delivery ku piragu stomach

Hi friends,
Enakku delivery aagi 1 1/2 year finished. ennoda stomach romba perusa irukku. korayave illa. atharku enna seivathu. Ippo kooda vaeru irukki kattalama. appadi vayaru kattinal kuraium endru ennoda friends solranga. Apadi seiyalama

Illa vera ethathu vazhi irukka. enakku pls help pannunga friends. Veliya pogave kastama irukku.

Ellarum kindal pandranga pregnenta irukiyanu kekranga kastama irukku. Please ungalukku therinja ideas kodunga.

எடை குறையாமலே இருந்தால், பெல்ட் இறுகும் இடத்தைச் சுற்றி எங்காவது தசை பிதுக்கிக் கொண்டு தெரியலாம். :-)

‍- இமா க்றிஸ்

அன்புள்ள‌ சங்கீதனா ஒன்றரை ஆண்டுகள் கழித்து வயிறு அவ்வளவு
சீக்கிரம் குறையாது என்பது என் கருத்து. சற்றுப் பொறுமையாகச்
செய்யுங்கள். ஆங்கில‌ மருந்துக் கடைகளில் இதற்கான‌ பெல்ட் கிடைக்கும்
உங்கள் மருத்துவரிடம் முதலில் பெல்ட் பற்றிக் கேளுங்கள். எந்த‌ மாதிரியான‌ பெல்ட் அணிய‌ வேண்டும் என்று அவர்களே எழுதித் தருவார்கள்
உங்கள் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியரிடம் சிட் அப் பயிற்சியைக் கற்றுக்
கொண்டு தினமும் செய்யுங்கள். குனிந்து கைபம்ப்பில் தண்ணீர் அடிப்பது,
கிணறு இருந்தால் முடியும் வரை தண்ணீரை வாளியில் இறைத்துப் பயன்
படுத்துங்கள். இன்னும் சில‌ வீட்டுப் பயிற்சிகள் (வீட்டு வேலையும் கூட‌)
அம்மியில் அரைப்பது, ஆட்டுக் கல்லில் அரைப்பது, இது வேடிக்கையாகத்
தெரிந்தாலும் இந்த‌ வேலைகளால் உங்கள் உடல் அசைவுகளைக் கவனித்துப்
பாருங்கள். இதில் வயிறு எக்கித் எக்கித் தான் மூச்சு விடுவீர்கள்.
தினமும் இம் மாதிரி செய்யும் போது உங்கள் வீட்டு வேலை முடிவதோடு
மட்டும் அல்ல‌ உடற் பயிற்சிக்கு என்று தனியாக‌ நேரம் ஒதுக்க‌
வேண்டியது இல்லை. குறைந்த்து இதற்காக‌ செலவிடும் ஒரு மணி நேரத்தை நீங்கள் நினைத்த போது பயன்படுத்திக் கொள்ள‌ முடியும்.
ஒரு பயிற்சியாக‌ நினைக்காமல் வீட்டு வேலையை முடிக்கிறோம் என்ற
நினைப்பு தான் இருக்கும்.
வயிறு மட்டும் தான் தனியாகத் தெரிகிறதா அல்லது உடம்பே குண்டாகி
விட்டது போல் தெரிகிறதா? இது பற்றி எழுத‌ வில்லை. கொள்ளு பருப்பை
எப்படி துவரை,கடலைப் பருப்பு. பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு
இவற்றை மிளகாய்ப் பொடி,இட்லி, சாம்பார்,ரசப் பொடி இவற்றிலும்,
வடை, அடை, பருப்பு உருண்டை போன்றவற்றிலும் சேர்த்துக் கொள்ளவும். கொள்ளை மட்டும் பவுடராக‌ அரைத்துக்கொண்டு அதைச்
சந்தனம் போல் நீரில் கலந்து குழைத்து தொப்பை போல் இருக்கும் வயிற்றுப் பகுதியில் பற்றுபோல் போட்டுவர‌ நாளடைவில் தொப்பை
குறையும் என்று பொதிகையில் தலை சிறந்த‌ ஆயுர் வேத‌ மருத்துவர்
கூறினார். அதை முயற்சி செய்து பாருங்கள்.
கிராமங்களில் வயதான‌ பாட்டிகள் இருந்தால் அவர்களிடம் வயிறு கட்டுவது குறித்துக் கேளுங்கள். புடவையாலேயே எப்படி வயிறு
கட்டுவது என்று சொல்லித் தருவார்கள்.
அன்புடன் பூங்கோதை கண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்