ஆரோக்கிய உணவு பட்டியல்

எனது ஆண் குழந்தைக்கு 1 1/2 வயது ஆகிறது. எனக்கு தெரிந்த சில வகை உணவுகளையே (பாசிப்பருப்பு சாதம் , சாம்பார் சாதம் , ரசம் சாதம், பச்சை பயிறு சாதம் ) இதுவரை சமைத்து என் மகனுக்கு வழங்கியுள்ளேன். தற்பொழுது என் மகன் அந்த உணவுகளை உண்ண மறுக்கிறான் . குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு பட்டியல் மற்றும் சமைக்கும் குற்றிப்புகளையும் தமிழில் வடிவில் வழங்கவும் அல்லது குழந்தைகளுக்காக உள்ள சமையல் குறிப்புகள் ஏதேனும் இருப்பின் தெரிவிக்கவும்.

உங்கள் மகனுக்கு ஒன்றரை வயது ஆவதால் கூடுமானவரை நீங்கள் உண்ணும் அனைத்து உணவுகளையுமே தரலாம் காரம் உப்பு கொஞ்சம் கவனம் வேண்டும், முதலில் நீங்கள் சுவை பார்த்து விட்டுத் தரவும். கண்ணுக்கு அழகாக‌ குட்டி குட்டியாக‌ உருட்டி சின்னத் தட்டில் வைத்து
உங்களுடனேயே தானாக‌ எடுத்துச் சாப்பிடும் படி செய்யுங்கள்.
அப்போது செய்யும் சேட்டைகளைக் கோபமாகக் கண்டிக்கக் கூடாது.
அப்படி மிரட்டினால் சாப்பாட்டை வெறுக்க‌ ஆரம்பிக்கும்,
மற்றபடி மேலே உள்ள‌ கூகுள் பெட்டியில் குழந்தை உணவுகள் என்று
தட்டினாலே நிறையக் கிடைக்கும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

தோழிகளே ஸ்வீட் மைதா ரோல், நம்ம‌ கிச்சன் கில்லாடிகள் யாரோ ஒரு தோழி
ஸ்வீட் மைதா ரோல் செய்து இருதாங்க‌, 4 பொருட்கள் மட்டும் பயன்படுத்து இருந்தாங்க‌ , அது எழுதலாம்னு டிரை பன்னும்போது டேட்டாபேலன்ஸ் இல்ல‌, இப்போ அது எந்த‌ பதிவுனு தெரியல‌, நானும் விளக்கபட‌ குறிப்புல‌ 70 வரை பார்த்துடேன், கண்டுபிடிக்கமுடியல‌, யாரவது கண்டுபிடித்து தாங்க‌ பா பிளீஸ்

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்