உடல்உறவில் சந்தேகம்

எனக்கு சிசரியன் ஆகி 3 மாதம் ஆகிறது இன்னும் ப்ரியட் ஆகவில்லை.என் கணவர் ஆர்மியில் பணிப்புரிகிரார். இப்பொழுது விடுமுறையில் வந்திருக்கிரார். நாங்கள் இருவரும் இல்லற வாழ்வில் ஈடுபடலாம.. ஒரு நாள் இருவரும் சேர்ந்து இருந்தோம் அதில் அவர் இறுதியில் விந்து வரும் போது எடுத்து வெளியே விட்டுடார். ஆனாலும் எனக்கு ரொம்ப பயமா இருக்கு திரும்பவும் விறைவாக குழந்தை உருவாகி விடுமோ என்று. அப்பொழுது நாங்கள் கருத்தடை எதுவும் பயன் படுத்தவில்லை. Pls கொஞ்சம் தப்பா நினனக்கமால் பதில்கூறவும்.

//சிசரியன்// இதைச் சொன்ன காரணம் புரியவில்லையே!

//3 மாதம் ஆகிறது இன்னும் ப்ரியட் ஆகவில்லை.// பீரியட் ஆகாமலிருந்தாலும், எந்த நேரமும் நீங்கள் கர்ப்பமாகலாம்.

//நாங்கள் இருவரும் இல்லற வாழ்வில் ஈடுபடலாமா?// இதற்குத்தான் சிசேரியன் பற்றிச் சொன்னீங்களா? தாராளமாக ஈடுபடலாம். காயம் ஆறி வெகு காலம் ஆகி இருக்கும். பிரச்சினையே இல்லை.

//இறுதியில் விந்து வரும் போது எடுத்து வெளியே விட்டுடார்.// இது கருத்தடை முறை என்று யார் சொன்னார்கள்? ஒரேயொரு விந்து உள்ளே சென்றால் போதும். உங்களால் தடுக்க இயலாத விடயம் இது.

//குழந்தை உருவாகி விடுமோ// இதற்குள் ஆகி இருக்கலாம்.

நீங்கள் மறுநாட் காலை பார்மசியில் கேட்டிருந்தால் இதற்கென்று மாத்திரை வாங்கிப் போட்டிருக்கலாம். ஆனால் அந்த மாத்திரைகளும் நம்பகமானவை அல்ல. தவிர... பாலூட்டும் சமயம் அவற்றை எடுக்கலாமா என்பது போன்ற விபரங்கள் எல்லா பார்மசிஸ்ட்டுக்கும் தெரிந்திராது. ஊகத்தில் பதில் சொல்லலாம். இப்போ இப்படி ஒன்று இருக்கிறது என்று தெரிந்துவிட்டது. :-) இதை நம்பி இன்னொரு முறை கவனமில்லாமல் இருக்காதீர்கள். (இது கருத்தடை முறை அல்ல. ஒரு விபத்துக்கான தற்காலிக நிவாரணம் என்று எடுக்கலாம். கூடவே மருத்துவ ஆலோசனை எடுப்பது தான் நல்லது.)

//அப்பொழுது நாங்கள் கருத்தடை எதுவும் பயன் படுத்தவில்லை.// தாமதிக்காமல் உங்கள் டாக்டரிடம் போய்ப் பேசுங்க. இரண்டு விடயங்களையும் கேளுங்க - 1. கர்ப்பமாகி இருக்கிறீர்களா என்னும் உங்கள் சந்தேகம் 2. இனி பயன்படுத்த வேண்டிய கருத்தடை முறை.

டாக்டர் ஆலோசனைப் படி நடங்க. இனி ஒரு போதும் கவனமில்லாமல் நடக்க வேண்டாம். உங்களுக்கு கர்ப்பம் என்னும் விடயம் மட்டும் தான் கவலைப்படும் விடயமாகத் தோன்றும். உருவாவது, உங்கள் கையில் ஏற்கனவே இருப்பது போல இன்னொரு உயிர் என்பதை மறக்க வேண்டாம்.
~~~~
ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனி த்ரெட் போடாமல் ஏற்கனவே இருக்கிற இழை ஒன்றில் கேட்கலாமே!

‍- இமா க்றிஸ்

திருமணம் ஆகி 8 மாதம் ஆகிறது.இன்னும் கரு தறிக்கவில்லை.என் periods ku10 நாள் முன் contact பண்ண அப்றம் என் husband ku pennis la itches வறுது.5நாள் அப்றம் சரியாகி விடுகிறது.என்ன reson nu சொல்லுங்க pls friends.

Ennaku konjam reply panungale pls ore confusion ana iruku.pls friends help me...

Ungaluku vellai paduthal urinary infection ippadi problem irunthalum kuda unga husbandku itches varalam ..nenga doctora consult pandrathu romba better

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

என் தோழியின் கவலையை கேட்கிறேன் ....என் தோழிக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது ஒரு ஆண் குழந்தை இருக்கிறான் 3வயது ஆகிறது ...இப்பம் பிரட்சனை என்னனா அவள் கணவருடன் சேர்நதபின் bleeding இருக்கிறதாம் ....அவள் பீரியட்ஸ் னு நினைனத்திருக்காள் ...ஆனால் அது பீரியட்ஸ் இல்லயாம் அந்த நேரம் மட்டும் இருக்கிறதாம் ...இது எதனால,எதும் பிரட்சைனயானு கேட்கிறாள் தெரிந்தால் சொல்லுங்கள் ..எனக்கு தெரியாததால கேட்கிறேன்

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Yen kelviku pathil solunga frnds

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

//இது எதனால,எதும் பிரட்சைனயானு கேட்கிறாள் // இருக்கலாம்.. டாக்டரை கன்சல்ட் செய்வதே நல்லது.. நாமாக எந்த முடிவும் எடுக்க முடியாது.. அவருக்கு டெலிவரி பார்த்த மகப்பேறு மருத்துவரையே பார்ப்பது இன்னும் சிறந்தது..

அவந்திகா

மேலும் சில பதிவுகள்