கிரில்லின் உபயோகம்

ஐரோப்பா நாடுகளில் வெயில் இங்கு இருப்பதில்லை . அதர்க்கு பதிலாக கிரிலில் ஒரு சிலர் உபயோகப்படுத்துகிரார்கள் என்று நினைக்கிறேன்.அப்படி என்ன செய்யலாம்?நான் பாசிப்பருப்பை கிரிலில் காயவைத்து மிக்ஸியில் அரைத்துக்கொன்டேன். இன்னும் கிரில் உபயோகம் சொல்லுங்களேன்

டியர் சாஜுனா கிரில்லை நமக்கு தேவையான ஒரு சில பொருட்களை காயவைத்துக்கொள்ள பயன்படுத்தலாம். கஞ்சி வத்தல்களை காயவைக்கலாம், காய்கறி வத்தலை பதப்படுத்தி வைக்கலாம்.கறிவேப்பிலை புதினா, போன்ற தழைகள், பதப்படுத்தி வைக்கலாம். நீங்கள் கூறியுள்ளதுப் போலவே அரிசியையும் காயவைத்து அரைத்துக் கொள்ளலாம். ஆனால் அவெனை நன்கு கையாளப் பழகிய பின்பு இவ்வாறான முயற்ச்சியில் செய்துப் பார்த்தால் நல்லது. காரணம் எல்லா அவெனிலும் வெப்பத்தின் அளவு ஒன்றாக இருந்தாலும் அவெனின் செயற்பாட்டுத்திறன் வெவ்வேராக இருப்பதால் நன்கு பழகிய அவெனில் இதுப் போன்று செய்யலாம். பொருட்களின் அளவுகளை மிகவும் குறைவாக வைத்து முதலில் செய்துப் பார்க்கவும்.நன்றி.

மனோஹரி மேடம் பொதினா தலைகளை பச்சையாகவே கிரிலில் காய வைத்து எடுப்பதா?லெமன் தோலை காயவைத்து எடுக்கலாமா? நன்றி.

sajuna

டியர் சாஜுனா, ஆமாம் புதினா இலை, லெமன்,ஆரஞ்சுப் பழத்தோல் போன்று எதுவாக இருந்தாலும் பச்சையாக வைத்துத் தான் கிரில்லில் வைத்து காயவைக்க வேண்டும் .அவெனில் நடுவில்லுள்ள ரேக்கில் வைத்தால் வெப்பம் எல்லா இடங்களிலும் ஒரே சீராக பரவும்.நன்றி.

உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி .

sajuna

மேலும் சில பதிவுகள்