kai,kal,vai noi

En paiyannuku 8months aguthu.avan kai,kal mugathil Na red colour la China China pimples mari iruku.drkita ketta kai,kal,vai noi nu solranga.ethai path bayam vendamnu.ungaluku yaruksvathu theriyuma.pls reply

டாக்டர் மருந்து ஒண்ணும் கொடுக்கவில்லையா? பெரும்பாலும் ஒன்றும் செய்யாமலே சரியாகும். பேபி க்ரீம் அல்லது காலமைன் லோஷன் போடுங்க. அறையைக் காற்றோட்டமாக வைத்துக் கொள்ளுங்க. குழந்தையை அழுத்தித் துடைக்க வேண்டாம். வாயினுள் இருப்பதாகச் சொல்லவில்லை நீங்கள். அதனால் சாப்பாடு கொடுப்பதில் சிரமம் இருக்காது. தொடர்ந்து ஜுரம் இருந்தால் அல்லது வீஸிங் போல இருந்தால் திரும்ப டாக்டர்ட்ட கூட்டிப் போங்க.

‍- இமா க்றிஸ்

அன்பு பரணி,

டாக்டர் சொன்னது சரிதான்.

இது பற்றி பயம் வேண்டாம். ஒரு வாரத்தில் சரியாகி விடும்.

இது காற்றில் பரவக் கூடிய தொற்று ஆகும். அதனால் வீட்டில் மற்ற சின்னக் குழந்தைகள் இருந்தால், மற்றவர்களுக்கும் வரக் கூடிய வாய்ப்பு உண்டு.

வேறு வெளியிடங்களுக்கு குழந்தையை கூட்டிட்டுப் போக வேண்டாம். மற்ற குழந்தைகளையும் வீட்டில் இந்தக் குழந்தையுடன் ஒன்றாக விளையாட அனுமதிக்க வேண்டாம்.

இது அம்மையோ என்று தோன்றுகிற மாதிரி அறிகுறிகள் இருக்கும். ஆனால் அம்மை அல்ல.

முதலில் காய்ச்சல், ஜலதோஷம் ஏற்பட்டிருக்கலாம். பிறகு குழந்தையின் உடலில் - வேர்க்குரு போல பொடிப் பொடியாகவோ, அல்லது மிளகு அளவில் அங்கங்கே சின்ன சின்ன பருக்கள் அல்லது கட்டிகள் போல வரும்.

டாக்டர் காலமைன் உள்ள லோஷன் கொடுத்திருப்பார்னு நினைக்கிறேன், அதை அப்ளை செய்யுங்க.

வெதுவெதுப்பான நீரில்(குழந்தைக்கு சூடு பொறுக்கும் அளவு) வென்னீரில் குளிக்க வைங்க.

மஞ்சள் பொடி, வேப்பிலை பொடி கலந்து, தேய்த்து, குளிக்க விடுங்க.

குழந்தைக்கு அரிப்பு எடுப்பதால், கொஞ்சம் அழுதுகிட்டேதான் இருக்கும். தூங்காமலும் இருக்கும். நீங்க இருக்கும் இடத்தில் குளிர் இல்லாமல் இருந்தால், குழந்தைக்கு சட்டை போடாம விடுங்க. அல்லது மெலிதான, சாஃப்ட் காட்டன் துணியிலான சட்டை போட்டு விடுங்க. உறுத்தாமல் இருக்கும்.

இதை AIR BORN DISEASE என்று டாக்டர் சொன்னாங்க எங்களுக்கும்.

ஒரு வாரத்தில் சரியாகிடும்.

அன்புடன்

சீதாலஷ்மி

Thx ps.reply panathuku . today drkita ponen.payam vendanu sillitaru. Calamine cream poda solirukanga. Vaila irukanu therila. Face fulla iruku pa.

மேலும் சில பதிவுகள்