மீன் தொட்டி பற்றி.

எங்கள் வீட்டில் பெரிய மீன் தொட்டி வாங்க 2மாதங்கள் ஆகுது. மீன் தொட்டியை சுத்தம் செய்து இன்னும் 1மாதம் கூட ஆகலை.ஆனால் 2மீன்கள் இறந்து விட்டது எப்படி என்று தெரியலை. மீன் தொட்டியை எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யனும்னு சொல்லுங்க... மீன் ஏன் இறந்தது என்றும் தெரியலை.

hi,
neenga enna fish vangirukinga, oru thottila ethanai fish iruku? fish shop la epo clean pannanum, epo food podanum, oru fish ku ethana ball food podanum endru ethvum solalaya?

enga veetla chinna fish than 10 iruku ellame (Fish Name: Blue Moff) ore vagaigal than vachurukom. bluemoff + Platie rendu fish -um ore thottila vita bluemoff fish platie fish ah sapitu vidum. so intha mari ethavathu irukutha. Small fish na daily morning food 6 ball mattum pothum. 15days once clean pannuna pothum pa.

Gold fish 12, red short 4
Black mouli 4
Angel fish 4
Others name therila athu 4. Monthly once than clean panna sonnanga but ennala mudila tank perusu. Now I am 8months pregnant. Nobody to help me. en husband helpku vara matar. Vera yaarum helpku illa.

Gold fish 12, red short 4
Black mouli 4
Angel fish 4
Others name therila athu 4. Monthly once than clean panna sonnanga but ennala mudila tank perusu. Now I am 8months pregnant. Nobody to help me. en husband helpku vara matar. Vera yaarum helpku illa.

தொட்டி எப்படி செட் பண்ணியிருக்கிறீங்க, எங்கே வைத்திருக்கிறீங்க என்பது தெரியவில்லையே!

//மீன் தொட்டியை எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யனும்// சரியான இடத்தில் வைத்து அளவோடு மீன்கள் & தாவரங்கள் வளர்த்து அளவுக்கு உணவு கொடுத்தால், வருடத்துக்கு 2 தடவை சுத்தம் பண்ணினால் கூட போதும். வளர்க்க ஆரம்பிக்கும் சமயம் விஷயம் பிடிபடாதுதான்.

//மீன் ஏன் இறந்தது என்றும் தெரியலை./// நீங்க நீர் அழுக்காகியிருந்ததாகச் சொல்லவில்லை. //Angel fish// மற்றவைகளைத் தாக்கும். இதனாலும் இறந்திருக்கலாம்.

//once than clean panna sonnanga// ம்.

//but ennala mudila tank perusu.// ம். //Now I am 8months pregnant. Nobody to help me. en husband helpku vara matar. Vera yaarum helpku illa.// பாப்பா கிடைச்சதும் நிலமை இன்னும் மோசமாகிரும். ;( பாவம் மீன்கள். அவையும் உங்கள் குழந்தைகள் போல தான். உங்களை நம்பி இருக்கும் ஜீவராசிகள். ஒரே தீர்வு... மீன்களைத் தொட்டியோடு, நன்றாகப் பார்க்கக் கூடிய யாருக்காவது கொடுத்துவிடுவது தான்.

‍- இமா க்றிஸ்

அம்மா தண்ணீர் அழுக்காக இல்லை தெளிவாக தான் இருக்கு. எங்கள் தொட்டியின் நீளம் 108செ.மீ அகலம் 40செ.மீ உயரம் 47செ.மீ. தொட்டி எங்கள் ஹாலில் உள்ளது. நல்லா விரிவான இடம் தான். நேற்று நான் அதை கவனித்த போது Black mouli gold fish ah கடிச்சது. Black mouli கடிக்குமா.

//Black mouli gold fish ah கடிச்சது. Black mouli கடிக்குமா.// ஓ! கடிக்குமே! :-)
அளவைப் பொறுத்து, ஹோல்ட் ஃபிஷ்ஷும் ப்ளாக் மொலியை விழுங்கும்.

மீன்களை வாங்கும் போது ஏதாவது ஃபங்கல் இன்ஃபெக்க்ஷனோடு வந்திருந்தால் (இது எம் கண்ணுக்குத் தெரிய வேண்டும் என்பது இல்லை.) அந்த இடங்களை வேறு மீன்கள் கொத்தித் தின்ன ஆரம்பிக்கும்.

சாப்பாடு சரியான அளவு கொடுக்கிறீங்க இல்ல!

ஸ்ட்ரெஸ் கோட் (stress coat) என்று ஒரு திரவம்.... அங்கு கிடைத்தால் வாங்கி பாட்டிலில் சொல்லியிருக்கும் அளவுக்கு தொட்டி நீரில் கலந்துவிடவும்.

‍- இமா க்றிஸ்

உணவு சரியான அளவு கொடுக்கிறேன். //ஸ்ட்ரெஸ் கோட் (stress coat) என்று ஒரு திரவம்..// இது எதற்காக என்று சொல்ல முடியுமா அம்மா.

தண்ணீரின் அமில, கார நிலையைச் சமப்படுத்தும்.

மீன்களுக்கும் எங்களைப் போல ஸ்ட்ரெஸ் வரும். :-) அவையும் ஜீவராசிகள் தான். புது இடம், புது தொட்டி, வித்தியாசமான நீர், புது ஃப்ரெண்ட்ஸ்.... சில புது மணப்பெண்களோட புக்ககம் போன ஆரம்ப காலத்து ஷாக் போல... அட்ஜஸ்ட் பண்ணத் தெரியாம, பண்ண முடியாம இவங்களில் சிலரும் கஷ்டப்படுவாங்க. ஸ்ட்ரெஸ் வரப்படாதா! :-) அதைக் குறைக்க உதவும்.

ஃபங்கல் இன்ஃபெக்க்ஷன் இருந்தால் சரியாக்கும்.

மீனை, கடைக்காரர் நெட் வைத்து பிடித்து பையில் போட்டுக் கொடுத்தார் இல்லையா! ஜிலுங் ஜிலுங்கென்று வண்டியில் வரும்போது குலுங்கிக் குலுங்கி வந்திருப்பார் மீனார். பிறகு நீங்கள் திரும்ப பிடித்து தொட்டியில் விட்டீர்கள். மீன் பயந்திருக்கும். இவற்றின் நடுவே ஒன்றிரண்டு செதில்கள் கழன்றும் இருக்கலாம். அந்தக் காயங்கள் வேதனையைக் கொடுக்கும். அவற்றில் தொற்றும் ஏற்படலாம். இவற்றாலெல்லாம் ஏற்படும் ஸ்ட்ரெஸ்ஸினால் என்ன செய்வது என்று தெரியாமல்... நமக்கு தலை வலிச்சா வீட்டில இருக்கிறவங்க மேல காரணமில்லாமல் எரிஞ்சு விழுறோம்ல! அது போல.... :-) இவங்க மற்ற மீன்களைத் தாக்குவாங்க. இது உடனே நடக்க வேண்டும் என்கிறது இல்லை. தாமதித்தும் நடக்கலாம். எல்லா மீன்களும் இப்படி இருக்க மாட்டாங்க. சிலருக்குத் தான் இந்தப் பிரச்சினை இருக்கும்.

ஸ்ட்ரெஸ் கோட் போடுங்க; பலதுக்கும் நல்லது. மீன்தொட்டி பற்றிய உங்க ஸ்ட்ரெஸ்ஸும் குறையும்.
~~~~~
முன்னுக்கு ஒரு போஸ்ட்ல //ஹோல்ட் ஃபிஷ்ஷும்// என்று எழுதி இருந்தேன். ;)) திருத்தி, 'கோல்ட் ஃபிஷ்ஷும்' எனப் படிக்கவும். :-)

‍- இமா க்றிஸ்

எங்கள் வீட்டு மீன் அடிக்கடி உணவு கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்கு என்ன காரணம்..??

//அடிக்கடி உணவு கேட்டுக்கொண்டே இருக்கிறது.// :-) அதற்குப் பேச வராதே! :-)

நீங்கள் சொல்ல வருவது என்ன என்பது புரிகிறது.

//அதற்கு என்ன காரணம்..??// முக்கியமான காரணம், நீங்கள் அடிக்கடி அருகே செல்வது. :-) உங்கள் மீன்கள், நீங்கள் தொட்டி அருகே வந்ததும் உணவு கொடுப்பீர்கள்; மேலே வர வேண்டும் என்பது போல் இயைபாக்கம் அடைந்திருக்கின்றன. மேலே வர அவற்றிற்குப் பசி இருக்க வேண்டும் என்பது இல்லை. என் முயல்கள் கதவு இழுக்கும் சத்தம் கேட்டதும் ஓடி வருவார்கள். பசியே இராது. பழக்க தோஷம். தீன் கொடுக்காமல் தலையைக் கோதி விட்டால் அப்படியே தூங்கிப் போவார்கள். :-)

மீன்கள் நீர் மேல் மட்டத்திலேயே சுற்றிக்கொண்டு, வாயைத் திறந்து திறந்து மூடுகின்றனவா? அப்படியானால் நீரில் ஒட்சிசன் போதவில்லை; நீர் அழுக்கடைந்திருக்கிறது. தொட்டியைச் சுத்தம் செய்து நீரை மாற்றுங்கள். ஒட்சிசன் வெளிவிடும் தாவரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது நல்லது. ஃபில்ட்டர் ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதையும் கவனியுங்கள். உணவு கொடுக்கும் போது எப்பொழுதும் மீதமில்லாமல் முடிந்து போவது போல் கொடுக்க வேண்டும். மீந்தால் நீர் விரைவில் கெட்டுப் போகும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்