சிறு சிறு பொரிகள் நெற்றியிலும் கன்னப்பகுதியிலும்

நெற்றியிலும் கன்னப்பகுதியிலும் முட்கள் போல் சிறு சிறு பொரிகள் உள்ளது. எப்படி சரி செய்வது. நீண்ட நாட்களாக உள்ளது. அது கருப்பாகவும் மாறி அசிங்கமாக உள்ளது.தலையில் பொடுகு இருந்தாலும் வரும் என்று சொன்னதால் தினமும் தலைக்கு குளிக்கிறேன். ஆனாலும் சரி ஆகவில்லை

தினமும் எதாவது நல்ல‌ ஸ்கிரப் ஒன்றை வாங்கி யூஸ் பன்னுங்க‌. ( இயற்கை மருத்துவம் தேவை என்றால் பாலில் உங்களுக்கு தேவையான‌ அளவு ஒட்ஸ்சை 15 நிமிடம் ஊற வைத்து முகத்தில் பூசி உலர்த்த‌ பின் களுவ‌ வேண்டும்.)

http://www.arusuvai.com/tamil/node/15449 இந்த இழையை முழுவதாகப் படித்துப் பாருங்கள். சில உபயோகமான குறிப்புகள் கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

மிகவும் நன்றி இமா மேடம்

முட்கள் மாதிரி இருப்பவை உதிர்ந்து விடும். ஆனால் சின்ன சின்ன பரு முகம் முழுவதும் இருக்கிறது

உங்கள் முகம் எண்ணை பசை சருமமா? தலையில் போடுகு உள்ளதா?

a

முகத்தில் எண்ணெய் வடியும். தலையில் பவுடர் போல் பொடுகு இருந்தது. இப்போ தினமும் தலைக்கு குளிக்கிறேன். அதனால் பொடுகு இல்லை. T zone சருமம் என்னுடையது. எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை

S

தினமும் வெள்ளை சத்தனக்கட்டையை நீர் விட்டு உரசி முகத்தில் பூசி வர‌ 2, 3 கிழமைகளில் எல்லாம் மறைத்து விடும்( முகத்துக்கு எந்த‌ ஃப்சியல் செய்வதாக‌ இருதாலும் அதிகாலை அல்லது மாலை,இரவு நேரம் தான் பூச‌ வேண்டும் வெயில் நேரத்தை தவிர்ப்பது நல்லது )

ஸ்கிறப் வாங்குவதாக‌ இருத்தால் "ஆயில் பிரீ ஸ்கிரப் "என்று பார்த்து வாங்குக‌.

மேலும் சில பதிவுகள்