கரப்பான் பூச்சி தொல்லை

1 மாதம் சமையலறையை உபயோகிக்காதலால் குட்டி குட்டி கரப்பான் பூச்சிகள் அதிகமாக உள்ளது. தற்சமயம் சமையலறைக்கு மருந்து அடிக்கும் நிலைமையில்லை. எப்படி அவற்றை ஒழிப்பது?

டியர் செல்வி, எப்படி இருக்கின்றீர்கள்? வீட்டில் இந்த கரப்பான்பூச்சி தொல்லையை ஒழிக்க போரிக் பவுடரில் (இந்த Boric powder மருந்துக் கடையில் கிடைக்கும். பார்க்க வெள்ளைநிறமாக சோடா மாவு போல் இருக்கும்.)அதில் சிறிது மைதா மற்றும் சர்க்கரையை கலந்து சிறிது தண்ணீரோ அல்லது பாலையோ ஊற்றி கட்டியாக குழைத்து சமையலறையின் எல்லா மூலைமுடுக்குகளில் வைத்து விடுங்கள்.மேலும் பூச்சிகள் நடமாட்டம்முள்ள எல்லா இடங்களிலும் சிறிது சிறிதாக வைத்து விடுங்கள். பூச்சிகள் அதை ஏதோ உணவுப் பொருள் என்று தின்று விட்டு அதன் வலைகளுக்குச் சென்று இறந்து விடும். நீங்கள் வைத்த மாவுப் பொருள் காய்ந்தவுடன் அதை நீக்கி விட்டு மீண்டும் குழைத்து வைக்க வேண்டும். இந்த முறையை வீட்டில் பூச்சிகளின் நடமாட்டம் முற்றிலும் நீங்கும் வரை செய்யுங்கள். நன்றி.

நீங்கள் நலமா? உங்கள் ஆலோசனைக்கு நன்றி. முயற்சி செய்து பார்க்கிறேன்.

அன்புடன்,
செல்வி.

மனோஹரி அவர்கள் சொன்னதுபோல் கரப்பான் பூச்சிக்கு போரிக் ஆசிட் ஒரு நல்ல மருந்து. அது பெரும்பாலும் 30g பாக்கெட்டுகளில் ஃபர்மாசிகளில் கிடைக்கும். அவித்த முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் ( ஒரு பாக்கெட்டுக்கு 2 கரு வீதம் ) எடுத்து 2 ஸ்பூன் சீனியை சேர்த்து நன்கு குழைத்துவிட்டு, மேலும் 2 ஸ்பூன் சீனியை தூவி லேசாக (சீனி கரையாமல்) குழைத்துவிட்டு, சிறு உருண்டைகளாக உருட்டி அடிக்கடி பூச்சி நடமாடும் இடங்களிலும், கபோர்டுகள் உள்ளே, வாஷ்பேஷன் கீழே, ஃபிரிஜ்ஜின் பின்னாலும் கீழேயும் இப்படி போட்டுவைக்கவும். ஒரு மாதத்திற்கு ஒருமுறை அதை மாற்றிவிட்டு மீண்டும் செய்துவைக்கலாம்.
அதல்லாமல் கார்பெட்டுக்கு கீழே ஒட்டும் (இரண்டு பக்கமும் பசையுள்ள) ஸ்கோச் கிடைத்தால் வாங்கி ஒரு அட்டையில் ஒட்டி, மேலே லேசாக சீனி தூவிவிட்டு, அதேபோன்ற இடங்களில் வைத்துவிட்டால் வந்து ஒட்டிக்கொள்ளும்.சற்று அதிகமாக ஒட்டியவுடன் அட்டையை எறிந்துவிட்டு மீண்டும் அதேபோல் செய்யலாம். எதுவாக இருந்தாலும் முழுமையாக பூச்சி ஒழியும் வரை செய்து பாருங்கள்!

மிக்க நன்றி திருமதி.அஸ்மா

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்