உணவு பற்றி சந்தேகம் .....

குழந்தைக்கு தேன் எப்போது கொடுக்கனும் ப்ரண்ட்ஸ். இந்த வெயில் காலங்களில் என்ன பழங்கள் கொடுக்கலாம். என் குழந்தைக்கு பல் முலைத்திருக்கு என்ன மாரி உணவுகள் கொடுக்கனும் பரண்ட்ஸ்.ஒன்பது அரை மாதம் நடக்குது குழந்தைக்கு.

//குழந்தைக்கு தேன் எப்போது கொடுக்கனும்// முதலில் ஏன் கொடுக்கணும்! எதற்காக கொடுக்க நினைச்சீங்க? ஏதாவது காரணம் இருந்தால் அது வேறு. மற்றப்படி... அது இனிப்பு. பசியைக் குறைக்கலாம். தினமும் கொடுக்க வேண்டாம். விரும்பினால்... சும்மா எப்போதாவது ட்ரீட் போல கொஞ்சம் கொடுங்க தப்பில்லை. கொடுக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை. நான் என் குழந்தைகளுக்கு தேன் கொடுத்தது கிடையாது. யாரும் கொடுக்கச் சொல்லவில்லை. அவங்க நல்லாத்தான் இருக்காங்க.

//இந்த வெயில் காலங்களில் என்ன பழங்கள் கொடுக்கலாம்.// மசிக்கக் கூடிய பழங்கள் எதுவானாலும் கொடுக்கலாம். தினமும் ஒரே பழத்தைக் கொடுக்காமல் மாற்றி மாற்றிக் கொடுங்க. இது வித்தியாசமான சத்துக்கள் கிடைக்க வழிவகுப்பது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட ஒரு பழத்தைன் குணாதிசயம் (வயிற்றுப் போக்கு / மலச்சிக்கல்) குழந்தையைப் பாதிக்காமலிருக்கவும் உதவும். குழந்தை அது என்பதை மனதில் வைத்து, கொஞ்சமாகக் கொடுங்க. குழந்தை வேண்டாம் என்றால் வற்புறுத்த வேண்டாம்.

//என் குழந்தைக்கு பல் முலைத்திருக்கு என்ன மாரி உணவுகள் கொடுக்கனும்// முளைக்க முன்... முரசு வலிக்கும். அப்போ கடிக்க ரஸ்க் கொடுக்கலாம். இனி அப்படி எதுவும் தேவையிராது. உண்மையில் பல் முளைக்கும் முன்னால் கொடுக்கும் உணவுகள் தான் பல் வளர்ச்சிக்கு உதவும். இப்போ பால் குடிப்பாங்க. அது தேவையான கல்சியத்தைக் கொடுக்கும். மீதிப் பற்கள் நன்றாகவே வரும். இரவில் பாலூட்டிவிட்டு அப்படியே போடுவது பற்களைக் கெடுக்கலாம். இது பற்றி இப்போ பெரிதாகப் பயப்படத் தேவையில்லை. பாற்பற்கள் விழுந்து முளைப்பவைதானே! ஆனாலும்... முடிந்தால் தூங்கும் முன் வாய் கொப்பளிக்கக் கற்றுக் கொடுங்கள். நீங்கள் செய்தால் அதைப் பார்த்துக் குழந்தையும் முயற்சி செய்வார். மெதுவே பல் விளக்கி விடலாம். குழந்தை மெதுவே எதிர்க்காமலிருக்கப் பழகிவிடுவார்.

‍- இமா க்றிஸ்

என் மாமியார் தான் தேன் கொடுக்க சொன்னார் சத்துன்னு சொன்னாங்க அதான் கேட்டேன் மா.பதில் சொன்னதர்க்கு நன்றி மா. இன்னொரு சந்தேகம் மா.பூவன் பழம், ரஸ்த்தாலி வாழைப்பழம் கொடுக்கலாமா.

//சத்துன்னு சொன்னாங்க // ஆமாம், சத்து தான். அதனால்தான் அளவோட இருக்கணும்.

//பூவன் பழம், ரஸ்த்தாலி// இந்தப் பெயர் எல்லாம் எனக்கு அறிமுகம் இல்லை. சொற்களைக் கேட்டிருக்கிறேன். என்ன இன வாழை என்பது தெரியாது. வாழைப்பழம் கொடுக்கலாம். அளவோடு கொடுங்கள். தினமும் வேண்டாம். ஒரு நாள் கொடுத்தால் மறுநாள் வேறு பழம் / உணவு கொடுங்கள்.

‍- இமா க்றிஸ்

பூவன் பழம் ,ரஸ்த்தாலி பழங்களை விட மலை வாழைப்பழம் குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது.மற்ற வாழைப்பழம் சளி பிடிக்கும் மலை வாழை சளி பிடிக்காது. இது எங்க டாக்டர் சொன்னது. மலை வாழைப்பழம் சின்னதாக இருக்கும். தினமும் பாதி பழம் பால் சாதத்தோடு போட்டு பிசைந்து ஊட்டலாம்.

தோழி தஸ்லீம் நன்றி பா.இமா மா நன்றி.

//பத்து மாத குழந்தைக்கு நுங்கு தரலாமா//
அடேங்கப்பா இன்னும் எத்தனை உணவு இருக்கு ஒவொன்றுக்கும் ஒரு தலைப்பு போட்டா அறுசுவை முழுக்க நுங்கு கொடுக்கலாமா ?இளநி கொடுக்கலாமா?கஞ்சி கொடுக்கலாமா தான் போங்க.

சீதோஷ்ண நிலையையும் குழந்தையின் உடல் நிலையையும் பொறுத்து கொடுக்கலாம்.
அதாவது வெயில் காலங்களில் செமிபாட்டு பிரச்சனை இல்லாத குழந்தைக்கு கொடுக்கலாம்.

மேலும் சில பதிவுகள்