breast feeding

max evlo naal breastfeeding pannalam?

நாட் கணக்கு அல்ல, வருடக் கணக்கில் கூட பாலூட்டலாம்.

பாலூட்டினாலும் அல்லாவிட்டாலும், நான்கைந்து மாதங்களில் மெதுவே திட உணவை ஆரம்பிப்பது குழந்தைக்கு பலவிதமான சத்துக்களும் கிடைக்க வழிவகுக்கும். தனியே தாய்ப்பால் மட்டும் போதாது. மெதுவே திட உணவு வகைகளை அதிகரிக்கலாம்; அளவையும் கூட்டிக் கொடுக்கலாம். விரும்பினால் அதோடு சேர்த்து நீங்களும் பாலூட்டலாம்.

உங்களுக்குப் பால் சுரப்பு நிற்கும் வரை பால் கொடுக்கலாம். இடையில் மீண்டும் கருத்தரித்தால் நிறுத்தி விடுவது இரண்டு குழந்தைகளுக்கும் தாய்க்கும் நல்லது.

ஒரு வயது கடந்துவிட்டால் நிறுத்துவது சிரமம். குழந்தை அழுது ஆர்ப்பாட்டம் செய்யும். :-)

‍- இமா க்றிஸ்

thank you imma.en paiyyanukku 14 months aagudhu.ellam saaptalum innum paal kudikradha niruthala.niruthuna breast cancer varumonu bayama irukku.innoru baby pethukradhu kastam.so na ivanukku 2 years complete breastfeeding pannalamnu irukn.apd seidhal enakku yedhenum problem varmanu konjam sollungal please..

//niruthuna breast cancer varumonu bayama irukku.// இது வீண் பயம். அதுவும் 14 மாதம் பாலூட்டிய பின், எதற்கு இந்தப் பயம்! இது உண்மையாக இருந்தால் இங்கு வரும் எத்தனையோ பேர் கான்சர் பேஷண்ட்ஸாகத் தான் இருக்க வேண்டும். :-)

எனக்குத் தெரிந்த ஒருவர், 7 பிள்ளைகள் பெற்று, பாலூட்டி வளர்த்த அவருக்கும் ப்ரேஸ்ட் கான்சர் வந்தது.

//innoru baby pethukradhu kastam.// அது பரவாயில்லை. இதற்காக முதல் குழந்தைக்கு அதிக காலம் பாலூட்ட வேண்டும் என்பது இல்லை. //na ivanukku 2 years complete breastfeeding pannalamnu irukn.// உங்களுக்கு வசதி இருந்தால் தாராளமாகக் கொடுக்கலாம். ஆனால் இதனால் கான்சர் வருவதைத் தடுக்க இயலாது.

//apd seidhal enakku yedhenum problem varma// ஹெல்த் ப்ராப்ளமா? எதுவுமே வராது. பயம் வேண்டாம். எப்பொழுதும் சரியான அளவிலான உள்ளாடைகளைத் தெரிந்து அணியுங்கள்.

வரக் கூடிய பிரச்சினைகள்... இன்னும் சில மாதங்கள் போக, குழந்தையை மற்றவர்கள் முன்னிலையில் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கலாம். அதே போல தான் பால் மறக்க வைப்பதும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்