நான் எங்கே ஏமாறுகிறேன்?

ஏமாற்றுக்காரர்

'''கடுகு அளவு நம்பிக்கை இருந்தால் போதும் மலையையும் புரட்டலாம்''''என்பது பழமொழி. ஆனால் நம்ப வைத்து ஏமாற்றுபவர்களோ பலர். என் தலைமைஆசிரியர் பணியில் நடந்த‌ ஒரு நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள‌ விரும்புகிறேன்.

ஒரு பிற்பகல் நேரம் நான் வ்ங்கியிலிருந்து ரூபாய் ஐம்பதாயிரம் பெற்றுக் கொண்டு[[ஆசிரியர்களின் நிலுவை ஊதியம்]]] பள்ளிக்கு திரும்பினேன். எனது உதவி ஆசிரியரிடம் பணத்தை கொடுத்து பீரோ லாக்கரில் வைத்து பூட்டி சாவியை வைத்து கொள்ளும்படி சொல்லி விட்டு, சாப்பிடச் சென்றேன்.

சிறிது நேரத்தில் ''மேடம் உங்களைப் பார்க்க‌ யாரோ ஒருத்தர் வந்துள்ளார்''' என்றார் ஒரு ஆசிரியர். நானும் அவரை உள்ளே வரச் சொன்னேன். டிப்டாப் ஆசாமியாக‌, வணக்கம் என்று சொல்லி புன்சிரிப்புடன் அமர்ந்தார். நானும் மரியாதையுடன் வணக்கம் என்றேன்.

''உங்கள் பள்ளி மாணவர்களுக்கு பண‌ உதவி செய்ய‌ வந்துள்ளேன்''என்றார். தான் இருதய‌ நோயாளி, தனக்கு கல்யாணம் ஆகவில்லை, தன்னுடைய‌ பணத்தை எல்லாம் இருதய‌ நோய் பாதிக்கப் பட்ட‌ பள்ளிப் பிள்ளைகளுக்கு கொடுத்து உதவி செய்கிறேன் என்றார்.

எங்கள் பள்ளியிலும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு ஏழை மாணவி இருதய‌ நோயாளி. அந்த‌ மாணவிக்கு உதவிக் கிடைத்தால் நல்லது என்று எண்ணினோம். ஆனால் முழு விவரமும் சொல்லாமல் '''நீங்கள் எப்படி உதவி செய்ய‌ விரும்புகிறீர்கள்? ''என்றேன்.
அவரோ ''என்னை நீங்கள் நம்ப‌ வில்லையா? இதோ பாருங்கள் ரூபாய் இருபத்தைந்தாயிரத்திற்கான‌ வங்கி காசோலை'''என்றார்.

ஆனால் எனக்கோ நம்பிக்கை இல்லை. என்னை இந்த‌ டிப்டாப் ஆசாமி ஏமாற்றுகிறான், எப்படி என்பது மட்டும் புரியவில்லை. நான் வங்கியில் பணம் பெற்று வந்தேனே அப்போதே என்னை பிந்தொடர்ந்து இருப்பானா? என்பது என் சந்தேகம். ஆனால் எங்களது பணம் பத்திரமாக‌ உள்ளது. நானும் அந்த‌ ஆசாமியிடம் நாளை இதே நேரத்திற்கு வாருங்கள், எங்கள் கல்வி அதிகாரி, ஊர் தலைவர், பெற்றோர், பாதிக்கப்பட்ட‌ மாணவி அனைவரையும் வரவழைக்கிறேன். அவர்கள் முன்னிலையில் தாங்களே தங்கள் திருக்கரத்தால் மாணவிக்கு காசோலையை வழங்கி ஆசீர்வதிக்கும்படி அன்பாக‌ பேசி, பள்ளியை விட்டு வெளியேற்றினேன்.

எனக்கு அந்த‌ ஆசாமியிடம் முழு நம்பிக்கை இல்லை, நான் ஏமாறுகிறேன், ஏமாற்றப்படுகிறேன் என்பது புரிகிறது, ஆனால் எந்த‌ வழியில் என்பது தெரியவில்லை.

பள்ளிக்கு அருகில் உள்ள‌ பெற்றோரிடம் உதவிக் கேட்கலாம் என்றால்
எனக்கே என்னவென்று புரியாதபோது அவர்களிடம் என்ன‌ சொல்வது என்று குழப்பம். அவர்களோ வாய் பேசுவதற்குள் கையால் பேசுவார்கள். கை பேசுவற்குள் கத்தியால் பேசுபவர்கள். அது மேலும் சிக்கலாக‌ முடியும். சரி பொறுமையாக‌ இருப்போம். நாளை பிற்பகல் அந்த‌ ஆசாமி வந்தால் லாபம். இல்லை என்றாலும் நஷ்டம் ஒன்றும் இல்லை என்று மனதை அமைதிபடுத்திக் கொண்டேன். அன்று முழுவதும் குழப்பமாகவே இருந்தது.

மறு நாள் காலை பள்ளிக்குச் சென்றேன். வழக்கம்போல் பள்ளி செயல்பட்டது. பிற்பகல் பனிரெண்டு மணிக்கு அந்த‌ இருதய‌ நோய் மாணவியின் தாயார் வந்தார். என் பெண்ணுக்கு செக் குடுத்து உதவி செய்வதாக‌ ஒருத்தர் வந்தாரே அவர் வந்தாரா/ என்று கேட்டார்.

எனக்கோ அதிர்ச்சி. நான் யாரிடமும் இந்த‌ செய்தியை சொல்லவே இல்லை. இவர்களுக்கு எப்படி தெரிந்தது என்பதே எனது அதிர்ச்சி. அவரிடமே விசாரிதேன்.
அந்த‌ டிப்டாப் ஆசாமி பலரிடம் விசாரித்து, டீக்கடைகளில் கேட்டு இருதய‌ நோய் பாதிக்கப் பட்ட‌ மாணவி யார் என்று அறிந்து அவர்கள் வீட்டுக்கே சென்று கதை எல்லாம் அளந்து விட்டுள்ளார். பாவம், பரிதாபம் பட்டுள்ளார். மக்களிடம் வங்கி காசோலையையும் காட்டியுள்ளார். அவ்வளவுதான். மக்கள் அம்பேல். சிரிக்க‌ சிரிக்க‌ பேசியுள்ளார். பிறகு தன் கை வரிசையை காட்டியுள்ளார்.

''உங்கள் தலைமை ஆசிரியரிடம் பேசி விட்டு சென்று பஸ் ஏறும் போது யாரோ என் மணிபர்ஸை பிக்பாக்கட் அடித்து விட்டனர், நல்ல‌ காலம் சட்டை பாக்கட்டில் வைத்த‌ வங்கி காசோலை பத்திரமாக‌ உள்ளது. எனக்கு ஊருக்குப் போக‌ காசு இல்லை, ஐ நூரு ரூபாய் கொடுத்து உதவுங்கள், நாளை கொடுத்து விடுகிறேன்.''' என்று பாசாங்கு காட்டியுள்ளான்.

அந்த‌ ஏழை மக்கள் தங்களால் முடிந்தது இரண்டு நூறு ரூபாய் தான் என்று கொடுத்து வழி அனுப்பியதை கதையாக‌ கூறினார். சரிங்க‌ அந்த‌ ஆசாமி வந்தவுடன் உங்களுக்கு தகவல் சொல்கிறேன் என்று அந்த‌ தாயை அனுப்பினேன். அந்த‌ டிப்டாப் பேர்விழியிடம் நான் காசோலையை வாங்கி இருந்தால் குறைந்தது இரண்டாயிரம் என்னை ஏமாற்றி இருப்பான். என்னை ஏமாற்ற‌ முடியவில்லை. அந்த‌ அப்பாவி பெற்றோரை ஏமாற்றி விட்டான்.

நான் எப்படி, எங்கு, எவ்வாறு ஏமாற்றப்படுகிறேன் என்பதற்கு விடை கிடைத்தது. என் தலைவலியும் மறைந்தது. இந்த‌ ஏமாற்ற‌ நிகழ்ச்சியை நான் ஆசிரியர் கூட்டத்தில் சொல்லி எச்சரிக்கை செய்தேன். எல்லோருக்கும் ஒரு ஏமாற்றப் பாடம் அல்லவா.

[[அந்த‌ ஏழை பெற்றோர்க்கு நாங்கள் இரண்டு நூறு ரூபாய் கொடுத்து ஆறுதல் சொன்னோம்]].

5
Average: 5 (3 votes)

Comments

ஆனால் இப்போதும் நிறைய‌ பேர் என்னிடமே நான் பஸ் வைகும் பணம் தொலைந்து விட்டது உதவி செயுங்க‌ அதுவும் எனது ஊருக்கு 20 ரூபாய் போதும்னு சொல்றாங்க‌ அப்போ அவன் நம்மல‌ ஏமாத்தினாலும் பரவாயில்லை பாவமா இருக்குதே அதனால‌ நான் கொடுத்துடுவேன் ஆனால் இப்படி ஏமாத்துறவங்கனால‌ உண்மையா தொலைக்கறவங்களும் பாத்திக்க‌ படுறாங்க‌

எல்லாம் நன்மைக்கே

அன்பு ரஜினி மேடம்,

நீங்க சொல்லியிருப்பது போல, வித விதமாக ஏமாற்றுகிறாங்க.

சதுரங்க வேட்டை - சமீபத்துல நான் மிகவும் ரசித்துப் பார்த்த படம். அப்பப்பா, எத்தனை விதமாக எப்படியெல்லாம் ஏமாற்றுகிறாங்க.

ஆசைகளைத் தூண்டி, கருணையை எதிர்பார்த்து, பயமுறுத்தி - இப்படி பல வழிகளிலும் ஏமாற்றுகிறாங்க.

வெளி நாட்டில் எங்களுக்குத் தெரிந்த ஒரு பெண்ணிடம், ஃபோனில், போலிஸில் இருந்து பேசறதாக சொல்லி, வரி கட்டணும் உடனே என்று பயமுறுத்தி, (கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) வேற அக்கவுண்ட்டில் போட வச்சாங்க.

அதே மாதிரி, இப்ப நம்ம ஊரில் - வங்கியில் இருந்து பேசுவதாகவும், க்ரெடிட் கார்ட்/டெபிட் கார்ட் ப்ளாக் ஆகியிருக்கு, உடனே ரிலீஸ் செய்யணும் என்று சொல்லி, பின் நம்பர் எல்லாம் வாங்கி, அக்கவுண்டில் இருந்து பணத்தை எல்லாம் எடுத்துடறாங்க.

யார்கிட்டயும் வங்கி எண், ஏ டி எம் பின் நம்பர் எல்லாம் சொல்லாம இருக்கணும்.

டெக்னாலஜி ஒரு பக்கம் நவீனம் ஆகிட்டிருக்கு, அதே சமயம் ஏமாற்றுவதும் புதுமையாக வேகமாக செய்கிறாங்க.

நாம எங்கேயாவது ஏமாந்திருந்தாலோ, அல்லது யாராவது நம்மை ஏமாற்ற முற்சித்தாலோ, அதை மற்றவங்களிடம் தயக்கமில்லாம பகிர்ந்து கொள்வது, எல்லோருக்கும் உதவியாக இருக்கும்.

நன்றி ரஜினி மேடம். அருமையான பதிவு.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதா மேடம் உங்களைபோல சமயோசித புத்தி எப்போதும் எல்லோருக்கும் இருக்கனும் மேடம். பொதுவாக பெண்களுக்கு.

சில சமயம் எத்தனை எச்சரிக்கையாக இருந்தாலும் சரியாக ஊகிக்க முடிவதில்லை. எனக்கும் ஒரு அனுபவன் இருக்கிறது. ஏமாறவில்லை. ஆனால் என் எச்சரிக்கைய யாரும் பொருட்படுத்தவில்லை. அந்த அளவுக்கு ஏமாற்றுபவர்கள் திறமையாகச் செயல்பட்டனர். எப்போதாவது தனி இடுகையாகவே எழுதலாம் என்று இருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்