என்ன‌ வாழ்க்கைடா இது???!!!

லேப்டாப் பெண்கள்

எல்லோருக்கும் வணக்கம்!!!
ரொம்ப‌ sorry என்னால் இவ்வளவு நாட்களாக‌ இங்கு வர‌ முடியவில்லை. அனைவரும் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் அனைவரையும் மிகவும் miss செய்தேன். என்னையும் தான். வேலை, வேலை, வேலை.... இதனால் நானே என்னை யாரோ போல் உணர்கிறேன். கதை, கவிதை, பாட்டு, விளையாட்டு, ஆட்டம், பாட்டம் எல்லாம் மறந்து வெறும் சக்கையாய் காலை 8:35 மணிக்கு cab, office, work, evening status, night meeting,appraisal,knowledge updation for appraisal என்று நேரம் கழிகிறது. வேலையில் ஏதேனும் தெரியவில்லை என்றால் மனதுடைந்து போனவது.....இது நான் இல்லை. ச்சே, என்ன‌ வாழ்க்கை டா இது????????

ஏதேனும் வேலையாக‌ ஊருக்கு போனாலும், கணிணியை கையோடு எடுத்துச் செல்ல‌ வேண்டி உள்ளது. காலை 7 மணிக்கு எனது வேலையை ஆரம்பிக்கும் பொழுது என் தந்தை வந்து 'office open பன்னிடியா' என்று கேட்கையில் ஒரு வலி மனதில் எழுகிறது. அதேபோல‌, விடுமுறைக்காக‌ வந்த‌ அக்கா வீட்டு பிள்ளைகளோடும், மற்ற‌ உறவுகளோடும் கணிணியும் கையுமாகவே பேசி, சிரிக்க‌ வேண்டி உள்ளது. இப்பொழுதெல்லாம் அவர்கள் என்னிடம் ஊருக்கு வருவதற்கு முன்பே 'நீ work from home எடுப்பியா', நாங்க‌ வந்து என்ன‌ செய்ய‌, நீ laptop-ம் கையுமாக‌ இருப்பே' என்று சலித்துக்கொள்கின்றனர். இதையும் தட்டிக் கழிக்க‌ முடியவில்லை,அதையும் விட‌ முடியவில்லை. என்னடா, எனக்கு வந்த‌ சோதனை என்று இருக்கிறது.

சனி மற்றும் ஞாயிறுகளில் ஊருக்குப்போனால் எந்த அரசு சார்ந்த‌ வேலையும் செய்ய‌ முடிவதில்லை. மற்ற‌ நாட்களில் ஊருக்குப்போனால் அலுவலகத்தில் விடுமுறை கேட்கவே கடினமாக‌ இருக்கிறது (பண்டிகைகளில் ஊருக்குப்போக‌ ஏற்கெனவே அலுவலக‌ விடுமுறைகளை பயன்படுத்தி விடுகிறேன்). சரி, வார‌ விடுமுறைகளில் ஏதெனும் செய்ய‌ நினைத்தால் தூக்கம் தடுக்கிறது. 5 நாட்கள் செய்யாத‌ என் மற்ற‌ வேலைகளை, இந்த‌ இரு நாட்கள் செய்து விட்டு தூங்கினால் தான் அடுத்த‌ வாரம் சரியாக‌ ஓடுகிறது. இதுவே வழக்கமாகவும் ஆகி விட்டது. திரும்பிப்பார்த்தால், இவ்வளவு நாட்கள் வீணாய் கழிந்ந்தது போல் கவலையாக‌ உள்ளது.

அமர்ந்து யோசித்தேன். இனி நான் இப்படி இருக்கப்போவதில்லை. எனது வேலைகளை வகைப்படுத்திக்கொண்டு மற்ற செயல்களிலும் ஈடுபட‌ முடிவு செய்து விட்டேன். அதன் தொடக்கமாக‌ இந்த‌ பதிவை இங்கு பதிகிறேன். அட்மின் அண்ணா மன்னிக்கவும். இனி ஒவ்வொரு வாரமும் என்னை என் பதிவின் மூலம் இங்கு பார்க்கலாம். ஆஹா, என்ன‌ வாழ்க்கை டா இது(சந்தோசமாக‌)!!!!!!!

4
Average: 4 (14 votes)

Comments

Yellarukum mudhal vanakam.na pregnant irukum podhula irundhea arusuvai papen but ippadhan joint panniruken.ippa papa pirandhu inaki 7 month start agudhu.

Neeyum vaalu aduthavanaiyum vala vidu

வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டி இருக்கிறது. நீங்கள் திரும்ப வந்தது பற்றி சந்தோஷம். :-) முடிகிற போதெல்லாம் வாருங்கள்.

‍- இமா க்றிஸ்

வாழ்த்துக்கள் இந்து மேடம். இனி நீங்களும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வாருங்கள்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

vazlthukal...

மிக்க நன்றி திரு.திலீப் அவர்களே...

No pains,No gains

ANANTHAGOWRI.G

மிக்க நன்றி திரு.திலீப் அவர்களே...

No pains,No gains

ANANTHAGOWRI.G