குழந்தைக்கு எப்போது நாம் பேசுவது கேட்க துவங்கும்?

நான் 13 வது வாரம் கர்ப்பமாக இருக்கிறேன். இது எனக்கு முதல் குழந்தை. திருமணமாகி ஒரு வருடம் கழித்து கருவுற்றிருக்கிறேன். வயிற்றிலிருக்கும் குழந்தை எப்போது நாம் பேசுவது, வெளி உலக சப்தங்களை கேட்க்க துவங்கும்? இப்போதிருந்தே குழந்தையிடம் பேச்சு கொடுக்கலாமா? இசை கேட்கலாமா? எப்போது குழந்தை எல்லாவற்றையும் உணர துவங்கும்? அழுகை, சந்தோசம் போன்றவற்றை உணர துவங்கும்? என்ன உணவு சாப்பிடுவது? எதை சாப்பிடக்கூடாது? கொஞ்சம் சொல்லுங்கள் தோழிகளே.. எடுத்துக்கூற ஆளில்லை.. ப்ளீஸ் உதவுங்கள்.. எப்படியோ ஒரு வலியாக இன்டெர்னெட்டை பார்த்து கொஞ்சம் தெரிஞ்சுகிட்டு 12 வாரம் கடந்துட்டேன். இனி தான் பயமாக இருக்கிறது. ப்ளீஸ் ஹெல்ப் மீ....

மணிமலர் வாழ்த்துக்கள். எனக்கும் 13 வாரங்கள்... எனக்கு பிடித்த அதனையும் சாபுடுகிறேன். சுட சுட இருக்கும் உணவுகளை சாப்பிட கூடாது.இழையில நெறைய பேசிருகங்க நிங்க தேடி பாருங்க...வெயில் காலம் என்பதால் தர்பூசணி இளநீர் மோர் போன்றவை அளவோடு சாப்பிடுகிறேன். நன்றாக பசி எடுத்து நார்மலா சாப்புடுற உணவுகளை சாப்பிடுறேன்....எப்போதுமே குழந்தையுடன் பேசுவேன் நான். என் மகளையும் பேச வைப்பேன். குரல் இப்போதைக்கு கெட்கும இல்லையென்று தெரில.... எப்போ உங்களுக்கு டெலிவரி தேதி இனிதான் பயமில்லாம குனிந்து நிமிர்ந்து கொஞ்சம் வேலை செய்யலாம். ஆதலால் பயம் கொள்ளாமல் குழந்தைய வர வேர்க்க தயாரா இருங்க...

மணிமலர் & சரா, இருவருக்கும் வாழ்த்துக்கள்! வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு 9வது வாரத்தில் இருந்து காது உருவாகத்தொடங்கும். 18 வாரங்கள் ஆனபிறகு குழந்தைக்கு காது கேட்கத்தொடங்கும். 24-வது வாரத்திற்கு மேல் வெளியே கேட்கும் சத்தங்களைக் கவனித்து ரெஸ்பாண்ட் செய்யத் துவங்கும். :)))

கரு உருவானதில் இருந்து ஒவ்வொரு நாளும் சிசுவின் வளர்ச்சி படத்துடன் இணையத்தில் கிடைக்கிறது. தாய்மாரின் உடலில் என்னென்ன மாற்றங்கள் வரும், சிசுவின் உடலில் என்னென்ன வளர்ச்சிகள் நடக்கின்றன என்பதை தினமும் தெரிந்துகொள்ளலாம். பேபிசென்டர்டாட்காம், மற்றும் பல்வேறு தளங்கள் இருக்கு. நேரம் கிடைக்கைல தேடிப் பாருங்க!!

அன்புடன்,
மகி

Please help me ennoda paiyan poranthu 55 days akuthu ana avan ennum olunga nammala pakka madenguran fan light antha mathiri things lam pakkuran kulanthai pakka evlo month akum

மேலும் சில பதிவுகள்