அதிகரிக்கும் விவாகரத்துக்கள் ஏன்?. தீர்வு தேவை.

இக்காலத்தில் பிரச்சனை அதிகம் உள்ளதா?.. அல்லது அக்கால பெண்களைபோல சகிப்புத்தன்மை இக்கால பெண்களுக்கு இல்லையா?.. பிரச்சனைகளை சமாளிக்கத் தெரியாமல் பிரிவுகள் அதிகம் ஏற்படுகின்றனவா?.. உங்களுக்கு தெரிந்த அனுபவங்களையும்,வாழ்வில் ஏற்பட்ட இன்ப,துன்ப நிகழ்வுகளையும். பிரச்சனைகளை சமாளித்த விதத்தையும் பற்றி கூறுங்கள்.. புதுவாழ்வை தொடங்கியவர்களுக்கும், தொடங்க இருப்பவர்களுக்கும் பிரச்சனைகளை கையாள கற்றுக்கொடுத்து விவாகரத்து என்ற பேச்சுக்கு இடம்இல்லாமல் செய்ய உதவுங்கள் தோழிகளே....

கருத்துக்கள் தெரிவிக்க யாரும் வரவில்லையே ஏன் தோழிகளே.

விவாகரத்து அதிகரிக்க காரணம் கணவன் மனைவி இடையே வரக்கூடிய சின்ன சின்ன பிரச்சனைகள் மற்றும் அதிக எதிர்பார்புகள் தான். இக்கால பெண்களுக்கு சகிப்பு தன்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் பிரச்சனைகளை கையாளும் முறை மாறி இருக்கிறது.

மேலும் நிறைய சொல்லுகிறான். இப்போது நேரமின்மையால் பதிவிட முடியவில்லை. விரைவில் வருகிறேன்.

What is not happened today will happen tomorrow :-)

கண்டிப்பாக வாங்க கவிதாஸ்ரீ. கருத்துக்கள் நிறைய தேவைபடுகின்றது.! இது என் உயிர் தோழியின் கதை.. கணவன்,மனைவி இருவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள்.ஆனால் வேறு வேறு ஊரில்.அவருக்கு சொந்தஊர் அருகிலேயே வேலை.அதனால் அம்மா,அப்பாவுடனே அங்கு இருக்கிறார்.அவளுக்கு ஏதே மலைபிரதேசத்தில் வேலை.விடுதியில் தங்கி வேலை பார்கிறாள்.பண்டிகை விடுமுறையில் (3,4,....நாட்களுக்குமேல் இருந்தால்)மட்டுமே சந்தித்துக்கொள்வார்கள். பிரச்சனை என்ன வென்றால் அப்பொழுதுகூட அவர் பாசமாக பேசமாட்டாராம்.சேர்ந்து சாப்பிடமாட்டாராம்.அம்மா அப்பா ஏதாசும் நினைச்சுப்பாங்க என்று சொல்லி விலகியே இருப்பாராம்.இதுவரை பூ,ஆடை,சாப்பிங்,சினிமா என எதற்கும் சென்றது இல்லையாம். அவளது சம்பளத்தை தன் அப்பாவிடம் தருமாறு வறுபுறுத்தியிருக்கிறார் கணவர்..இவள் மறுக்க அவர் தாய்,தந்தை,நாத்தனார் ஏற்றிவிட தொலைபேசியில் இரூவருக்கும் சிறிது சிறிதாய் பிரச்சனைகள் என வாழ்க்கை இருந்து உள்ளது..முதல் பிறந்தநாள்,தலதீபாவளி,தலபொங்கல்,தலஆடி என எதுவும் கொண்டாடவில்லை.ஆனால் பெண்வீட்டு சீர் மட்டும் கேட்டு வாங்கியாசு..காசுக்காக சண்டை(இருவரின் சம்பளம் சேர்த்து மாதம் மட்டும் 55,000 வருமாம்).ஆனால் அவள் பணம் சம்பள பணம் முழுவதும் முழுவதும் கைபற்ற ஆசை.அவள் அப்பாவிடம் வீட்டை எழுதிதர சொல்லி அடுத்த பிரச்சனை இப்படியாக நீண்டு கொண்டே போனது பிரச்சனை.. விளைவு ஒருவருடத்தில் விவாகரத்து ஆகிவிட்டது.

கருத்துகள் கூற யாரும் விரும்பவில்லையா அல்லது நேரம் இல்லையா என்று எனக்கு தெரியவில்லை.. இருந்தும் என் காதில் பட்ட பிரச்சனைகளை நான் கருத்தாக கூற விரும்புகிறேன். யாராவது ஒருவரேனும் படித்து பயன் பெற உதவும் என்ற எண்ணத்தில்... நான் மேலே கூறிய விசயத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது என் தோழி தான்... விவாகரத்து பெற்ற பின்பு தான் அனைத்து உண்மைகளையும் கூறினாள்.
திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளையை அவளுக்கு பிடிக்கவில்லையாம் அவள் அம்மா தான் நான் கண்மூடும்முன்பாக உன் கல்யாணத்தை பாக்கனம் னு சொல்லி சம்மதிக்க வைச்சுருக்காங்க.(தாய் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாராம் அச்சமயம்).மாப்பிள்ளை வீட்டாரோ சொத்தை குறி வைத்து பெண் கேட்டு இருக்குறாங்க..கல்யாணத்துக்குபிறகு பிரச்சனை ஆரம்பம்.நிம்மதி இல்லை. அப்பா அம்மா பேச்சை கேட்டுக்கொண்டு இவளை மிகுந்த மனவேதனைக்கு தள்ளியுள்ளார் கணவர்.. இருவரும் சேர்ந்து தனியாக ஒரு நாளை கூட கழித்தது கிடையாது. ஒரு வேளை யாரும் இல்லாமல் இருவர் மட்டும் ஒரு ஒருவாரம் விடுமுறை எடுத்து தனியாக சென்று மனம்விட்டு பேசியிருந்தால் இந்த பிரச்சனை எல்லாம் வெறும்கால் தூசு தான் என புரிந்து இருக்கும். பிரிவு வந்து இருக்காது.

இந்த விசயத்தில் நாம் ஒருதலை பட்சமா குறை சொல்லிட முடியாது. ரெண்டு பேருக்குமே சகிப்புதன்மை பொறுமை அவசியம். எல்லாவற்றையும் விட அன்பு அதிகமா இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும். சிஸ்டர் சொன்ன மதிரி எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கையில் தான் நிம்மதி கிடைக்கும்.
ஆணோ பெண்ணோ நமக்காக எதுவும் பண்ணமாட்றாங்களேனு யோசிச்சா குழப்பம் வரும். வெருப்பா மாறும். கம்யூனிகேசன் குறையும். அடுத்த நிலை பிரிவுதான்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

உங்கள் தோழி மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.. சிறுது காலம் ஒன்றாக சேர்ந்து வாழ்திருந்தால் விவாகரத்து வரை சென்று இருக்காது என்பது என் கருத்து. திருமணத்திற்கு பின் கணவரோடு சேர்ந்து வாழ வேலை மாற்றம் செய்ய முயற்சித்தார்களா? ஒரு வருடத்தில் விவாகரத்து என்று முடிவெடுக்காமல் சிறுது காலம் பொறுத்திருந்து வேறு முடிவு எடுத்திருக்கலாம்.

இவை அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள். எதுவும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

What is not happened today will happen tomorrow :-)

எல்லா பெண்களுக்கும் இருக்கும் சாதாரண எதிர்பார்ப்புகள் தான் அவளுக்கும் இருந்தது என்று நினைக்கிறேன்...அதை கூட செய்யாமல் இருக்கும் கணவரை என்ன சொல்வது... இந்த விசயத்தில் யாரை குறை கூறுவது??. அம்மாவுக்காகதிருமணம் செய்து கொண்ட பெண்னையா?. தன் மனைவியின் சின்ன ஆசையைகூட நிறைவேற்ற விரும்பாத கணவனையா?.. இல்லை பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிறிதும் யோசனை செய்யாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுத்த தாய்,தந்தையரையா?.. எது எப்படியோ பதிக்கப்பட்டது இந்த பெண் தான். மிகவும் அமைதியானவள். நன்றாக படிப்பவள்.(gold medalist).ஆனால் இப்பொழுது அவள் குடும்பவாழ்க்கை ?? கேள்வி குறியாக உள்ளது...

மேலும் சில பதிவுகள்