கால் நரம்பு பிரச்சனை

எனக்கு குழந்தை பிறந்து 2 மாதத்தில் பிப் அலர்ஜினு இன்ஜக்ஸன் இடுப்புல போட்டாங்க அப்போல இருந்து படுத்து எழுந்த கால் எடுக்க முடியல காத்து பிரிஞ்சா தான் அடுத்த ஸ்டேப் வெக்க முடிது இது எதனால இப்படி ஆகுது? ஏதாவது ஷொலிஷன் இருக்கா சகோதரிகளே, எனக்கு பனிகுடம் ஒடஞ்சதால ஆப்ரேஷன் தான் பன்னாங்க,

நீங்க சொன்ன எதுவும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பா வரலயே!

//பிப் அலர்ஜி// !! புரியலயே! பீஃப்! மாட்டிறைச்சியா!

குழந்தை பிறந்ததுக்கும் இந்த அலர்ஜிக்கும் தொடர்பு இல்லை.

//இன்ஜக்ஸன் இடுப்புல போட்டாங்க// இடுப்புல‌... என்ன ஊசிமருந்து? எபிபென்! நீங்க‌ சரியான‌ விபரம் கொடுக்கணும். இல்லாம‌ சும்மால்லாம் பதில் சொன்னா தப்பாகிரும். எபிபென்னுக்கு //அப்போல இருந்து படுத்து எழுந்த கால் எடுக்க முடியல// என்கிறது இருக்கக் கூடாது. வேற அலர்ஜி ஊசிக்கும் அப்படி இராது.

//காத்து பிரிஞ்சா தான் அடுத்த ஸ்டேப் வெக்க முடிது// காத்துதான் காரணம் என்று நினைச்சீங்களா? அதுக்கு காலை ஒன்றும் செய்யக் கூடாது.
வாயுத் தொல்லைக்கு - எது உங்களுக்கு ஒத்துக்கல என்று இதுவரை புரிஞ்சு இருக்கணும். அதை தவிர்க்கணும். சரியாகிரும்.

//எனக்கு பனிகுடம் ஒடஞ்சதால ஆப்ரேஷன் தான் பன்னாங்க,// :-) இது ஒரு பிரச்சினையே இல்லைங்க. நல்ல விஷயம். உங்களுக்கு சிசேரியன் இல்லாம தானா டெலிவரி ஆகி இருந்தா கால் நோ பற்றி யோசிருக்கலாம். இப்படிச் சொல்றீங்க. எபிட்யூரல் கொடுத்தாங்களா சர்ஜரியின் போது?

[குழந்தை பிறக்க பனிக்குடம் எப்பிடியும் உடையத்தான் வேணும். உடையாம அப்படியே குழந்தையோட வெளியே வருறது ரொம்ப ரொம்..ப ரொம்....ப அபூர்வமா ஆகுற விஷயம்.]

நீங்க குழந்தைக்கு ஏதாவது என்று கேட்டு இருந்தால் யோசிக்கலாம். சொன்னது எதுனாலயும் உங்களுக்கு கால்ல ஒண்ணும் ஆக முடியாது.

நீங்க ரொம்ப யோசிக்கிறீங்களோ! சரியா சொல்லத் தெரியல‌. உங்களை அறியாம எங்கயாச்சும் இசகுபிசகா காலை வைக்க‌, பிடிச்சு இருக்கலாம். கால் தசைக்கு எக்சர்சைஸ் போதாம இருக்கலாம் என்றும் தோணுது. வெந்நீர் ஊற்றுங்க; ஏதாவது தைலம் போட்டு தேய்ச்சு விடுங்க. படுக்கையிலிருந்து எழும் போது கவனமாக‌ முதல் அடியை எடுத்து வைங்க‌.

//எதாவது ஷொலிஷன் இருக்கா சகோதரிகளே,// டாக்டர்ட்ட போங்க. இப்போ எவ்வளவு காலமாக‌ இந்த‌ பிரச்சினை! ஏன் நீங்க‌ டாக்டர்ட்ட‌ போகல‌? யோசிச்சுட்டு இருக்காம‌ போகணும். நரம்புன்னு நீங்க‌ நினைக்கிறீங்க‌. டாக்டர்ட்ட‌ போனா ஒவ்வொரு கேள்வியா கேட்டு உங்க‌ பதிலை வைச்சு சிகிச்சை கொடுப்பாங்க‌. நீங்க‌ பிரச்சினை என்கிற‌ இடத்ததை அவங்க அசைத்துப் பார்த்து முடிவு செய்வாங்க‌. போய் காட்டுங்க‌. போகும் போது கூட‌ உங்க‌ சிசேரியன் சம்பந்தமான‌ மெடிகல் ரிப்போர்ட் இருந்தா எடுத்துட்டு போங்க‌. கட்டாயம் போகணும், சரிதானே?

‍- இமா க்றிஸ்

என் பெயர் தமிழில் ஹசீன், உங்க பதிலுக்கு நன்றி,
*நான் கேட்டது சிசேரியன் பன்னா இப்படி பிரச்சனை வருமா?
*பிப் என்றால் அரிப்பு அலர்ஜி குழந்தை பிறந்ததும் சிலருக்கு அலர்ஜி வரும்னு சொன்னாங்க,
*என்ன மருந்து ஊசி போட்டாங்கனு தெரியலங்க,
*வாயு தொல்லை எனக்கு கண்டிப்பா இல்லைங்க, நா தினமும் உணவுல பூண்டு, பெருங்காயமும் சேர்த்துப்பேன்,
*எனக்கு பனிகுடம் ஒடஞ்சி வீட்லயே அதிகமா நீர் போயிடுச்சு,அதனால தான் ஆப்ரேஷன் பன்னாங்க முதுகெழும்புல மருத்து போற ஊசி போட்டாங்க,
டாக்டர் கிட்ட கேட்டா எக்சர்சைஸ் பன்ன சொன்னாங்க ஆனால் இன்னும் நல்லா ஆகல,நரம்பு பிரச்சனையா இருந்தாலும் காத்து பிரியும்னு படிச்சிருக்கேன்,அதான் கேட்கிறேன்,

//நான் கேட்டது சிசேரியன் பன்னா இப்படி பிரச்சனை வருமா?// எதைக் கேட்கிறீங்க‌? கால் பிரச்சினையையா? அலர்ஜியையா? இரண்டும் வரக் கூடாது.

//பிப் என்றால் அரிப்பு அலர்ஜி// இன்னமும் எனக்குப் புரியலைங்க‌. இது... தமிழ் வார்த்தையா? ஆங்கிலம் என்றால், ஆங்கிலத்தில் எழுதினால் புரிந்துகொள்வேன்.

//குழந்தை பிறந்ததும் சிலருக்கு அலர்ஜி வரும்னு சொன்னாங்க,// யார் சொன்னாங்க‌? டாக்டரா? நிச்சயமாக‌ அப்படி எதுவும் கிடையாது. அலர்ஜி வந்தால் அது அவரவர் உடல்வாகு. குழந்தைப் பேற்றுக்கும் அலர்ஜிக்கும் தொடர்பு இல்லை.

//என்ன மருந்து ஊசி போட்டாங்கனு தெரியலங்க,// சரி இதை விட்டுவிடுவோம்.

//வாயு தொல்லை எனக்கு கண்டிப்பா இல்லைங்க,,// நீங்கதானே வாயு இருக்கிறதா சொல்லியிருந்தீங்க‌!! //காத்து பிரிஞ்சா தான் அடுத்த ஸ்டேப் வெக்க முடிது // என்றீங்களே!! அது என்ன காத்துன்னா!!

//தினமும் உணவுல பூண்டு, பெருங்காயமும் சேர்த்துப்பேன்// இதைப் பற்றிய எனது அனுபவம்... அவ்விரண்டையும் உணவில் சேர்க்கும் போது, சமிபாட்டுத் தொகுதியுள் ஏற்கனவே அடங்கிக் கிடந்து சங்கடம் கொடுக்கும் வாயு... வெளியேறும். வயிறு இலகுவாகும். பூண்டும் பெருங்காயமும் வாயு உருவாகாமல் தடுப்பதில்லை; உருவாகின வாயு உடலால் உறிஞ்சப்பட வைப்பதும் இல்லை.

//முதுகெழும்புல மருத்து போற ஊசி போட்டாங்க,// இதைத்தான் கேட்டேன். ஆனால் //டாக்டர் கிட்ட கேட்டா எக்சர்சைஸ் பன்ன சொன்னாங்க// என்று சொல்லிட்டீங்க.

//ஆனால் இன்னும் நல்லா ஆகல,// எவ்வளவு காலமா பிரச்சினை இருக்குன்னு சொல்லுங்க. //குழந்தை பிறந்து 2 மாதத்தில்// இருந்து என்று சொன்னால் போதாது. உங்களுக்கு எப்ப குழந்தை கிடைச்சுது என்கிறதை இங்க முன்னால நீங்க சொல்லியிருந்தாலும் எனக்கு நினைவு இராது.

எத்தனை நாள் எக்சர்சைஸ் பண்ணீங்கன்னும் சொல்லுங்க. என்ன எக்சர்சைஸ் பண்ணீங்க? தொடர்ந்து பண்றீங்களா விட்டுவிட்டா? டாக்டர் சொல்லிக் கொடுத்த எக்சர்சைஸா? நீங்க வேலைக்குப் போறீங்களா? தினமும் நடக்கிறது உண்டா? எவ்வளவு நேரம் நடப்பீங்க?

//நரம்பு பிரச்சனையா இருந்தாலும் காத்து பிரியும்னு படிச்சிருக்கேன்,அதான் கேட்கிறேன்,// :-) ரொம்ப படிக்கிறீங்க. எனக்கு, காத்து பிரியுறதுன்னா என்னன்னு சரியா புரியல. ஆனாலும் உங்களுக்கு நரம்பில் பிரச்சினையாக இருக்கும் என்று தோணல. டாக்டர் சொன்ன மாதிரி... எக்சர்சைஸ் போதல என்றுதான் தோணுது.

‍- இமா க்றிஸ்

பிப் என்றால் அரிப்பு வருவதை சொல்வாங்க,
குழந்தை பிறந்ததும் சிலருக்கு அலர்ஜி வரும்னு பக்கத்து வீட்டுல சொன்னாங்க,
ப்ளாட்டா படுத்தா மட்டும் இடுப்பு,இடது காலும் இழுத்து பிடிச்சுகிது, வாயு வெளியானவோ.இல்ல இடது கால்ல முட்டில நெட்டி வந்தா தான் அடுத்த ஸ்டேப் வெக்க முடிது,
சமிபாட்டுத் தொகுதியுள் அப்படின்னா என்ன?
8 மாசமா இந்த பிரச்சினை இருக்கு,
ரொம்ப படிக்கிறீங்கனு கின்டல் பன்றீங்களா,

//ரொம்ப படிக்கிறீங்கனு கின்டல் பன்றீங்களா// :‍) அது செல்லமா நகைச்சுவையா காலை வாருறது. :‍) தப்பா எடுத்துக்காதீங்க‌ ஹசீன். நெட்ல‌ ஏராளமான‌ தகவல்கள் கொட்டிக் கிடக்கு. சரியானதைத் தெரிஞ்சு படிக்கிறது சுலபமில்லை. எப்படி வடிகட்டுவது என்பதும் சுலபத்தில் புரியாது. பெரும்பாலும் தவறான‌ தகவல்கள்தான் எம் கவனத்தைக் கவர்ந்து வைக்கிறது. கண்ணில் படும் எல்லாவற்றையும் படிக்காதீங்க‌. படிச்சாலும் நம்பாதீங்க‌. ;-)

/////பிப் என்றால் அரிப்பு அலர்ஜி// இன்னமும் எனக்குப் புரியலைங்க‌. இது... தமிழ் வார்த்தையா? ஆங்கிலம் என்றால், ஆங்கிலத்தில் எழுதினால் புரிந்துகொள்வேன்./// என்றேன். நீங்க‌ பதில் சொல்லாம‌ அதே இடத்துல‌ திரும்பவும் போய் //பிப் என்றால் அரிப்பு வருவதை சொல்வாங்க// என்று நிக்கிறீங்க‌. இப்படி ஒரு தமிழ்ச் சொல் அறிமுகமில்லை எனக்கு. ஆங்கிலத்துலயும் தேடிப் பார்த்தாச்சு.

நேரம் எடுத்து 2 போஸ்ட் டைப் பண்ணினப்புறம் வந்து //இடுப்பு,இடது காலும் இழுத்து பிடிச்சுகிது, வாயு வெளியானவோ.இல்ல இடது கால்ல முட்டில நெட்டி வந்தா தான் அடுத்த ஸ்டேப் வெக்க முடிது,// என்கிறீங்க‌. இதைத்தானே முதல்ல‌ சொல்லி இருக்கணும். வேற‌ என்னவோல்ல‌ சொன்னீங்க‌ இதுக்கு முன்னால‌!! ;(

//எத்தனை நாள் எக்சர்சைஸ் பண்ணீங்கன்னும் சொல்லுங்க. என்ன எக்சர்சைஸ் பண்ணீங்க? தொடர்ந்து பண்றீங்களா விட்டுவிட்டா? டாக்டர் சொல்லிக் கொடுத்த எக்சர்சைஸா? நீங்க வேலைக்குப் போறீங்களா? தினமும் நடக்கிறது உண்டா? எவ்வளவு நேரம் நடப்பீங்க?// இத்தனைக்கும் பதில் கிடைக்கல‌.

//பக்கத்து வீட்டுல சொன்னாங்க// ம். முக்கியமான‌ கேள்வியை விட்டுட்டு இதுக்கு பதில் சொல்லி இருக்கீங்க‌. இதை வைச்சு உங்களுக்கு உதவ‌ முடியலை. சாரி. ;(

//சமிபாட்டுத் தொகுதியுள் அப்படின்னா என்ன?// சொல்ல‌ மாட்டேன். உங்களுக்கு உதவலாம்னுதான் வந்தேன். அதற்காக‌ சில‌ கேள்விகள் கேட்டேன். நீங்க‌ பதில் சொல்லாம‌ விளையாடுறீங்க‌; சீரியஸா கேள்வியை வைச்ச‌ மாதிரி தெரியலை. சுருக்கமாக‌, முடிவாக‌ உங்க‌ டாக்டர் சொன்னதுதான் என் பதிலும். அதை ஏற்கனவே 2 போஸ்ட்லயும் சொல்லியாச்சு.

இதோட‌... இமா இதுல‌ இருந்து வாபஸ் வாங்கிக்கறேன் ஹசீன். :‍) டாட்டா பைபை!

‍- இமா க்றிஸ்

நா நெட்ல படிக்கல புக்ல படிச்சேன்,

பிப் என்பது தமிழ் வார்த்தையா ஆங்கிலம வார்த்தையா என்று எனக்கு தெரியலமா எங்க ஊருல டாக்டர் கூட இப்படி தான் பிப்னு சொல்லுவாங்க,

நேரம் எடுத்து 2 போஸ்ட் டைப் பண்ணினப்புறம் வந்து //இடுப்பு,இடது காலும் இழுத்து பிடிச்சுகிது, வாயு வெளியானவோ.இல்ல இடது கால்ல முட்டில நெட்டி வந்தா தான் அடுத்த ஸ்டேப் வெக்க முடிது,// என்கிறீங்க‌. இதைத்தானே முதல்ல‌ சொல்லி இருக்கணும். வேற‌ என்னவோல்ல‌ சொன்னீங்க‌ இதுக்கு முன்னால‌!! ;( என் பிரச்சனைய ஷாட்டா சொல்லி இருந்தேன்,

விட்டுவிட்டு தான் எக்சர்சைஸ் பன்றேன், டாக்டர் சொல்லிக் கொடுத்த எக்சர்சை தான் பன்றேன்,வேலைக்குப் போகல, தினமும் அரை மணி நேரம் நடக்கிறேன்,

//சமிபாட்டுத் தொகுதியுள் அப்படின்னா என்ன?// சொல்ல‌ மாட்டேன். உங்களுக்கு உதவலாம்னுதான் வந்தேன். அதற்காக‌ சில‌ கேள்விகள் கேட்டேன். நீங்க‌ பதில் சொல்லாம‌ விளையாடுறீங்க‌; சீரியஸா கேள்வியை வைச்ச‌ மாதிரி தெரியலை. சுருக்கமாக‌, முடிவாக‌ உங்க‌ டாக்டர் சொன்னதுதான் என் பதிலும். அதை ஏற்கனவே 2 போஸ்ட்லயும் சொல்லியாச்சு. சாரி............................. ப்ளீஸ்......................

சரிங்கமா சைக்கிள் ஓட்டினால் நல்லா இருக்குமா??????
சமிபாட்டுத் தொகுதியுள் அப்படின்னா என்னனு சொல்ல‌ுங்கமா????

வயிறு பெருங்குடல் மலக்குடல் சேர்ந்தது அது.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

நெட்ல‌ ஏராளமான‌ தகவல்கள் கொட்டிக் கிடக்கு. சரியானதைத் தெரிஞ்சு படிக்கிறது சுலபமில்லை. எப்படி வடிகட்டுவது என்பதும் சுலபத்தில் புரியாது. பெரும்பாலும் தவறான‌ தகவல்கள்தான் எம் கவனத்தைக் கவர்ந்து வைக்கிறது. கண்ணில் படும் எல்லாவற்றையும் படிக்காதீங்க‌. படிச்சாலும் நம்பாதீங்க‌. ;-)//இது உலக பொது விதிமுறை என்றால் இதில் இமாவின் கருத்துக்களும் சேருமா? ,,;)))))

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

எனக்கும் உங்களுக்கும் இடையே பாஷைப் பிரச்சினை பெரிய‌ தடையா இருக்கும் போல‌ இருக்கு. :‍)

//புக்ல படிச்சேன்// புத்தகம் எந்த‌ மொழியில், எந்த‌ ஆண்டு, யாரால் எழுதப்பட்டது என்கிறது எல்லாம் கவனிக்கணும். அல்லாமல்... நாளிதழ்களில் படிப்பவை... நம்பகத்தன்மை எழுதியவர் யார் என்பதைப் பொறுத்தது. இது... உங்கள் கேள்விக்கு நேரடியா தொடர்பு இல்லாத‌ விடயம். விட்டுரலாம். :‍)

//சமிபாட்டுத் தொகுதி// ஜெயந்தி பதில் சொல்லிட்டாங்க‌.

//விட்டுவிட்டு தான் எக்சர்சைஸ் பன்றேன்,// நான் சந்தேகித்தது இதைத்தான். இந்தப் பதிலைத் தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். :‍)

பிரச்சினை டாக்டரின் மருத்துவத்தில் இல்லை. //டாக்டர் சொல்லிக் கொடுத்த எக்சர்சை தான் பன்றேன்// :‍) நீங்கதான் அதை முறையாகப் பின்பற்றவில்லையே! பிறகு எப்படி சரியாகும்! விட்டுவிட்டுச் செய்வதால் பயன் கிடைக்காது. டாக்டர் மருந்து கொடுத்த‌ சமயம் அவற்றோடு, சொன்னபடி எக்சர்சைஸ் செய்ய‌ ஆரம்பித்து விடாமல் தொடர்ந்திருந்தீர்களானால் எப்போதோ பிரச்சினை சரியாகி இருக்கும்.

//சைக்கிள் ஓட்டினால் நல்லா இருக்குமா??????// :‍) உங்க‌ பிரச்சினைக்கு தீர்வாக‌ இருக்குமா என்கிறீங்களா? பிரச்சினை என்னவென்றே தெரியாத‌ நான் இதற்கு எப்படிப் பதில் சொல்வது!

டாக்டர் சொல்றதை நம்பணும். வேணும்னா இன்னொரு தடவை டாக்டரைப் போய்ப் பாருங்க‌. இந்தத் தடவை அவங்க‌ சொல்றதை மீறாமல் ஒழுங்கா பண்ணுங்க‌. போறப்ப‌ மறக்காம‌ இதுவரை நீங்க‌ ஒழுங்கா எக்சர்சைஸ் பண்ணல‌, விட்டுவிட்டு எப்பவாச்சும்தான் பண்ணி இருக்கீங்க‌ என்கிறதைச் சொல்லுங்க‌. திட்டினாங்கன்னா பரவால்ல‌. கண்டுக்காதீங்க‌. தப்பு உங்க‌ மேலதானே! உங்களுக்கு பிரச்சினை சரியாகணும். உண்மையைச் சொன்னாத் தான் சரியான‌ மருத்துவம் கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

ஆமா அம்மா நீங்க சொல்றது சரிதான் நா டாக்டர் கிட்ட கேட்கிறேன். நன்றிமா.

மேலும் சில பதிவுகள்