கதையல்ல‌ நிஜம்

வசந்தி சற்றே வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாள். கண்ணாடி முன்பாக‌ நின்று கழுத்தின் எலும்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.

மீண்டும் சென்று எடை பார்க்கும் ஸ்கேலில் தனது எடையைப் பார்த்தாள். நான்கு மாதத்தில் அஞ்சு கிலோ வெயிட் காணோம்.

சோகத்தில் மூழ்கியிருக்கும் வசந்தியிடமே கேட்போம்.

"என்னாச்சு...ஏன் டல்லா இருக்கீங்க‌ வசு"

ரொம்பக் கஷ்டப்பட்டு ஏத்தி வச்சிருந்த‌ என்னோட‌ வெயிட் நாலு மாசத்தில‌ அஞ்சு கிலோ காணாம‌ப் போச்சுங்க‌" என்றாள் லேசாக‌ லூசாகிப் போன‌ ப்ளவுசின் கையைப் பார்த்தபடி.

''மறுபடியும் எனக்கு உடனே வெயிட் போடணுங்க‌. பார்க்கிறவங்க‌ எல்லாம் என்ன‌ வசு உடம்பு சரியில்லியான்னு கேட்கிறாங்க‌. எனக்கு கஷ்டமா இருக்கு. ஏதாச்சும் வழி சொல்லுங்களேன்" முகத்தில் நிஜமான‌ வருத்தம் படர‌.

"டோன்ட் ஒரி வசு. இங்கே நிறைய‌ கிச்சன் குயின்ஸ் லாம் இருக்காங்க‌. உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க‌. ஆமா, ஏன் இப்படி ஆயிட்டீங்க‌. உடம்புக்கு......." மெதுவாக‌ நானும் இழுத்தேன்.

"சே...சே..... நான் நல்லா ஹெல்த்தியா தான் இருக்கேன்." அந்தக் கதையைச் சொல்ல‌ ஆரம்பித்தாள் வசு.

"பால் சாப்பிடாதீங்க‌. அஞ்சு வயசுக்கு அப்புறமா பால் தேவையே இல்லை. கறவை மாட்டுக்கெல்லாம் ஹார்மோன் ஊசி போட்டு நிறைய‌ பால் கறக்கிறாங்க‌. அது நல்லதில்லன்னு வாட்ஸ் அப்ல‌ மெசெஜ் பார்த்தேங்க‌. சரி நமக்கு நல்லது தான‌ சொல்றாங்கன்னு பால் வேண்டாம்னு விட்டுட்டேங்க‌"

"சரி அப்புறம்"

''சர்க்கரையா..... அது வெள்ளை நச்சு. அதுல‌ பிளீச்சிங் பவுடர் பாதிக்குப் பாதி சேர்க்கிறாங்க‌. எலும்பெல்லாம் போயே போச்சுன்னு ..... உங்க‌ பதிவைப் படிச்சதும், சர்க்கரையை சுத்தமா நிறுத்திட்டேங்க‌. சரி தானேங்க‌"

'இவங்க‌ சுத்தி வந்து நம்ம‌ தலையில‌ கை வைப்பாங்க‌ போல‌' சரின்னு தலை ஆட்டினேன்.

''பிராய்லருக்கு நோ...மட்டனுக்கு நோ... மீன் மட்டும் தான் ஓ.கே.வா?'' கேள்வி எழுப்ப‌

''ஓ.கே.'' என்றேன் நானும்.

''அடுத்து மைதா மாவு. நிறைய‌ நாடுகள்ல‌ தடை செய்யப்பட்ட‌ உணவுப் பொருள் மைதான்னு தினசரியில் படிச்சிட்டு நானும் மைதாவுக்கு எங்க‌ வீட்ல‌ தடா போட்டேங்க‌. பேக்கரி அயிட்டம்ஸ் எல்லாம் இந்த‌ தடை உத்தரவால் நின்னு போச்சுங்க‌. பரோட்டாவும் இல்லாமப் போச்சு." வாடினாள் வசந்தி.

"அப்போ என்ன‌ தான் சாப்புடறீங்க‌ வசு"

"காலை உண‌வு எனக்கு நட்ஸ் மட்டும் தான். அஞ்சு பாதாம், அஞ்சு முந்திரி, மூணு பேரீச்சை, ரெண்டு பிஸ்தா, ஒரு வால்னட், ... நோ காஃபி... நோ டீ....ஒன்லி ஃப்ரெஷ் ஃப்ருட்ஸ் " உற்சாகத்துடன் கூற‌,

"அப்போ, உங்களுக்கு சமையல் வேலை இல்லே" நான் முணுமுணுத்தேன்.

"அங்கே இருக்கு விஷயம். எல்லா பழமும் எடுக்க‌ மாட்டேங்க‌. திராட்சையில‌ ஏகப்பட்ட‌ மருந்தாம். ஆப்பிள் ல‌ நிறைய‌ கெமிக்கல்ஸ். அதை வாங்க‌ மாட்டேன். மாம்பழம் நேச்சுரலா பழுத்ததான்னு தேடித் தேடி வாங்கணும்." விவரித்தாள் வசந்தி

வசமா வந்து மாட்டிக்கிட்டோமோ விழித்தேன் நான்.

''காய்கறியும் நாட்டு ரகமா பார்த்து தான் வாங்கணும். பாருங்க‌ முருங்கைக்காய்க்கு மருந்து கிடையாது...இப்படி....ம்" பாடம் நடத்த‌

தலையை ஆட்டி வச்சேன் நானும்.

"சிறுதானியம் நிறைய‌ சேர்த்துகிட்டேன். அரிசி உணவு அளவு குறைச்சாச்சி . தேங்காய் எண்ணெயை ஆட்டி வச்சிருக்கேன். மற்ற‌ எண்ணெயை எல்லாம் குறைச்சிட்டேன். எல்லாம் கலப்படம் கொலஸ்ட்ரால்." கண்களை உருட்டியுபடி விவரித்தாள்.

"யோகா பண்ணுறேன். வாக்கிங் போறேன். நான் ரொம்ப‌ ஹெல்த் கான்ஷியஸ் "

இது வேறயா..அக்கறையாக‌ கவனித்தேன்.

"இப்போ சொல்லுங்க‌. நான் இதெல்லாம் மீற‌ மாட்டேன். ஆனால், நான் வெயிட் போடணுமாக்கும்" பெரிய‌ குண்டாகப் போட்டாள் வசந்தி.

"எதைச் சாப்பிடன்னு புரியலங்க‌. சாப்பிட‌ எதை எடுத்தாலும் ட‌வுட்டு. தட்டுல‌ எதைப் பார்த்தாலும் ஹெல்த்தியான்னு ஒரு கேள்விக்குறி. தலையே சுத்துதுங்க‌ எனக்கு. ப்ளீஸ் ஹெல்ப் மீ." பரிதாபமாகக் கேட்டாள் அவள்.

''உங்க‌ வீட்ல‌ இதுக்கெல்லாம் எப்படி ஒத்துகிட்டாங்க '' எனக்குள் சந்தேகம்.

"எப்படி ஒத்துக்குவாங்க‌. ஹோட்டல் ஃபுட் வேண்டாம். ஓ.கே. வீட்டுச் சாப்பாட்டில் இத்தனைக் அமர்க்களம் தேவையான்னு சொல்லி......சொல்லி...." கண்களைக் கசக்கினாள் அந்த‌ மகராசி.

"சொல்லுங்க‌ வசு. சொல்லி....." நானும் ஆறுதலாக‌ அவளது கரத்தைப் பற்றி கேட்க‌

"என்னைப் பார்க்க‌ வச்சி நெய் அல்வாவும், லட்டுமா சாப்பிட்டு வெளுத்துக் கட்டுறாங்க‌" ஓ வெனெ அழுது கொட்டினாள் வசு.

மீ...பாவம்.......:(

வசந்தியோட‌ டயட்டை மாற்றாம‌ மெனு சொல்லுங்க‌ தோழீஸ்....

மெனு ப்ளீஸ்.....

4
Average: 4 (7 votes)

Comments

;)) இப்பிடி நிறையப் பேர் இருக்காங்க.

மெனு... அதெல்லாம் வேணாம். குண்டாகிறது ஈஸ்சி. காலைல ஒன்பது மணிக்கு எழுந்து குளிச்சு சாப்பிட்டு அவசர வசரமா வேலைல்லாம் முடிச்சுட்டு... தூங்கிரணும். இல்லாட்டா டீவீ பார்க்கலாம். புக்ஸ் படிக்கலாம். நெட்ல இருக்கலாம். பிறகு மதியம் சாப்பிட்டு இதே போல குட்டித் தூக்கம் எக்ஸ்செட்ரா எக்ஸெட்ரா. அப்றம் டீவீல வாற எல்லா ப்ரோக்ராமும் பார்த்துட்டு சாப்பிட்டு வேளைக்கு தூங்கிரணும். எங்க போறதானாலும் நடந்து போகக் கூடாது.

ஆனா... சிலருக்கு இது எல்லாம் ஒண்ணுமே பண்ணாது. ;(

‍- இமா க்றிஸ்

அன்பு இமா

பகல்ல‌ தூங்கினா வசந்திக்கு இராத்தூக்கம் வராமப் போயிடும்னு பயம்.:((
டிவி, புக்ஸ், நெட் இதெல்லாம் தான் பொழுதுபோக்கு அவளுக்கு.
வாக்கிங் போறதையும் விட்டுடச் சொல்லி இருக்கேன்.

//ஆனா... சிலருக்கு இது எல்லாம் ஒண்ணுமே பண்ணாது. ;(// வசந்தி விடயத்தில் இது தான் உண்மை.:(

கருத்துக்கு மிக்க‌ நன்றி இமா.

//வாக்கிங் போறதையும் விட்டுடச் சொல்லி இருக்கேன்.// இல்ல நிகி. அதை விட வேணாம். அது எடையோட மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. பிறகு ஃபிட்னஸ் கெட்டுரும்.

நான் சொன்னது சும்மா ஜோக்குக்கு. அவங்களை ஒழுங்கா சாப்பிடச் சொல்லுங்க. இப்போ உள்ள எல்லா உணவுகளிலும் ஏதோ ஒன்று இருக்கத்தான் போகுது. பாத்திரம், காற்று, தண்ணீர்... எதை விடப் போறோம்!! எல்லாவற்றிலும் அளவோட இருந்தா சரியா இருக்கும். வேற வழி இல்லை. எடையை உயரத்தைப் பொறுத்து செக் பண்ணச் சொல்லுங்க. பார்க்க சதைப்பிடிப்பா இருக்கணும் என்கிறது பழைய காலம்.

‍- இமா க்றிஸ்

அன்பு இமா

வாக்கிங் ஓ.கே. சரி.
மற்றபடி நீங்க‌ சொன்னதையே நானும் சொன்னேன் இமா. வேறு வழி இல்லை. எல்லாம் சாப்பிடத் தான் வேணும்.

வசு நல்ல‌ உயரம். 60 கிலோவில் இருந்து அஞ்சு கிலோ காணாம‌ போச்சு பா. அதுக்குத் தான் இத்தனை ஃபீலிங். அவங்க‌ ஃபீல் பண்ணாட்டியும் பார்க்கிறவங்க‌ கேள்வி கேட்டு துளைக்கிறது தான் தாங்கலியாம்.:(

பால், மட்டன் ,முட்டை, சாதம் எல்லாம் அளவோடு அளவோடு எடுக்கச் சொல்லி இருக்கேன்.:)):

அன்புக்கு நன்றி இமா:))

60-5=55 கிலோ http://www.arusuvai.com/tamil/node/14527 போய் கணித்துப் பார்க்கச் சொல்லுங்க நிகிலா. என்ன எடை இருக்க வேணும் என்கிறது தெரியவரும். பிறகு குண்டாக வேணுமா மெலிய வேணுமா என்கிறதைப் பார்க்கலாம். :-)

//அவங்க‌ ஃபீல் பண்ணாட்டியும் பார்க்கிறவங்க‌ கேள்வி கேட்டு துளைக்கிறது// இது எந்த விஷயத்தில்தான் இல்லை! படிக்க... கழுதையை தூக்கிட்டுப் போன அப்பாவும் பையனும் கதைதான் ஞாபகம் வருது. :-)இதையெல்லாம் பெரிசா எடுத்துக்கப்படாது. எனக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்கு டாக்டர் மெலியச் சொல்லி இருக்காங்க. அதற்காக மெலிய... ஊர்ச்சனம், 'என்ன இப்பிடி மெலிஞ்சு போறீங்க? உடம்புக்கு ஏதாச்சுமா?' என்று கேட்டிருக்காங்க. :-)

‍- இமா க்றிஸ்

அன்பு இமா

கணித்துப் பார்க்க‌ சுட்டு எண் 21 வருகின்றது. ஆகா!! ஆரோக்கியமான‌ எடை.;)) நீ ரொம்ப‌ ஹெல்த்தியாக்கும். பரம‌ சந்தோசம்.

60 கிலோவானால் சுட்டு எண் 22 வரும். அதுவும் ஆரோக்கியமான‌ எடையே:))) வசந்தி உடம்பை கூல் பண்ண‌ வெந்தயக்களி சாப்பிடும் போது கூறினேன். அவளுக்கு மகிழ்ச்சி:)))

//கழுதையை தூக்கிட்டுப் போன அப்பாவும் பையனும் கதை// உண்மை இமா. மறக்கக் கூடாத‌ கதை. நினைவில் இருத்த‌ வேண்டிய‌ கதைகளில் ஒன்று.

எப்பவுமே நமக்குச் சரின்னு படுவதைச் செய்ய‌ வேண்டும். யார் என்ன‌ சொல்லுவாங்கன்னு நினைச்சா ஒண்ணும் செய்ய‌ முடியாது. எப்பவும் அனைவரையும் திருப்தி பண்ண‌ முடியாது. ஊர் வாயை மூட‌ முடியாதுன்னு சொல்வாங்களே.

தகவலுக்கு மிக்க‌ நன்றி இமா:))

அன்பு நிகிலா,

ஹும்... முதல்ல ஒரு பெருமூச்சு விட்டுக்கறேன்! கொடுத்து வச்சவங்க.

அஞ்சு கிலோ காணோமா?! தேடாதீங்க, விட்டுடுங்க:):)

இங்க ஒரு கிலோ கூட குறைக்க முடியல:(

வெயிட் கூடுவதற்கு ... கார்போஹட்ரேட் உணவு எடையைக் கூட்டும்.

இட்லி, தோசை இதெல்லாம் சாப்பிடலாம். அரிசி, பருப்பு அரைச்சு, வேக வச்சு, சாப்பிடறப்ப பயமில்லாம சாப்பிடலாம்.

நெய் .. வீட்டில் தயிர் உரை ஊற்றி, கடைந்து, வெண்ணெய் காய்ச்சி நெய் ஆக்கி சேர்த்துக்கலாம்.

இல்லன்னாலும் தேங்காய் எண்ணெயில் தாளிதம் செய்து, சட்னி சாம்பார்ல சேர்த்துக்கலாம்.

பயறு வகைகளை ஊற வச்சு, சுண்டல் ஆக்கி, நிறைய தேங்காய்ப்பூ சேர்த்து, தாளித்து சாப்பிடலாம். ருசிக்கு ருசி, வயிறும் நிறையும், வெயிட் அதிகமாகலைன்னாலும் குறையாம இருக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

//சொல்வதெல்லாம் உண்மை// ஆஹா!! அருமையான‌ தலைப்பு. பொருத்தமான‌ தலைப்பு சூட்டுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே..

60 கிலோ ரொம்ப‌ கஷ்டப்பட்டு ஏத்தின‌ எடைங்க‌. அதனால் தான் விடாம‌ தேடுறோம்.

கார்போஹைட்ரேட் அதிகம் எடுத்துக்கணும். சரி.... இட்லி, தோசை எண்ணிக்கையை அதிகப்படுத்துவோம்..

நெய் வீட்டில் தான் தயாரிப்பது வழக்கம். தேங்காய் எண்ணெயை இன்று முதல் தாளிதம் செய்யவும் பயன்படுத்த‌ ஆரம்பிப்போம்.

நீங்க‌ சொன்னதும் தான் நினைவுக்கு வருது. சீதா. கொண்டைக்கடலையை இரவில் ஊற‌ வைத்து காலையில் சாப்பிடலாம் என்பது. முன்னர் அவ்வாறு சாப்பிட்டிருக்கிறேன்.

வெயிட் அதிகமாகா விட்டாலும் மேலும் குறையாமல் இருப்பது ரொம்ப‌ முக்கியம் ஆச்சே:))

பதிவுக்கு மிக்க‌ நன்றி சீதா:))

ithe piratchanai enakum undu pa
na piditha oil food saapta udambu udane wait podum
appram enna..saapidamal viratham irupen pa .....saappadaiye marunthupola edupen romba kastama irukumpa.....

கருத்துக்கு நன்றி சகோதரி ஃபைரோஸ்