1 வயது குழந்தைக்கு வயிற்று போக்கு,சுரம்

என் குழந்தைக்கு 1 வயது 4 மாதம் நடக்கின்றது, நேற்று முன் தினத்தில் இருந்து சுரம்,வயிற்று போக்கு டாக்டரிடம் காண்பித்து மருந்து குடுத்ததில் இன்று கொஞ்சம் பராவயில்லை, ஆனால் உடல் சோர்ந்து விட்டது என் மகனுக்கு இப்போது (எனௌ) என்ன உணவு கொடுத்தால் உடல் பழைய நிலைக்கு திரும்பும் என தோழிகள் கூறவும், இமா அம்மா, பூங்கோதை அம்மா உதவுங்கள்

அன்புள்ள‌ தீபாவிற்கு, காலையில் வெளியே சென்று திரும்பி வீடு வரத் தாமதமானதால் பதிவைச் சரியாகக் கவனிக்கவில்லை. மன்னிக்கவும்.
ஓமத்தைக் கருக‌ வறுத்து (தீப் பற்ற‌ வறுக்கவும் பொரிந்து பொரிந்து ஓமம் கருகித் தீப் பற்றி எரியும், பிறகு தானாகக் கரி போல் ஆகிவிடும்)
சுமாரான‌ தீயில் வறுக்கவும். மண்சட்டி பயன் படுத்தும் வழக்கம் இருந்தால் புது சட்டியில் வறுக்கவும். இல்லை என்றாலும் பரவாயில்லை.
கருக‌ வறுத்த‌ ஓமத்தைப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். மூன்று டேபிள் ஸ்பூன் அளவு இருந்தால் மிகவும் நல்லது, பின்னால் உதவும்.
அந்த‌ ஓமப் பொடியை இரண்டு சிட்டிகை அளவு எடுத்து தேனில்
குழைத்து குழந்தையில் நாக்கில் தடவி விடவும் சிறிது கசப்பு இருக்கும். அதனால் தான் தேனில் குழைத்துக் கொடுப்பது, தேனில் குழைத்த‌ ஓமத்தை இரண்டு நாளைக்கு நான்கு வேளை தரவும், ஓமம் சுரத்தையும் பலவிதமான‌ வயிற்றோட்டங்களையும் நீக்கி விடும்.
செரிமானக் கோளாறுகளை (உணவு, தண்ணீர், பால், வேறு வகையான‌ உணவுகளால் ஏற்படும் கோளாறுகளையும்) முழுமையாக‌ நீக்கிவிடும். சுரமும் வயிற்றோட்டமும் இருக்கும் போது பால் சீரணம் ஆவது கடினம், புழுங்கல் அரிசி நொய்க்கஞ்சி இதனோடு வறுத்துப் பொடித்த‌ சீரகப் பொடி சிறிது சேர்த்துக் கொடுக்கவும். இடியாப்பம்
சர்க்கரை தொட்டுக் கொடுக்கலாம். சுரம் போன‌ பின் இட்லி தரலாம்
மிளகு சீரகம் தனியா(கொத்தமல்லி விதை) வறுத்து தக்காளி ரசம்
(மிளகாய் வேண்டாம்) வைத்து சாதம்,இட்லி,இடியாப்பம் தரலாம்.
உப்பை வறுத்துப் பயன் படுத்தவும்.(கல் உப்பு) பேதி ஆனதால்
கட்டாயம் நிறைய‌ தண்ணீரைக் குடிக்கவைக்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மிக்க நன்றி அம்மா

மேலும் சில பதிவுகள்