என் பையன் கு கன்னு போங்குவதற்கு நாமக்கட்டியை போட சொன்னிற்கள் அல்லவா, நாமக்கட்டியை இரவில் போட்டு விட்டு, காலையில் தொடைத்து விட்டு மறுபடியும் கலையில் போடலாம please உடனெ பதில் சொல்லுங்கல் அம்ம அவசரத்தில் உள்ளென்.. Please

அன்புள்ள திவ்யாபிரபாகரனுக்கு
அன்புள்ள திவ்யாபிரபாகரனுக்கு குழந்தையின் புருவத்திற்கு மேலே போடவும். இமையின் மேலே போடும்போது நமது விரல் தப்பித்தவறி குழந்தையின் கண்களில் பட வாய்ப்பு உண்டு. அதனால் தான் புருவத்திற்கு மேலே நெற்றியில் தடவி விடவும். கீழ் இமைக்குக் கீழேயும் தடவி விடவும். கண் பொங்குவது குறையும் போது கண்ணில்
பீளை வெளியேறும் அதையும் சுத்தமான தண்ணீரில் நனைத்த பஞ்சினால் துடைத்து விடவும். ஒரு நாளைக்கு மூன்று முறை
தடவினால் போதும், பொங்குவது குறைவது பார்த்து தடவவும்.
ஊறெண்ணெய் என்பது ஆமணக்குக் கொட்டையை முழுதாக
நீரில் இட்டு வேகவைத்து நீரை விடுத்து கொட்டையை மட்டும் உரலில் இட்டு சுமாராக இடித்து அதை ஒரு நல்ல சுத்தமான பாத்திரத்தில் போட்டு அதனோடு சுமாரான அளவு நல்ல தண்ணீரை
அளவாக ஊற்றிக் கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் தீயின்
அளவைக் குறைத்து விடவும் . இடித்த ஆமணக்கு கொட்டைகள்
நன்கு வெந்து எண்ணை மேலே மிதந்து வரும். அப்படி மிதக்கும்
எண்ணையினை நல்ல சுத்தமான பாத்திரத்தில் நல்ல கரண்டியால்
எடுத்து ஊற்றி வைத்துக் கொள்ளவும். எண்ணெயை வடிக்கும் போது
தண்ணீர் கலந்து வராமல் பார்த்துக் கொள்ளவும். இது தான் குழந்தைகளுக்கான ஊறெண்ணெய் சுத்தம் செய்யப் பட்ட குழந்தைகளுக்கான விளக்கெண்ணெய். குழந்தைகளுக்கு மேலே
தடவவும், உள்ளுக்குக் கொடுக்கவும் இந்த எண்ணெயைத் தான்
பயன் படுத்த வேண்டும்.
நேற்று இரவே இரண்டு பதிலையும் பதிவிட்டேன். அது கோபித்துக்
கொண்டு விட்டது. பதற்றம் இல்லாமல் செய்யவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
thank u amma
ரொம்ப நன்றி அம்ம நேற்று ஒன் டைம் தான் போட்டோம் ஆனால் இன்னும் சரி ஆக வில்லை இடது கண்னு மட்டும் போங்கி கொண்டே இருக்கிறது அதனால் தான் அம்மா இரவில் உங்களை தொந்தரவு செய்ய வேண்டியதுதாகி விட்டது
அன்புள்ள திவ்யா பிரபாகரன்
அன்புள்ள திவ்யா உங்கள் குழந்தைக்கு இப்போது கண் பொங்கியது குறைந்துள்ளதா, எப்படி இருக்கிறாள்?
அன்புள்ள பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
கண் பொங்கல் குறைந்துள்ளது
கண் பொங்கல் குறைந்துள்ளது அம்மா. ஏஅச் எனக்கு திரும்பவும் ஒரு உதவி செய்யுங்கல் அம்மா எனது பையன்கு 4 நாட்களாக போகவில்லை அம்மா எனது பால் மற்றும் பால் பவ்டர் பாலும் குடுக்கிரேன் எனக்கு என்ன செய்வது என்ரு தெரியவில்லை என் பையன் மிகவும் கஷ்டபடுகிரான் இன்ரு முழுவதும் தூங்கவே இல்லை. தயவு செய்து உதவுங்கல் அம்மா
அன்புள்ள திவ்யா
அன்புள்ள திவ்யா, 20 நாளே ஆன குழந்தைக்கு உங்கள் பாலைத்
தவிர பவுடர் பால் தந்தது தவறு என்று தான் நான் நினைக்கிறேன்.
பால் பொதுவாக மலம் கட்டும் தன்மையுள்ளது. உடல் அதிக சூடாவதாலும் மலம் கட்டும், உடல் அதிக சூடானதால் தான் கண் பொங்கியுள்ளது. ஒரு மாதம் கூட ஆகாத குழந்தைக்கு எடுத்த எடுப்பில் எந்த மருந்தையும் தர முடியாது. உங்கள் பாலைத் தவிர வேறு பாலைத்
தருவதை நிறுத்தினால் நல்லது. ஏற்கனவே சொன்னது போல ஊறெண்ணெய் தலைஉச்சி, கை கால் இடுக்குகள் உள்ளங்கால்களில்
தினமும் இருவேளை தடவுங்கள். ஆசனவாயிலிலும் ஒரு சொட்டு
வையுங்கள். அளவுக்கு மீறியும் விளக்கெண்ணையை சூட்டினைக் குறைக்கிறேன் என்று பயன்படுத்தவும் கூடாது.
உங்கள் உணவின் மூலமாகத்தான் சீர் செய்ய முடியும். ஏற்கனவே
இந்த குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு நிறைய பதிவுகள்
இருக்கின்றன. உங்கள் பாலின் மூலமே சீர் செய்வது தான் சிறந்தவழி.
கொஞ்சம் பொறுமையாக அவற்றைப் படித்துப் பார்த்து கடைப்பிடிக்கவும். கடுக்காயை உரைகல்லில் ஒரு சுற்று இழைத்து
குழந்தையில் நாக்கில் தடவவும், இதைத் தவிர இந்தக் குழந்தைக்கு
வேறு எதுவும் தர இயலாது. கடுக்காய் தொல்லையிலாமல் மலத்தினை
வெளியேற்றும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்