அன்பு வேண்டுகோள்.

அறுசுவை நேயராகிய நான், மற்ற அன்பு நேயர்களுக்கு விடுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள். அறுசுவையில் குறிப்புகளை வழங்கி வரும் வல்லுணர்களுக்கு நூறு குறிப்பை வழங்கியவுடன், அறுசுவை இணயத்தளம் முகப்பில் அவர்களை பாராட்டியும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர். அதேப் போல் நேயர்களிடமும் வாழ்த்துச் செய்திகள் அவர்களுக்கு கிடைக்க தவறுவதில்லை.
ஆனால் இந்த முறை இரண்டு வல்லுணர்கள் ஒரே சமயத்தில் சதம் அடித்து சாதனைப் புரிந்தார்கள். அவர்களை வாழ்த்தும் ஒரு சில நேயர்கள் இரண்டு வல்லுணர்களில் ஒருவரை மட்டும் வாழ்த்தி விட்டு மற்றவறை விட்டு விடுகின்றனர். அதை பார்க்கும் பொழுது மனது சஞ்சலமடைகின்றது. வாழ்த்து என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று தான். ஒரே சமயத்தில் பல பேர்களை வாழ்த்தும் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது, எல்லோரையுமே வாழ்த்துவது தான் முறையான நாகரிகம். பிறரை வாழ்த்துவதும், போற்றுவதும் நமது தமிழ் பண்பாட்டோடு பிண்ணி பினைத்தது.

அன்பு நேயர்களே, நான் யாருடைய மனத்தையும் புண்படுத்த இதை சுட்டிக் காட்ட வில்லை. இதை சொன்னது உங்கள் தோழி, அல்லது சகோதரி, என்று நினைத்து எனது வேண்டுகோளை ஏற்க்கும் படி வேண்டிக் கொள்கின்றேன். இன்னும் கொஞ்ச நாட்களில் நானும் இன்னுமொரு நூறை தொடுவேன் அப்பொழுது என்னையும் வாழ்த்த தவற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். காரணம் உங்களின் பாராட்டு தான் குறிப்புகள் தருபவர்களை ஊக்குவிக்கும் டானிக் ஆகவே வஞ்சனையில்லாமல் அள்ளி வழங்குங்கள் எல்லோருக்கும், உங்கள் வாழ்த்துக்களை என்று கூறி முடிக்கின்றேன்.நன்றி.

மேலும் சில பதிவுகள்