antibiotic allergy

என்னோட பையனுக்கு 4 வயது ஆகிறது 3 நாள் முன்னாடி ஜுரம் மற்றும் சளி இருந்தாதல் டாக்டர் antibiotic கொடுத்தாங்க இதனால் அவனுக்கு உடம்பு முழுவதும் சிவப்பாக சிறுசிறு வேர்க்குரு போல் உள்ளது அவனுக்கு அரிப்பு மற்றும் உடம்பு சூடாக இருகிறது.டாக்டர் antibioticallergy என்று சொல்லி oinment மற்றும் வேறு ஒரு antibiotic மற்றும் ஜுரம் மருந்து தந்தங்க முன்று முறை hospital போய்டுவந்தாச்சி இன்னும் சரியாகலை ரொம்ப கஷ்டமா iruku எனக்கு ஒன்னும் புரியல.இது எத்தனை நாள் இருக்கும்.யாருக்கவது இதை பத்தி தெரிந்தால் சொல்லவும் pls

//oinment மற்றும் வேறு ஒரு antibiotic மற்றும் ஜுரம் மருந்து// நேரம் தவறாம‌ கொடுங்க‌. சின்னவர், அவரால் இயலாமையைச் சொல்ல‌ முடியாது. //இது எத்தனை நாள் இருக்கும்.//சொல்ல‌ முடியாது. //யாருக்கவது இதை பத்தி தெரிந்தால் சொல்லவும்// அனுபவம் இருக்கு. வீட்டில் வளர்ந்த ஆட்க‌ளுக்கு இப்படி ஆகி இருக்கு. மருந்து, ஆள்... வேறு என்பதால் உங்கள் குழந்தையோடு ஒப்பிட‌ இயலாது. நாள் எடுக்கலாம். தொடர்ந்து மருந்தைக் கொடுங்க‌. முடிஞ்சு போனால் திரும்ப‌ டாக்டர்ட்ட‌ போங்க‌. நிச்சயம் சரியாகிரும்.

இப்போ வேறு உணவுகளும் அரிப்பைக் கூட்டி வைக்கலாம். சாப்பாடுகள் கவனம். தினமும் குளிக்க‌ வைங்க‌. சுத்தம் முக்கியம். சவர்க்காரம் தவிர்க்கிறது நல்லது. டவல்... வேண்டாம். ஒற்றித் துடைக்க‌ மெல்லிசா ஒரு துணி வைச்சுக்கங்க‌. அரிக்கிறது என்று கை வைக்க‌ விட‌ வேண்டாம்.

எப்பொழுதும் குழந்தை மேல் ஒரு கண்ணாக‌ இருங்கள். வேறு ஏதாவது பிரச்சினை... மூச்சு விடச் சிரமமாக‌ இருப்பது போல் தெரிந்தால் அல்லது தோலில் பெரிதாக‌ வீக்கங்கள் போல் வரத் தொடங்கினால் உடனே போய்க் காட்டுங்க‌. இப்படி எழுதினதைப் படிச்சு பயந்துராதீங்க‌. ஆகும் என்று சொல்லவில்லை நான். ஒரு வேளை இப்படி ஆனால்... எச்சரிக்கயாக‌ இருப்பீர்கள் என்று சொல்லி வைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

antibiotic எடுக்கும்போது பெரியவர்களாக‌ இருந்தாலும் சிறியவர்களாக‌ இருந்த்தாலும் நிறைய‌ தண்ணீர் அருந்த‌ வேண்டும் என‌ சொல்வார்கள்.
இல்லாவிட்டால் அது வேறுவிதமான‌ சில‌ விளைவுகளை கொடுக்கும். பயப்பட‌ வேண்டியவை அல்ல‌.அவ்வப்போது குழந்தைக்கு தண்ணீர் தாருங்கள் .டாக்டர் அறிவுரையையும் பின்பற்றுங்கள் .
நன்றி

பரணிகா:)

தேங்க்ஸ் அம்மா ஆனால் இங்கு உள்ளவர்கள் எல்லாம் இது தட்டம்மை{measles] என்று சொல்றங்க அதனால அவனுக்கு சந்தனம்,மஞ்சள் மற்றும் ரோஸ்வாட்டர் கலந்து போட சொன்னங்க போடலாமா .நேற்றும் hospital போனேன் அவங்க ஒருஒரு நாள் வேறவேற டாக்டர் இருக்கங்க ஒவ்வொரு தடவையும் தொட்டுக்கூட பார்க்கமாட்டாங்க ஆனா ஒரு டாக்டர் குடுத்த மருந்த வேற டாக்டர் stop பண்ண சொல்லறங்க நேத்து injection போட்டங்க இருந்தாலும் இன்னும் நிறைய இடத்தில் இன்னைக்கும் வந்தது நோ use .இது allergyயா இல்லை measles எனக்கு ஒன்னும் புரியல ஆனா இன்னைக்கு மருந்து குடுகல அப்படி
தட்டம்மையாக இருந்தால் என்ன செய்யனும்(இங்கு வேப்பிலை கிடைக்கவில்லை) pls சொல்லுங்க

அன்புள்ள‌ ரேவதிக்கு, திருமதி. இமா அவர்கள் சொன்னது போல் சுத்தம் மிக‌ அவசியம், உறுத்துகிற‌ மாதிரி படுக்க‌ வைக்காதீர்கள்.
வேப்பிலை பச்சையாகக் கிடைக்காவிட்டால் பொடியாகக் கிடைத்தாலும்
பயன்படுத்தலாம். படுக்கையில் படுக்க‌ வைக்காதீர்கள். நல்ல‌
வெள்ளைத்துணியில் மஞ்சள் பொடியும் வேப்பிலைப் பொடியும் கலந்து
தூவி அதன் மேல் படுக்கவைப்பது மிகவும் நல்லது. மஞ்சள்பொடியும்,வேப்பிலையும் மிகச் சிறந்த‌ கிருமினாசினிகள்,
அம்மையானால் (சந்தேகப் பட்டாலும் கூட‌) அது தான் அதற்கு மருந்தாகும்.
உணவு எக்காரணத்தாலும் சூடாகத் தரக்கூடாது, சமைக்கும் போது
ஏற்படும் எந்த‌ ஆவியும் (சூடான‌ சோற்று ஆவி, மற்ற‌ உணவுகள் எதுவானாலும் சமைக்கும் போது ஏற்படும் ஆவி> மிளகாய் போன்ற‌
காரஉணவுகள், தாளிப்பது அறவே கூடாது காரணம் தாளிப்பின் போது
எண்ணெய் சூடாகி காற்றிலே கலந்து மெல்ல‌ கலந்து வீடு முழுவதும்
பரவும் (கொஞ்சம் உற்றுக் கவனித்தால் நம் கண்களுக்கே தெரியும்)
அது ஏற்கனவே மிக‌ அதிகமான‌ சூட்டினால் உண்டான இக்கொப்புளங்களின் மேல் எண்ணெய்ப் படலமாகப் படிந்தால் என்ன‌
ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். அதனால் தான் பழங்காலத்தில்
அம்மை வந்த‌ வீட்டில் தாளிப்பு என்பதே கூடாது என்று கூறுவார்கள்.
உடம்பு துடைக்க‌ வேப்பைலையும் மஞ்சளும் கலந்த‌ தண்ணீரைச்
சூரிய‌ வெப்பம் மூலமாகவே (சூரிய‌ வெய்யிலில் மட்டுமே வைக்க‌ வேண்டும், அடுப்பில் வைத்துச் சூடேற்றக் கூடாது) சூடேற்றி அதை கொண்டு துடைக்க‌ வேண்டும்., இளநீர் நிறையக் கொடுங்கள்,
வேப்பிலையால் தடவினால் கொப்புளங்களால் ஏற்படும் அரிப்பு
குறையும், அது மருந்து, கிருமினாசினி. அம்மை இறங்கின‌ பின்னால்
தலைக்குக் குளிக்கும்போதும் இதே முறை தான், தண்ணீர் ஊற்றின‌
பின்னால் கொப்புளங்கள் காய்ந்து உதிரும், அந்தப் பொருக்குகள்
மற்றவருக்கு அம்மையை உண்டாக்கும். எனவே அவற்றைக் கவனமாக‌
அப்புறப் படுத்த‌ வேண்டும், வெளியே அனுப்புதல் கூடாது. மூன்று
முறை தலைக்கு குளிக்க‌ வைக்கவும், அதற்குள் பொருக்குகள்
உதிர்ந்து விடும், ஒரு மூன்று மாதமாவது சோப்பைத் தவிர்த்தல் நல்லது
அழுத்தித் தேய்க்கவோ (பின்னாளில் தப்பு செய்தால் அடிக்கக் கூடாது,
நொந்த‌ உடம்பு, சிறு குழந்தை), பவுடர் போட வேண்டாம் என்பது
என் கருத்து, உடம்பு தேய்க்கும் மஞ்சள், வாசனைப் பொடி இருந்தால்
நல்லது, அல்லது பாசிப்பயறு மாவுடன் கலந்த‌ மஞ்சள்தூள் கலந்த‌ பொடி போதும். தங்கள் குழந்தை விரைவில் குணமடைய‌ இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன் பூங்கோதை கண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

romba thanks paranika mam

ரொம்ப நன்றி கண்டிப்பாக நீங்க சொன்னதை எல்லாம் பண்ரேன் mam

மேலும் சில பதிவுகள்