தோழிகளே உதவுங்கள்!

என் தங்கைக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது குழந்தை நின்று 3 மாதத்தில் அபார்சன் ஆகிடுது ரொம்ப செலவு செய்துட்டாங்க அவ உடம்பு ஹீட்டான உடம்பு அதனால குழந்தை தங்கலயா இல்ல அவ வெய்ட் போட்டனாலயா புரியல விளக்கவும் தோழிஸ்

//ரொம்ப செலவு செய்துட்டாங்க// சிகிச்சை எடுத்தார்களா? மருத்துவர்களது அபிப்பிராயம் என்ன?

//அவ உடம்பு ஹீட்டான உடம்பு அதனால குழந்தை தங்கலயா// ஹீட் என்று எதைச் சொல்கிறீர்கள்? எதை வைச்சு, 'ஹீட்டான உடம்பு' என்கிறீர்கள்?

//அதனால குழந்தை தங்கலயா// ம்... நீங்களே //குழந்தை நின்று 3 மாதத்தில் அபார்சன் ஆகிடுது// என்கிறீர்கள். குழந்தை தங்குவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் 3 மாதத்திற்கு மேல் பிரச்சினை என்றால் மருத்துவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

//இல்ல அவ வெய்ட் போட்டனாலயா// எதுவாக இருந்தாலும் அதைச் சொல்லாமலா மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்தார்கள்? நீங்கள் கேட்டிருக்க வேண்டாமா? அத்தனை செலவளித்தவர்கள் எந்தக் கேள்வியும் கேட்காமலா சிகிச்சை எடுத்தீர்கள்? புரியவில்லை.

‍- இமா க்றிஸ்

என் தங்கைக்கு பீரியட்ஸ் சரியாக வராது
டிரீட்மென்டுக்கு பிறகுதான் குழந்தை நின்றது
அப்படி நின்றதும் டாக்டர் பெட் ரெஸ்டுலதான் இருக்கனுசொல்றாங்க அப்படி ரெஸ்டுல இருந்தால் வெய்ட் போடுது அடுத்து அவள் கணவர் தாய் மாமன் மகன் என்பதும் 1 காரணமாக டாக்டர் சொல்றாங்களாம் இமா மா

மேலும் சில பதிவுகள்