கவலை பயம்

என்னோட husband alopathy நம்ப மாட்டாங்க, சித்தா,ஆயுர்வேதம் இப்படி நம்பிக்கை உள்ளவங்க. இயற்கை உணவுகளை மட்டும் சாப்பிடனும் சொல்வாங்க ..இந்த விஷயத்தை கேட்பதற்கு சற்று தயக்கமாக உள்ளது . மாட்டு கோமியத்தை முகத்தில் தடவி குளிக்கிறாங்க அப்பறம் அத கொஞ்சம் காலையில் குடிக்கிறாங்க ...இது நல்லது னு சொல்றாங்க .இயற்கை அங்காடி யில் sales பன்றாங்க ...இதுனால எதும் problem வருமா என்ற பயம் அதிகமாக உள்ளது..என் பேச்சை கேட்கவே மாட்டேங்கிறாங்க ...தயவுசெய்து எனக்கு உதவுங்கள்...

Help me

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

//இயற்கை அங்காடி யில் sales பன்றாங்க// ஏதாவது பதப்படுத்தி மாற்றங்கள் செய்திருக்கக் கூடும். அபிப்பிராயம் சொல்லத் தெரியவில்லை.

//மாட்டு கோமியத்தை முகத்தில் தடவி குளிக்கிறாங்க// மாட்டுச்சாணம் கிருமிநாசினி என்கிற வகையில் தான் வீடுகளை மெழுகவும் கரைத்துத் தெளிக்கவும் முற்காலத்தில் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் முகத்திற்கு!! அதன் வாடை ஒன்று இருக்கிறது.

மாற்றங்கள் எதுவும் செய்திருக்காவிட்டால்... மாட்டெரு நிச்சயம் கண்ணுக்கு நல்லதல்ல. தோலும் கெட்டுப் போகலாம். எனக்குத் தெரிந்த ஒருவர் மாடு வளர்த்தார். பராமரிப்பு வேலைகள் எல்லாம் அவர்தான் செய்வார். ஒவ்வாமல் அவருக்குக் கைகளிலும் பாதங்களிலும் எக்ஸீமா வந்தது.

//குடிக்கிறாங்க// என்ன சொல்றதுன்னு தெரியல. அமோனியா செறிவு அதிகம். கிருமி நாசினி என்று சொன்னாலும் நிறையக் கிருமிகள் இருக்கவேதான் செய்யும்.

//என் பேச்சை கேட்கவே மாட்டேங்கிறாங்க ...தயவுசெய்து எனக்கு உதவுங்கள்...// எப்படிங்க உதவுறது!! நேர்ல வந்தா சொல்ல முடியும்? இந்த மாதிரி எக்ஸ்ட்ரீமான நம்பிக்கைகள் உள்ளவங்க, அவங்கவங்களா உணர்ந்தால் தவிர ஒன்றும் ஆகாது. உங்க அத்தை மாமாவிடம் பேசுங்க. அவங்க சொன்னால் கேட்கக் கூடும்.

‍- இமா க்றிஸ்

படிக்கவே மிகவும் கஷ்டமா இருக்கு. சித்தாவில் இயற்கை வைத்தியமென்பது முறையானதுதான். ஆனால் நம் சொந்தமாடாக இருக்கவேண்டும்.மாட்டுக்கு என்ன நோய் இருக்கிறது என்பதெல்லாம் தெரியாது அதன் மூத்திரம் கமர்சியலாக வரும்போது. எல்லாமே காசு என்று இருக்கும் உலகில் காசுக்காக மாட்டுக்கு நோய் இருந்தாலும் கவலைபடமாட்டார்கள். மேலும் மாட்டின் கோமியத்தில் அது சாப்பிடும் தாவரங்கள் மூலம் பூச்சிகொல்லி போன்றவையும்போயிருக்கும்.அந்த காலத்தில் சுத்தமான கோமியம் கிடைத்தது அது மருந்தானது. இப்பொழுது மிகவும் அதிகமாக உரம், மருந்து கலந்து வருகிறது என்று சொல்லுங்க.பழமை சிறந்ததுதான். ஆனால் காலத்திற்கு ஏற்றால்போல் எல்லாம் மாறும்போது நாமும் மாறவேண்டும்.

எனக்கு இம்முறை இந்தியா வந்திருந்தபோது மூலம் வியாதியால் மிகவும் அவதிபட்டேன். துத்தி இலைகள் 10 தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டேன். ஓரிரு நாளில் பலன் கிடைத்தது.அதுபோல் கற்றாளையும் நல்ல பலன் தரும். இந்தமாதிரி பாதுகாப்பான தங்கள் நோய்கேற்ற சித்த வைத்திய முறைகளை முறையை கையாளலாமே?

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்