டைபாய்டு காய்ச்சல் குணமாக

எனது கணவருக்கு டைபாய்டு காய்ச்சல்.மருத்துவரிடம் சென்று வைத்தியம் பார்த்தோம்.2நாள் நன்றாக இருந்தார்.ஆனால் இப்போது காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது.ஏதேனும் வீட்டு வைத்தியம் தெரிந்தால் கூறவும்.

//மருத்துவரிடம் சென்று வைத்தியம் பார்த்தோம்.2நாள் நன்றாக இருந்தார்.// மாத்திரை எத்தனை நாளக்குக் கொடுத்தாங்க? இரண்டு நாட்களுக்கு இராதே! மீதியைத் தொடர்ந்து எடுக்கிறாங்களா? 10 நாட்கள் வரை ஆகலாம் சுகமாக. சிலருக்கு மீண்டும் இடைக்கிடை காய்ச்சல் இருப்பது உண்டு.

//வீட்டு வைத்தியம்// எனக்குத் தெரியாது. ஆனால் டைஃபாய்ட் ஈசியாக எடுக்கும் நோய் அல்ல. கட்டாயம் ஆன்டிபயோடிக் எடுக்க வேண்டும். கவனமாக இருங்க.

‍- இமா க்றிஸ்

5நாட்கள் கொடுத்தனர்.இப்போதும் காய்ச்சல் வந்து கொண்டு தான் உள்ளது.

டைபாய்டு (முறைசுரம்) 21 நாள்களுக்கு இருக்கும். மருத்துவர் அறிவுரைப்படி மருந்துகளை சொன்ன‌ நாள்வரை கட்டாயம் உண்ணவேண்டும்.
உணவு மருத்துவர் அறிவுரைப்படி. புழுங்கல் அரிசி நொய்க்கஞ்சியை
மிக‌ நன்றாகக் குழைய‌ வேகவைத்து வடிகட்டித் தான் குடிக்க‌ வேண்டும்.
தொட்டுக் கொள்ள‌ உப்பிட்ட‌ நாரத்தங்காய் தான். இது தவிர‌ வேறு ஒன்றும்
இப்போது சாப்பிட‌ முடியாது, வாந்தி வரும். குடலில் ஒட்டும் படியாக‌
தோல் எடுக்காத‌ தக்காளியை டாக்டர் சொன்ன‌ பின்னால் தான் சாப்பிட‌
வேண்டும். மலசல்ம் தடையின்றி போகவேண்டும். சாத்துக்குடி மருத்துவரைக் கேட்டுத் தரவும். கொழுப்பு உணவுகளை ஆறு மாதத்திற்கு
தொடவே கூடாது. காய்கறி சூப் அடிக் கடி தரலாம். சூடே இருக்கக் கூடாது. சூடாகச் சாப்பிட்டால் வயிற்றை வலிக்கும் (குடலில் வலி).எனக்குத்தெரிந்து பால் தயிர் நெய் தவிர்க்க‌ வேண்டும். தலையில்
சீப்பு வைத்து வாரக் கூடாது. தலைமயிர் நிறையக் கொட்டும்
மிகவும் கவனமாக‌ இருக்கவேண்டும், இல்லாவிட்டால் தொடர்ந்து
மஞ்சட் காமாலை வருவதற்கு 70 % வாய்ப்பு உள்ளது.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நன்றி பூங்கோதைகண்ணம்மாள் mam.தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும். 3 வாரங்கள் காய்ச்சல் இருந்தது.
இப்பொழுது எனது கணவர் நலமாக உள்ளார்.

அன்புள்ள‌ பிச்சையம்மாளுக்கு உங்கள் கணவருக்கு உடம்பு சுரத்தில் இருந்து தேறியது குறித்து மிகவும் மகிழ்ச்சி. உணவு முறை குறித்து டாக்டர்
என்ன‌ சொன்னார்,
இடியாப்பம், இட்லி தேங்காய்ப் பாலுடன், சர்க்கரையுடன், லேசான‌ கஞ்சி வகைகள் பால் அல்லது வெண்ணெய் எடுத்த‌ மோருடன், காய்கறி கீரை சூப் வகைகள் வறுத்த‌ மிளகுப் பொடி,அல்லது சீரகப் பொடியுடன்
மிளகாய் வேண்டாம் அதிலும் மிளகாய் விதை இப்போது வேண்டவே வேண்டாம்.நோ பச்சைமிளகாய். சூப்பை வெறும் தண்ணீர் போல‌ வடிகட்டிக் கொடுக்கவும். காய்கறிகளும் கீரையும் வயிற்றில் போய் விழும்
போது நெருப்புப் புண்ணில் அடிபட்டது போல‌ வ்யிற்றில் வலி எடுக்கும்
காலில் சாதா செருப்பு அணிந்து நடப்பது நல்லது. பூட்ஸ் போட்டால்
வேகமாகவும் அழுத்தமாகவும் நடக்கும்போது குதிங்காலில் ஏற்படும்
அழுத்தம் காரணமாக‌ உடல் முழுவதும் வலி ஏற்படும், அவ்வப்போது
மருத்துவரைக் கலந்து ஆலோசித்து உணவு முறைகளில் வேண்டுமான‌
மாற்றங்களை செய்யவும். குளிக்கும் போது சிறிது வேப்பிலையும் நொச்சி
இலைகளையும் வெந்நீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த‌ தண்ணீரில்
குளித்தால் சளி பிடிக்காது உடம்பு சொடக்கு எடுத்தது போல் நன்றாக‌
இருக்கும், உடல் வலி நீங்கும். குறைந்தது ஆறு மாதங்கள் வரை இருவரும் இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது உங்களின் கணவரின்
உடல் தேற‌ மிகவும் உதவும் என்பது என் கருத்து.சிறிது கவனக்குறைவாக‌
இருந்தாலும் டைபாய்டு காய்ச்சல் மீண்டும் பாராடைபாய்டு காய்ச்சலாக‌
வந்து தாக்கும் என்பதை மறக்கக் கூடாது. கவனம் தேவை.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்