விரும்புகிறேன்!

ஃபேஸ்புக்... ஈமெய்ல்... பகிர்வுகள்... லைக்!

எத்தனை பதிவுகளைத் தினம் தினம் பார்க்கிறோம்! இது வரை நான் போட்ட லைக்குகள் எத்தனை! :-)

இதையெல்லாம் எண்ணிக் கொண்டா இருக்க முடியும்!

எண்ணலாம் சிலவற்றை. அதாவது... நினைத்துப் பார்க்கலாம் என்கிறேன்.

~~~~~

விரும்பியது - 1

கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் முன் ஓர் நாள் பாடசாலையில் காலை இடைவேளையின் பின் பயங்கரமாக வயிற்றை வலித்தது. முறுக்கியபடி விட்டு விட்டு வலி வர... கொடுமையாக இருந்தது. அதன் முன் சில நாட்கள் கூட இது போல ஆனால் குறைவான அளவில் வலி வந்து போயிருந்தது. அன்று பிரச்சினைக்குக் காரணமானதை... கிட்டத்தட்ட கண்டுபிடித்தேன். பால்!!

தொடர்ந்து வந்த நாட்களில் என் முடிவு சரி என்பதைப் புரிந்து கொண்டேன். பிறகு சோயா பாலுக்கு மாறி இருக்கிறேன். ( ;) ஏஞ்சல் கமண்ட் போட்டதன் பின் அவதானித்தது- இங்கு படத்தில் இருப்பது ஆமண்ட் மில்க்.) இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். இடைக்கிடை விடுமுறைகளில் பசுப்பால் அருந்திப் பார்க்கிறேன். என்று சரியாகி விட்டதாகத் தெரிந்து கொள்கிறேனோ அன்று சோயா பாலை நிறுத்தி விடுவேன்.

பால்... எப்பொழுதும் அந்த அட்டைப் பெட்டியைப் பிடித்தபடி சரிக்க, குபுக்குபுக் என்று கொப்பளித்தது போல கிண்ணத்தில் ஊற்றும். சில சமயம் சற்று சுற்றிலும் சிந்தியும் வைக்கும். ஃபேஸ்புக்கில் சுற்றும் இடுகைகளிலிருந்து 'விரும்பியது' இது. பெட்டியைச் சரிக்கும் போது வாய்ப்பக்கம் மேலே இருப்பது போல் பிடித்துச் சரித்தால் பெட்டி நிறைந்திருந்தாலும் சிந்தாமல் சிதறாமல் அழகாக ஊற்றுகிறது.

~~~~~~

விரும்பியது - 2

இந்த டப்பாக்கள். 2லீட்டர் வெற்றுக் கோக் பாட்டில்களைச் சுத்தம் செய்து, வெட்டி... எப்படி வெட்டுவது என்பதைப் பிறகு பார்க்கலாம்.

முதலில் சரியான போத்தலை எடுத்துக் கொள்ள வேண்டும். புள்ளிகள் வைத்தது போல சில போத்தல்கள் வரும் - அவை இதற்கு உதவாது. பிரித்துப் பிரித்துக் கோடுகள் போட்டாற்போல் உள்ளவை தான் பொருத்தமாக இருக்கும்.

படத்தைப் பார்த்தால் எப்படி, எந்த அளவிற்கு வெட்டுவது என்பது புரியும். முதலில் லேபிளை நீக்கி விட்டு லேபிள் அடிக் கோட்டிற்குச் சில மில்லிமீட்டர்கள் மேலே வட்டமாக வெட்ட வேண்டும். பிறகு கீழ்ப் பகுதியில், ஒன்றுவிட்டு ஒரு கோட்டின் வழியே கீழ் நோக்கி நேராக வெட்ட வேண்டும். கீழே உள்ள வட்டக் கோட்டிலிருந்து 2.5 சென்டிமீட்டர் மேலே இருக்கும் போது வெட்டுவதை நிறுத்திவிட வேண்டும். மேல் விளிம்புகளை அழகாக வளைத்துவிட்டால் கையைக் கிழிக்காது. வெட்டிய துண்டுகளை மடித்து விட்டால் அருமையான டப்பா கிடைக்கும்.

திறந்து மூடும் போது... ;) டப் டப் என்று ஒரு சத்தம் கேட்கும். சிலருக்கு இது பிடிக்காது; எனக்குப் பிடித்திருக்கிறது.

உள்ளே என்னெவெல்லாம் வைக்கலாம்!

பித்தான்கள், நாணயங்கள், மிட்டாய்கள், வளையல், மோதிரம், சேஃப்டி பின்கள், பாபி பின்கள், ஜெம் க்ளிப்புகள், ரப்பர் பாண்ட் - இப்படிச் சின்னச் சின்னப் பொருட்களைச் சேமித்து வைக்கலாம்.

~~~~~~

விரும்பியது - 3

கைச்சங்கிலிகளை மாட்ட க்றிஸ் உதவி தேவைப்படுவதால், தனியே செல்லும் இடங்களுக்கு அவற்றை மாட்டிச் செல்ல இயலுவது இல்லை. இது அருமையானதோர் யோசனை. இப்போது க்றிஸ்ஸைத் தொந்தரவு செய்வதில்லை. ஒரு ஜெம் க்ளிப்பை S வடிவில் நிமிர்த்தி ப்ரேஸ்லட்டுகள் இருக்கும் டப்பாவில் போட்டு வைத்திருக்கிறேன். சங்கிலியின் கொக்கி இல்லாத பக்கத்தில் ஜெம் க்ளிப்பை மாட்டிக் கொண்டு அணிய வேண்டிய கையால் பிடித்துக் கொள்ள வேண்டும். மறு கையால் சங்கிலியைச் சுற்றி எடுத்துப் போய் கொக்கியை உரிய வளையத்தில் மாட்ட வேண்டும். முன்பு பல நாட்கள் பல முறை முயற்சித்த பின்னும் வெற்றி கிட்டாமல் கைச்சங்கிலி அணியாமலே கிளம்பியிருக்கிறேன். இப்போ அந்த நிலை இல்லை; நானே மாட்டிக்கொள்கிறேன். முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கிறது. என் பொறுமை கெட்டுப் போவது கிடையாது. :-)

~~~~

இங்கு அறுசுவையுடன் தொடர்பில்லாத சுட்டிகள் கொடுக்க இயலாது. மேலே உள்ளவை முதல்முதலில் யார் சிந்தனையில் உதித்தனவோ அவர்களுக்கு என் நன்றி. :-)

5
Average: 5 (2 votes)

Comments

மூன்றாவதை நானும் விரும்புகிறேன் :)
சோயா தொடுவதில்லை ..அந்த கோலா பாட்டில் கன்டெய்னர் ஜிப் வச்சா சத்தம் வராது

ஹாய் ஏஞ்சல்!! :-) முதல் கொமண்ட். :-)

//சோயா// இங்கும் அது ட்ரீட் மட்டும் தான். நான் ரூட்டீனா கோப்பி தேநீர் குடிக்கிறேல்ல. எப்பவாது... ஒரு கிழமைக்கு ஒரு கோப்பி... சோஷலைஸிங் சமயம் மட்டும். சின்னவர் உங்களை மாதிரி. தொடவே மாட்டார். :-)ஹை! இப்பதான் படத்தைப் பார்க்கிறன். அங்க இருக்கிறது ஆமண்ட் பால். ;)) எப்பவும் ஒரே உணவைத் தொடர்ந்து எடுக்கிறேல்ல இங்க.

//ஜிப் வச்சா சத்தம் வராது// அதுவும் இருக்கு. எப்பவாவது இங்கு எட்டிப் பார்த்தாலும் பார்க்கும். சத்தம் தானே எனக்கு விருப்பமா இருக்கு. ;D ஸிப் வைக்காமல் சொருகுற மாதிரியும் ஒரு விதம் இருக்கு. இது ப்ரேஸ்லட்ஸ் எடுக்கேக்க கண்ணில் பட்டதால் இங்கு வந்திருக்கு.

உங்களுக்கு நான் ஒரு கடன் பாக்கி இருக்குது. நினைவு வைச்சிருக்கிறன். :-)

‍- இமா க்றிஸ்

//உங்களுக்கு நான் ஒரு கடன் பாக்கி இருக்குது. நினைவு வைச்சிருக்கிறன். :)//

ஐ ஆம் வெர்ரி ஆப்பி ..நீங்க அந்த 1000 பவுண்ட்ஸ் இன்னும் மறக்கலை ..பெரியவங்க சொல்லுவாங்க முழு அமவுண்டா குடுக்ககூடாதாம் ..அதனால் நீங்க 999 பவுண்ட்ஸ் மட்டும் வெஸ்டேர்ன் யூனியனில் அனுப்பிருங்க ஹா ஹா :))

நேற்றே பார்த்தேன் எங்க வீட்ட்ல ஜேம்ஸ் இந்த மில்க் தான் வாங்கி வச்சிருக்கார் ..நானும் குடிச்சி பார்த்தேன் லேசா உப்பு கரிக்குது ஆனா ஹெல்த்துக்கு நல்லது

எனக்கும் இந்த குட்டி குட்டி தகவல்கள் ரெம்ப உதவியிருக்கு .இருந்தாலும் இந்த செயின் மாட்டுறது வீட்டில உள்ளாக்களை செய்யவைக்கிறது தான் எனக்கு சந்தோசம் .தொட்டில் பழக்கம் .அப்பறம் என்னட்ட வாங்கின 10 000 டொலர்ஸ் எப்ப நினைவு வரும் .

அன்பு இமா
முதலாவது வாய்ப்பக்கம் பாதியளவில் பால் வெளிவரும்படியும் மீதியளவில் காற்று உட்செல்லுமாறும் கொஞ்சமாக‌ சரித்தால் குபுக் என‌ கொப்பளிக்காது இல்லியா....

அடுத்து டப் டப் என்ற‌ சத்தம் ஆஹா எனக்குப் பிடிக்குமே......

மூன்றாவது எனக்கு ரொம்ப‌ உபயோகமான‌ தகவல். ஜெம் கிளிப் எடுத்து ரெடியா வைக்கப்ப் போறேன்.

பின்குறிப்பு; வங்கி ஏதும் புதுசா ஆரம்பிச்சிருக்கீங்களா.? சொல்லுங்க‌ . :))

//வாய்ப்பக்கம் பாதியளவில் பால் வெளிவரும்படியும் மீதியளவில் காற்று உட்செல்லுமாறும் கொஞ்சமாக‌ சரித்தால் குபுக் என‌ கொப்பளிக்காது இல்லியா// ;( டப்பா தப்பா, இமா காலை அவசரத்துல இறுக்கிப் பிடிக்கிறதால வர தப்பா என்று தெரியல. மறந்துட்டேன்... என் சின்னவருக்கும் குபுக் குபுக் தான். டப்பாதான் பிரச்சினை. :-)

//டப் டப் என்ற‌ சத்தம் ஆஹா எனக்குப் பிடிக்குமே// ;)) ஆட்கள் முன்னால க்ளிக்க மாட்டேன். பலருக்குப் பிடிக்காது. எனக்கு ஸ்கூல் பசங்க பேனையை க்ளிக் க்ளிக் என்று தட்டினா கடுப்பாகும். இது மட்டும் எப்பிடியோ பிடிக்குது. ;))
இந்த டப்பா பயணங்களுக்கும் உபயோகமா இருக்கு நிகி. ட்ராண்ஸ்பேரண்ட் & ஏர்போர்ட்ல பை எப்படி வீசினாலும் இது ஹாயா ஷேப் மாறாம இருக்கு.

//ஜெம் கிளிப்// ஆமாம், இது ரொம்ப உதவியா இருக்கு எனக்கு. க்றிஸ் அப்பா நிம்மதி என்று இருக்காங்க. ;)) .

//வங்கி ஏதும்// ;)) அதுவா! கொடுக்க வேண்டியதைக் கொடுக்காட்டாலும் கடன்தானே! இன்னும் சிலருக்கும் கடன் பாக்கி இருக்கு. கொடுக்கணும். ;-)

‍- இமா க்றிஸ்

//தொட்டில் பழக்கம்// ஆகா! ;)

//என்னட்ட வாங்கின 10 000 டொலர்ஸ்// ஹா!! அது இலங்கை ரூபாய் எல்லோ!!! இது நல்ல கதையா இருக்கே!!

//எனக்கும் இந்த குட்டி குட்டி தகவல்கள் ரெம்ப உதவியிருக்கு// இங்க பகிர்ந்துகொள்ளுங்கோ. சொன்னால் எனக்கும் உதவுமே!

‍- இமா க்றிஸ்

//லேசா உப்பு கரிக்குது // ;))))) முதல் நாள் அதைத்தான் சொன்னன் நானும். எனக்கு பசுப்பாலே பிடிக்கிறேல்ல. இப்ப டின்பாலும்... மச்சம் போல வாசம் வருற மாதிரி ஒரு எண்ணம். சீரியல்ல கொட்டுறதுக்கும் டீ, கோப்பி கலரா வரவும் பால் என்று பேருக்கு ஒன்று வைச்சிருக்கிறன். :-)

//999 பவுண்ட்ஸ் மட்டும் வெஸ்டேர்ன் யூனியனில் // ஐயஹோ!! ஒரு கதைக்கு சொன்னால்... இப்பிடி ஆள் ஆளுக்கு பொய்க் கணக்குச் சொல்லுறீங்களே!! ;)))

‍- இமா க்றிஸ்

அம்மா http://www.arusuvai.com/tamil/comment/reply/32861#comment-form இந்த லிங்க்ல‌ கோக் பாட்டில் வைத்து அழகா சேப்ட்டி பாக்ஸ் செய்து இருக்கீங்க‌ ஆனா அதுல‌ // எப்படி வெட்டுவது என்பதைப் பிறகு பார்க்கலாம். // நு சொல்லீட்டீங்களே எப்படி வெட்டுவது விளக்கமா சொன்னீங்கனா நானும் செய்து பயன்படுதுவேன்

எல்லாம் நன்மைக்கே

தேவையானவை

2 லீட்டர் கோக் பாட்டில் (பிரித்துப் பிரித்துக் கோடுகள் போட்டாற்போல் உள்ளது)
க்ராஃப்ட் நைஃப்
கத்தரிக்கோல்

செய்முறை
1. பாட்டிலைக் கழுவி, நீரை வடிய விடுங்க.
2. லேபிளை நீக்குங்க.
3. பாட்டிலை, லேபிள் கீழ் கோட்டிற்குச் சில மில்லிமீட்டர்கள் மேலே வட்டமாக வெட்டுங்க. (பாட்டில் கழுத்துப் பகுதியை வீசி விடலாம்.) [முதலில் கத்தியால் அழுத்தி ஒரு வெட்டு வெட்டினால் பிறகு அதன் வழியே கத்தரிக்கோலை விட்டு சுலபமாக வட்டமாக வெட்டலாம்.]
4. இனி... பாட்டிலில் இருக்கும் கோடுகளில், ஒன்றுவிட்டு ஒரு கோட்டின் வழியே கீழ் நோக்கி நேராக வெட்ட வேண்டும். பாட்டிலின் அடியில் உள்ள வட்டக் கோட்டிலிருந்து 2.5 சென்டிமீட்டர் மேலே வரும் போது வெட்டுவதை நிறுத்திவிட வேண்டும்.
5. ஒவ்வொரு துண்டிலும் மேல் விளிம்புகளை அழகாக வளைத்துவிட்டால் கையைக் கிழிக்காது.
6. வெட்டிய துண்டுகளை மடித்து மூடி விடுங்க.

செய்து காட்ட இப்போ என்னிடம் வெற்றுப் பாட்டில் இல்லை. நீங்க உங்க கைல பாட்டிலை (கோக் பாட்டிலை) பிடித்துக் கொண்டு, இந்த இன்ஸ்ட்ரக்க்ஷனை படிச்சுப் பாருங்க. விபரம் பிடிபடும். செய்வது வெகு சுலபம். ஏதாவது சந்தேகம் வந்தால் கேளுங்க.

‍- இமா க்றிஸ்

நான் இன்னைக்கு evining சந்தேகம் வந்தான் கேட்கறேன்

எல்லாம் நன்மைக்கே

hi imma ma enaku ninge batil koodutingela endre enaku teriyevillai n epadi na ungale contact padratu any email or fb..
please