்றை புத்தகங்களில் மாட்டுவது நாங்கள்தான்.

வருட இறுதியில் மறு வருடத்திற்கான பாடத்திட்டங்களைத் தயார் செய்துவிடுவோம். தேவையானவற்றை அச்சிட்டு, சிறு தொகுதிகளாக இருந்தால் ஜெராக்ஸ் இயந்திரத்தையே, சேர்த்து ஸ்டேப்பிள் செய்ய ஆணையிடுவோம். சற்றுப் பெரிதாக இருப்பவற்றைப் புத்தகங்களாகக் கட்டுவோம்.

ஒவ்வொரு அறைக்கும் ஒரு நிறம் உண்டு. புத்தக அட்டை அறையின் நிறத்தில் இருக்கும். வலது பக்க மேல் மூலையில் ஒரு இலக்கம் - இது வகுப்பு ஒழுங்கில் எந்த இடத்தில் மாணவர் இருக்கிறார் என்பதைக் குறிக்கும். தவறுதலாக எங்காவது விட்டுவிட்டாலும் யாருடைய புத்தகம் என்பதைக் கண்ட்பிடித்து விடலாம். பெயர் எழுதுவது கிடையாது. மறு வருடம் நன்றாக இருக்கும் புத்தகங்களை வைத்துக் கொள்ளப் பார்ப்போம். சிக்கனம்! :-) தேவையான பக்கங்களைப் புதுப்பித்து விடுவோம். சின்னவர்கள் கையில் கிடைத்ததும் அவர்கள் சந்தோஷமாக விளையாடி உருவி வைப்பார்கள் என்பது வேறு விடயம். :-)

புத்தகம் கட்டும் போது, இயந்திரத்தை உயரம் குறைந்த மேசைக்கு மாற்றினால்தான் என்னால் வேலை செய்ய முடியும். கைகளுக்கும் தோளுக்கும் வசதி. சிரமமில்லாமல் அழுத்தம் விழுவதால் நானாக வலோற்காரமாக அழுத்த வேண்டியிராது.

வீட்டில் எங்கள் அறையின் ஒரு மூலையில், நான்கைந்து மின்சாரக் கம்பிகள் கண்டபடி தொங்கிக்கொண்டிருந்தன. 'ஹையா! பிடுங்கிச் சேர்த்த நவீன ப்ளாஸ்டிக் ஸ்பைரல் பைண்டிங்குகளைப் பயன்படுத்த ஒரு நல்ல சந்தர்ப்பம்,' என்று மனது குதித்தது.

இப்போ அந்த மூலை ஒழுங்காகத் தெரிகிறது.

தேவையானால் சுலபமாகப் பிரிக்கலாம். ஒரு ஓரத்தில் பிடித்து இழுத்தால் பிரிந்து வருகிறது. மீண்டும் மாட்டலாம்.வெவ்வேறு அளவுகளில் பைண்டிங்குகள் கிடைக்கின்றன.

இவற்றை வைத்துச் செய்ய... இன்னொரு கைவினையும் சிந்தனையில் இருக்கிறது. அதைச் செயற்படுத்திய பின்னர் சொல்கிறேன்.

இப்போதைக்கு.... இமாவுக்கு நல்லிரவு. கொர்ர்ர்ர்... ;)

5
Average: 5 (7 votes)

Comments

அன்பு இமா,

ஒவ்வொரு அறைக்கும் தனி வண்ணங்கள், புத்தகங்களில் இலக்கங்கள் - நல்ல யோசனை.

தொங்கும் வயர்களை ஸ்பைரல் பைண்டிங் கொண்டு கட்டியிருப்பது அருமை.

அன்புடன்

சீதாலஷ்மி

//வீசப்பிடிக்காமல் // ம்ம் கைவேலை செய்யுற எல்லாருக்கும் இந்த நோய் வரும்போல .மீ யும் வர வர தேங்காய் சிரட்டையை கூட ஓரமா வச்சுட்டு என்ன செய்யலாம் எண்டு ஜோசிக்க தொடங்கி இருக்கன்.கடைசீல ''தேவை என்னெண்டு ஜோசிசுட்டு சேகரிச்சா பறவாயில்லை இப்பிடி குப்பையா சேத்து வச்சுட்டு ஜோசிக்கிற வேல வைக்கப்படா ''எண்டு சொல்லி ஹஸ் தூக்கி வீசினா சரி .அல்லது ஒரு சிரட்டைய வச்சுக்கொண்டு யூ டியூப் ல தேடுறது .இப்பிடி பட் நீங்க சூப்பரா ஐடியா பண்ணி வெளிப்படுத்தி இருக்கிறீங்கள்

;))) சிரிச்சுட்டேன் சீதா. ;)

//ஸ்பைரல் பைண்டிங் // அதையே வேறு புத்தகங்கள் கட்ட ஏன் பயன்படுத்துறது இல்லை என்று தெரியல.

‍- இமா க்றிஸ்

//தேங்காய் சிரட்டையை கூட ஓரமா வச்சுட்டு // அது அபூர்வமான பொருளாச்சே! நானும் வைச்சிருந்தேன். கர்ர்.. க்றிஸ் மரம் நடக் கிண்டேக்க சிரட்டையால மண் எடுத்துப் போட்டு ஊத்தையாக்கீட்டார். ;( இவ்வளவுக்கும்... சைஸ் சொல்லி வாளால வெட்டி தண்ணியில ஊற வைச்சு கறுப்பாக்கி எடுத்தது. தும்பையும் எடுத்து வைச்சன். காணேல்ல இப்ப. :-)

ஃபோட்டோதான் தெளிவா வரேல்ல. நேரம் கிடைக்கேக்க, பகலில எடுக்க வேணும்.

‍- இமா க்றிஸ்

உங்க‌ பதிவைப் படிச்சி முடித்ததும் அருகேயிருந்த‌ டெலிபோன் ரிசீவர் கண்ணில் பட‌ அந்த‌ ஒயரும் எனக்கு ஸ்பைரல் பைண்டிங் பண்ணலாம் போல‌னு தோணுச்சு.

இப்படியே சேர்த்து சேர்த்து வச்சி ஒரு குவியலே ஆயிடுச்சி. :))

ஆனாலும் நாமே செய்வது ஒரு வகை சந்தோஷமே.

//டெலிபோன் ரிசீவர் கண்ணில் பட‌ அந்த‌ ஒயரும்// :-) ஊர்ல எங்க பக்கத்து வீட்டு அங்கிள் நினைப்பு வருது இந்த வரியைப் படிக்க. அங்கிள் பிரின்ஸிபாலா இருந்தாங்க. அவங்களுக்கு ரிசீவர் ஒயர் முறுக்கிட்டு இருந்தா பிடிக்காது. அதை சீராக்கிட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க என்று என் மகன் சொல்லுவார். :-)

//இப்படியே சேர்த்து சேர்த்து வச்சி ஒரு குவியலே ஆயிடுச்சி. :))// இங்க வந்து பாருங்க. குவியலா மட்டும்தான் இல்லை. :)) பெட்டில லேபிள் போட்டு வைச்சிருக்கேன்.... m&m டப்பா, பால் பாட்டில் மூடி... இப்படி. ;)

‍- இமா க்றிஸ்