குழந்தைக்கு தங்க நகை வாங்க

எனது குழந்தைக்கு 8 மாதம் ஆகிறது.குழந்தைக்கு தங்க நகைகள் வாங்க எண்ணி உள்ளோம்.கொலுசு செயின் வளையல் தோடு வாங்க வேண்டும்.எவ்வளவு கிராம் அல்லது பவுனில் வாங்கினால் சிறப்பாக இருக்கும்??

வாழ்த்துக்கள். குழந்தை ஆணா பெண்ணா? சரி பாப்பா பாப்பா தானே.
செயின் தற்போதைக்கு ஆனால் இரண்டு பவுன் தொடர்ந்து போடும் எண்ணம் இருந்தால் 5 பவுன். ஆனால் அதை இப்போது குழந்தைக்குப்
போட‌ முடியுமா? எதுவாயினும் உறுத்தாத‌ வகையில் உருண்டையான‌
டிசைனில் இருத்தல் நல்லது. பின்னல் தாலிச் செயின் போல‌.
தோடு காதோடு ஒட்டி இருத்தல் நல்லது. தொங்கு மாடல்கள் ஆனால்
சில‌ குழந்தைகள் பிடித்து இழுத்து விடும். சில‌ குழந்தைகளுக்கு விவரம்
தெரிகின்ற‌ வரையில் தொல்லை. பெண் குழந்தையானால் விதவிதமாய்க்
கேட்பார்கள் ஒரு வயசானாலே. எதுவானாலும் உறுத்தாததாய், அளவாக‌
வாங்குங்கள். தோடு ஆனால் இரண்டு முதல் நான்கு அல்லது ஐந்து கிராம்
ஒரு ஜோடி, வளையல் தாரளமாக‌ ஒரு வளையல் மட்டும் ஒரு பவுன்
என்கிற‌ அளவில் விதவிதமாக‌ வாங்கலாம் (மாற்றி மாற்றிப் போடலாம்.)
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

என் பெண் குழந்தைக்கு வாங்கிய அனுபவங்களை சொல்கிறேன்.....செயின் ஒரு பவுனில் வாங்களாம் அதே போல் குழந்தைக்கு உருத்தாமலும் இருக்க வேண்டும்..கூடுதலாக வாங்க நினைத்தால் 3 பவுனுக்கு குறைவாகவே வாங்கலாம் அதற்கு மேல் தேவை இல்லை.குழந்தைக்கு 2 வயது வரை தான் போட முடியும் அதற்கு மேல் போட்டால் நமக்கும் பயம் சேப்டி இல்லை அதனால் என் அபிப்ராயம் 1 முதல்3 பவுன் போதும் ....கம்மல் சின்னாதா 2,3 கிராம் கணக்கில் வாங்கினால் காது வழிக்காமல் இருக்கும் இலை மாடல்,திராட்சை மாடல்களில் அழகாக கிடைக்கும் ....வலையல் 1பவுனில் இரண்டு வளையல் போதும் ஏனா 1 அறை வயதில் குழந்தை கழற்ற ஆரம்பிக்கும் ஆதனால் போடமாட்டோம்...பின்பு விவரம் தெறிந்ததும் டீ சயின் வலையலுக்கு ஆசைபடுமே தவிர தங்க வலையில் மீது ஆசை இருக்காது ......இதெல்லாம் என் குழந்தை செய்யும் சேட்டை....அதனால் செயின் ,வலையல், பிரேசிலட்,மோதிரம் ,தங்க கொடி எல்லாமே சும்மாதான் பீரோலில் தூங்குகிறது....பள்ளிக்கு செல்லும் போது இதுல எதுவும் போட முடியாது அதனால 2 வயதுக்கு உட்பட எத போட முடியுமோ அவ்வளவு பவுன் வாங்குகள் போதும் ...ஆசைக்கு வாங்கி பணத்தை வீண் செய்யாதிங்க ........நன்றி

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

நன்றி பூங்கோதைகண்ணம்மாள் mam and ஸ்ரீஹர்ஷா.ஆண் குழந்தை தான் 11 வது மாதம் காதணி விழா வைப்பதாக உள்ளோம்.எனது கணவர் குழந்தைக்கு அன்றைய தினம் அனைத்தும் தங்கத்தில் அணிவிக்க வேண்டும் என ஆசை படுகிறார்.
கொலுசு எத்தனை பவுனில் போட்டால் நன்றாக இருக்கும்?

கொலுசு நம் விருப்பம் படி வாங்களாம்

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

நன்றி ஷ்ரிஹர்ஷா.

மேலும் சில பதிவுகள்