வார்ட்ரோப் சின்ன‌ சின்ன‌ டிப்ஸ்

நீங்கல்லாம் பொழுது போகாமல் போரடிச்சா என்ன‌ பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனால், எனக்குப் பிடித்தமான‌ விஷயம், என்னோட‌ வார்ட்ரோபை திரும்பத் திரும்ப‌ அடுக்கி அழகு பார்ப்பது.

ஒரு சமயம் சில்க், காட்டன், சிந்தெடிக் இப்படி ரகம் வாரியா அடுக்கி வைப்பேன். இன்னொரு சமயம் வானவில் மாதிரி கலர் வாரியா அடுக்கி ரசிப்பேன்.

ஹேங்கரில் தொங்க‌ விடும்போது புடவையின் ஓரப்பகுதி கூட‌ வார்ட்ரோபின் உட்பக்கமா வரும்படி பார்த்துப் பார்த்து தொங்க‌ விடுவேன்.

புடவையை ஹேங்கரில் தொங்க‌ விட்டால் ப்ளவுசை அருகிலுள்ள‌ டிராயரில் மடித்து வைப்பேன். புடவையைக் கையில் எடுத்ததும் பிளவுசைத் தேடாமல் டக் என‌ எடுக்க‌ வேண்டுமா?

ஒரு பிளவுசுக்கு மீது அடுத்ததை மடித்து வைத்து மேலே மேலே அடுக்கக் கூடாது. சிறியதாக‌ மடித்து அருகருகே அடுக்கினால் டிராயரை இழுத்ததும் எல்லா பிளவுசும் பார்வையில் படும். தேடாமல் எளிதில் எடுக்கலாம்.

டிராயர் வசதி இல்லாதவங்க‌, கடையில் நீளமான‌ பிளாஸ்டிக் கண்டெய்னர் கிடைக்கும். அதை வாங்கி அத‌னுள் அடுக்கலாம்.

அதுவும் இல்லேன்னா கூட‌ ஷூ வாங்கின‌ அட்டை டப்பாவை எடுத்து அதில் குட்டி குட்டி உள்ளாடைகளை அடுக்கலாம்.

எங்க‌ அம்மா தீபாவளிக்குப் பட்டாசு கொளுத்தி விட்டுப் போடும் அனைத்து குட்டி டப்பாக்களையும் எடுத்து அதிலே ஹேர்பின், ரப்பர் பேண்ட், சின்னப் பொருட்களை வைத்து டிராயர்ல‌ வச்சிருப்பாங்க‌. பட்டுப் புடவை வாங்கும்போது கிடைக்கும் அட்டை டப்பாவில் எண்ணெய் பாட்டிலை அடுக்கி வச்சிருப்பாங்க‌. எல்லாம் ஒரு டிப்ஸ் தான். எங்க‌ அம்மா கிட்ட‌ இருந்து இதெல்லாம் கத்துகிட்டேன்.

டிராயரை நம் வசதிக்கேற்றபடி ரெண்டா அல்லது மூணா டிவைட் பண்ணி வைக்க‌ பார்க்க‌ அழகாக‌ இருக்கும். சிறிய‌ துணிகளை தேடும் தொல்லை இருக்காது.

கர்ச்சீஃப், பெல்ட், டை, சாக்ஸ் இவற்றை இதிலே அடுக்கலாம். சாக்ஸை ஒன்றினுள் மற்றதை நுழைத்து வைத்தால் காலையில் புறப்படும் அவசரத்தில்
'ஒண்ணு இங்கே
இன்னொண்ணு எங்கேன்னு' வாழைப்பழ‌ ஸ்டைல்ல‌ தேட‌ வேண்டாம்.:)) முதலாவது படத்தில் அவ்வாறு சாக்ஸை நுழைத்து வைத்து இருக்கிறேன்.

எங்கள் வீட்டில் மரவேலை நடக்கும் போது மீதமான‌ மரத்துண்டுகளை எப்படி உபயோகப்படுத்தி இருக்கிறேன் பாருங்க‌. இப்படி இரண்டாக‌ டிவைட் பண்ணினால் இதில் பிளவுஸ் அல்லது பனியன் வைத்து எடுக்க‌ வசதியா இருக்கும். கிட்டத்தட்ட‌ முப்பது பிளவுஸ் இதிலே அடுக்கலாம். அனைத்தும் பார்வையில் படும். எளிதாக‌ எடுக்கலாம்.

இந்த‌ டிவிசனை நம் விருப்பப்படி எடுத்து மாற்றிக் கொள்ளுபடியாக‌ செய்திருக்கிறேன். இது டிராயருடன் சும்மா தான் இருக்கின்றது. வேண்டாம் என்றால் தூக்கிப் போட்டு விடலாம்.

சின்ன‌ சின்ன‌ அட்டைப் டப்பாக்களைக் கொண்டும் இப்படி டிராயரை டிவைட் பண்ணலாம். அதை நீங்களே உங்கள் கைவண்ணத்தில் உருவாக்கி விடலாம்.

பெட்ஷீட் மடிக்கும் போது தலையணை உறையை அதற்கு உள்ளேயே சேர்த்து மடித்து வைத்தால் சுலபமாக‌ எடுக்கலாம்.

பவுச், ஹேண்ட்பேக், காலணிகள் இவற்றை பார்ட்டிக்கு செல்ல‌, கடைக்குச் செல்ல‌ என‌ பிரித்து அடுக்கலாம். அல்லது கலர்வாரியாகவும் வைக்கலாம்.

அதுபோல‌ அக்சசரீஸ் எல்லாம் ஜிப் லாக் கவரில் போட்டு
சீ த்ரூ பாக்சில் வைக்கலாம்.

அனார்க்கலி சுடியை ஹேங்கரில் தொங்க‌ விட்டால் வார்ட்ரோபை திறக்கும் போது அழகாக‌ இருக்கும்.

மடித்து வைக்கும் போது டாப், பாட்டம், துப்பட்டா சேர்த்து செட்டா வைங்க‌. அதையும் ஒரே அளவில் மடித்து வைக்கணும். துப்பட்டாவை சிறியதாகவும், பாட்டம் மடிப்புக்கு வெளியே துருத்திக் கொண்டும் இருப்பது போல‌ மடிக்கக் கூடாது. ஒரு சீராக‌ மடிக்கப் பழகணும்.

லெக்கிங்ஸ் எல்லாம் டிராயர்ல‌ குட்டியா மடித்து அருகருகே வைக்கலாம். செலக்ட் செய்யவும் எடுக்கவும் வசதியாக‌ இருக்கும்.

அடிக்கடி எடுக்கத் தேவையில்லாத‌ துணிகளை மேல்தட்டில் வைக்கலாம்.

குளிர்காலத்தில் உபயோகிக்கும் ஆடைகளைத் தனியே பிரித்து அடுக்கலாம்.

அன்புத் தோழிகளே இந்த‌ டிப்ஸ்லாம் உங்களுக்கு பயன்பட்டால் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி:)))

பை...

5
Average: 4.7 (23 votes)

Comments

Useful tips. Socks thedura problem daily nadakum. Eni unga tips than follow panna poren. Thank u so much.

ரம்யா ஜெயராமன்

மிக்க‌ நன்றி.:))

How to fold socks இப்படிப் போட்டு யூ ட்யூப்ல‌ தேடுங்க‌. தெளிவா புரியும்படி வரும். நான் அப்படித் தான் வைக்கிறேன்.

// இது டிராயருடன் சும்மா தான் இருக்கின்றது. வேண்டாம் என்றால் தூக்கிப் போட்டு விடலாம். //நோ தூக்கி எல்லாம் போட குடாது.இங்கெல்லாம் இப்பிடி அடுக்குறதுக்கு இதே மாதிரி கடைல விக்கும் செம்ம்ம்ம்ம விலை.

நான் வாங்கி வைச்சிருக்கேன் எல்லா டிராயர் கபோர்ட் எல்லாத்துக்கும்
இல்லாவிட்டாலும் சின்ன சின்ன பாக்ஸ் வாங்கி நீங்க சொன்னமாதிரி டிவைட் பண்ணிதான் வைப்பேன்.
தேடும்போதும் கிளீன் செய்யும்போதும் நிறைய நேரம் மிச்சமாகும்.

ஐய்ய்ய் என் உடன்பிறப்பே .எனக்கும் அதுதான் வேலை.வீட்டில உள்ள மூலை முடுக்கெல்லாம் மண்டைக்குள்ளயே இருக்கும் .கனவில கூட பிளான் போடுவேன்.

சொக்ஸ் வெள்ளை தவிர எதையும் வாங்காமல் விட்டாலே பாதி பிரச்சனை முடிஞ்சுது.வெள்ளைதான் நல்லதும் அழுக்கை கண்டுபிடிச்சு கிளீன் பண்ணீடலாம்.சிலர் அழுக்கை மறைக்க விரும்பி வெள்ளையை ஒதுக்குவார்கள்.(அல்லது எல்லா சொக்ஸ்ம் ஒரே மாதிரி}

ம்ம்ம்ம் மொத்தத்தில மிக மிக அருமையான தகவல்.நிறைய பெண்களூக்கு தெரியாத இன்னுமொரு விஷயம் வீட்ல உள்ள அத்தனை இடமும் உங்கள் கன்ரோலில் சுத்தமா இருந்தால் மனம் நின்மதியாக இருக்கும் .அல்லது அடிக்கடி கோவம் வரும்.உணமை நிகி.

உடன்பிறப்பே

//இங்கெல்லாம் இப்பிடி அடுக்குறதுக்கு இதே மாதிரி கடைல விக்கும் செம்ம்ம்ம்ம விலை.// நானும் கடைகடையா தேடிப்பார்த்தேன். ஃபோம் போர்டு அதோடு கூடவே ஹோல்டர்.. ம்ஹூம் எனக்குக் கிடைக்கல‌.

நானும் விடுவதா இல்லை. என்ன‌ செய்யன்னு ஒரே யோசனை. டிவைட் பண்ணி அடுக்க‌ ரொம்ப‌ ரொம்ப‌ ஆசை.
கடைசியில் வீட்டில் மரவேலை முடிந்து கால் இஞ்ச் பிளைவுட் மைக்கா ஒட்டப்பட்டு மீதமானது.
அதை எடுத்து கார்பென்டரிடம் நானே போட்டோ காண்பித்து டிவைட் பண்ணிகிட்டேன்.

என்னவர் ஏராள‌மாக‌ பணம் செலவு செய்து அமைத்த‌ வார்ட்ரோபை விட‌ நான் ப்ளான் செய்த‌ ட்ராயர் டிவைடர் அதிக‌ மகிழ்வைத் தந்தது.

//கனவில கூட பிளான் போடுவேன்.// ஹைய்யா !!!!!நிஜம் சுரே. அப்படியே என்னைப்போல‌....

நானும் வார்ட்ரோப்க்கு இஞ்சினீயர் பிளானை என் வசதிப்படி மாற்றம் செய்து கொண்டேன். அப்போது தூங்கும் போதும் இதே யோசனையா தான் இருக்கும். ட்ராயர் எங்கே வேணும். ஹேங்கர் எங்கேல்லாம் வேணும். ஒரே யோசனையா இருக்கும். இரவு தூங்க‌ போன‌ பின்னும் திடீர்னு டெய்லர் டேப்பை எடுத்துகிட்டு அந்த‌ இடத்தை அளந்து பார்க்க‌ ஆரம்பிச்சிருவேன்.

அப்புறம் வெள்ளை. எங்க‌ வீட்டு கிச்சன் தரை, கேபினெட் ஃபுல்லா வெள்ளை தான். சும்மா பளிச்னு இருக்கும். ரொம்ப‌ விரும்பி வெள்ளை கலர்ல‌ அமைச்சேன்.
சிலர் வெள்ளை அழுக்கு தாங்குமான்னு கேட்டாங்க‌. ஆனால், அது தான் என்னை பளிச்சிட‌ வச்சிருக்கு.:))

அப்புறமா கடைசியா சொல்லியிருக்கீங்களே.
//அத்தனை இடமும் உங்கள் கன்ட்ரோலில் சுத்தமா இருந்தால் மனம் நின்மதியாக இருக்கும் //. எல்லா இடமும் என் கண்ட்ரோலில் இருந்தால் தான் எந்த‌ பொருள் எங்கே இருக்குன்னு என்னால‌ எப்போ கேட்டாலும் சொல்ல‌ முடியும். டைம்டேபிள் போட்டு க்ளீனா வச்சுக்க‌ முடியும். அப்படி சுத்தமா இருக்கும் போது மனதுக்கு நிம்மதி கிடைப்பதென்னவோ உண்மை தான் சுரே.

பகிர்வுக்கு மிக்க‌ நன்றி சுரே:))))

படிச்சு முடிக்கல நிகி. //புடவையை ஹேங்கரில் தொங்க‌ விட்டால் ப்ளவுசை// அதே ஹாங்கர்லதான் மாட்டுவேன். இங்க வந்தப்புறம் விரல் விட்டு எண்ணுற அளவு புடவைதான் இருக்கு. :-) மீதி நாளை தொடரும். :)

‍- இமா க்றிஸ்

விரல் விட்டு எண்ணும் அளவு புடவை என்பதால் உங்களுக்கு அது சரியா போச்சு.:)
அவ்வாறு புடவையோடு சேர்த்து பிளவுசும் அதே ஹேங்கரில் போட்டால் நெருக்கமாகப் போட‌ முடியாது. தவிர‌ பார்க்கவும் நேர்த்தியாக‌ இருக்காது.

பிளவுஸ் இன்றி புடவை மட்டும் தொங்க‌ விட்டால் ஒரே சீரா ஏற்ற‌ இற‌க்கமின்றி
ஒரு லெவலா இருக்கும். வார்ட்ரோப் திறந்ததும் நீட்டா தெரியும்.

நாளைக்கு நானும் வரேன். புது டிப்ஸ் சொல்வீங்கல்ல‌..... இப்போ.. பை...இமா, நல்லிரவு:))

ஹாய்,
சூப்பர் பிளானிங் நிகிலா. நல்ல‌ பயனுள்ள‌ டிப்ஸ்.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

பாராட்டுக்கு நன்றி :))

ரஜினி பதிவு போட்டு நாளாச்சே, எங்கே காணோம்னு நினைச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ளே வந்துட்டீங்க‌.

எப்படி இருக்கீங்க‌ நலமா? :))

அன்பு நிகிலா,

நல்ல டிப்ஸ்.

நான் சேலைகளை சற்றே அகலமாக மடித்து வைப்பேன். சேலையின் உள்ளேயே ப்ளவுஸும் சேர்த்து வைத்து விடுவேன்.

ஆஃபிஸ் போய்க் கொண்டிருந்த நாட்களில், மறு நாளைக்கு தேவையான உடையை முதல் நாளே எடுத்து வைத்து விடுவேன்.

அடுக்கி வைக்கும்போது, வெவ்வேறு நிற சேலைகள் அடுத்தடுத்து வருகிற மாதிரி வைத்திருப்பேன்.

அதே போல - பட்டு சேலைகள் தனி தட்டில், ஆஃபிஸ் ஃபார்மல் சேலைகள் தனியாக, என்று அடுக்கி வைப்பேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

unga tips super .. innum tips tharalame ....
usefulla iruku nikila

வாங்க‌ சீதா. உங்களைத் தான் தேடிட்டு இருந்தேன்.:))

நானும் சேலைகளை அயர்ன் செய்தால் எப்படி மடிப்பார்களோ அதே அளவு அகலத்தில் தான் மடித்து வைப்பேன். அவ்வாறு மடித்து வைக்கும் போது பிளவுசையும் அதனுள்ளேயே மடித்து வைத்து விடுவேன்.

//அடுக்கி வைக்கும்போது, வெவ்வேறு நிற சேலைகள் அடுத்தடுத்து வருகிற மாதிரி வைத்திருப்பேன்.// இது நல்லதொரு டிப்ஸ் சீதா.
இரு பின்க் நிற‌ சேலைகளை ஒன்றின் மீது ஒன்று அடுக்குவதை விட‌ வேறு கலரை வைத்தால் கலர் வேறுபாட்டால் எடுக்க‌ எளிதாக‌ இருக்கும்.

வரவுக்கு நன்றி சீதா.

பாராட்டுக்கு மிக்க‌ நன்றி.

இன்னும் டிப்ஸ் தரனுமா.....
முக்கியமான‌ டிப்ஸ் ஒண்ணு விட்டுப் போச்சு. அதை இங்கே சொல்றேன் பா.
அப்பப்போ வேண்டாத‌ துணிகளை வார்ட்ரோபிலிருந்து அகற்றி, அவற்றை உபயோகிக்கும் யாருக்காச்சும் கொடுத்து விடணும்.

இந்த‌ குறிப்புகள் உங்களுக்குப் பயன்பட்டால் எனக்கு ரொம்பவும் சந்தோஷம் பா:))

kandipa unga tips use aagumpa ena
na kodukura type than nikila.:-) ..thanks

கொடுப்பது என்பது ரொம்ப‌ நல்ல‌ விஷயம்.
மிக்க‌ நன்றி தோழி:))

neenga immama lam arusuvaiku vanthu varuda kanakatchu...neengala luckypa
enakutha ivalavu nalaga therilapa
ippa enaku share panna nalla friends kidaithatharkaga santhosa paduren nikila ma...

நாலு வருடம் முன்பு நான் அறுசுவைக்கு வந்த‌ புதிதில் செம‌ அரட்டை நடக்கும்.
பழைய‌ அரட்டை இழைகளைப் படித்து பார்த்தால் அது புரியும்.:))
இப்போ அரட்டை இழை சும்மா இருக்கு பா.
எப்போ உள்ளே வந்தாலும் அரட்டையை படிச்சிட்டு தான் மறுவேலைன்னு இருந்தோம்.
எல்லாம் ஒரு காலம்.

na free timla ellam unga arattaigalai paarpen athilum amanusyam thrila irukupa sollapona arusuvai namma personel diery pola aagiduchu nikila ma

ஃபைரோஸ் அமானுஷ்யம் பற்றி படிச்சீங்களா. சூப்பர். உண்மையில் டைரி மாதிரியே. எல்லா விஷயமும் தேடி எடுக்கலாம். :))

nikila atha en kekkuringa aarvama padichuten ana padikumpothu payam illa andru night romba payam athe nlnaivave irunthathu meendum antha izhai thaodarthal nallarukum verry interesting pa

ஹா ஹா. ஃபைரோஸ் இன்னும் தொடரனுமா இன்னுங்கொஞ்சம் பயப்படவா. :)). அப்புறம் தூக்கத்தில கத்தப் போறீங்க. Ok ok Bye friend

ada.....ennapa ipdi soltinga naangallam ippa romba thairiyamanavangapa enna oru 15 varudathuku munnadi night 3 mani irukum bath roomla poi en nizhala pathu kathi ooraye kooptatha ninaithal ippavum siriputhan varuthu nikila ..... ana ippa na romba tairiyasaalipa ....:-)

Hello Nikila,
I am new commer, your tips is very very use full for me, my family member is 4 but bero is two; i am arrange every week for my bero; but not good; this tips is very use full
Thanks nikila

thank u kavya:))

Supper

Thank u brother

நன்றி

பதிவுக்கு நன்றி:))

ஹை நிகிலா,

உங்க டிப்ஸ் சூப்பரா இருக்கு. குட்டி குட்டி ட்ரெஸ் வைக்க ட்ராயர்ஸ் வாங்கலாம்னு இருந்தேன். இனி உங்க டிப்ஸ் பாலோ பண்ண போறேன். நன்றி

இந்த‌ டிப்ஸ் உங்களுக்கு பயன்படுமானால் எனக்கு மிக்க‌ மகிழ்ச்சி.
பதிவுக்கு நன்றி சகோதரி:)