
குழந்தைக்காக காத்திருப்போர் குழந்தையின்மை ,குழந்தையின்மைக்கான மருத்துவம் இவை பற்றி மிகவும் அலசி ஆராய கூடாது.ஆராய்ந்தால் நமக்கு ஏதோ பிரச்சனை இருப்பதுபோலவே தோன்றும் .இன்ன மருத்துவம்தான் இதற்கு
சரியான வழி என்று முடிவெடுக்கவும் அவசரப்பட்டு பக்கவிளைவுகள் உள்ள மாத்திரைகளை உட்கொள்ளவும் ஆரோக்கியத்தை கெடுக்கவும் ஏதுவாகி விடும்.உணர்வுகளுக்கும், ஹார்மோன்களுக்கும் ,கர்ப்பத்திற்கும் தொடர்புகள் இருப்பதால்
இயற்கயாக கருத்தரிக்கும் வாய்ப்பை நழுவ விடும் வாய்ப்பும் ஏற்படும்.
ஆனால் நமக்கு என்ன நடக்கிறது என்பதை அறியவும் டாக்டர்கள் சொல்வதை புரிந்து கொள்வதற்குமாக
சிலவற்றை மேலோட்டமாக விளக்குகிறேன்.
1. ஐ யு ஐ என்றால் என்ன?
ஆணிடம் இருந்து பெறப்பட்ட விந்தணுக்களை லாப் ல் சுத்தம் செய்து, அதிக உயிர்வாழும் அணுவை தெரிவு செய்து , பெண்ணின் கருமுட்டை வெளிவரும் நாளை போலிக்குள் ஸ்டடி மூலம் தெரிந்து கொண்டு
உரிய நாளில் நுண்ணிய குழாய் மூலம் பெண்ணின் கர்ப்பப்பை நோக்கி உட்தள்ளுவதாகும்.
2. ஐ யு ஐ செய்வதற்கான காரணங்கள் என்ன?
I.ஆணின் அணு பிரச்சனை .- ஐ யூ ஐ யில் தெரிவு செய்யப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.ஆனால் அணு பாதிப்பு வீதம் அதிகமாக இருந்தால் அதாவது நீந்தும் திறன் 20 வீதத்திற்கும் உட்பட்டும் எண்ணிக்கை 1மில்லியனுக்கு குறைவாகவும் இருந்தால்
இந்த ட்ரீட்மண்ட் சரியான தீர்வை கொடுக்காது.ஆனால் கொடுக்கவே கொடுக்காது என்றில்லை.
II.தானம் பெற்ற விந்தணுவை உபயோகிப்பதற்கு ஐ யு ஐ செய்வார்கள்
III.காரணம் தெரியாத கர்ப்பமின்மை அதாவது தம்பதிகளுக்கு குழந்தை கிடைப்பது தள்ளி போய்க்கொண்டே இருக்கும் அதே நேரம் மருத்துவ சோதனைகள் செய்து பார்த்தால் எந்த பிரச்சனையும் இருக்காது.கருமுட்டை ஒழுங்காக வளரும்
அதனால் அதற்கு மாத்திரை ஊசி கொடுக்க முடியாது,கணவன் அணு எந்த பிரச்சனையும் இருக்காது,கருமுட்டை ஒழுங்காக வெளியேறும் ,மாதவிடாய் ஒழுங்காக இருக்கும் ஆனால்3,4 வருடங்கள் வரை இயற்கை கருத்தரிப்பு நடக்காமல் தொடரும்.
இந்த காரணத்திற்கும் மருத்துவர்கள் ஐ யு ஐ பரிந்துரைப்பார்கள்.இந்த பிரச்சனையை மையமாக கொண்டு செய்யப்படும் ஐ யு ஐ வெற்றி வீதம் மிக அதிகமாக இருக்கும்.
IV.endometriosis அதாவது கர்ப்ப சுவரை சுற்றி இருக்கும் திசுக்களின் தடிமம் அதிகமாகவும் பிறள்வாகவும் இருக்கும் பட்சத்தில் அதற்கு மாத்திரை எடுக்க வேண்டி இருக்கும்.
இவ்வாறான காரணங்களுக்காக தொடர்ந்தும் மாத்திரைகள் எடுக்காமல் ,கருமுட்டை அளந்து ,வெளியேறும் நாள் கணித்து,திசுக்களின் லைன் ஐ அளந்து மாத்திரைகள் எடுத்து எல்லா சிரத்தையும் எடுக்கும் போது
அவ்வளவும் வீணாகி போய்விடக்கூடாது என்பதற்காக கருத்தரித்தல் வாய்ப்பை அதிகரிக்க ஐ யு ஐ ம் செய்து ,தம்பதிகளைகளையும் இணைந்திருக்க அறிவுறுத்துவார்கள்.
v. தம்பதிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும் ஐ யு ஐ செய்வார்கள்.அதாவது சிலர் தாமே முடிவெடுப்பார்கள் ,வயதை கருத்தில் கொண்டும்,பிறர் க்கு ஐ யு ஐ மூலம் கருத்தரித்ததை அறிந்தும்,வேலை நிமித்தம் மாதத்தில் பாதி நாட்கள்
பிரிந்து வாழவேண்டி வருவதாலும்,தாம்பத்தியத்தில் ஏற்படும் சிக்கல்களாலும் விரைவில் கருத்தரிக்க எண்ணி இந்த முடிவுக்கு போகும்போது மருத்துவர்களும் ஒத்துழைத்து ஐ யு ஐ செய்வார்கள்.
3. ஐ யு ஐ யின் வெற்றி வீதம் என்ன?
இது அவரவர் பிரச்சனைக்கும் வயதிற்கும் ஏற்ப மாறுபடும் .

4..உள்ளே அனுப்பப்பட்ட ஸ்பேம் வெளியேறுவதற்கு வாய்ப்புள்ளதா?
ஒரு போதும் இல்லை.ஸ்பேம் ஐ தனியே உட் செலுத்த முடியாது ஒரு களிம்பு கலந்தே அனுப்புவார்கள்.அதுவே ஐ யு ஐ க்கு பின்னாலான நீர்க்கசிவிற்கு காரணம்.தவிர ஸ்பேம் ஒருபோதும் வெளியேறாது.
5. ஐ யு ஐ செய்யும்போது வலி இருக்குமா?
இல்லை .சிலர் சிறிய வலியையும் பெரிதாக எடுத்து குத்துது குடையுது என்பார்கள்.அவ்வாறானவர்களுக்கு கொஞ்சம் வலிப்பதுபோல் தெரியும் .ஆனால் வலியை சமாளிக்க தெரிந்தவர்களுக்கு இந்த வலி உணரும்படி இருக்காது.ஆனால் நுண்ணிய குழாய் மூலம் ஸ்பேம் ஐ உட் செலுத்தும்போது
கருமுட்டையை விரைவாக எதிர்கொள்ள வைப்பதற்காக முடிந்த அளவு அருகாமைக்கு இந்த ஸ்பேம் ஐ எடுத்து செல்ல இந்த ஐ யு ஐ செய்யும் நுண் குழாயில் சிறிது காற்றும் உட்செல்லுவது போல் அமைக்கப்பட்டிருக்கும்.
இது வெகு சிலருக்கு ஒவ்வாமையையும் வயிற்று உபாதைகளையும் ஏற்படுத்தும்.கொஞ்சம் வயிறு பிடித்தால் போல் இருக்கும்.நாட்கள் நகர மறைந்து விடும்.ஆனால் அதிகமான தாங்க முடியாத உபாதைகள் கொடுக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுக வேண்டும்.
தவிர சின்ன சின்ன வலிகளை மனதை திசைதிருப்பி கண்டும் காணாமலும் போனால் நல்லது.ஒத்தடம் கொடுக்கிறேன் கை வைத்தியம் செய்கிறேன் என்றெல்லாம் ஆரம்பிக்க கூடாது.
6.ஐ யு ஐ ன்பின் இரத்தப்போக்கு இருக்குமா?
மிக மெல்லிய இரத்த கசிவு இருக்கும் .இது ஐ உ ஐ குழாயின் உராய்வினாலும் ,குழாயை செலுத்த பாதையை நோக்குவற்கு தசையை இழுத்து ஒரு கிளிப் மாதிரி பிடித்து வைத்திருக்க ஒரு டூல்ஸ் பயன்படுத்துவதாலும் ஏற்படும் .
மறுநாள் அல்லது 3 நாள்களுக்கு மேல் இருக்காது.தவிர மாதவிடாய் போன்று உதிரம் இருப்பின் மருத்துவரை அணுக வேண்டும்.
7..ஐயு ஐ ன் பின் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை எவை?
மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும் .அதிக பரபரப்பு கூடாது,மூச்சு பிடித்து பாரம் தூக்க கூடாது,அதிகம் குனிந்து நிமிர்ந்து செய்யும் எக்ஸசைஸ் செய்ய கூடாது.சுடு நீரில் குளிக்க கூடாது.உடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
புதிய உணவுகளை முயற்சிக்க கூடாது , வயிற்று கோளாறு ஏற்படும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
8..ஐ யு ஐ எத்தனையாம் நாளில் செய்யப்பட வேண்டும்?
மாதவிடாய் ஆகி 10 ல் இருந்து 18 நாள்வரை. அவரவர் கருமுட்டை வளர்ச்சி அடைந்திருப்பதையும் கருப்பை தசை தடிமம் அதாவது எண்டோமட்டீரியத்தினையும் அடிப்படியாக வைத்து செய்வார்கள்.
கருமுட்டை வளர்ச்சி நாளுக்கு 1மில்லி மீட்டர் ல் இருந்து 2 மில்லிமீட்டர் வரை என்ற அடிப்படையில் 2.0 வை எட்டும் போது செய்வார்கள்.இருப்பினும் 19 இல் இருந்து 24 சைஸ் வரை ஐ யு ஐ யிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது.
ஆனால் 19 மில்லி மீட்டர் சைஸ் ற்கு குறைவான கருமுட்டை வெற்றி வீதத்தை குறைக்க வாய்ப்புள்ளது .அதுபோல் 20 ல் ஐ யு ஐ யை தவற விட்டால் கருமுட்டை வெளியேறிவிடும் வாய்ப்பு உள்ளது.
அதனால்தான் சரியான அளவாக 20 ஐ எடுத்துக்கொள்கிறார்கள்.
9. ஐ யு ஐ ன் பின் தாம்பத்தியம் அவசியமா?
ஆம் .மருத்துவர் பரிந்துரைப்படி அடுத்த நாள் இணைந்திருக்க அறிவுறுத்தபடுவீர்கள்.காரணம் ஸ்பேம் உயிர் வாழும் நேரம் 24 இல் இருந்து 72 மணித்தியாலங்கள்.சிலவேளை ஐ யு ஐ மூலம் அனுப்பிய ஸ்பேம் கருமுட்டையை சேர தவறினால் கூட
அடுத்தநாள் {ஐயுஐ செய்ததில் இருந்து 24 மணித்தியாலங்களுக்கு பின் 48 மணித்தியாலங்களுக்கு முன் }தாம்பத்தியத்தில் கருமுட்டையுடன் சேரும் வாய்ப்பை அதிகரிக்கவே இவ்வாறு அறிவுறுத்த படுகிறது
10.ஐ யு ஐ செய்து எத்தனை நாளில் கர்ப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.?
உ ங்களுடைய கடைசி மாதவிலக்கு திகதி கடந்து 5 நாட்கள் சென்ற பின் இரத்தப்பரிசோதனை செய்து பார்க்கலாம்.வீட்டில் பிரக்னன்சி கிட் ல் பார்ப்பதாக இருந்தால் அதிகாலை முதலாவது யூரின் ல் பரிசோதித்து பார்க்கலாம்.
11.கர்ப்பம் ஆனால் எப்போது அறிகுறி தோன்றும்?
நீங்கள் ஹார்மோன் மாத்திரைகள் எடுப்பவராயின் மாத்திரைகளின் தாக்கமும் கர்ப்ப அறிகுறிகள் போலவே இருப்பதால் சொல்ல முடியாது.தவிர கர்ப்பத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதால் புதிதாக ஏதோ அறிகுறிகள்
ஏற்படுவது போல் இருக்கும் .ஆனா உடல் எப்போதும் போலவே இயங்கிக்கொண்டிருக்கும் இதற்கு முன் உன்னிப்பாக கவனிக்காத காரணத்தால் அவற்றை உணர்ந்திருக்க மாட்டோம்.பொறுமையாக வழமைபோல் நாட்களை செலவிட்டு
பரிசோதித்து பார்க்கலாம்.
12.வெள்ளை படுதல் அதிகமாக இருக்குமா?
இல்லை வெள்ளை படுவது நோயல்ல. துர்நாற்றமும் பழுப்பு நிறமும் இல்லாத பட்சத்தில் அது எவ்வாறான எவ்வளவு அதிகமான வெள்ளைபடுதலாக இருந்தாலும் சாதாரணமே.கண்டு கொள்ள தேவையில்லை.
13.ஐ யு ஐ செய்வதற்கு எவ்வளவு செலவாகும் ?
இலங்கையில் மாத்திரை ஊசி டாக்டர் செலவு எல்லாம் சேர்த்து மொத்தம் 20 000 {இருபதாயிரம்} ரூபாய்
ஐரோப்பிய நாடுகளில் ஐ யூ ஐ செய்வதற்கான 75 வீத செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.டாக்டர் க்கும் பாமசிக்கும் பணம் செலுத்த வேண்டும் ஆனால் அரசாங்கம் உங்கள் தகுதி வேலை யை பொறுத்து
மீள செலுத்துவார்கள்உங்களுக்கு அதிகம் 25 யூரோ செலவாகலாம் ,சிலருக்கு எந்த கட்டணமும் கிடையாது.முழுவதும் இலவசம்.
கனேடிய அமெரிக்க நாடுகளில் நீங்கள் வசிக்கும் மாகாணங்களை பொறுத்து கட்டணம் இருக்கும்.உங்களுடைய தனிப்பட்ட இன்சூரன்ஸ் ஐ பொறுத்து செலவு இருக்கும்.கவர்மண்ட் டாக்டர் கட்டணம் தவிர எதையும் ஏற்றுக்கொள்ளாது.
600 முதல் 800 டொலர் வரை செலவாகும்.
இந்தியாவில் முழுக்க முழுக்க தனியார் சம்மந்தப்பட்டது.கட்டணம் ஹாஸ்பிட்டல்களை பொறுத்தும் ,உங்களுக்கு தேவையான ஊசி மாத்திரைகளை பொறுத்தும் இருக்கும்,சில ஹாஸ்பிட்டலில் விலை அதிகமான விட்டமின்கள் பரிந்துரைப்பார்கள்.
3 500 மூவாயிரத்து ஐநூறு முதல் 10 ஆயிரம் வரை செலவாகலாம்.
Comments
IUI
//குழந்தைக்காக காத்திருப்போர் குழந்தையின்மை ,குழந்தையின்மைக்கான மருத்துவம் இவை பற்றி மிகவும் அலசி ஆராய கூடாது.// :) எந்த சிகிச்சையானாலும் ஒரு அளவுக்கு மேல் அலசி ஆராயக் கூடாது. :) ஒரு தரம் கால் விரலில ஒரு பிரச்சினை. டொக்டர்தான் கூகுள் பண்ணிப் பார்க்கலாம் எண்டவ. ஆனால் மக்கு இமா கூகுள் இமேஜசைப் பார்த்தேன். சத்தி வராத குறை. ;) அண்டைக்கு நித்திரையே இல்லை. கனவிலயும் அந்த இமேஜஸ் வந்து துலைச்சுது. :) ஒரே பிடியா இருந்து சுகமாக்கியாச்சுது. அந்த ஒரு தரத்துக்குப் பிறகு ஆராயிறது இல்லை எதையும். தாற மருந்தைக் குடிச்சிட்டு சொன்ன மாதிரி இருக்கிறது.
~~~
இனி யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் இந்த லிங்கைக் கொடுக்கலாம். :) தொடர்ந்து ஒவ்வொரு விஷயமா எழுதுங்கோ சுரேஜினி.
- இமா க்றிஸ்
IUI(surejini mem)
iui பத்தி இவ்வளவு தெளிவா dr கூட சொல்ல மாட்டங்க,பட் நீங்க புரியும் படி,நீங்க சொன்ன விசயத்தில் எந்த கேள்வி,சந்தேகங்கலும், இல்லதா மாதிரி சொல்லீருக்கிங்க மேம்.iui பற்றிய எல்ல தகவல்கலையும் சொல்லி,என் மனதில் உள்ள பயத்தை போக்கி,தைரியத்தை விதைத்தர்க்கு நன்றி . என்னை போல குழந்தையை எதிர்பாக்கும் ஒவ்வொரு தோழிகளுக்கும் நீங்கள் எழுதியா iui ஒரு வரபிரசாதம் மேம்.
தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........
சுரேக்கா
சூப்பர்.. ரொம்ப ரொம்ப பயனுள்ள பதிவு.. நிறைய பேர் இங்க இதைப் பற்றி பல சந்தேகங்கள் கேட்கிறாங்க.. அவர்கள் அனைவருக்கும் பயன்படும்..
சின்ன வலிகளை கூட நிறைய பேர் பெருசா சொல்றாங்க இங்க.. அது அடுத்து அந்த ட்ரீட்மெண்ட் போறவங்களுக்கு ஒரு பயத்தை உண்டு பண்ணும்..
முதுகு வலி, வெள்ளை படுதல் இதெல்லாம் சாதாரண விஷயம் பெண்களுக்கு ..அதை நான் கர்ப்பமாக இருப்பேனா என 15, 20 நாள்ல கேக்கிறவங்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்??
பெண்களுக்கு கர்ப்பம் ஆரம்பித்ததில் இருந்து 10 மாதம் வரை உடல் ஒழுங்கான நிலையில் இருப்பதில்லை.. சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அதென்ன இதென்னனு நிறைய பேருக்கு பெரிய சந்தேகங்கள் வந்திடுறது..
இதுக்காகவாவது கர்ப்பம் பற்றி ஒரு பதிவு எழுதுங்க.. அருமையா இருக்கு.. வாழ்த்துக்கள் அக்கா.. :) :)
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
இம்ஸ்
நீங்க கருத்து சொல்லாட்டி மீ பயந்துடுவன்.ஏடாகூடமா சொல்லி வச்சுட்டனோ எண்டு பயம் வந்துடுது.மிக்க நன்றி
பார்வதி
ம்ம் வேறு மொழிகளின் தாராளமாக விளக்கம் கொடுத்திருப்பார்கள் .ஐ யூ ஐ ஐ பற்றி முழு விபரம் தெரிந்து கொள்ள 10 நிமிசம் எடுத்துக்கொண்டால் போதும் எனும் அளவுக்கு இருக்கு வேறு மொழிகளில்.தமிழில் அதிகம் இல்லை.அதனால் ப்ரெஞ் மொழியில் ஒரு டாக்டர் எழுதிய புத்தகங்களை படித்து புரிந்து கொண்டு தட்டினேன். இந்தியா சிறீ லங்காவில் ஐயுஐ க்கான செலவு தெரியவில்லை யாராவது சொன்னால் மேலே சேர்த்துக்கொள்கிறேன்.கருத்துக்கு நன்றிம்மா.
அபி
என்னய போலவே சிந்திச்சு இருக்குறீங்கள்.ரெம்ப பசிக்குது ஏன் ?????இதுக்கு என்ன சொல்ல???எனக்கு தெரிஞ்ச ஒரு டாக்டர் இப்பிடி குத்துது குடையுது நு கேள்வியா கேட்டா ஒரு நல்ல பதில் சொல்லுவா?
அதாவது உனக்கு ஏன் இப்பிடி செய்துன்னு உன் அம்மா, அக்கா, சித்தி க்களிடம் கேட்பது மிகச்சிறந்தது .நிறைய விஷயம் பொருத்தமாக இருக்கும் .யாருக்குமே இல்லாத அசெளவ்கரியம் உனக்கு வந்தால் எங்கிட்ட கேள்.மற்றும்படி 10 மாசமும் எதையாவது செய்யும் எல்லாத்தையும் தாங்கினாத்தான் குழந்தை கிடைக்கும் .எல்லாருக்கும் உள்ளதுதான்னு போய்ட்டே இருக்கணும் . இப்பிடி சொல்லி விரட்டி விட்ருவா? அங்குட்டு வெளிய வந்து டாக்டரை திட்டிக்கிட்டே போவாங்க அபி.அடிக்கடி நினைச்சு சிரிச்சிருக்கேன்.
பட் எனக்கு பிரக்னண்ட் ஆ இருக்கும்போது ஏற்படுற எல்லா தொல்லைகளும் சிரமமா இருந்தாலும் நிம்மதியா இருக்கும்.காரணம் அப்பாடா எல்லாரையும் போல நார்மலா இருக்கேன் குழந்தையும் நார்மலா வளந்துட்டு இருக்கு அப்டின்னு நினைப்பேன்.
ஐ யு ஐ
ஹாய்,
பெண்கள் அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள். பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள்.
கடல் அளவு ஆசை
கையளவு மனசு
surejini mam
நல்ல பயனுல்ல தகவல் ..இனி iui சந்தேகம் எந்த பெண்களுக்கும்ம்ம் வராது .எனக்கும் இந்த சந்தேகம் இருந்துது இப்போ போயிடுசு .இலங்கைல மாத்திரை ஊசி iui எல்லாம் சேர்த்து 20000ஆகும் .
pls clear my doubt
Enaku last month 19 Apr periods vandhuchu then na 4th may iui(3rd time)panikitan. 21 may pathingana spotting like clotting line mari irundhu seri agiduchu. Still today varaikum endha issues um Ila. Ipo na pregnant ah irukana ilaya nu guess panna mudiyala 21st aniku upt eduthan negative nu dhn vandhuchu aparam doctor 28th mela vara sonanga Enaku ore tension ah iruku so pls yaruna Enaku reply panunga.last time panna rendu iui um doctor sonna date ku periods vandhuchu Ana Ipo andha pain kuda ila so I'm very very confused
Rajini
மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கும் . ஊக்குவிப்புக்கும் .
Sarmi
நன்றி ஷர்மி . மேலே சேர்த்துக்கொள்கிறேன் . இன்னொருவரிடம் கேட்டேன் 15 000 ருப்பி என்றார் . 3 வருடங்கள் ஆகிவிட்டதால் கண்டிப்பாக அதே தொகை வராது என்றெண்ணி சேர்க்காமல் விட்டேன் . அதேபோல் நீங்கள் சரியா சொல்லி இருக்குறீங்கள் நன்றி. வேளா வேளைக்கு சாப்பிடுங்கோ . தூக்கமும் முக்கியம் .
Smitha
21 நாளில் ரிசல்ட் தெரிய வாய்ப்பு மிக குறைவு . பிரக்னன்ஷி கிட் ல் ரிசல்ட் தெரியுமளவு ஹார்மோன் சுரக்க தொடங்கியிருக்காததே காரணம் . நீங்கள் குழப்பம் அடைய வேண்டிய அவசியம் இல்லை . அறிகுறியும் இப்போதைக்கு வெளிப்படும் என்றில்லை . சரியான முடிவு தெரிந்து கொள்ள டாக்டர் சொன்ன திகதிக்கு மேல் வெய்ட் பண்ணுவது ஒன்றே வழி .
thanks for ur information,
thanks for ur information, and i have one doubt... how can i upload my articles like this? how can i create my blog?
சமீஹாவுக்கு
// how can i create my blog?// இங்கு நாங்களாக ப்ளாக் கிரியேட் பண்ண இயலாது. அதற்கான ஆரம்ப வேலைகளை அட்மின் தான் செய்தாக வேண்டும்.
உறுப்பினர் தமிழில் நன்கு தட்டச்சு செய்பவராக இருந்து அறுசுவைக்கான அவரது பங்களிப்பு திருப்தியாக இருந்தால் அட்மினே அழைப்பு விடுப்பார்.
- இமா க்றிஸ்
விளக்கமான பதிவு சுரே
விளக்கமான பதிவு சுரே ...குழந்தைக்காக எதிர்பார்த்திருப்போர் முக்கியமா அதையே நினைச்சிக்கிட்டும் இருக்ககூடாது நீங்க சொன்ன //உணர்வுகளுக்கும், ஹார்மோன்களுக்கும் ,கர்ப்பத்திற்கும் தொடர்புகள் இருப்பதால்
இயற்கயாக கருத்தரிக்கும் வாய்ப்பை நழுவ விடும் வாய்ப்பும் ஏற்படும்.// இது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று ...
iui செய்தால் travel pannalama
சுரே iui பத்தின எல்லா சந்தேகங்களும் தீர்ந்த மாதிரி இருக்கு. ஆனால்? 1 டவுட் ஐயுஐ பன்னினா பஸ்ல டிராவல் பன்னலாமா, நா bank வேலை பார்க்கறேன் எங்க வீட்டுல இருந்த்து OFFICE 3கீமீ தூரம் இருக்கு தினமும் பஸ்லதான் OFFICE போய்ட்டு வறேன் இப்போ என்ன ஐயுஐ பன்ன சொல்றாங்க டிராவல் பன்னலாமா எனக்கு 27age marrage mudichu 4year aguthu இப்போ 5மாசம் முன்னாடி ஒரு குழந்தை உருவாச்சு ஆனால் 3மாசத்துல இதயதுடிப்பு நின்றுடுச்சு அதான் அடுத்து ஐயுஐ பன்ன சொல்றாங்க இதுக்கு பதில் கிடைச்சா எனக்கு ஐயுஐ பத்தின எல்லா டவுட்டும் தீந்துடும் தோழி
எல்லாம் நன்மைக்கே
iui
latha, en vayathu 49 . amh enaku kuraivaka ulathu ena doctor opinion. karumuttai valarchi illay. so nan enna seiyavendum pl
அஞ்சு
மிக்க நன்றி அஞ்சு.உண்மை.
சுதர்ஷா
யெஸ்ஸ் நீங்கள் ட்ரவல் பண்ணலாம்.ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் மட்டும் இல்லை என்றால் நீங்கள் ரோலோகாஸ்டர் ல் ஏறி குட்டிக்கரணம் போட்டாலும் கரு தங்கும்.
ஆனால் வேலை நேரம் தவிர கிடைக்கும் நேரங்களில் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.3 வாரத்திற்கு கரு மிதந்த நிலையில் இருக்கும்.சுவரில் நன்கு பதியும் வரைக்கும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்பார்கள்.
தவிர பஸ் பிரயாணம் வேலை செய்வதும் தவிர்க்க முடியாத பட்சத்தில் பயப்பிடாமல் தொடருங்கள்.எதுவும் ஆகாது.
நன்றி சுரேஜினி SIS
எனக்கு இப்போ ஐயுஐ பத்தின எல்லா சந்தேகங்களும் தீர்ந்துடுச்சு நான் மனதளவில் ஐயுஐ பன்ன ரெடியா இருக்கேன் என் டாக்டர் சரி சொன்னாங்கன இந்த மாதம் பன்னலாம்னு இருக்கேன் ஆனா SIS நீங்க கரு 3 வாரம் மிதந்த நிலையில் இருக்குனு சொல்றீங்க அதானல நா ரிஸ்க் எடுக்கமா ஐயுஐ பன்னினா office க்கு லீவ் போடப்போறேன்
எல்லாம் நன்மைக்கே
surejini
ET appadi poduvathuthane karuppai thasai thadimam ithu avvalavu alavil erukanum?
my reportla 7.6 appadi erunthathu.
Nalla pathivu valthukkal continua pathividunga.
Hi sutharsha neenga iui
Hi sutharsha neenga iui pannetengala....
IUI
சரிதா ராஜேந்திரன் இது
IUI பற்றிய தெளிவான விளக்கங்களுடன் கூடிய இந்த பதிவு
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
அய்யம்மாள்
IUl பற்றி இதில் தெளிவான விளக்கங்கள் உள்ளது..
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
பயனுள்ள தகவல் மிக்க நன்றி
பயனுள்ள தகவல் மிக்க நன்றி சகோதரி ஆன எனக்கு லேசான Back pain இருக்கு இது Normal தானா?Pls ans பன்னுங்க
ayyammaal
ஐ யு ஐ க்கும் பாக் பெய்ன் க்கும் சம்மந்தம் இல்லை.ஐ யு ஐ செய்ததால் நீங்கள் வழமைக்கு மாறாக அதிக நேரம் படுத்தோ அதிக நேரம் உக்காந்தோ அதிக நேரம் ஓய்வெடுத்தோ இருக்கலாம்.அதனால் பாக் பெய்ன் வரும். ஒரே பொஷிசனில் அதிக நேரம் உக்காருவதாலும் வரும்.வழமைபோல் பிரீயாக இருங்கள் .சரியாகும் .இது நார்மல்தான்.
நன்றி சகோதரி இது எனக்கு 2வது
நன்றி சகோதரி இது எனக்கு 2வது iui முதல் தடெவெ Success ஆகலெ அதனாலெ கெஞ்சம் பயமா இருக்கு நா வேலையெதுவும் பாக்குறது இல்லை restல தான் இருக்கேன் ஒருமாதிரி இருக்கும் போது கொஞ்ச நேரம் நடப்பேன். எனக்கு Iui பன்னி இன்னிகு 10வது நாள் 15வது நாள் Hasptel வர சொல்லி இருக்காங்க அதுக்கு முன்னாடி வீட்லெ hpt பாக்கலாமா எத்தனாவது நாள் பாக்கலாம்
Hi surejini sis IUI pathi
Hi surejini sis IUI pathi supera explnation kuthuthega. Its very useful to many frnds.. Nan last mnth IUI panen. Inaiku enaku 33th day. But enaku 30th day la irunthu brownish, apuram thaniya apa apa 1 drop blood varuthu but normal period mathiri ila.. 32th day hme tst panen but -ve nu vanthuchu. Hsp la enaku virginal tab kuduthaga. Ipa stop pana solitanga. Inum 3 days kalichu paruganu solirukanga. En frnds elarum ithu implantation bleeding ah irukum. Payapadathega +ve result varum nu solranga. Nanum apd than namburen. Rmba nambikaiyoda iruken. Implantation bleeding pathi detaila soluga sis. Pls enaku onum pblm ilela sis. Reply
------------------------------
செல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.
I love my baby
ஆஷா பாரதி
நீங்கள் வேறு இடங்களில் பதிவிட்டிருந்தவற்றையும் படித்தேன். யோசிக்க வேண்டாம். எனக்கும் இது இம்ப்ளான்டேஷன் ப்ளீடிங் என்றுதான் தோன்றுகிறது. டாக்டர் சொல்வது போல நடங்க. எல்லாம் சரியாக இருக்கும்.
//Implantation bleeding pathi detaila soluga sis.// என்று கேட்டிருக்கீங்க. சுரேஜினியால் உடனே உங்களுக்குப் பதில் சொல்ல இயலாமலிருக்கக் கூடும். அவங்களுக்காக நான் பதில் சொல்லலாம் என்று நினைத்தேன். இப்போது விபரமாகத் தட்ட நேரம் போதாமலிருக்கிறது. How to recognize implantation bleeding என்று தட்டி கூகுள் சர்ச் பண்ணுங்க. அங்கு 10 ஸ்டெப்ஸ் என்று ஓரு இடத்தில் தெளிவாகச் சொல்லியிருப்பார்கள்.
யோசிக்க வேணாம். எல்லாம் சரியாக இருக்கும் என்று நம்புங்க. சந்தோஷமா இருங்க.
- இமா க்றிஸ்
Then mozhi iui
மன்னிக்கவும் வேலை காரணமா உங்களுக்கு பதில் அளிக்க தாமதம் ஆகிடுச்சு
Hi sutharsha neenga iui pannetengala..../////////////// இன்னும் இல்லை தோழி எனக்கு கருப்பை இடையில் தடுப்பு சுவர் இருப்பதாகவும் அதனால் அதை OPRATION செய்யனும்னு சொல்லிடாங்க அதான் வேறு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டேன் அவங்க அதுதடுப்பு இல்லை இரட்டை கருப்பை நு சொல்ராங்க அதான் குழப்பத்தில் இருக்கேன்,iui பன்னினா செட் ஆகுமா இல்லையானு தெரியலை
எல்லாம் நன்மைக்கே