குடும்ப சண்டை

நானும் என் மாமா பையனும் விரும்பியே கல்யாணம் செய்து கொண்டோம். கணவர் எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாத நல்லவர். செலவு பண்ண மாட்டார். மாமா சரியான டென்ஷன் பார்ட்டி எதற்கெடுத்தாலும் மாமியை திட்டுவார். மாமிக்கு காது சரியாக கேட்காது.கல்யாணம் ஆனவுடன் தான் எல்லாமே என் மாமி மூலம் கற்றுக்கொண்டேன். எப்போதாவது எங்கள் இருவருக்கும் சண்டை வந்துவிடும்.டெலிவரிக்கு பின் தான் பிரச்சினை. நான் என் குழந்தை க்கு பால் கொடுக்கும் போது மாமி பிள்ளை யை .பிடுங்க ,நான் பால் குடுத்து தருகிறேன் என்று சொல் ல ,உன் அம்மா தானே பிள்ளையை குடுக்க கூடாதுனு சொன்னது என சொல்ல, பெரிய சண்டை யே வந்து விட்டது. அதன் பின் அவர் பிள்ளையை தூக்குவதே இல்லை.பின்பு அம்மா வீட்டிற்கு வந்து விட்டேன். என் சித்தி (மாமிக்கு நாத்தனார் )தாத்தா வீட்டிற்கு லீவுக்காக வந்த போது, மாமிக்கும், சித்திக்கும் சண்டை வந்துள்ளது. அதில் அடிதடி ஏற்பட்டு மாமி வீட்டை விட்டு வெளியேறி விட்டார்கள் ். நார்த்தனாரும்,மாமா வும்,வந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் தான் வீட்டிற்கு வருவேன் என 3 மாதம் வரை வரவே இல்லை. மாமியின் தம்பி, போலிஸில் கம்பிளெய்ண்ட் குடுத்து ம் விட்டார்கள். அக்காவை அடிச்சவங்கள நான் அடித்து தீருவேன் என்று சொல் லி மாமியை தன் வீட்டில் வைத்து உள்ளார். நான் என் அம்மா மாமியிடம் போனில் பேச முயற்சி செய்து ம் அவர் பேசவே இல்லை.மாமா, ஊரில் சிலர் என போய் கூப்பிட்டும் வரவே இல்லை. இதனால் எங்கள் குடும்பம் பிரிந்து ஆளுக்கொரு பக்கம் உள்ளோம்.ஊரில் எல்லாம் என் குழந்தை பிறந்த ராசியால் தான் இது போல குடும்பமே பிரிஞ்சு விட்டதாக அனைவரும் பலி போடுகிறார்கள் . இது எனக்கு மிகவும் கஷ்டமா இருக்கு. எப்படி மறுபடியும் எல்லாரையும் ஒன்று சேர்ப்பது. பேர பிள்ளையை கூட பார்க்க வரல.தீர்வு தாருங்கள் தோழிகளே.

நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு, எலும்பிலா நாக்கு இருபுறமும் புரளும்
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்,
நீ முதலில் கம்பராமாயணத்தில் உள்ள‌ சுந்தர‌ காண்டம் பகுதியைப் படி.
தினந்தோறும் ஒரு 50 பாடல்களாவது படி, வாலில் மணி கட்டியுள்ள‌
ஆஞ்சனேயர் படம் வாங்கி (அதோடு பூசை முறையும் கிடைக்கும்) அதைப்
பூசனை செய்து வர‌ எல்லா சிக்கல்களும் விரைவில் தீரும். குழந்தைக்குப்
பால் தரும்போது தேவையில்லாத‌ சிந்தனைகளையும் எண்ணங்களையும்
கட்டாயம் தவிர்க்க‌ வேண்டும், தேவையில்லாத அடுத்தவர் பேச்சுக்களை
அசிங்கமான‌ குப்பையைத் தூக்கி வீசி அடிப்பது போலத் தூக்கி வீசு.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

ரொம்ப நன்றி அம்மா . தங்களது பதில் எனக்கு ஆறுதலாக உள்ளது.இதோ இப்போதே சுந்தர காண்டம் படிக்க போகிறேன்.

//ஊரில் எல்லாம் என் குழந்தை பிறந்த ராசியால் தான் இது போல குடும்பமே பிரிஞ்சு விட்டதாக அனைவரும் பலி போடுகிறார்கள்// அனைவருமா அல்லது சில உறவுகளா? ஏன் கேட்கிறேன் என்றால், உறவுக்கு வெளியே உள்ளவர்கள் பழி போடுகிற அளவு சிந்திக்க மாட்டார்கள். அவர்களுக்கு அவசியமும் இராது. வேண்டுமானால் வாயை மெல்ல ஒரு பேச்சு என்று பேசலாம். நீங்கள் இதைப் பெரிதாக எடுக்க வேண்டாமே. அமைதியாக இருங்கள். பூங்கோதை சொன்னபடி செய்தால் உங்களுக்கு மன அமைதி நிச்சயம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

//இது எனக்கு மிகவும் கஷ்டமா இருக்கு.// இதில் உண்மை இல்லை. நீங்கள் யோசிக்க வேண்டாம்.

//எப்படி மறுபடியும் எல்லாரையும் ஒன்று சேர்ப்பது.// இது உங்களால் ஆகாத விடயம். சண்டை போட்டவர்கள், அவரவரே சமாதானமாகிப் போக வேண்டும். உங்கள் கையில் இல்லை அது. கவலைப்பட வேண்டாம்.

//பேர பிள்ளையை கூட பார்க்க வரல.தீர்வு தாருங்கள் தோழிகளே.// ஏன் நீங்கள் குழந்தையை எடுத்துக் கொண்டு ஒரு தடவை உங்கள் மாமியாரைப் போய்ப் பார்த்து வரக் கூடாது? போய்ப் பேசுங்க. நீங்கள் தப்பு செய்யாமலிருந்தாலும் கூட சமாதானம் ஆக வேண்டும் என்பதற்காக தப்பு உங்கள் மேல் என்பது போல பேசலாம். முயற்சி செய்து பாருங்க.

மற்றவர்கள் முட்டிக் கொள்வதை நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். கால ஓட்டத்தில் எல்லாம் சரியாகிவிடும்.

‍- இமா க்றிஸ்

சரி இம்மா உறவுகள் தான் இது போல் சொல்லி வேதனை உண்டாக்கினார்கள. மாமியை பார்க்க 5 மணி நேரம் பேருந்தில் செல்ல வேண்டும். குழந்தை உடன் அவ்வளவு நேரம் பயணிக்க வேண்டும் என்று யோசிக்கிரேன். இல்லையென்ரால் இப்பொழுது கிளம்பி விடுவேன். எல்லாம் கடவுளின் கையில் தான் உள்ளது..

//சரி இம்மா// :-) பிழை இம்மா. இமா தான் சரி. :-)

//உறவுகள் தான் இது போல் சொல்லி வேதனை உண்டாக்கினார்கள.// ஏதோ யோசிக்காம சொல்றாங்க, விடுங்க. நாளை என்பது யார்யாருக்கு எதை வைத்திருக்கிறது என்பது யாருக்குத் தெரியும்!

//மாமியை பார்க்க 5 மணி நேரம் பேருந்தில் செல்ல வேண்டும். குழந்தை உடன் அவ்வளவு நேரம் பயணிக்க வேண்டும் என்று யோசிக்கிரேன். இல்லையென்ரால் இப்பொழுது கிளம்பி விடுவேன். எல்லாம் கடவுளின் கையில் தான் உள்ளது.// இல்லை, உங்கள் கையில் உள்ளது. மாமியோடு சமாதானம் ஆக வேண்டும் என்னும் எண்ணம் தீவிரமாக இருந்தால், மனம் சிரமத்தைப் பார்க்காமல் போகச் சொல்லும்.

நீங்கள் பின்போடப் பின்போட இடைவெளி அதிகமாகும். சின்னதாக இருக்கும் போது சரிசெய்வது சுலபம். நாளானால் சிரமம். யோசியுங்கள்.

‍- இமா க்றிஸ்

அன்பான‌ பெண்ணே கார்த்திகா
உன் மாமிக்கு நாத்தனார் உன் சித்தி/ இந்த‌ மாமியின் பிள்ளை தான் உன்
கணவரா? அப்படியானால் உன் மாமாவின் தங்கை உன் சித்தி. ஆக‌ நடந்த‌ சண்டையில் அண்ணன் தங்கையான‌ உன் மாமாவும் உன் சித்தியும்
உன் மாமியின் காலில் விழவேண்டும்.(கணவனையும் நாத்தியையும் தன் காலில் விழவேண்டும் என்கிறார் உன் மாமி) மாமியின் தம்பி தன் அக்காவின் நாத்தனார் மேல் புகார் தந்துள்ளார் போலீசில். இதில் முக்கியமான் செய்தி சண்டையில் யார் யாரை அடித்தார்கள் தெரியவில்லை. நான் வம்பளப்பதற்காகக் கேட்கவில்லை. அண்ணியும்
நாத்தனாரும் இன்று அடித்துக் கொள்வார்கள். நாளை ஏதோ ஒரு நிலையில் அண்ணா அண்ணி நங்கையா என்று கூடிக் கொள்வது மிக‌ இயல்பானது.
ஒரு உப்பு சப்பு இல்லாத‌ விஷயத்தினை ஊதி ஊதிப் பெருசாக்கினதோடு
போலீசில் புகார் (பெண்களின் மேலும் உள்ளதா) கொடுத்த‌ பின்னால்
என்னதான் சமாதானம் பேசினாலும் உங்கள் வீட்டுப் பெண் அது மாமியோ சித்தியோ யாராக‌ இருந்தாலும் அசிங்கமும் அவமானமும் உங்கள் குடும்பத்திற்கு என்பதை சுத்தமாக‌ மறந்து போயுள்ளீர்கள்.
உங்கள் மாமி, சித்தி இருவருக்கும் அனேகமாக‌ வயது 45 க்கு மேல் இருக்கும் அல்லவா, இந்தவயதில் இதெல்லாம் நினைக்கவே அருவெறுப்பாக‌ இல்லையா? என்ன‌ சமாதானம் ஆனாலும் பின்னால்
தங்கள் தங்கள் குடும்பத்தோடு சேர்ந்து வாழமுடியுமா? யோசித்துப்பார்,
பகீர் என்கிறதா? இதன் தாக்கம் யார் யாரைப் பாதிக்கும்?
சரி போனதைப் புளியிட்டு அழைக்க‌ முடியாது. ஒன்று செய்.
இன்று இரவு அல்லது நாளைக் காலையில் நீ, உன் அம்மா, சித்தி, பாப்பா
உன் கணவர் அனைவரும் ஒரு காரைப் போக‌ வரப் பேசிக் கொண்டு உன்
மாமி ஊருக்குப் போய் அவர்கள் என்ன‌ பேசினாலும் கோபப்படாமல்
சம்சாரம் அது மின்சாரத்தில் ஆச்சி மனோரமா செய்தது போலக் குழந்தையை மாமி காலில் படுக்கவைத்து நைசாகப் பேசிப் பாருங்கள்.
தகராறு செய்தால் உங்களைக்கூப்பிடத்தான் உங்கள் பேரன் வந்துள்ளான்
என்று சொல்லிவிட்டு உங்கள் பையனிடம் அவன் பேரைச் சொல்லி அழைத்து உன் பாட்டியைக் கூட்டிக் கொண்டு வா, இல்லையானால்
நீ இங்கே உன் பாட்டியுடனேயே இரு, நாங்கள் போகிறோம் என்று பாவலா
காட்டி வெளியே வந்து விடுங்கள். பிறகு ????????
வெளியே வருவதாகத் தெரிந்தால் மனம் மாறுவதற்குள் மாமியைத்
தள்ளிக் கொண்டு வருவதற்கும், இடையில் யாரும் குறுக்கிட்டு மாமி
மனதை மாற்றாமல் இருப்பதற்கும் தான் கார்.
ஆசிரியையான‌ உன்க்கு இதற்கு மேலே சொல்ல‌ வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன். சமயோசிதமாக‌ நடந்து காரியத்தை நிறைவேற்று
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

எனக்கு இவ்வாறான பிரச்சனைகள் எவ்வளவு விளக்கினாலும் புரியாது.ஆனாலும் சில தடவைகள் வாசித்தேன்.//இது போல குடும்பமே பிரிஞ்சு விட்டதாக அனைவரும் பலி போடுகிறார்கள் // இந்த எழுத்து பிழை எனக்கு ரெம்ப உறுத்தலா இருக்கு. பலி என்றால் அர்த்தம் வேறு.பழி என்பதே சரி .தலைப்பு ஆகையால் பாற்றிக்கொள்ளூங்கள்.இன்னும் நிறைய பேர் இதை இப்படி படிப்பார்கள்.

தவிர இதில் உங்கள் வாழ்க்கை பாதிக்க பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.உங்கள் வாழ்க்கை உங்களுக்கு முக்கியம் எனும் பட்சத்தில் உங்கள் மாமியார் வயதிலும் மூத்தவர் சட்டென்று கோவம் கொள்பவர் என்பதால் நீங்களே விட்டுக்கொடுப்பது பெருந்தன்மையும் பிரச்சனை சுமூகமாக முடியவும் உதவும்.

என்னுடைய முக்கியமான ஆலோசனை(யாரும் சிரிக்க வேண்டாம்)உங்கள் மாமியார் காலில் விழுந்தால் தன்னை மதிப்பதாகவும் .எல்லாம் சரியாகிவிடும் என்பதில் ஆர்வம் கொண்டுள்ளவராக தெரிகிறார் .

அவர் யாரை சொன்னாலும் நீங்கள் அதை சாதகமாக்கி கொள்ளுங்கள்.போய் உங்களில் பிழை போலவே நடித்து அந்த காலை தொட்டு வணங்கி விடுங்கள்.அம்மா மாதிரி நினைத்துக்கொள்ளூங்கள்.
உங்கள் இடத்தில் நான் இருந்தால் மனம் உவந்து இதை நான் செய்வேன்.

காரணம் நான் ரோஷம் இல்லாதவள் என்பதல்ல.என் வாழ்க்கையை இனிமையாக்க வளைந்து கொடுக்க தெரிந்தவர்கள் என்று பொருள்

இதில் நிறைய நின்மதி கிடைக்கும் .சிந்தியுங்கள்.

இதனாலும் எப்போதுமே உங்களுக்கு பெருமையும் நன்மையுமே வந்தடையும்.

உங்கள் வாழ்க்கைக்கு சம்மந்தபடாதவர்கள் வம்பிழுத்தால் தூக்கி கடாசி விட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும் .காரணம் இந்த உலகில் இவர்களை விட நன்மக்கள் நிறைய இருக்கிறார்கள்.

நம் வாழ்க்கையோடு இணைந்தவர்கள் நெருக்கமானவர்கள் செய்யும் இடயூறுகளுக்கு அன்பு கலந்து அடிபணிந்து போவதே சிறந்தது.காரணம் ஒரு 100 மாமியோ 500 சித்தப்பாக்களோ 1000 சகோதரிகளோ கிடையாது நாம் வெறுத்து விலகி செல்ல. உறவு என்பது அளக்கப்பட்டது.அனுசரித்து போக வேண்டியதுதான்.

அன்பர்களுக்கு வணக்கம் நான் மிகுந்த மன வேதனையில் உள்ளேன் எனக்கு கல்யாணம் ஆகி 11 மாதங்கல் ஆகிறது இந்நிலையில் எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது அடிப்பது கோப படுவதுமாக உள்ளார் இந்த முறை சண்டை அதிகமாகி போலீஸ் வரை சென்று விட்டது இதன் காரணமாக அவர் எனக்கு விவாகரத்து கொடுக்க முடிவு செய்து விட்டார் ஆனால் எனக்கு அவருடன் வாழ விருப்ப படுகிறேன் இப்போது கடவுளை மட்டுமே அதிகமாக நம்புகிறேன் அவர் என்னை புரிந்து கொண்டு என்னை அவருடன் அழைத்து செல்ல நான் என்ன விருதம் பரிகாரம் செய்ய வேண்டும் தயவு செய்து கூறுங்கல் தோழிகலே

அம்முவுக்கு இறைவன் அருளால் நல்லதே நடக்க‌ வேண்டுகிறோம்.
நான்கு ஆண்டுகளாய் அறுசுவை உறுப்பினர். உங்களைப் பற்றிய‌ விவரம்?
உங்கள் எண்ணங்களில் தெளிவில்லை என்பதும் சரியான‌ வழிகாட்டியும்
உங்களுக்கு இல்லை, பின் விளைவுகள் பற்றிச் சற்றும் சிந்தியாமல் செயல்
பட்டிருக்கிறீர்கள் என்பது நன்கு தெரிகிறது. பெண் புத்தி பின் புத்தி .... இதன் பொருள் ஒருசெயலின் விளைவு பின்னால் என்னென்ன‌ விளைவுகளை கொண்டுவரும்
என்று சிந்தித்துச் செயல்படுவதே ஆகும்.
நீங்கள் ராமரை வணங்கும் வழக்கம் உடையவரானால் வாலில் மணி
கட்டிய‌ ஆஞ்சனேயர் படத்தை வாங்கி அதனோடு கிடைக்கும் வழிபாட்டு
முறைக்கான‌ புத்தகத்தை வாங்கி அதில் கூறியுள்ள‌ முறைப் படி வழிபாடு
செய்யுங்கள். வாலில் பொட்டு வைத்து வழிபடும் முறை.
இல்லையானால் ராமர் பட்டபிஷேகப் படத்தை வைத்து சாதாரணமாகப்
பூஜிப்பது போல் பூஜை செய்து ராமாயணத்தில் உள்ள‌ சுந்தர‌ காண்டத்தை
தினந்தோறும் படியுங்கள், கம்ப‌ ராமாயணமானால் குறைந்தது தினமும்
50 பாடல்களாவது படித்தால் மிகவும் நல்லது, தினந்தோறும் பால் பழம்
வைத்து வழிபட்டு அந்தப் பாலையும் பழத்தையும் உண்ணுங்கள்.
விடாமுயற்சியும் தைரியமும் நல்ல‌ பதில் கிடைக்கும் வரை வேண்டும்.
நாவடக்கமும் மன அடக்கமும் வேண்டும், வழிபாடு தொடங்கும் முன்
ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்துத் தொடங்குவது
நிச்சயமாக‌ வெற்றியைத் தரும், பின்னர் முடிந்தால் காரிய‌ சித்தியாகும்
வரை வாராவாரம் வியாழன் அன்று வெற்றிலை மாலை (கோவிலில் உள்ள‌
ஆஞ்சனேயருக்கு) சாற்றி முடிந்தால் 108 சுற்று சுற்றி வரவும். சுந்தரகாண்டம் முடிகின்ற‌ அன்று உளுந்துவடை கோவிலில் செய்வது போல் குட்டிகுட்டியாக‌ 108 வடை அல்லது அதில் பாதிஅளவு வடை செய்து
வாழை நாரில் கோர்த்து ஆஞ்சனேயருக்கு சாற்றி பூசையை முடியுங்கள்.
உங்கள் காரியம் நல்லபடியாக‌ நிறைவேறும் வரை தொடர்ந்து செய்யவும்.
இன்றே நல்ல‌ நாள் விரைவில் தொடங்குவது நல்லது.
இறைவன் அருளால் உங்கள் கணவர் மனம் மாறி இருவரும் சேர்ந்து
வாழ்ந்து நல்ல‌ மழலைச் செல்வம் பெற்று எல்லா வளமும் பெற்று வாழ‌
இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

அம்மா நீங்கள் எழுதிய பதில் எனக்கு மிக பெரிய ஆறுதலாக உள்ளது. மிக்க நன்றி ராமர் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா

மேலும் சில பதிவுகள்