கோமு ஆச்சியின் கோலம்

ஒரு காலத்தில் கோலம் போடுவது என்பது மிகவும் ரசனையான‌ ஒன்றாக‌ இருந்தது. பெருசு பெருசா கோலமிட்டு கலர் கலரா வண்ணமிட்டு ரசிப்போம்.

இப்போதெல்லாம் வாசலில் ஐந்து புள்ளிக்கு மிகாமல் சின்னதா ஒரு கோலம் போட்டுட்டு நகர்ந்து விடுகிறேன்.

சில‌ வருடங்களுக்கு முன்னால் எங்க‌ பக்கத்து வீட்டில் கோமு ஆச்சின்னு ஒரு ஆச்சி இருந்தாங்க‌. அவங்களுக்கு பொழுதுபோக்கே கோலம் வரைந்து ரசிப்பது தான்.
பெரிய‌ நோட்டு நிறைய‌ கோலம் போட்டு பத்திரமா வச்சிருப்பாங்க‌. புதுப்புது டிசைன்ல‌ கோலம் போட்டு பழகுவாங்க‌. சின்ன‌ கோலத்தை பெரியதாக்கி பெரிய‌ கோலத்தை வேறு வேறு டிசைனில் சின்னதாக்கி வரைந்து வச்சிருப்பாங்க‌.

அது மட்டுமில்லாமல், cube வச்சி விளையாடுவாங்க‌. சில‌ நிமிசத்தில் அதை சால்வ் பண்ணிடுவாங்க‌. மூளைக்கு வேலை கொடுத்திட்டே இருப்பாங்க‌. நிறைய‌ புக் படிப்பாங்க‌.
brainvita கோலி வச்சி அற்புதமா விளையாடி ஒரே ஒரு கோலி கடைசியா கொண்டு வந்து காட்டுவாங்க‌. எனக்கும் அந்த‌ வித்தையை கற்றுத் தந்தாங்க‌. ம் நான் தான் மறந்துட்டேன்.:(

ஒரு நாள் வாசலில் நான் போட்டிருந்த‌ கோலத்தைப் பார்த்த‌ ஆச்சிக்கு அது ரொம்பப் பிடித்துப் போச்சு. சின்னக் கோலம் தான். ஏழு புள்ளி நாலு வரை. ஊடு புள்ளி வச்சி வரைஞ்சிருந்தேன்.

ஆச்சியும் தன்னோட‌ நோட்டை எடுத்து வந்து அந்தக் கோலத்தை போட்டுப் பார்த்தாங்க‌. பெரிய‌ பெரிய‌ கோலமெல்லாம் அனாசயமாகப் போடும் ஆச்சிக்கு அந்தக் கோலம் பிடிபடவே இல்லை.

''ஈசி தான் ஆச்சி. நீங்க‌ கோலத்தில் ஜாம்பவான் ஆச்சே.உங்களுக்கு இந்தக் கோலமெல்லாம் ஜுஜூபி"

''நானா கோலமா.....பார்த்துடறேன் மா''

ஆனால், ஆச்சியால் எவ்வளவு முயன்றும் அந்தக் கோலத்தைப் போடவே முடியல‌.

''நீயே என்னோட‌ நோட்டில் போட்டுத் தாம்மா. நான் திரும்பத் திரும்ப‌ போட்டுப் பார்த்து கத்துக்கறேன்"
என்றபடி நோட்டில் வரைந்து வாங்கிக் கொண்டார் ஆச்சி.

உங்களுக்குப் போட‌ முடியுதா.. முயன்று தான் பாருங்களேன்.

அடுத்து எனது பக்கத்து வீட்டு இனிய‌ அன்புத் தோழி. அவங்க‌ அழகழகா கோலம் போடுவாங்க‌.
போட்ட‌ கோலத்துக்கு வர்ணம் தீட்டாமல் அந்த‌ டிசைனில் கலர் கலரா புள்ளி வச்சியே கோலத்தை மெருகேற்றுவாங்க‌. அது ரொம்ப‌ வித்தியாசமா இருக்கும்.

ஒரு நாள் அவங்க‌ போட்டிருந்த‌ கோலம் என்னை வெகுவாக‌ கவர்ந்தது. பொதுவாக‌, ஒரு கோலத்தை சிறிது நேரம் பார்த்தாலே வீட்டில் சென்று நோட்டில் போட்டு விடும் எனக்கு, அந்தக் கோலத்தை போட‌ இயலவில்லை.

நோட்டும் பேனாவுமாக தோழியின் வீட்டு வாசலுக்குச் சென்று தோழியின் உதவியோடு என் டைரியில் கோலத்தை போட்டு வந்தேன்.

சமீபத்தில் என் டைரியிலிருந்த‌ அந்தக் கோலத்தை பார்த்ததும் தோழியின் நினைவு வர‌ அதை அப்படியே வாட்ஸ் அப்பில் தோழிக்கு அனுப்பினேன்.

"நான் வரைந்த‌ கோலமா இது. எனக்கு ஞாபகமே இல்லை பா. இத்தனை வருஷமா பத்திரமா வச்சிருக்கீங்களே"

பதில் மெசெஜ் இப்படி வந்துச்சு பாருங்க‌....:))

ஹா.....ஹா.....

நீங்க‌ போட்டுப் பாருங்க‌ தோழீஸ். உங்களுக்குப் புரியும் படி புள்ளியை கலரில் அழுத்தமா வச்சிருக்கிறேன்.

போட்டுப் பார்த்து படங்காட்டுவீங்கல்ல‌..........பை.....

5
Average: 4.8 (5 votes)

Comments

முதல் கோலம் சுலபமாக போட முடிந்தது, இரண்டாவது கோலம் கொஞ்சம் குழப்பியது..கூடவே எங்க வீட்டு குட்டியம்மாவின் துணையுடன்(!) போட்டதால் கொஞ்சம் நேரமெடுத்தது.

//போட்டுப் பார்த்து படங்காட்டுவீங்கல்ல‌........// காட்டியாச்சு! :) அழகான ஃப்ரீஹேண்ட் கோலங்கள் இரண்டுமே! பகிர்வுக்கு நன்றிங்க நிகிலா!

அன்புடன்,
மகி

கோலம் போடுறது ரொம்பவே பிடித்தமான விஷயம் எனக்கு.. அதை விட கலர் பண்றது.. :) :)

Cube இப்ப வரைக்கும் நான் விளையாடிக்கிட்டு இருக்க ஒரு விளையாட்டு.. என் பொண்ணு கூட எங்கயாவது புது Cube பார்த்தா அம்மாவுக்கு வாங்குவோம்னு சொல்லுவா.. அந்த அளவுக்கு பிடிச்சது.. Brainvita சின்ன வயசில 2 குண்டு வரும் வரை விளையாடுவேன்.. ஒரு குண்டு மட்டும் ஒரு டைம் கூட வந்ததில்லை.. என்னமோ இன்னமும் வராது.. மகளுக்கு பயந்து அவள் பிறந்த பிறகு கோலிக்குண்டு எடுக்கிறதே இல்லை :) :)

கோமு ஆச்சி மாதிரி தான் எங்க ஆச்சியும் அவ்வளோ பெரிய சிக்கு கோலம் போடுவாங்க.. ஸ்டாரும், தாமரையும் போட தெரியாது.. நானும் சொல்லி கொடுத்து அலுத்து போய்ட்டேன்.. சிலருக்கு சில விஷயங்கள் வராது.. காலையிலேயே இனிய நினைவுகளை கிளப்பிவிட்டதற்கு தேங்க்யூ யூ யூ...

ஒரு நாள் இந்த கோலங்களை வாசலில் போட்டு போட்டோ போடுறேன்.. :)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

//brainvita// கோலத்துக்கும் solitaire-க்கும் நிறைய தொடர்பு இருக்கும் போல இருக்கே! :-)

//போட்டுப் பார்த்து படங்காட்டுவீங்கல்ல‌// இப்பதானே விஷயம் புரியுது. நோட்லதானே! 2 நாள்ல படங்காட்டுறேன். ;)))

இது என்ன தலைப்பு என்று கேட்காமலிருக்க... http://www.arusuvai.com/tamil/node/28853 :-)

‍- இமா க்றிஸ்

நிகி கோலம் அழகோ அழகு. நமக்குதான் வராது. ரூபிக் கியூப் இந்த ஒரு மாதமா இதே வேலைதான். இப்ப ஃபுல்லா போட கத்துக்கிட்டேன்.:). அந்த கோலி குண்டு இன்னும் புரியாத விளையாட்டுதான் எனக்கு :(.

Be simple be sample

அன்பு நிகிலா,

முதல் கோலம் உடனேயே போட்டுப் பாத்துட்டேன். (இரண்டாவது முயற்சியில்).

கோமு ஆச்சிக்கு ஏன் வரலைங்கறதும் ஒரு சின்ன கெஸ் பண்ணினேன்.

புள்ளி வைக்கறப்ப, சிலர் ஹரிஸாண்டலாகவும், சிலர் வெர்டிகலாகவும் வைப்போம்.

உங்க கோலத்தை, வெர்டிகலாக புள்ளி வச்சு, போட்டுப் பாத்தா, ஈஸியாக போட முடியுது.

இரண்டாவது கோலத்தை கொஞ்சம் நிதானமாக போட்டுப் பார்க்கிறேன்.

ப்ரெயின்விட்டா - ரொம்ப ரொம்ப பிடிச்ச விளையாட்டு. இப்ப ஆன்லைன்ல விளையாடறது உண்டு. வீட்டில் கோலி குண்டு வச்சு போர்ட் ஒன்றில் விளையாடுவது முன்பு இருந்தது. எங்க அத்தை எப்பவும் அதை நிதானமாக விளையாடிட்டு இருப்பாங்க.

உங்களுடைய மற்ற வலைப் பதிவுகளில் பதில் போடணும், சீக்கிரமே வரேன்.

நன்றி நிகிலா.

அன்புடன்

சீதாலஷ்மி

:-) முதலாவது கோலம் விசிறிகள் பக்கம் போட்டாச்சு. அடுத்ததையும் சீக்கிரம் போட்டுக் காட்டுறேன் நிகி.

‍- இமா க்றிஸ்

முதல் பதிவுக்கு நன்றி.
முதல் கோலம் கொஞ்சம் ஈசி தான்.
இரண்டாவது கோலத்தை ஏழு புள்ளியிலும் போடலாம். போட்டுப் பாருங்க‌.
இரண்டு கோலங்களையும் அழகாக‌ வரைஞ்சிருக்கீங்க‌. பார்த்தேன். ரொம்பவும் சந்தோஷம்.
உடனே படங்காட்டியமைக்கு நன்றி மகி:)))

கோலம் போடறதை விட‌ கலர் பண்றது பிடிக்கும்னா இந்தக் கோலத்துக்கு பொருத்தமான‌ கலர் பண்ணி காட்டுங்க‌ அபி. காத்திருக்கேன்.:))

cube எங்காவது ட்ராவல் பண்ணும் போது கூட‌ போரடிச்சா தனியே விளையாடலாம்.
brainvita எனக்கும் ஒரு கோலி மட்டும் ஒரு தரம் கூட‌ வந்ததில்லை. ஆச்சி கற்றுக் கொடுத்ததும் வந்தது. அப்புறம் மறந்துட்டேன். ஆனால், யூ ட்யூப் ல‌ இருக்கு அபி. வேணா முயற்சி செய்து பாருங்க‌.

சிக்கு கோலம் தான் உண்மையிலேயே கஷ்டமானது.
ஆச்சியின் இனிய‌ நினைவுகளுக்கு நன்றி.

வாசலில் போட்டு கலர் கோலமா காட்டுங்க‌ அபி:)))

உங்க‌ பதிவைப் படிச்சேன். கிட்டத்தட்ட‌ ஒரே மாதிரி சிந்தனை (கோலம்).
இவையெல்லாம் தனிமையைப் போக்கும் விடயங்கள்.

//நோட்ல‌ தான‌// இன்னிக்கு தானே அர்த்தம் புரியுது.

ஸ்மார்ட் கேர்ல் நீங்க‌:)))

//கோலம் அழகோ அழகு//. மிக்க‌ நன்றி

//நமக்குதான் வராது//. வரும்னு நினைச்சா எல்லாம் வரும் பா.

//ரூபிக் கியூப் இந்த ஒரு மாதமா இதே வேலைதான். இப்ப ஃபுல்லா போட கத்துக்கிட்டேன்.:).// எனக்கு இன்னும் புதிர் தான் க்யூப்.

//அந்த கோலி குண்டு இன்னும் புரியாத விளையாட்டுதான் எனக்கு :(.// ம்.... ம்.... எனக்கும் தான். ஆனா, யூ ட்யூப் ல‌ இருக்கு பாருங்க‌ ரேவா:))

//முதல் கோலம் உடனேயே போட்டுப் பாத்துட்டேன். (இரண்டாவது முயற்சியில்).//
முயற்சி சக்சஸ் தானே. முதல் கோலத்தை நானும் பார்த்தேன்:))

//உங்க கோலத்தை, வெர்டிகலாக புள்ளி வச்சு, போட்டுப் பாத்தா, ஈஸியாக போட முடியுது.// ஆம் சீதா, நான் வெர்டிகலாகத் தான் புள்ளி வச்சிருக்கேன். அப்படியே ஆச்சிக்கும் போட்டுக் காட்டினேன். ஆனாலும், ஆச்சிக்குத் தான் ஏனோ பிடிபடல‌.

brainvita தனியாக‌ விளையாடலாம். யாரையும் கூட விளையாட‌ அழைக்க வேண்டாம். அதனால் தான் பெரியவங்க‌ அதை விளையாடறாங்கனு நினைக்கிறேன்.

//உங்களுடைய மற்ற வலைப் பதிவுகளில் பதில் போடணும், சீக்கிரமே வரேன்.//
உங்களது நல்வரவை எதிர்நோக்குகிறேன்.
நன்றி சீதா:))

விசிறிகள் பக்கம் போயி ஆசை தீர‌ பார்த்துட்டு வந்தாச்சு:))
உங்களுக்கு கோலமிட‌
நோட்டு வேண்டாம்
தரை வேண்டாம்
பிளாக் போர்டு வேண்டாம்
ஃபைல் வேண்டாம்

சிஸ்டம் மட்டும் போதும்:)) ரொம்ப‌ வடிவா வந்திருக்கு. இமா:))

ஸ்மார்ட் கேர்ல் நீங்க‌ தான்:)))

//ஃபைல் வேண்டாம்// சாரி, ஸ்பெல்லிங்கை தப்பா தட்டிட்டேனோ!! டைல் என்று எழுதப் போனேன். :-)

//ரொம்ப‌ வடிவா வந்திருக்கு. இமா// ஹி! ஹி! அதுக்குக் காரணம் சுபத்ராதான். அவங்க புள்ளி வைச்சுக் கொடுத்தாங்க. நான் கோடு போட்டேன். :-)

‍- இமா க்றிஸ்

அன்பு இமா
டைல் என்பதுவும் தரை என்பதற்குள் அட‌ங்கி விடுகின்றது. ஃபைல் பொருத்தம் தான்:))
உண்மையிலேயே அந்த‌ வளைவுகள் ரொம்ப‌ ரொம்ப‌ நேர்த்தியா வந்திருக்கு. உங்களுக்கு அது கோடா...:)))

அன்பு சுபா
அளந்து வச்ச‌ மாதிரி புள்ளி சீரா வச்சுக் கொடுத்திருக்கீங்க‌. நன்றி சுபா:))

போட்டாச்சு நிகிலா. இந்தத் தடவை வளைவுகள் கொஞ்சம் கோணலா இருக்கும். அட்ஜஸ்ட் ப்ளீஸ். :-)

போய்ப் பார்த்தேன். அங்க டைல் என்றுதான் இருக்கு. :-)

//அளந்து வச்ச‌ மாதிரி புள்ளி சீரா வச்சுக் கொடுத்திருக்கீங்க‌. நன்றி சுபா// ;)) பின்ன இருக்காதா? இப்படி விதம் விதமா டெம்ப்லேட் வைச்சிருப்பாங்க. அதுல பொருத்தமானதை எடுத்து தானே பிறகு கோலம் போடுவாங்க. ;))
பாவம் அவங்களுக்கு ஒண்ணுமே தெரியாது நிகிலா. நான் சுட்டுட்டேன். ;))))

‍- இமா க்றிஸ்

அன்பு இமா

பார்த்தேன் ; ரசித்தேன். கோலம் சூப்பருங்க‌:) கோலத்திற்கு நீங்க‌ சூட்டிய‌ பெயரும் சூப்பருங்க‌:))

இது கொஞ்சம் குழப்படி கோலம் தான். ஆனாலும், கர்சர் வச்சி மவுஸ் பிடித்து இந்த‌ வளைவுகளே ரொம்ப‌ பெரிய‌ விடயம் தான் போங்கோ.
கலரும் நச்சுனு இருக்கு....:))

டைல், ஃபைல் பெருசு பண்ணிப் பார்த்தாக்க‌ தெரியுது.

அடடா இப்படிக் கூட‌ அவங்களுக்குத் தெரியாமலேயே சுடலாமா:) இப்போ சுபத்ராவுக்குத் தெரிஞ்சிருக்குமே:))