மிகுந்த‌ மன‌ வேதனையில் உள்ளேண்

மிகுந்த‌ மனவேதனையில் உள்ளேன்,சகோதரி
எனக்கு திருமணம் ஆகி 3 1/2 வருடம் ஆகிரது,ஆனால் குழந்தைஇல்லை,நானும்,3 வருடமக‌ சிகிச்சை எடுக்கிரென்,முதலில் எனக்கு பிரியட் சரியாகவரது,தைராய்டு இருந்தது,6மாதத்திர்கு ஒரு தடவை தான் வரும்,dr கிட்ட‌ போனன் அவுங்க‌ எனக்கு பிரியட் சரியவர‌ மாத்திரை தந்தங்கா,பிறகு scan எடுத்தங்க‌ அதில் எனக்கு pcod இருக்குனு சொன்னங்க‌ ,6 மாதம் தொடர்து மாத்திரை எடுக்க‌ சொன்னங்க‌,6 மாதம் கழித்து dr கிட்ட‌ போனேன்,அவுங்க‌ baby நிர்க‌ tablet கொடுத்தங்க‌,அதையும் try பன்னென்,ஆனால்
எந்த‌ நல்லதும் நடக்கலை,பிரகு கருகுழாய் test எடுத்தென்,அந்த‌ test எடுத்து 4 மாதம் ஆகிரது,resalt normal,but அந்த‌ டெச்ட் எடுத்ததில் இருந்து எனக்கு பிரியட் 18 நாளூக்கு ஒரு தடவை வருகிரது,ரொம்ப‌ கவலைய இருக்கு,இப்ப் dr கிட்ட‌ போனென்,அவுங்க‌ திரும்ப‌ tablet எழுதி தந்தங்க‌,எனக்கு குழந்தை பிரக்கும் எங்கிர‌ நம்பிக்கையெ போய்விட்டது,வாழ்க்கையெ வெறுத்து போய்விட்டது தோழி.
எனக்கு குழந்தைனா ரொம்ப‌ பிடிக்கும்,என் friend எல்லாருக்கும் குழந்தை உன்டு.அவுங்க‌ குழந்தை brithday க்கு கூட‌ போக‌ முடியலா,ரொம்ப‌ கச்டம‌ இருக்கு

அன்புள்ள‌ பார்வதிக்கு விரைவில் இறையருளால் தாயாக‌ வாழ்த்துக்கள். மன்றம் பகுதியில் சென்று பாருங்கள். உங்களுக்கு வேண்டிய‌ அளவு விடை கிடைக்கும். பேறு காலம், குழந்தைகள் என்று போய்ப்பாருங்கள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

உங்களை போல் பல பேருக்கு(pcod) பிரச்சனை இருக்கு இதுக்காக நீங்க ஏன் குழந்தையே பிறக்காது நினைக்கிறீங்க. எத்தனையோ பேர் pcod பிரச்சனை இருந்து குழந்தை பெற்றவர்கள் இருக்கிறார்கள் அது மாதிரி உங்களுக்கு குழந்தை பிறக்கும். முதலில் உங்களை நீங்க நம்புங்க உங்க பிரச்சனை நீங்கி உங்களுக்கு குழந்தை பிறக்கும் நம்புங்க. நம்பிக்கை மட்டும் இருந்தால் எவ்வளவு பெரிய நோய் குணப்படுத்தலாம். இது அட்வைஸ் இல்லை. உங்களோட வேதனை எனக்கும் தெரியும் அதை அனுபவித்து வந்தவள் தான் நானும். எனக்கு pcos பிரச்சினை இருந்தது. எனக்கு குழந்தையே பிறக்காது நினைத்தேன். IUI கூட வைத்தேன் 2 தடவை IUI வைக்கும் போது கர்ப்பம் ஆனேன். 2 மாதத்தில் குழந்தைக்கு துடிப்பு இல்லாமல் போய் அபார்சன் பண்ணிடேன். அப்புறம் 2 தடவை IUI வைத்து கர்ப்பமாகலை பதிலுக்கு என் கர்ப்பப்பை தான் வீக்கானது. வாழ்க்கையே வெறுத்தது குழந்தை பிறக்காது நினைத்தேன். டாக்டர் மாத்தினேன் டாக்டர் சொன்னது எதையும் யோசிக்காதே 6மாதம் வெயிட் பண்ணு உன் நோய் குணமாகும் நம்பிக்கை வை சொன்னார். என்னோட நோய் குணமாகும் நம்பிக்கையோட என் கவனத்தை வேறு பக்கம் செலுத்தினேன் தையல் கிளாஸ் போனேன். மலைவேம்பு குடித்தேன் இப்ப ஒரு பெண் குழந்தை இருக்கு. 7வருட போரட்டாதிற்கு பிறகு பிறந்தால் இந்த மாதம் 30 தேதியோட ஒரு வயது ஆகிறது

தஸ்லிம் சொன்னதைப் படிச்சீங்கல்ல! யோசிக்காம இருக்க ட்ரை பண்ணுங்க கண்ணா. எல்லாம் சீக்கிரம் சரியாகும். தனியே சிகிச்சைகள் மட்டும் போதாது. அவை சரியாக வேலை செய்ய எங்க மனசும் சரியா இருக்கணும்.

‍- இமா க்றிஸ்

பார்வதி கவலைபடதிங்க‌ எல்லாம் சரியாகிவிடும்,தஸ்லிம் சொன்னது போல் செய்யுங்கல்.
தஸ்லிம் உங்க‌ மகளின் பெயர் என்ன‌?

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

வணக்கம் சகோதரி,

தஸ்லிம்,எனக்கு நல்லபதில் கொடுத்தர்கு ரொம்ப‌ நன்றி.நீங்கள் சொல்வது போல் நான் என் மனதை வேறு பக்கம் திருப்பமுயற்சி செய்கிரேன்,வேறு டாக்டரை போய் பார்க்கிறேன்.நான் என்னதான் மனதை திசைதிருப்பினாலும் என் தோழிகள் அடிக்கடி என் வீட்டிற்கு என்னை பார்க்க‌ வருவார்கள்(என் மீது பாசமானவர்கள்) குழந்தையுடன் வருவார்கள்,அவர்களின் குட்டிஸ் செய்யும் சேட்டை பார்த்து, என் மனம் என்னைஅறியாம் ஏங்குகிறது.என் தோழிகல் மத்தியில் நான் மட்டும் தனித்துவிடபட்டவாள் போல் தோன்றுகிறது.தஸ்லிம் உங்க‌ செல்ல குட்டி brithday ku advanice happy briyhday

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

என் மகள் பெயர் ஹஸ்னா முஷ்ரிகா

ஹஸ்னா முஷ்ரிகா விற்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் பா.பெயர் அழகாக இருக்கிரது

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

உங்க வேதனை புரியுது கவலைபடாதீங்க உங்க மனவேதனைக்கு மருந்தாக ஒரு ராஜாவோ,ராணியோ கூடிய சீக்கிரம் உங்க மடியில் தவழ்வாங்க

நன்றி பா

உங்க‌ வார்த்தை என் வாழ்வில் நிஜம் ஆகட்டும் தஸ்லிம்.அறுசுவைக்கு வந்த‌ பின்பு தன் மனம் தெளிவானது.நீங்கள் மற்றும் பல‌ தோழிகள் கிடைத்தற்கு இறைவனுக்கு நன்றி

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

மேலும் சில பதிவுகள்