நான் கடந்த மாதம் கருமுட்டை வளர மருந்து எடுத்துக்கொண்டேன்.... நல்ல வளர்ச்சி அடைந்து உள்ளது என்று மருத்துவர் கூறினார்....கருமுட்டை வெளிவர ஊசி போட பட்டது....மருத்துவரின் அறிவுரை படி சேர்ந்து இருந்தோம்...ஆனால் கருதங்கவில்லை....மாதவிடாய் சரியாக வரவில்லை அதனால் வேறு மருத்துவரிடம் சென்றோம்....அவர் எங்கள் இருவருக்கும் அனைத்து டெஸ்டும் எடுத்தார்...ரிப்போட் நார்மல் கர்பபை ஸ்கேன் செய்யும் போது சரியாக மாதவிலக்கு சரியாக வரதனால அந்த கசடு கர்பபைல இருக்கதா டாக்டர் சொன்னாங்க....இந்த மாசம் நல்லா பீரியட் ஆகுரக்கு மாத்திரை தந்தருக்காங்க....இப்போ மறுபடியும் இதேமாதிரி கரமுட்டை வளர மாத்திரை சாப்டா இதே பிரட்சனை வருமா சொல்லுங்க தோழிகளே ...ப்ளீஸ்.....
hai frnds plz help
Yaravathu pathil sollunga frnds
தேன் மொழி
யோசிக்கப்படாது. பிரச்சினை எதுவும் வராது என்று நம்புங்க.
- இமா க்றிஸ்
எனக்கு பதில் சொல்ல யாருமே இல்லையா தோழிகளே
உதவுங்கள் தோழிகளே ப்ளீஸ்
confident honey
Neenga treatments pathi romba stressla irukinganu nenakiren.confidenta irunga.neenga tablet yeduthukradhoda nalla healthy a sapdunga.murunga poo sapdunga adhu uterusku romba nalladhu.karuvepilai neraya sapudunga adhu karuvai kaakum adhanaladhan aduku andha name ok.plz don't fear about it.
Neeyum vaalu aduthavanaiyum vala vidu
இல்லை ஆனால் இருக்கிறேன்
:-) //இப்போ மறுபடியும் இதேமாதிரி கரமுட்டை வளர மாத்திரை சாப்டா இதே பிரட்சனை வருமா// முன்பும், பிரச்சினை நீங்கள் சாப்பிட்ட மாத்திரையால் வரவில்லை.
இப்போ நல்லபடி ப்ளீடீங் ஆவதற்காக மாத்திரை கொடுத்ததாகச் சொல்கிறீர்கள். அப்படியானால் இனி கருப்பை நன்றாக சுத்தமாகும்.
//மறுபடியும் இதேமாதிரி கரமுட்டை வளர மாத்திரை சாப்டா இதே பிரட்சனை வருமா// வராது என்று நம்புகிறேன். அந்த மாத்திரையின் தொழிற்பாடு வேறு; அதன் தொழில் ஏற்கனவே இல்லாதிருந்த பிரச்சினை ஒன்றை, உருவாக்குவது அல்ல.
நீங்கள் கேள்வியில், 'ஆரோக்கியப் பிரச்சினை' என்று பெரிதாக எதையும் குறிப்பிடவில்லை. நீங்கள் 'கருப்பையில் கசடு' என்று குறிப்பிட்ட விடயம்- அது மாதவிலக்காகும் பெண்கள் யாருக்குமே சாதாரணமாக வரக் கூடியது தான்.
உங்களைப் பரிசோதித்து மருத்துவம் கொடுக்கும் டாக்டரிடம் கேட்க வேண்டிய கேள்வியை இங்கே வைத்தீர்கள். இங்கே பதில் சொல்ல டாக்டர்கள் யாருமே முன்வருவது இல்லை சகோதரி. நீங்கள் உங்கள் டாக்டரை நம்ப வேண்டும். அல்லாவிட்டால் மாற்ற வேண்டும்.
- இமா க்றிஸ்
இமா அக்கா
என்னை சுத்தி இருக்கவங்க யாருமே எனக்கு உறுதுனையா இல்லை.....எனக்கும் அவருக்கும் எந்த பிராப்ளமும் இல்லை ஆனாலும் இப்படி ஒண்ணுக்கு மேல ஒரு பிரட்சனை வந்துடே இருக்க....கருதரிக்கவே முடியல என்க்கு அவளோ வேதனையா இருக்கு.....
indhuja
Thanks pa....kandipa follow pannren...neenga entha treatment yeduthengala....
தேன்மொழி
//என்னை சுத்தி இருக்கவங்க யாருமே எனக்கு உறுதுனையா இல்லை// எதிர்பார்க்காதீங்க. தனக்குத் தானே துணை என்பது தான் நிலைக்கும். துணை வரும் நட்பு / உறவு, தன் சொந்தக் காரியத்துக்காக நேரம் செலவளிக்க நேரும் போது... அவர் உங்களை விலக்குவதாகத் தோன்றும். பாவம் அவங்க.
//இப்படி ஒண்ணுக்கு மேல ஒரு பிரட்சனை வந்துடே இருக்க.// கண்ணா... மனிதரில் யாருமே பிரச்சினைகள் இல்லாதவர் இல்லை. காக்கா தலைக்கு மேல பறந்தா பரவாயில்லை; கூடு கட்ட விட்டா.... சிரமம். கவலைப்படுவதால் எதையும் சரிசெய்ய இயலாது. நிலமை இருப்பதை விட மோசமாகிப் போகும்.
//கருதரிக்கவே முடியல என்க்கு அவளோ வேதனையா இருக்கு.// இதை மாற்றிப் போட்டுப் பாருங்க. நீங்க எப்பவும் எதைப் பற்றியாவது வேதனைப் பட்டுட்டே இருக்கிறதால தான் கருத்தரிக்கத் தாமதம் ஆகுதோ என்னவோ! இவை இரண்டும் ஒன்றில் ஒன்றி தங்கி வளரும் பிரச்சினைகள்.
- இமா க்றிஸ்
கவலை வேண்டாம் தோழி
கவலை வேண்டாம் தோழி அஇம்முறையயை பயன்படுத்துங்கள்
நீங்கள் ஜாப்பானிய நீர் சிகிச்சை பயன்படுத்திய பின் .
1.நவதானிய கூழ் செய்து சாப்பிடவும்
2.இரவு பாதம் பிஸ்தா முந்திரி மற்றும் உலர் திராட்சை பாலில் கலந்து இருவரும் சாப்பிடுங்கள்.பின் 8 நாட்கள் கழித்து உடலுவில் ஈடுபடுங்கள். நற் செய்தி கிடைக்கும்.
காரணம்
1.ஜாப்பான் நீர் சிகிச்சை மூலம் நச்சு தன்மை வெளியேற்றப்படுகிறது
2.கரு உண்டாக காரணமான நவதானியம் மற்றும் பாதம்களில் வைட்டமின்C போலிக் அமிலம் மற்றும் ஜீங்க் ஆகியவை அதிகம் உள்ளது ஆகவே பயண்படுத்தி தாய்மை அடையுங்கள். இம்முறையயை பயன்படுத்தி எனது தோழிகள் தாய்மை அடைந்துள்ளனர்
ஏதேனும் சந்தேகத்திற்கு உங்கள் தோழன் mani 9500804607
இமா அக்கா
நீங்க சொல்லுரதும் உண்மை தான் அக்கா....இப்போது கொஞ்சம் தெளிவு கிடைத்துள்ளது.....நன்றி.....