அடுத்த மாதத்திற்குள் கர்ப்பம்

தோழிகளுக்கு வணக்கம். என் கணவர் வெளி நாட்டில் வேலை செய்பவர். 6 மாதத்திற்கு முன்பு தான் எங்கலுக்கு திருமணம் நடந்தது. அடுத்த மாதமே கர்ப்பம் ஆனேன். ஆனால் அது அபார்சன் ஆகி விட்டது. என் கணவரும் விடுமுறை முடிந்து வெளி நாடு சென்று விட்டார்.போன மாதம் இங்கு வந்தார். எனக்கு மாத விலக்கு ஏற்பட்டு விட்டது் இருவருமே அப்செட் ஆகி விட்டோம். ஏனென்றால் அவர் மறுபடியும் அடுத்த மாதம் சென்று விடுவார். மீண்டும் 2 வருடம் கழித்துதான் வருவார். எனக்கு இப்போது வயது 32.நான் அடுத்த மாதத்திற்குள் கர்ப்பம் ஆக வழி சொல்லுங்கள் தோழிகலே.

இந்த‌ லிங்க‌ பாருங்க‌ http://www.arusuvai.com/tamil/node/32529 இந்த‌ முறையும் டிரை பன்னுங்க‌ ஆனா கர்ப்ப‌ ஆகுமா ஆகாதாங்கற‌ டென்சன் ஆகாம‌.நீங்க‌ ஆகுற டென்சன் உங்க‌ உடல் ஹார்மோன்ச குறைத்துவிடும்.நமக்கு பிராப்தம் ஒருந்த‌ கிடைக்கும் நு மனச‌ சமாதன‌ படுத்திவைங்க‌. இது நம்ம‌ கையில‌ இல்லை கடவுள் மனசு வைக்கனும், ப்ரீயட்ஸ் ஆன‌ 13ம் நாள்ல‌ இருந்து 20 நாள் வரை இருவரும் family la இருங்க‌ .ஒரு நாளைக்கு 2 முறை டிரை பன்னுங்க‌. ஆனால் இதுக்காக வலு

எல்லாம் நன்மைக்கே

//ஆனால் அது அபார்சன் ஆகி விட்டது./// கரு கலைந்த போது அதற்கு எத்தனை மாதம் இருக்கும்? அதன் பிறகு எத்தனை மாதம் கர்ப்பமாகாமல் இருக்க வேண்டும் என்று டாக்டர் சொன்னாங்க? இப்போ தான் கலியாணம் ஆகி 6 மாதங்கள் என்கிறீர்கள். இடையில் கரு கலைந்திருக்கிறது என்றால் இப்போது மீண்டும் கர்ப்பமாவது சரிதானா?

//நான் அடுத்த மாதத்திற்குள் கர்ப்பம் ஆக வழி சொல்லுங்கள் தோழிகலே.// முதலில் இப்போ கர்ப்பமாவது பாதுகாப்பானது தானா என்பதை உங்கள் டாக்டரிடமிருந்து அறிந்து கொள்ளுங்கள். கருப்பைக்கும் ஓய்வு வேண்டும்.

//அவர் மறுபடியும் அடுத்த மாதம் சென்று விடுவார். மீண்டும் 2 வருடம் கழித்துதான் வருவார். எனக்கு இப்போது வயது 32.//
உங்களிருவரது பிரதான தேவை என்ன? குழந்தையா? பணமா?

வயது - போனால் வராது. 2 வருடங்களின் பின் 34 ஆகி இருப்பீர்கள். அதன் பின்னும் கர்ப்பமாக சில மாதங்கள் எடுக்கலாம். யோசிக்க வேண்டிய விடயம் இது.

பணம் - நினைத்தால் இப்போ நீங்கள் வசிக்கும் இடத்திலிருந்தும் சம்பாதிக்கலாம். நீங்கள் கர்ப்பமானதன் பின் உங்கள் கணவர் வெளிநாடு போகலாம். நீங்கள் உங்கள் கணவருடன் வெளிநாடு போவது மற்றொரு ஆப்ஷன்.

கர்ப்பம் உங்கள் அவசரத்துக்கு ஆகக்கூடிய விடயம் அல்ல. தொடர்ந்து சேர்ந்து வாழ்பவர்களே வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இப்போ கிடைக்கும் காலத்தை வீணாக்கி விட்டு, பிறகு உழைத்த பணத்தில் பெரும்பங்கு சிகிச்சைக்குச் செலவளிக்க வேண்டி வரக் கூடாது. அது பொருட் செலவு மட்டுமல்ல, மனதையும் சோர்ந்து போக வைக்கும். என்ன செய்யப் போகிறீர்கள்? யோசித்துப் முடிவு செய்யுங்கள்.

இப்போதைக்கு... கிடைக்கிற நாட்களில் எந்த நாட்களையும் தவிர்க்க வேண்டாம். எல்லா நாட்களும் நல்ல நாட்கள் தான்.

‍- இமா க்றிஸ்

உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நீங்கள் சொன்னது போல் முயற்சி செய்கிறேன்.

வணக்கம் தோழிகலெ. என் கணவர் வெளி நாடு செல்ல விருப்பதால் குழந்தைக்காக மருத்துவமனை செல்கிறேன்.ரத்த பரிசோதனை செய்தார்கல். அதில் சர்க்கரை நோய் மற்றும் ஹார்மோன் அதிக அலவில் உள்ளது என தெரிவித்தார்கல். மேலே சொன்ன 2 டும் இருந்தால் கருத்தரிப்பதில் சிக்கல் இருக்கமா இதற்கு கை வைத்தியம் ஏதேனும் கூறுங்கல் சகோதரிகல

//சர்க்கரை நோய்// இதைக் கட்டுப்படுத்தியே ஆகணும். இல்லாட்டா குழந்தைக்கு நல்லதில்லை; உங்களுக்கும் நல்லதில்லை. //கை வைத்தியம்// என்ன செய்தாலும் உணவில் சர்க்கரை & மாப்பொருள் அளவைக் குறைத்தாக வேண்டும். அல்லாமல் பயனில்லை.

//ஹார்மோன் அதிக அலவில் உள்ளது// உடலில் பல விதமான ஹோர்மோன்கள் சுரக்கிறது. எதைச் சொல்றீங்க?

//2 டும் இருந்தால் கருத்தரிப்பதில் சிக்கல் இருக்கமா// டெஸ்ட் பற்றி விபரம் சொன்ன மருத்துவர்கள் என்ன சொன்னார்கள்?

//இதற்கு கை வைத்தியம் ஏதேனும் கூறுங்கல்// என்னால் உதவ இயலவில்லை. உங்களுக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் சட்டென்று சரியாக வேண்டும். //குழந்தைக்காக மருத்துவமனை செல்கிறேன்.// என்கிறீங்க. ஹாஸ்பிட்டலில் டாக்டர்கள் கொடுக்கிற மருந்துதான் வசதி. கை வைத்தியம்... பலன் தெரிய நாள் ஆகலாம். அதற்குள் உங்கள் கணவருக்கு ஃப்ளைட் தேதி வந்துரும். இன்னும் சில வாரங்கள் தானே இருப்பாங்க?

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்