அரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES

அரசு தேர்விற்க்கு தயாராகும் தோழிகள் இந்த‌ இழைக்கு வாங்க‌ உங்களூடைய‌ சந்தேகங்களை கேளுங்கள் உங்களுக்கு தெரிந்த‌ முக்கிய‌ தேர்வுகுறிப்புகளையும் கொடுங்க‌, இதானால் உங்களுடைய‌ கேள்விக்கும் விடை கிடைக்கும் , உங்களால் மற்றவைகளும் பயன் அடைவார்கள்.
TNPSC தேர்வில் அதிகமாக் கேட்கும் தமிழ் எண்களை எளிதில் மனப்பாடம் செய்ய இந்த முறையை பயன்படுத்துங்கள்

கடலை ௧ = 1
உருண்டை ௨ = 2
ஙங்கி ௩ = 3 (இதில் ஙங்கி என்பதை ஞங்கி என எடுக்கலாம்)
சப்பி ௪ = 4
ருசிச்சு ௫ = 5
சாப்பிட ௬ = 6
எங்க ௭ = 7
அம்மா ௮ = 8
கூப்பிட்டங்க ௯ = 9
கடைக்கு ௰ = 10

இலக்கண குறிப்பு பற்றி கொஞ்சம் விரிவாக் சொல்லவும்

எல்லாம் நன்மைக்கே

ரொம்ப சுவாரசியமா இருக்கு தர்ஷா நீங்க சொல்லியிருக்கிற விபரம். நான் வேறு நாடு. இதெல்லாம் புதுசா இருக்கு. சும்மா ஒரு ஆர்வத்துல எட்டிப் பார்த்தேன்.

தப்பா எடுத்துக்கப்படாது. //அதிகமாக் கேட்கும் உறுபுஎழுத்துக்களை எளிதில் மனப்பாடம் செய்ய// என்று குறிப்பிட்டிருக்கீங்க. கொடுத்த விபரம் சரிதானா? உறுபு என்றால் என்ன? படிப்பு சம்பந்தமான பகிர்வு. கொஞ்சம் கவனமா திருத்தமா போட வேணாமா? பார்த்து எடிட் பண்ணி விட்டா நல்லது. உருது!! ம்ஹும்! அது போலவும் இல்லை. என்னவாக இருக்கும்! இதற்கான பதில் தெரியாட்டா... இமாவின் தலை சுக்கு நூறா வெடிச்சுரும். சீக்கிரம் வந்து பதில் சொல்லுங்க. (நாளை இரவு தான் வந்து படிப்பேன்.)

//இலைக்கு// இழைக்கு!!
//இதானால்// இதனால்!!
//என்படை// என்பதை!!
//மற்றவைகளும் பயன் அடைவார்கள்.// மற்றவர்களும் பயன் அடைவார்கள்!!

இமா பயனடைய.... நீங்க எழுத்துப்பிழை இல்லாமல் எழுதியாகணும். இல்லாட்டா தப்பா படிச்சு வைப்பேன். :-)

//உறுபுஎழுத்துக்களை// இது... சரியா என்கிறது சந்தேகமாவே இருக்கு. உறுப்பெழுத்து... எழுதும் போது உறுப்பாக / அமைப்பாக எழுதுவதைத் தானே உறுப்பெழுத்து என்பார்கள்? இல்லையா! சின்னதுல உறுப்பெழுத்துப் போட்டியில எல்லாம் பங்கேற்றிருக்கிறேன். handwriting அது. மனப்பாடம் செய்றதாச் சொல்றீங்க. கிர்ர்ர்ர்ர்... ;) இன்றைக்கு இமாவுக்கு தூக்கம் போச்சு! ;))

‍- இமா க்றிஸ்

தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி அம்மா தமிழ் எண்களை உருபுஎழுத்து என்றுதான் சொல்லுவாங்க‌ தேர்வுகளிலும் உருபுஎழுத்து காண்க‌ தான் கேட்பாங்க நான் அரசு வேலைக்காக எதிர்பார்த்துட்டு இருக்கேன் அதானால‌ நிறைய‌ exame atten
பன்னுவேன் என்கிட்ட‌ நிறைய‌ தேர்வுகுறிப்பு வைத்துள்ளேன் அதே நேரம் நிறைய‌ சந்தேகமும் இருக்கு அதான் தோழிகள் இணைந்தால் சுலபமாக இருக்கும்

எல்லாம் நன்மைக்கே

தமிழ் எண்கள் மனப்பாடக்குறிப்பு அருமை. அப்புறம் இலக்கணக்குறிப்பு கேட்டிருக்கீங்க. அரிவாள். இது வினைத்தொகை. எப்படி எனில் அரிந்த வாள்,அரிகின்ற வாள் ,அரியும் வாள். இப்படி மூன்று காலமும் அதாவது இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் இப்படியான காலம் காட்டினால் அது வினைத்தொகை.

செம்மண் இதைப்பிரித்தால் செம்மை ப்ளஸ் மண் என வரும் ப்ளஸ் க்கு முன்பு மை விகுதி அதாவது மை எனும் எழுத்து வந்து அது பண்பைக் குறிப்பிடும் போது பண்புத் தொகை

வாழ்க. வாழிய. வாழியர். இப்படி க,இய,இயர் இப்படி. வந்து வினை முற்று பெற்றிருந்தால் அது வியங்கோள் வினைமுற்று

ஊறுக்காய் இதுவும் வினைத்தொகைத்தான். நாங்கள் சாப்பிடும்போது, ஊறுக்காய் எடு என்று சொல்லமாட்டோம். அந்த‌ வினைத்தொகையை எடு என்றுதான் சொல்லுவோம். ஊறுக்காய்,ஊறும்காய்,ஊறினக்காய்.

என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

ஹாய் மீனா. ஆம் ஊறுகாய் வினைத்தொகை தான். அப்போ உங்க வீட்ல தயிர் சாத்த்திற்கு தொட்டுக்கொள்ள வினைத்தொகையா :)). Super :))

நீங்க bank exam எழுதுரேங்களா

Life Is Easy When U "Accept All"

//ஊறுக்காய்// இப்போ பிரிச்சு மேய நேரம் பத்தல மீனா.
அது ஊறு...க்..காய் இல்லை, ஊறுகாய். நடுவுல க் வராது.

// ஙங்கி/// & //ஞங்கி// என்றால் என்ன?

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்