கோழி வளர்ப்பு

ஹலோ தோழிகளே

நாங்கள் வளர்ப்பதற்க்காக‌ கோழி வாங்கியுள்ளோம் அது போண்டா கோழி.
வாங்கிய‌ ஒரு வாரத்தில் ஒரு கோழி இரந்து விட்டது மற்ற‌ கோழிகள் நன்றாக‌ உள்ளன‌. கோழிக்கு அரிசி, சோளம் மட்டும் போடுகிறோம். வேறு என்ன‌ உணவு போடலாம். அதற்க்கு உடல்னிலை சரி இல்லை என்றால் என்ன‌ மருந்து கொடுக்கலம் என‌ தோழிகள் பதில் தந்து உதவுஙள்

ஆங்கிலத்தில் வேறு பெயர் இருக்குமோ! என்ன‌ கோழி என்று தெரிந்தால் தேடிப் பார்த்தாவது விபரம் பிடிக்கலாம். பெயரைப் பார்த்தால் முட்டைக் கோழி இல்லை என்று தெரிகிறது. இறைச்சிக் கோழி தானே!

//வேறு என்ன‌ உணவு போடலாம்.// நிச்சயம் இவற்றுக்கென்று தீவன‌ம் தயாராகக் கிடைக்கும்.

//உடல்னிலை சரி இல்லை என்றால் என்ன‌ மருந்து கொடுக்கலம்// இது... என்ன‌ பிரச்சினை என்பதைப் பொறுத்தது. கால்நடை வைத்தியரிடம் கோழியை எடுத்துப் போனால் பார்த்து மருந்து கொடுப்பார். மற்றக் கோழிகளுக்குப் பரவாமல் தடுக்கும் முறைகளையும் சொல்லிக் கொடுப்பார். சில‌ தடுப்பூசிகளும் போட‌ இருக்கும். நீங்க‌ எத்தனை கோழிகள் வைச்சிருக்கீங்க‌?

கோழிகள் தங்கும் இடம், உணவு, நீர் வைக்கும் பாத்திரங்கள் சுத்தமாக‌ இருக்க‌ வேண்டும். கூடு ஈரலிப்பில்லாமல் பார்த்துக் கொள்ள‌ வேண்டும். கூட்டின் பரப்பு கோழிகளின் எண்ணிக்கைக்குச் சரியாக‌ இருக்க‌ வேண்டும்.

எனக்கும் உங்கள் கேள்விக்கான‌ பதில்களைத் தெரிந்துகொள்ள‌ ஆவலாக‌ இருக்கிறது. தெரிந்த‌ யாராவது பதில் சொன்னால் நல்லது.

‍- இமா க்றிஸ்

இந்த‌ கோழி நாட்டுக்கோழி போல‌ உள்ளது. முட்டை இடுமாம்

இந்த கோழி முட்டை இடும் அடை காக்காது. நாங்களும் இந்த கோழி வளர்ந்து இருக்கோம்பா . கம்பு,சோளம் போடுங்க அரிசி அதிகம் போடாதீங்க. கோழிக்கு கால்நடை மருத்துவரிடம் சென்று தடுப்பூசி போடுங்கப்பா. எந்த நோய் வராது. தினம் காலையிலே சின்ன வெங்காயம் பொடியாக கட் பண்ணி போடுங்க நோய் வராமல் தடுக்கும் பா.

அரிசி வேண்டாம். நெல் கொடுக்கலாம்.

எத்தனை கோழி வைச்சிருக்கீங்க‌? திறந்து விட்டு வளர்க்கிறீங்களா? இல்லாவிட்டால் முழுவதாக‌ அடைத்து வளர்க்கிறீர்களா?

‍- இமா க்றிஸ்

7 வாங்கினோம். 1 இறந்து விட்டது. 2 பெரிய‌ கோழி 4 சின்ன‌ கோழி. கூண்டு அடிக்க‌ சரியான‌ இடம் கிடைக்கவில்லை. அதனால் பெரிய‌ கூடையில் பெரிய‌ கோழியையும் சின்ன‌ கோழியையும் தனி தனியாக‌ அடைத்து உள்ளோம். பகலில் வெளியே திறந்து விட்டு விடுவோம்

இறந்தது எப்படி இறந்தது? இறந்து எத்தனை நாட்களிருக்கும்? இப்போ கோழிகளுக்கு என்ன‌ வயது இருக்கும்? முட்டை இட‌ ஆரம்பித்து விட்டனவா? சேவல் இருக்கிறதா?

//பகலில் வெளியே திறந்து விட்டு விடுவோம்// நல்லது. பறவைகள் தாங்களாகவே இரை தேடும். மேயும் இடத்தில் புல்லு நிறைய‌ இருக்கிறதா? பச்சை இலைகள் சாப்பிடும் கோழியின் முட்டை மஞ்சட்கரு... கிட்டத்தட்ட‌ சிவப்பு நிறமாக‌ இருக்கும். முள்முருக்கு இருந்தால் இலைகளை ஒடித்துக் கட்டிவிடுங்கள்.

உணவு _ சமையலறைக் கழிவுகளைக் கொடுக்கலாம். சாதம், தேங்காய்ப்பூ, கொழுப்பு அதிகமான‌ உணவுகளை மட்டும் குறைத்துக் கொடுங்க‌. காய்கறிக் கழிவுகளைப் பொடியாக‌ நறுக்கிப் போடுங்க‌. மச்சம் & மாமிசக் கழிவுகளையும் கொடுக்கலாம்.

முட்டை இடும் கோழிகளுக்கு... முட்டைக் கோதுகளைச் சேர்த்து உலர‌ விட்டு இடித்து தூளாக்கிக் கொடுப்பது நல்லது. கணவாய் ஓடு‍‍ _ கோழித் தீவனக் கடையில், லவ்பேர்ட்ஸ்ஸுக்குக் கொடுப்பதற்காக‌ விற்பார்கள். அதை வாங்கிப் போடலாம். இவை கடற்கரையிலும் கிடைக்கும். கல்சியம் தேவையான‌ அளவு கிடைத்தால் இடும் முட்டைகளின் ஓடு நன்றாக‌ இருக்கும். போதாவிட்டால் மென்மையாக இருக்கும். சுலபத்தில் உடைந்து போகலாம். கோழிகள் ஒரு தடவை கொத்திக் குடித்தால் சுவை பிடித்துப் போய் பழக்கம் தொடரலாம்.

அடைக்காமல் வெளியே விட்டு வளர்க்கும் கோழிகளுக்கு பெரிதாக நோய்கள் தாக்குவது இல்லை. இடைக்கிடையே (வாரம் ஒரு தடவை) வைட்டமின் B மாத்திரை ஒன்றை குடிக்கும் நீரில் கலந்துவிடுங்கள். அயலில் கோழி வளர்ப்ப்பவர்கள் இருந்தால் அங்கு கோழிகளுக்கு நோய்த் தொற்று ஏற்படும் சமயங்களில் உங்கள் பறவைகளுக்கும் தொற்றலாம். அப்போது கால்நடை மருத்துவரிடம் அபிப்பிராயம் கேளுங்கள்.

‍- இமா க்றிஸ்

அது பொந்தா கோழி; அல்லது கிரிராஜாவாக இருக்கலாம்.

ஜெயா மேம்
கிரி ராஜா இருக்கிறது 2

இமா அம்மா
நாங்கள் கோழி வாங்கி 3 வாரங்கள் தான் ஆகிறது. அதனால் வயது தெரியவல்லை.ஏற்க்கனவே அது உடல்னிலை சரி இலாமல் தான் இருந்திருக்கிறது நாங்கள் தான் பார்க்கவில்லை

வாங்கும் போதே நன்கு வளர்ந்த கோழிகளாக வாங்கினீர்களா? முட்டைக் கோழி என்றாலும் சரி, இறைச்சிக்காக வாங்கி விட்டாலும் சரி வயது கவனிக்கத் தான் வேண்டும். வாங்கியதற்கும் பராமரிப்பதற்கும் ஏற்றப்படி முட்டை கிடைக்க வேண்டும். முதிர்ந்த கோழி... இறைச்சி மென்மையாக இருப்பதில்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

//உடல்னிலை சரி இலாமல் தான் இருந்திருக்கிறது// வெளியே தெரியாவிட்டாலூம், இறந்தவற்றுக்கு இருந்த நோய் இப்போ இருப்பவற்றுக்கும் தொற்றியிருக்கலாம். முட்டைக்காக வளர்த்தீர்கள் என்றால்... சரியான காலத்தில் முட்டை இடத் தொடங்காவிட்டால் வளர்ப்பதில் லாபம் இல்லை. நோய்வாய்ப்பட்ட பறவைகளிலிருந்து (மருத்துவம் செய்தாலும்) பெரும்பாலும் அதிக முட்டைகள் கிடைக்காது.

நீங்கள் சொல்லும் கோழி, இந்திய நாட்டுக்கோழி வர்க்கம். எனக்கு விபரம் தெரியாது. ஆனால் நான் சொல்லியிருப்பவை பொதுவாக எந்தக் கோழிக்கும் பொருந்தும்.

அடுத்த தடவை நம்பகமான இடத்தில் வாங்குங்க. வாங்கும் முன்னால், வாங்க நினைத்திருக்கும் கோழி இனம் பற்றி தெரிஞ்சு வைச்சுக்கங்க. ஆரோக்கியமான பறவைகளை எப்படித் தேர்வு செய்வது என்பதையும் தெரிஞ்சுக்கணும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்