வயிறு வலி

Ennoda ponnukku 2.5 years age aguthu.வயிறு வலியால் 4 days hospitala admit airunthom. வயிறு la kirumi irukkunu sonnanga. epa konjam paravala. but innamum morning la stomach pidichuttu oru madhiri irukka. Ethai epadi sari seiyarathu? english medicine illama home made food la epadi sari sivathu? stomach clean paani,nanna giranam aganum. plz help me friends.

பூங்கோதைதான் இதற்கு சரியான ஆள் கவி. கூவி அழைத்திருக்கிறேன். உங்களுக்கு லக் இருந்தால் இதைப் பார்ப்பார்கள். :-)

‍- இமா க்றிஸ்

வேப்ப‌ இலை அரைத்து கோலி குண்டு அளவு, 2 உருண்டை பாலில் கலந்து கொடுங்க‌ ,இதை வாரத்தில் ஒரு நாள் வீதம் ,3 வாரம் கொடுங்க‌ சரிஆகும்

எல்லாம் நன்மைக்கே

Thanks you Sutarsha.

வயிற்றில் பூச்சி இருந்தால் இரவில் தூக்கத்தில் பற்களை நற நறவெனக் கடிக்கும், ஆசனவாயை கையால் சொறிந்து கொண்டே இருக்கும். அமைதி
இல்லாமல் இருக்கும். மிகவும் அதிகமானால் உண்ட‌ உணவு செரிக்காமல் வாந்தி எடுக்கும். உணவு அளவும் குறையும், நேர்ந்து போகும் நெஞ்செலும்பு
கூடு கட்டினாற்போல் மேலே தோன்றும். இது மிக‌ மோசமான‌ அறிகுறி.
குப்பைமேனிக் கீரைதான் சரியான‌ வைத்தியம். இந்தக் கீரையை
கடைந்தோ, பொரியலாகவோ, கூட்டாகாவோ கொடுக்கலாம். சூப்பாகத் தரலாம். பொடியாகக் கிடைத்தால் கால் டீஸ்பூன் அளவு பொடியைத்
தேனிலோ அல்லது வெல்லத்திலோ கலந்து தரலாம், பொடியானால் ஒரு
நாளைக்கு குறைந்தது ஒரு டீஸ்பூன் அளவாவது உண்பது மிகவும் நல்லது.
கீரையானால் 100 கிராம‌ அளவாவது சாப்பிடுதல் நல்லது.
பறங்கி விதை, வெள்ளரி விதை, பூசனி விதை இவற்றை பச்சையாக‌
(வறுக்காமல் ) உண்பது நல்லது.
அசைவத்தைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. (நாடாப் புழுவுக்கு இது தான் காரணம் இது 100 அடிக்கு மேல் வளரும் என்று சொல்கிறார்கள்.) மிகவும் நல்லது.. ஹோமியோபதியில் (சினா) என்றமருந்து தான்
இதை அழிக்கவல்லது. பன்றி கறியினால் இது வருகிறது என்கிறார்கள்.
வேப்பங்கொழுந்து 15 இலை, வறுத்த‌ மிளகு 5 வறுத்த‌ சீரகம் 1/2
டீஸ்பூன், கல் உப்பு தேவையான‌ அளவு இவற்றை அம்மியில் வைத்து
மைபோல் அரைத்து வேறு எதையும் சேர்க்காமல் குடிக்கவைக்கவும்
குடித்தபின் மருந்தின் சுவைமாற‌ தண்ணீரைக் குடிக்க‌ வைத்து பின்னர்
சிறிது வெல்லம் தின்னக் கொடுக்கவும். பொதுவாக‌ குழந்தைகளுக்கு
தலைக்கு ஊற்றிய‌ அன்று நாங்கள் இவ்வாறு வேப்பஞ்சாறு தருவோம்.
இது தலைக்குக் குளிப்பதால் ஏற்படும் சீதளத்தைத் தடுக்கும். உப்பு
வேம்பின் கசப்பைக் குறைக்கும்.
எந்த‌ ஊரில் இருக்கிறீர்கள் என்று தெரியாவிட்டாலும் நான் சொல்வது
எல்லாம் அங்கு கிடைக்குமா என்று தெரியாவிட்டாலும் தெரிந்ததைக்
கூறியுள்ளேன், இமாவுக்காகவும் உங்கள் மக‌ளுக்காகவும் தான் தருகிறேன். மற்றபடி தங்களைப் பற்றிய‌ முழு விவரம்
தராதவர்களுக்கு மருந்து பற்றிய‌ தகவலைத் தர விருப்பமில்லை.

பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

//இமாவுக்காகவும் உங்கள் மக‌ளுக்காகவும் தான் தருகிறேன்.// மிக்க நன்றி சகோதரி. நீங்கள் எதற்காக ப்ரொஃபைல் நிரப்புவதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். இனி நிச்சயம் ப்ரொஃபைல் நிரப்பாதோருக்காக உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன். :-)

‍- இமா க்றிஸ்

அன்புள்ள‌ இமாவிற்கு உங்கள் மீது எனக்கு எந்த‌ விதமான‌ வருத்தமும்
இல்லை, வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு நாம் கூறும் பொருள்கள்
கிடைக்குமா கிடைக்காதா, கேள்வி கேட்பவர்கள் ஆணா பெண்ணா,
மருத்துவம் யாருக்குத் தேவையோ அவர்கள் வயது, நோயின் தன்மை,அவர்கள் அதை வெளிப்படுத்தும் விதம் முழுமையாக‌ வெளிப்படுத்தாமை, தொடர்பற்ற‌ விவரங்கள் இவை காரணமாக‌ மருந்துகளை இணையத்தில் கூறுவது என்பது எவ்வளவு ஆபத்தான‌ செயல் என்பது
நீங்கள் அறியாததல்ல‌. பலமுறை பல‌ இடங்களில் ப்ரொஃபைலில் நிரப்புவது
எவ்வளவு அவசியம் என்று தெளிவு படுத்தியும் தான் பிடித்த‌ முயலுக்கு
மூன்றே கால் என்று இருப்பதும் பதில் கிடைக்காத‌ நிலையில் தோன்றினதை
எல்லாம் சொல்வது என்பதையும். குறைக்கவே விரும்பினேன். பலர் பலவிதமான கேள்விகளைப் சிலரிடம் கேட்பதும் அதற்கு உடனே பதில் வரவில்லை என்கிற‌ போது அவர்கள் பதிவிடும் பதிவுகளைப் பார்க்கும்
போது மனம் மிகவும் வருத்தமும் கோபமும் அடைகிறது.
மற்றபடி ஆசிரியப் பணியில் இருந்தவர்களுக்கு இவையெல்லாம் பழகிப்
போனவையே. இருந்தாலும் ஊதுகின்ற‌ சங்கை ஊதித் தான் வைப்போமே.
என்றாவது காதில் விழுந்து பலன் தராதா என்ற எண்ணம் தான் காரணம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்