37 வது வாரம்

எனக்கு 37வது வாரம். நேற்று இரவுல இருந்து வயிறும் இடுப்பும் அப்பப்போ வலிச்சுட்டே இருக்கு. அதும் குழந்தை நகரும் போது ரொம்ப வலிக்குது. இது நார்மலா? இல்லை பிரசவ வலி இப்படி தான் ஆரம்பிக்குமா? என்னால் உட்கார்ந்து எழுந்திருக்க முடியலை. படுத்தாலும் காலை கட்டிலில் தூக்கி வைக்கக்கூட முடியலை ரொம்ப வலிக்குது அடி வயிற்றில். தும்மல் போட்டால் கூட அடி வயிற்றில் தாங்க முடியாத அளவில் குத்துகிறது. படுத்துட்டு எழுந்தாலும் கஷ்டமாக உள்ளது இதனாலயே நான் நடப்பது தான் அதிகம் ஒரு நாளைக்கு 3மணி நேரத்திற்கு குறையாமல் நடக்கிறேன் தொடர்ந்து அல்ல. 1/2 மணி நேரம் வித்தியாசத்தில். இரவு மட்டும் தொடர்ந்து 1மணி நேரம் நடப்பேன்.இடுப்புக்கு சுடு தண்ணீரும் ஊற்றுகிறேன். நேற்றும் இன்றும் 2நேரம் சுடு தண்ணீர் ஊற்றினேன்.

யாராவது பதில் தாருங்கள் Pls pls

எனக்கும் பதில் கூறுங்கள்.

//பிரசவ வலி இப்படி தான் ஆரம்பிக்குமா?// இருக்கலாம். ஆனால் யோசிக்காதீங்க. கூட யாரும் இல்லையா? ஏற்கனவே மருத்துவமனைக்குச் செல்ல தாயாராக எல்லாம் பாக் பண்ணி வைத்திருப்பீர்கள் இல்லையா? கவலை வேண்டாம். வலி அதிகரித்தால்.. இடைவெளி குறைவாக ஆனால் ஹாஸ்பிட்டல் கிளம்பிப் போய்ருங்க. சந்தோஷமா இருங்க. இப்பவே என் வாழ்த்துக்கள். :-)

‍- இமா க்றிஸ்

கூட யாரும் இல்லை அம்மா. நானும் என் 3வயது பாப்பாவும் தான் உள்ளோம். மாமியார் மாமமனார் கணவர் எல்லாரும் காலை 8மணிக்கே கடைக்கு போயிருவாங்க. ககணவர் மட்டும் அப்பப்போ வருவாங்க. மாமியார் இரவு 10.30க்கு தான் வருவாங்க. அவங்க என் உடல் நிலை பற்றி ஒரு நாள் கூட கேட்டதில்லை அதனால் எனக்கு செய்தாலும் சொல்ல மாட்டேன். அம்மா வீட்டுக்கும் அனுப்ப மாட்டக்காங்க. //மருத்துவமனைக்குச் செல்ல தாயாராக எல்லாம் பாக் பண்ணி வைத்திருப்பீர்கள் இல்லையா? // எல்லாம் 1மாதத்திற்கு முன்பே ரெடி பன்னிட்டேன்மா. சனிக்கிழமை ஸ்கேன் சொல்லிருக்காங்கமா அதன்பின் தான் அம்மா வீட்டிற்கு போகனும். வயிறு ரொம்ப வலிக்குரமாறி இருந்தால் சோடாப்பால் குடிக்க சொன்னாங்க என் பாட்டி குடித்தால் பிரசவ வலியாக இருந்தால் தொடர்ந்து வலி வரும் சூட்டு வலியாக இருந்தால் நின்றிடும்னு சொன்னாங்க. இதை செய்ய பயமாக உள்ளது. இதை செய்யலாமா?

அன்புள்ள‌ திவ்யாவிற்கு சுகப் பிரசவத்திற்கு வாழ்த்துக்கள்.
வலி எடுத்தால் சோம்பு (பெருஞ்சீரகம் ) வறுத்து நீரில் இட்டு கொதிக்க‌
வைத்து அந்த‌ தண்ணீரைக் குடிக்கவும், பிரசவ‌ வலியானால் தொடரும்.
இல்லையானால் நின்று விடும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

அம்மா பதில் தந்தமைக்கு நன்றிமா. நான் தினமும் இரவு பெருஞ்சீரகம் கருப்பட்டி சுக்கு இவையெல்லாம் போட்டு காய்ச்சி குடிக்கிறேன்மா. இது போதுமா? இல்லை வலி வரும்போது மட்டும் பெருஞ்சீரகம் போட்டு குடிக்கனுமா?

அன்புள்ள‌ திவ்யாவிற்கு. பெருஞ்சீரகத் தண்ணீர் தினமும் குடிப்பது மிகவும்
நல்லது. கால்களில் நீர் கோர்க்காது. சோம்புத் தண்ணீர் குடிக்கும் வழக்கம்
இல்லாமல் இருந்தால் தான் வலி வரும் போது குடிக்கவேண்டும். மற்றபடி
தினமும் குடிக்கும் உன் பழக்கம் மிகவும் நல்லது, சுக்கு வாயுவை நீக்கும்,
கருப்பட்டி குளிர்ச்சி. கருப்பட்டி உடம்புக்கு மிகவும் நல்லது மட்டுமல்ல‌
விஷங்களை முறிக்கும் ஆற்றல் உள்ளது. மனதைத் தைரியமாக
வைத்துக் கொள்வது மிகவும் முக்கிய்ம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

அம்மா உடல் அசதியாக இருக்கும் போது தூங்கலாமா? தூங்கினால் குழந்தை எடை கூடுமோன்னு பயமா இருக்கு. வலது இடது பக்கமாக படுக்கும் போது 10நிமிடத்திற்கு மேல் படுக்க முடியல. வயிறு இழுத்து பிடித்துக்கொண்டு குறுக்கோடு சேர்த்து வலிக்கிறது.கொஞ்சம் காலை நேராக நீட்டினால் கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும்.ஆனால் மீண்டும் வலிக்கும். அமர்ந்தும் இருக்க முடியல. இதனாலயே நடந்துட்டே தான் இருக்கிறேன். அசதில தூக்கமா வருது என்ன பன்றது. தூங்கவும் பயமாக உள்ளது.

தூக்கம் வந்தால் தூக்கத்தான் வேணும். அது சும்மா எல்லாம் வராது. //தூங்கினால் குழந்தை எடை கூடுமோன்னு// கொஞ்ச நேரம் தூங்குறதால எதுவும் ஆகப் போறது இல்லை. நீங்க நிறைய நடக்கிறதா சொல்றீங்க. யோசிக்காதீங்க.

‍- இமா க்றிஸ்

பதில் தந்ததற்கு நன்றி அம்மா.

மேலும் சில பதிவுகள்