மன‌ போராட்டம்

ஹலோ தோழிகளெ
நான் பள்ளியில் படிக்கும்போது ஒருவரை காதலித்தேன். நாங்கள் 7 வருடம் காதலித்தோம். எப்போவாவது சண்டை வரும் சில‌ நாட்கள் பேசாமல் இருப்போம் பிறகு சேர்ந்து விடுவோம். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் அவர் தான் என் வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருந்தேன். நான் கல்லூரி சேர்ந்த‌ பிறகும் தொடர்ந்தது. நான் கல்லூரியில் 2 வது வருடம் படித்து கொண்டிருக்கும்பொழுது ஊருக்கு சென்றிருந்தேன். அங்கு என் தங்கை (பெரியம்மா மகள்) சந்தித்தேன். எனக்கும் அவளுக்கும் 1 வயது தான் வித்தியாசம். அவள் நல்ல‌ அழகு நான் மானிறம். நாங்கள் நெருங்கி பழகினோம். அவளும் ஒருவரை கதலித்து இருந்தால் அவருடன் நான் போனில் பேசினேன். அவளும் நான் காதலித்தவருடன் போனில் பேசினால். சில‌ நாட்களுக்கு பிறகு எனக்கும் நான் காதலித்தவருக்கும் சண்டை வந்து 1 மாதத்திற்க்கும் மேலாக‌ பெசாமலிருந்தோம். நான் அவரை சாமதனப்படுத்த‌ எவ்வளவொ முயற்ச்சித்தேன். ஆனால் முடியவில்லை. மன‌ சங்கடத்துடன் மறுபடியும் ஊருக்கு சென்றென். என் தங்கையிடம் சொல்லி அழுதேன் அவளும் தன் காதலனுடன் பிரிந்து விட்டதாக‌ சொன்னாள். 4 மாதத்திற்க்கு பிறகு என் தங்கை எனக்கு கால் செய்தால் நான் இருப்பது ஊட்டி அவள் இருப்பது மதுரை. மதுரைக்கு ஒருவர் வந்ததாகவும் அவர் அவளை காதலிப்பதாகவும் கூறினாள் அவர் ஊட்டி தான் பிறகு தான் தெரிந்தது அவர் நீ காதலித்தவர் என்று என‌ கூறினால். நான் வேண்டாம் அவரை விட்டு விடு அவர் தான் என் வாழ்க்கை என்று கூறினேன் ஆனால் அவள் கேட்க்காமல் அவரை திருமணம் செய்துக்கொண்டாள். அவரை மறக்க‌ முடியாமல் மனோதத்துவ‌ நிபுனரிடம் சென்றென். அப்படியும் என்னால் மறக்க‌ முடியவில்லை. மனதுக்குள் அவருடனே பேசிக்கொண்டிருக்கிறென். எனக்கும் இப்பொழுது திருமனம் ஆகி 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. சந்தோசமாக‌ தான் உள்ளேன் ஆனாலும் எப்பொழுதும் அவன் ஞாபகமாகவே உள்ளேன். நான் வேலைக்கு செல்லும் பெண். யாருமில்லா நேரங்களில் வீட்டில் தனியாக‌ பேசுகிறேன் சிரிக்கிறேன். மனதுக்குள் அவனுடனே பேசுகிறேன். ரோட்டில் நடக்கும்போழுது எதவது படித்த‌ பார்த்த‌ நகைச்சுவை ஞாபகமாகம் வந்தால் தனியாக‌ பேசுகிறென் சிரிக்கிறென். ஏதவது யோசித்து கொன்டிருக்கிறென். யோகா வகுப்புக்களுக்கு செல்ல‌ நேரம் இருப்பதில்லை. பைத்தியம் பிடித்தவள் போல் உள்ளேன் என் மன‌ அமைதியாக‌ இருந்து பல‌ வருடங்கள் ஆகி விட்டது என்ன‌ வேலை செய்தாலும் என் மனம் அவரை தான் நினைத்து கொண்டிறுக்கிறது. எப்படி மன‌ அமைதி பெறுவது பழைய‌ நினைவுகளை மறக்க‌ உதவுஙள் ஒவ்வொரு நிமிடமும் அழுது கொண்டிருக்கிறென் சிரமம் பார்க்காமல் உஙளுக்கு தெரிந்ததை சொல்லி எனக்கு உதவுங்கள்

//7 வருடம் காதலித்தோம்.// இல்லை. அது உண்மையாக இருந்திருந்தால் பிரிந்திருக்க மாட்டீர்கள் இல்லையா!

//பிறகு தான் தெரிந்தது அவர் நீ காதலித்தவர் என்று என‌ கூறினால்.// அப்போ உங்கள் முன்னாள் காதலர் மறைக்காமல் தங்கையிடம் சொல்லியிருக்கிறார். அவருக்கு மறைக்கத் தோன்றவில்லை.

//எனக்கும் இப்பொழுது திருமனம் ஆகி 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. சந்தோசமாக‌ தான் உள்ளேன்// ம்.. ஒன்று இந்த சந்தோஷம் பொய். அல்லது மீதி பொய் நிலை.

//ஆனாலும் எப்பொழுதும் அவன் ஞாபகமாகவே உள்ளேன்.// இது உங்கள் கணவருக்கு நீங்கள் செய்யும் துரோகமாகத் தெரியவில்லையா! நீங்கள் மணமுடிக்காமலே இருந்திருக்கலாமே!

//யாருமில்லா நேரங்களில் வீட்டில் தனியாக‌ பேசுகிறேன் சிரிக்கிறேன்.// & //ரோட்டில் நடக்கும்போழுது எதவது படித்த‌ பார்த்த‌ நகைச்சுவை ஞாபகமாகம் வந்தால் தனியாக‌ பேசுகிறென் சிரிக்கிறென்.// சிரிப்பதுவும் பேசுவதும் காதலில் தோல்வியடைந்தவர்கள் மட்டும் செய்வது இல்லை. மனதில் அதிக சந்தோஷம் இருந்தாலும் இப்படி இருக்கலாம்.

//ஏதவது யோசித்து கொன்டிருக்கிறென்.// சரி, இனி என்ன யோசிக்கிறீர்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள். தேவையற்ற சிந்தனை என்று தோன்றினால் சிந்திக்கவே வேண்டாமே!

//மனதுக்குள் அவனுடனே பேசுகிறேன்.// இப்படிச் சொல்ல முடிகிறது என்றால்... 100% உங்களையறியாமல் நடக்கும் விஷயம் எனச் சொல்ல முடியாது. நீங்கள் நினைத்தால் இதிலிருந்து வெளியே வரலாம். வீட்டில் தனியே இருக்கும் போது என்கிறீர்கள். அப்போ குழந்தை அருகே இருப்பது இல்லையா! குழந்தையைக் கவனிக்கவே உங்கள் பொழுது போய்விடுமே!

//பைத்தியம் பிடித்தவள் போல் உள்ளேன் // உங்கள் தங்கைக்கு மணமாகிற்று. இனி நீங்கள் இன்னொருவரைப் பற்றி நினைப்பது சரியல்ல. இப்போ அவர் உங்கள் தங்கையின் கணவர். நீங்கள் இன்னொருவர் மனைவி & ஒரு குழந்தைக்குத் தாய். உங்களுக்கு என்று பொறுப்புகள் இருக்கிறது. சீராகப் போகும் வாழ்க்கையைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

தனியே இருப்பதைக் கொஞ்ச நாட்கள் தவிருங்கள். எப்பொழுதும் ஏதாவது வேலைகளைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். //என் மனம் அவரை தான் நினைத்து கொண்டிறுக்கிறது.// இனிமேலாவது அப்படியான எண்ணம் வரும் பொழுது உங்கள் கணவரை நினைக்க முயற்சி செய்யுங்கள்.

சில விடயங்களுக்கு வெளியே இருந்து தீர்வு கிடைக்காது; உள்ளேயேதான் இருக்கும். அதைப் புரிந்து கொள்ளாதவரை யாரும் உதவ இயலாது.

‍- இமா க்றிஸ்

Hai Geetha,

Neenga 7 years ah love Paninom nu Sollirukeenga. Avaruku unga mela love irunthuruntha epadi ungala vittutu poga mudiyum. ungal Kanavarai konjam ninaithu parungal. Ungal Husbund ena pavam seithar. Unga lover ungaluku seitha throkathai than neengal unga husbund ku seithu Konduirukeenga.

Ematri kalayanam Panni avangale santhosama irukum Podhu neenga en santhosama iruka kudathu.

Ungaluku Nalla Husbund and Alagana kulanthai kadaichuruku. neenga than maranum. unga valkkaiya neenga than santhosama amachukanum

நான் செய்யும் தவறுகள் எனக்கு புரிகிறது அதை நினைத்து தான் சில‌ நேரங்களில் எதையும் நினைக்க‌ கூடாது என்று வேறு வேலைகளில் ஈடுபடுவேன் ஆனால் டிவியிலோ புத்தகத்திலோ அவர் பெயரை கேட்டாலோ அல்லது ஞாபகம் படுத்தும் விதமாக‌ எதயாவது பார்த்தாலோ மாறி விடுகிறேன். தினமும் இப்படி தான் ஏதவது ஒன்று நடந்து விடுகிறது. மருந்து குடிக்கும்பொழுது குரங்கை நினைகாதே என்ற‌ கதையாகி விட்டது என் வாழ்க்கை

அன்பான‌ பெண்ணே,
இன்று நீ ஒரு ஆண்மகனின் (உன்னை நம்பும்)அருமையான மனைவி, அன்பான‌ குழந்தைக்கு பாசமான‌ தாய்.
இது தான் இன்றைய‌ நிசம், நாளைய‌ நடப்பு, உங்கள் அனைவரின் எதிர்காலம். இதை மறவாதே. உன் கையில் இறைவன் முக்கனியைத் தேனில் ஊறவைத்து அருமையான வாழ்க்கையாகத் தந்துள்ளான்.
ஏழாண்டுகளாக‌ உன்னைப் பிடித்து இருந்த‌ சனி விலகி விட்டது.
இறைவன் கொடுத்த‌ அமுதமான வாழ்க்கையை ரசித்து அனுபவிக்காமல் கைவிட்டுப் போன‌ விஷத்தை அடிமுட்டாளாக‌ ஏன்
தேடித் தேடி நினைத்து உன்னை நீயே பலவிதத்திலும் பாழ்படுத்திக் கொள்கிறாய்.
நீ சொன்ன‌ பலதும் நல்லதல்ல‌. அதை நான் இங்கு விமரிசனம்
செய்ய‌ விரும்பவில்லை, உன் எதிர்கால‌ வாழ்க்கைக்கு நல்லதல்ல‌.
கிட்டத்தட்ட‌ ஏழு ஆண்டுகளாக‌ அவர்கள் இருவரைப் பற்றியும்
நீ முழுமையாக‌ அறிந்து கொள்ளாமல் அவர்களுக்கு ஓர் ஊடகமாகப்
பயன் பட்டிருக்கிறாய் என்பதே என் கணிப்பு. முகமூடி அணிந்து
அவர்கள் ஜெயித்ததாக‌ (உன் தங்கையே!!!!) அவர்களிருக்க‌
நீ ஏன் உன்னை வருத்திக் கொள்கிறாய்.
உன் கணவரும் உன் குழந்தையும் இருக்கும் புகைப்படத்தினை
எப்போதும் உன்னுடன் வைத்திரு.
கம்பராமாயணத்தில் சுந்தர‌ காண்டத்தை தினந்தோரும் மாலையில்
அனுமார் படத்தினுக்கு முன்னால் விளக்கேற்றி வைத்து ஒரு 20 அல்லது
50 பாடல்களைப் ப்டித்து வா, முடியும் போது உளுந்து வடை மாலை
செய்து வழிபடு. இதற்கான வழிபாட்டு முறைகள் அடங்கிய‌ புத்தகம்
கடைகளில் கிடைக்கும். உன் மனமும் உடலும் சீராகி நல்ல‌ மனோ தைரியமும் மகிழ்ச்சியும் மனஒருமைப்பாடும் கிடைக்கும்.
நேரில் பார்த்தால் நல்ல‌ விளக்கம் தந்திருக்க‌ முடியும், நான் ஒரு
ஆசிரியை ஆனதால் என்ன‌ நடந்திருக்கும் என் ஊகித்தே இதை
எழுதியுள்ளேன். இனிமேல் இது மாதிரி எழுதாதே (வெளிப்படையாக‌)
பின்னாளில் இது எப்படியாகும் என்பதை அறியாமல்..
இனி நீ செய்ய வேண்டியது இறைவனை நம்பு, மனதை அலைபாய‌
விடாதே. எக்காரணம் கொண்டும் இந்த‌ அனுமார் வழிபாட்டின்
காரணத்தை யாரிடமும் யாரிடமும் யாரிடமும் கூறாதே. வழிபாட்டின்
முறைகளைக் கூறலாம் எதை வேண்டியும் இந்த வழிபாட்டினைச்
செய்யலாம். இன்று ராம‌ நவமி மிகவும் நல்ல‌ நாள், இதைப் பார்த்தவுடன் செய்யலாமே. ராமர் பட்டாபிஷேகப் படம் இருந்தால்
கூடப் போதும். இன்றே செய். மகளே, இறைவன் உனக்கு நீ வேண்டியது அனைத்தையும் தருவான். வாழ்த்துக்கள்.
விரைவில் ஒரு வாரம் கழித்து நல்ல‌ பதிலை வரும் வெள்ளி அன்று
எதிர் பார்க்கிறேன்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

காதல் ,நட்பு,சொந்தம் எந்த உறவாக இருந்தாலும் பிறள்வான மனநிலை அதாவது போல்ட் இல்லாமல் முடிவுகளில் நிதானம் இல்லாமல் வழவழா கொள கொளா என்று இருப்போர்,தனக்கு சாதகமாக மட்டும் சிந்திப்போர்,அதிக எதிர்மறை சிந்தனைகளை வெளிப்படுத்துவோர் இவ்வாறானவர்கள் அவர்களாகவே விலகிச்சென்றால் நின்மதி கொள்ள வேண்டும்.

7ஆண்டுகள் காதலின் பின் உங்களுக்கு பாதகமான முடிவை தந்தவர் திருமணத்தின் பின் தந்திருந்தால் உங்கள் வாழ்வும் சிந்தனையும் மனதளவு போராட்டமாக இருந்திராது.நிரந்தர வாழ்க்கை பிரச்சனை ஆகியிருக்கும்.

ஆகவே இப்போது யாரும் அறியாமல் உங்கள் மனதை நல்வழியில் கொண்டு செல்ல முடியும்.

இந்த வெளிப்படுத்தல் நிலை தொடருமானால் நாளை சம்மந்தப்பட்டவரிடத்தில் வெளிக்காட்ட கூட தயங்க மாட்டீர்கள்.அது பெரும் ஆபத்தில் முடியும்.

நல்ல பொழுதுபோக்குகளை நாடுங்கள்.குழந்தையும் கணவரும் சந்தோசபடும்படி நிறைய விஷயங்களை செய்யுங்கள்.

தொடர்ந்து நடப்பவற்றை உங்களோடு பொருத்திக்கொண்டு மகிழ்வாக வாழுங்கள்.குடும்பத்துடன் அடிக்கடி சுற்றுலா சென்று வாருங்கள்.

//ஏழாண்டுகளாக‌ உன்னைப் பிடித்து இருந்த‌ சனி விலகி விட்டது//பூங்கோதை சொன்னது போல்தான் அப்பாடா தப்பிச்சேன் என்று எடுத்துக்கொள்ளுங்கள்

Enakku thirumanam aagi 4 varidangal aagirathu. Madam en kulanthaikku 2 vayathaagirathu. Ippothu vidiyal kaalai Kanda kanavugal palikkum enru niraya Peru solla ketirukiren.athu polavey vidiyal kaalai nan 4.30 Mani irukum Kanda kanavai ninathu payanthu elunthu ukkaanthu Mani paarthen. Nan oru vandiyil payanam seithukondirukiren.share auto athu.nanum sari ennai sutri ullavargalum vellai udai aninthirukirom.nan antha vandiyil amaithiyaaga manathukkul aluthu kondirukiren. Amma eppadi parpen ini ungalai ena pulambukiren en kooda irukiravaridam. enathu kanavar arugil irupathai ponru unarthen . Enaku mugam theriyavilai. Avar solkirar ini amma un vayitril than kulanthaiyaga orukirarey ena samathaanapaduthukirar. En manam valikirathu. Irangum idam vanthathu nan mulithu vitten.

ithu enna kanavu. Intha kanavai kandu nan vilithu paarkaiyil kalai 4.30 .
Nan enna seiyattum. Enakku en amma appa than en vaalkai. Ithil en Annan innum marriage aagamal irukiran. En amma Kai kaal vali enru adikadi pulambukiraar. Enaku moga vethanaiyaaga ullathu. En uyirai Vida melaga mathikkum en amma appa vai annanai than ninaipen. Nan enna seiya vendum. En amma vai kaapatri thaarungal. Nan intha valaithalathil ithu ponra kanavukandu oru ponnu pathinthathai parthu vittu than en thunbathai solla valathalathil pathivey seithen... Ingu yaaravathu enathu pathivai paarthal enakaga kadavulidam vendungal. Anjaneyar kovilukku netru senrirunthen. Angry avaridam koduthu poojaiyil vaitha yelumichampalam en kaiyil kodukkum poluthu kila vilunthathu. Enaku appovey sangadamaaga irunthathu. En amma vai kaapatrungal. Melum en mamiyaro seivinai vaipathaaga avar ooril solar solli ketirukiren. Avargal kudumbam saamiyeh kumbidamaatargal. En thanthaiku accident aagiya poluthu nan kulanthai petru 2 maatham. En mamiyar vitil irunthen. Avar ennidam un appavukku accident aagivitathamey enru assaultaga muruku vitha kathai solvathu sollivittu ayyo adupil yetho vaithu vittu vanthen athai parka poren enru odivitar. Nan aluthu aluthu en kangal sivanthu veengiyathu. Phoneil visarithen kaalkalil fracture agiyirunthathu. Enaku thirumanam aana naal mudhalil irunthey en amma appalu accident chinnathaga nadanthu konduthan irunthu varukirathu. Nan enna seiuattum ellam thosham pola ena ninaithu saami kumbidukiren. Enathu kanavar kudumbam samanthikalai mathika maatargal. Anaivarum suyanalam pidithavargal. Pondati purushanai Vida Annan than ikal otrumaiyaga iruka vendum yena ninaipavargal. Niraya ullathu. Ethai mudhalil solvathu yethai viduvathu... Nan en mamiyaridam part thunbam athu very. Aanal thirumanam aana naal mudhal yethavathu en pirantha vitil problem varugirathum ippothu ippadi oru mosamaana kanavu vanthrukirathu. Nan miguntha mana ulaichalil ullen tholiyarey... En amma virku uethum aaga kudathu.avarathu uyirukku aabathu yerpadathu avarai eppadi kaapatruvathu thayavu seithu yethum parikaram irukiratha enru sollungal.

Kaathirukiren
Suganya

தோழி,
முதலில் ஒன்றை நினைத்து பாருங்கள்,இதே உங்கள் கணவர் marrige ku பிறகு அவர் காதலித்த‌ பெண்னை நினைத்து கொண்டு ,தனியாக‌ இருக்கும் போலுது சிரித்து,பேசிக்கொண்டு அந்த‌ பெண் நினைவில் இருந்தல் உங்கள் மனம் என்ன‌ பாடுபடும் தோழி.உங்கள் கல்யாண வாழ்க்கைக்கு முன்பு என்னவேண்டுமானலும் நடந்து இருக்கட்டும் தோழி,உங்க‌ கல்யாணத்திர்கு பிறகு நீங்கள் அவரை நினைத்து பார்ப்பது கூட‌ உங்களை நம்பி கைபிடித்தவர்கு நீங்கள் செய்யும் துரோகம்.அவர் நினைவை முதலில் மனதை விட்டு துரத்திஅடிங்கள்.உங்களை துக்கி எறிந்தவர் உங்களுக்கும் வேணாம் என்று நினையுங்கள்.உங்கள் மனசாட்சியை நீங்களே கேளுங்கள்,நீங்க‌ செய்வது சரியா?தவறா? என்று பின்பு உங்களுக்கு நாங்கள் யாரும் சொல்லமலே நல்ல‌ விடை கிடைக்கும் தோழி.(தவறாக சொல்லியிருந்தல் சாரி தோழி)

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

hai geetha,
kandippa nammale marakka ninaithalum marakka mudiyama pogum pa,7 years la
but nega oru manatha iruka,kandippa nega avarai maranthu than aganum pa,ungal husbend and baby ya ninaithu vazunggal.athuthan unga family ku nallathu pa

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

//En amma vai kaapatri thaarungal. // அது வெறும் கனவு. உங்கள் அம்மாவுக்கு ஒன்றும் ஆகாது கண்ணா. யோசிக்க வேண்டாம். //enathu pathivai paarthal enakaga kadavulidam vendungal.// நிச்சயம் உங்களுக்கு மன ஆறுதல் கிடைக்க வேண்டுகிறேன்.

//Angry avaridam// !! எவரிடம் கோபம்!!
//en kaiyil kodukkum poluthu kila vilunthathu.// உங்கள் மனம் ஏற்கனவே பரபரப்பாக இருக்கிறது என்பது நீங்கள் தட்டச்சு செய்யும் விதத்திலிருந்தே தெரிகிறது. மனம் இப்படி இருக்கும் போது கவனம் ஒரு இடத்தில் இராது. இதனால் கை தவறுவது சகஜம்தான். இதைப் பெரிதாக எடுக்க வேண்டாம்.

//En amma vai kaapatrungal.// நீங்கள் பயப்படவே வேண்டாம். அம்மா நன்றாக இருப்பார்கள். /

//seivinai vaipathaaga avar ooril solar solli ketirukiren.// இதையெல்லாம் இன்னமும் நம்புகிறீர்களா?

//Avargal kudumbam saamiyeh kumbidamaatargal.// :-) சாமி கும்பிடாதவர்களெல்லாம் தப்பானவர்கள் என்று நினைக்க வேண்டாம். அது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்த விடயம் கண்ணா. கடவுள் நம்பிக்கை அடியோடு இல்லாத இருவர் என் நல்ல நண்பர்கள். சாமி கும்பிடுபவர்களை விட அவர்களிடம் மிக்க அரிய பண்புகளைப் பார்த்திருக்கிறேன்.

இன்னொரு விஷயம்... சாமி நம்பிக்கை இல்லாதவர்கள்... இப்படி பில்லி சூனியத்தையும் நம்ப மாட்டார்கள்.

//muruku vitha kathai solvathu sollivittu ayyo adupil yetho vaithu vittu vanthen athai parka poren enru odivitar.// சிலர் இப்படித்தான் கண்ணா. இதை வைத்து அவர்கள் தப்பானவர்கள் என்று நினைக்க வேண்டாம். சிலருக்கு ஏற்படும் அனுபவங்கள் அவர்களிடம் இப்படி எல்லாவற்றையும் ஓவர் சிம்பிளாக எடுத்துக் கொள்ளும் மனநிலையை ஏற்படுத்திவிடுகிறது. இது... தப்பு எனமாட்டேன்.

//Enaku thirumanam aana naal mudhalil irunthey en amma appalu accident chinnathaga nadanthu konduthan irunthu varukirathu.// இது எல்லோருக்கும் ஆகும் விடயம்தான். சின்ன ஆக்சிடண்ட்... ஒரு வேளை அம்மாவும் அப்பாவும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளாத வேறு கஷ்டங்களை மனதுள் வைத்திருக்கலாம். அதன் காரணமாக தெருவில் அவர்கள் கவனம் சிதறிப் போகிறதோ என்னவோ! தெருவில் இறங்கும் போதுதான் பலருக்கு வீட்டுக் கவலைகளைச் சிந்திக்க நேரம் கிடைக்கிறது. அதனால்தான் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன.

//Nan enna seiuattum// கலியாணம் ஆகி மாமியார் வீட்ல இருக்கீங்க. இந்த எண்ணம் உங்கள் மனதில் இருந்தால் உங்களால் சந்தோஷமாக இருக்க முடியாது. இப்படி யோசிப்பதை விட வேண்டும் நீங்கள்.

//ellam thosham pola ena ninaithu saami kumbidukiren.// உங்களுக்கு நம்பிக்கையிருந்தால், எல்லாவற்றையும் கடவுள் கையில் விட்டுவிட்டு நிம்மதியாக இருங்கள். உங்களுக்கு மன ஆறுதல் கிடைக்கும்.

//Enathu kanavar kudumbam samanthikalai mathika maatargal.// உங்கள் பிரச்சினை உங்கள் கனவு என்று நினைத்தேன். இல்லை போல தெரிகிறது.

//Anaivarum suyanalam pidithavargal.// தப்பா நினைக்காதீங்க. நாம் எல்லோருமே சுயநலவாதிகளாக இருந்துதானே ஆக வேண்டும்!! இல்லையா!

//Pondati purushanai Vida Annan than ikal otrumaiyaga iruka vendum yena ninaipavargal.// இது ஒரு சின்ன விஷயம். கலியாணத்தால் அவர்கள் பிரிந்து விடக் கூடாது என்று நினைப்பதில் தவறு இல்லை. அதற்காக //Pondati purushanai // பிரித்து வைக்க நினைக்க மாட்டார்கள். அப்படி நினைப்பதானால் திருமணம் செய்தே கொடுத்து இருக்க மாட்டார்களே!! நீங்கள் சொல்கிறீர்கள், உங்களுக்கு எல்லோரையும் விட உங்கள் அம்மா, அப்பா, அண்ணன் தான் பெரிது என்று. (உங்கள் கணவரை, குழந்தையைக் கூட இந்த லிஸ்ட்ல சேர்க்கல நீங்க.) அவர்கள் அதையே நினைத்தால் அது மட்டும் எப்படித் தப்பாகும்!! கொஞ்சம் விட்டுப் பிடியுங்கள். சில நேரங்களில் வளைந்து கொடுக்கத்தான் வேண்டும்.

//Niraya ullathu.// ம்... உங்கள் பிரச்சினை கனவு அல்ல. உங்கள் மனது. புகுந்த வீட்டில் வரும் பிரச்சினைகளைத் தன்மையாகத்தான் எதிர்நோக்க வேண்டும். இதில் உங்கள் வாழ்க்கை இருக்கிறது. //Aanal thirumanam aana naal mudhal yethavathu en pirantha vitil problem varugirathum// இது உங்கள் புகுந்த வீட்டாரால் வருவதாக எடுக்க வேண்டாம். உங்களுக்கு இந்த இடத்திலல்லாமல் வேறு இடத்தில் புகுந்த வீடு அமைந்திருந்தால் கூட இப்படி ஆக்சிடண்டுகள் வந்திருக்கலாம்.

உங்களது காதல் திருமணம் என்று நீங்கள் சொல்லவில்லை. வீட்டார் கலியாணம் பேசும் சமயம் விசாரித்துத் தானே ஏற்பாடு செய்திருப்பார்கள். நல்ல இடம் என்றுதானே உங்களைக் கட்டிக் கொடுத்தார்கள்!! பிறகு இப்போ எப்படி மாமியாரைப் பற்றி இப்படிச் சொல்கிறீர்கள்! யார் சொன்னார்கள்? சொன்னவர்கள் உங்களைக் குழப்பி விட நினைக்கிறார்களோ!!

//ippothu ippadi oru mosamaana kanavu vanthrukirathu.// கனவு... எப்படி வேண்டுமானாலும் வரும் தெரியுமா! எனக்கு கனவுகளுக்கு விளைவுகள் இருக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. ஆனாலும் கொடூரமான கனவுகள் வந்திருக்கின்றன. :-) வியர்த்துப் போய் திடுக்கிட்டு எழுந்தால்... கனவு. :-) திரும்ப நினைத்துப் பார்த்தால்... நிகழச் சாத்தியமில்லாத விடயங்களெல்லாம் எப்படிக் காட்சியாகத் தெரிந்தன என்று வியப்பாக இருக்கும். எங்கள் மூளை... நாம் உறங்கும் சமயம் இஷ்டத்திற்கு ஆடும். :-)

//Nan miguntha mana ulaichalil ullen// புரியுது. தேவாரம், கந்தசஷ்டி கவசம்... இப்படி உங்களுக்கு எதில் நம்பிக்கை இருக்கிறதோ படியுங்கள். மனசு கொஞ்சம் ஆறும்.

//En amma virku uethum aaga kudathu.// ஆகாது. //avarathu uyirukku aabathu yerpadathu avarai eppadi kaapatruvathu// ஒரு விஷயம் புரிஞ்சுக்கணும் நீங்க. எல்லோருக்கும் மரணம் என்பது ஒரு நாள் வரத்தான் போகிறது. யாரும் சாகாவரம் பெற்றவர்களல்ல. ஒருவர் சாவுக்கு இன்னொருவரைக் காரணம் காட்டுவது சரியல்ல. அப்படியிருக்க.... நீங்கள் நடக்காத ஒரு விடயம் நடக்கப் போவதாக நினைக்கிறீர்கள். இது தவறு. இதில் உங்கள் மாமியாரால் அம்மாவுக்கு ஆபத்து என்று நினைப்பது அதை விடப் பெரிய தப்பு. உண்மையில்... உங்கள் வீட்டில் என்ன பிரச்சினை வந்தாலும் நீங்கள் உங்கள் மாமியார் செய்ததாகத்தான் எடுப்பீர்கள். இந்த மனநிலையிலிருந்து நீங்கள் வெளியே வராதவரை... அவர்கள் உங்களுக்கு நல்லதே செய்தாலும் தவறாகத்தான் உங்களுக்குப் படும். எதுவும் செய்யாமலிருந்தால்!! கவனிக்காமல் ஒன்றும் செய்யாமலிருக்கிறார்களே என்று தோன்றும்.

//thayavu seithu yethum parikaram irukiratha enru sollungal.// உங்களுக்குப் பிடித்த வகையில் பிரார்த்தனை செய்யுங்கள். யாரையும் எதிரியாகப் பார்க்காதீர்கள்.

அவசரத்தில் தட்டியிருக்கிறேன். எங்காவது எழுத்துப் பிழை இருக்கலாம். நீங்க பதிலளி க்ளிக் பண்ணாமல் விட்டால் வேலை முடிந்து வந்து திருத்தி விடுவேன்.

யோசிக்காமல் இருங்க, சரிதானே!

‍- இமா க்றிஸ்

_()_ இப்போதெல்லாம் இங்கு இணையும் புதியவர்கள் தமிங்கிலத்தில் தான் தட்டுகிறார்கள். நீங்க அழ..கா தமிழில் தட்டுறீங்க. பார்க்க சந்தோஷமா இருக்கு.

//தவறாக சொல்லியிருந்தல் சாரி// :-) அருமையான கருத்தைச் சொல்லிட்டு எதுக்கு சாரி! அவங்க நிச்சயம் யோசிப்பாங்க. உங்க பதில் அவங்களுக்கு உதவியாகத்தான் இருக்கும்.

நேரம் கிடைக்கும் போது மற்றவர்களுக்கும் கொஞ்சம் பதில் சொல்லுங்க. :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்