எங்களின் மனவருத்தம்.

அறுசுவை ஒரு அருமையான‌ கருத்துப் பெட்டகம். பலரும் கூடும் ஒரு அருமையான கலாச்சாரக் கூடம். வினாவிடை நிகழ்ச்சிக்கூடமும் கூட்.
உடலுக்கும் மனதிற்கும் ஏற்படும் பல‌ சிக்கல்களுக்கு எங்கு யாரிடம்
கேட்டால் விடை கிடைக்கும் சிக்கல் தீரும் என்று பலரும் தேடி வரும்
ஒரு கருத்துக் கூடம். இது கூடுமானவரை பெண்களுக்குள்ளேயே நடைபெறுகின்ற‌ ஒரு முக்கால் அல்லி அரசாங்கம் (அல்லி ராஜ்ஜியம்)
என்று கூட‌ வைத்துக் கொள்ளலாம், (இதில் நுழைந்து பல் சிக்கல்களுக்கு
அருமையான‌ கருத்துக்களைக் கூறி தெளிவு தந்த‌ அண்ணன்களுக்கும்
தந்தைமார்களுக்கும் அட்மினுக்கும் எங்கள் மனமார்ந்த‌ நன்றிகள்.)
இதில் பதிவு செய்யும் உறுப்பினர்களில் ஏறக்குறைய‌ அனவருமே
தங்களைப் பற்றி பதிவு செய்ய‌ வேண்டிய‌ முக்கியத் தகவல்களைத் தந்து
உள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக‌
உள்ள‌ சிலர் பேர் பேர் ஒன்றைத் தவிர‌ எதையுமே தராமல் முக்கியமான‌
மருத்துவம் சார்ந்த‌ கேள்விகளுக்கு விடையே கிடைக்கவில்லை என்று
வருத்தப் படுவதில் என்ன நியாயம் என்று புரிய‌வில்லை.
உங்களைப் பற்றிய‌ நியாயமான முக்கியத் தகவல்கள் மட்டுமே
சுயவிவரப் பதிவில் கேட்கப் பட்டுள்ளது. அதற்குக் கூட‌ விவரம் தர‌
மறுக்கும் உங்களுக்கு பதில் மட்டும் உடனே கிடைக்க‌ வேண்டும் என்று
எதிர்பார்ப்பதில் என்ன‌ நியாயம் என்று எனக்குப் புரியவில்லை.
இணைய‌ தளத்தில் விவாதிக்கத் தயங்குகின்ற‌ பலவற்றை லட்சக் கணக்கான‌ பேர் காணுகின்றவாறு விவாதிப்பதில் தயங்குவதில்லை.
ஆனால் நியாயமான‌ பதிவுகளைப் பதிவிடத் தயங்குவது ஏன்?
என் கருத்து தவறாக‌ இருந்தால் தவறாக‌ நினைப்பவர்கள் மன்னிக்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

அப்பிடியே மறக்காமல் நீங்கள் ஆணா பெண்ணா என்பத்ற்கும் பதில் கொடுத்து வையுங்கள் மக்களே.ரெம்ப பெர்சனல் கேள்விகள் கேட்டு வைக்க நாமளும் விழுந்து விழுந்து விளக்க்கம் குடுத்துட்டு புரொபைல் ஐ பாத்தா அங்குட்டு பெயர் என்றதுக்கு மட்டும் மழைமழை,தென்றல்தென்றல் அப்டி இருக்கும்.ஆண் களுக்கு பதில் அளித்தோமா பெண்களுக்கு பதில் கொடுத்தோமா நு கூச்சமா இருக்குது.

"ஒன்றா உலகத்து உயர்ந்த‌ புகழல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல்"
என்ற‌ வள்ளுவர் வாக்கிற்கு இணங்க‌ தமிழகத்தின் தனிப் பெறும் வலிமை
வாய்ந்த‌ வீரத்திருமகளாய் நம்மோடு வாழ்ந்த‌ நம் தமிழக‌ முன்னாள் முதல்வர் மாண்பு மிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்கள்
இப்பூவுலகை விட்டு இன்று இறைவன் திருவடி நீழலில் அடைக்கலமானார்,
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய‌ எல்லாம் வல்ல‌ திருமாலை வேண்டுகிறோம். தோன்றின் புகழோடு தோன்றுக‌.
பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

ஆம் ஒரு தலை சிறந்த தலைவியை இழந்துவிட்டோம். அசாதரண சக்தியை இழந்து விட்டோம். மிஸ் யூ அம்மா

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

ஆம், நாம் இழந்தது அனைத்து பெண்களுக்கும் முன்னோடியான‌ தனிச்சிறப்பு கொண்ட அம்மையாரை என்று நினைக்கும் பொழுது மிகுந்த‌ வேதனையாக‌ உள்ளது.அவர் மண்ணை விட்டு பிரிந்தாலும் நம் மனதில் நீங்காமல் இருப்பார்.
நாம் இழந்தது தலைவியை மட்டும் அல்ல,தாய்மை உள்ளம் கொண்டவரை அவரது ஆன்மா சாந்தி அடைய‌ இறைவனை வேண்டுகிறேன்.

இதுவும் கடந்து போகும்

மேலும் சில பதிவுகள்