பாகற்க்காய் ஜூஸ்

ஹலோ தோழிகளெ

2 1/4 (இரண்டேகால்) வயது குழந்தைக்கு பாகற்க்காய் ஜூஸ் கொடுக்கலாமா? கொடுக்கலாம் என்றால் எப்படி தயாரிப்பது

ethuku ninga tharinka .... any problem ?

குழந்தைக்கு வயிற்றில் உள்ள‌ பூச்சி அழியும் அல்லவா அதற்க்கு தான்

வயித்துல பூச்சி இருக்குறத மருத்துவர் கக்டி உறுதி படுத்தி கொள்ளுங்கள். அவங்க பரிந்துரைத்தால் மட்டுமே ஒரு சின்ன பூச்சி மறுத்து பாட்டில் தருவார்கள் இரவு மற்றும் காலை dose .. 2 வயது குழந்தைக்கு உள் மருந்து கொடுக்கும் போது அனுபவத்தில் யாரேனும் செய்திருந்தால் மட்டுமே நிங்களும் உங்கள் குழந்திக்கு செய்ய வேண்டும். அது குழந்தைக்கு kuzhanthai மாறுபடும். நான் என் குழந்தைக்கு காக்க போற இடத்துல அரிப்பு இருந்த போது பாகைற்காய் கொடி சாறு எடுத்து antha idathula 2 துளி விட்டோம் சரி ஆனது. பிறகு மருத்துவரிடம் காட்டி வாங்கி tonic போட்டோம். சரி ஆனது. ஆதனால் நிங்கள் hospital போங்க சங்கீதா......

சிறு குழந்தையை இப்படிக் கஷ்டப் படுத்த‌ வேண்டாம். எதற்காக‌?
வயிற்றில் பூச்சி இருந்தால் இரவில் தூக்கத்தில் குழந்தைகள் பற்களை
நர‌ நர‌ என்று கடித்துக் கொண்டு இருப்பார்கள்.
இதற்கு குப்பைமேனிக் கீரையை வேறு அரைகீரை, முளைகீரையோடு சேர்த்துக் கடைந்து (வழக்கம் போல‌) கொடுங்கள்.
தனியாக‌ சாப்பிட‌ முடியாது வேடுதம் அடிக்கும். சொறு சொறு என்று
இருக்கும், பொடியாகக் கிடைத்தால் தினமும் அரை டீஸ்பூன் அளவு
தேனிலோ அல்லது வெல்லத்தோடோ கலந்து சாப்பிட‌ வையுங்கள்.
நான்கு நாள் அல்லது ஒருவாரம் கூடச் சாப்பிடலாம், உடம்பிற்கு மிகமிக‌
நல்லது. தோல் நோய்களுக்கு மிகச் சிறந்த‌ மருந்து.
அடுத்து சர்க்கரைப் பூசனி(பறங்கிக் காய்) பூசனிக்காய்,வெள்ளரி,
முலாம் பழம்,கிர்ணிப் பழம், தர்பூசனி இவற்றின் பருப்புக்களை தினமும் குறைந்தது ஒரு டீஸ்பூன் அளவாவது பச்சையாகவே தின்னச்
செய்யுங்கள், இவை மிக வயிற்றில் உள்ள‌ பூச்சிகளைக்
கொல்லும் சிறந்த‌ மருந்தாக‌ வேலை செய்யும்.
கடுக்காயை இழைத்து தேனோடு கலந்து கொடுக்கலாம்.
முடிந்தால் கடுக்காய் லேகியம் தந்தால் பலவிதத்திலும் நல்லது.
இரவில் சுண்டைகாய் அளவு உண்டு வர‌( தித்திப்பாக‌ இருக்கும் )
மறு நாள் காலையில் நன்றாக‌ எத்தொல்லையும் இல்லாமல்
மலசலம் நன்றாகக் கழியும். வயிறு சுத்தமாக‌ இருக்கும்.
வயிற்றில் உள்ள‌ எல்லாப் பூச்சிகளும் மலத்துடன் வெளியேறும். நாளடைவில் அழகுடன் கட்டுசெட்டாக‌ நோய் நொடியின்றி உடல் உரம் பெறும்.கடுக்காய் ஒரு காயகல்ப‌ மருந்து.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்