கர்பம் - மஞ்சள் நிறத்தில் வாந்தி plz help me friends

Hi Friends,
நான் 42 நாள் கர்ப்பமாக உள்ளேன். காலை எழுந்தவுடன் மஞ்சள் கலரில் வாந்தி வருது. தினமும் இப்படியே வருது. ஏன் மஞ்சள் நிறத்தில் வாந்தி வருது?

ரொம்ப சோருவாகிறது (very tired). எந்த வேலையும் செய்ய முடியல. ரொம்ப தூக்கமா வருது. வாந்திய நிறுத்த என்ன செய்யலாம் நண்பர்களே. Plz help me Friends.

காலையில் வெறும் வயிற்றில் எடுத்தால் அப்படி தான் வரும்.. எழுந்ததும் தண்ணீரோ, டீ, காபி யோ சாப்பிடுங்கள்..

ரொம்ப சோர்வாக இருந்தால் நல்லா தூங்குங்க.. நானெல்லாம் தூக்கம் வர மாட்டுதேனு பீல் பண்ணிட்டு இருக்கேன்.. வாந்தி வந்தா எடுத்திட்டு உப்பு போட்ட நார்த்தங்காய் கொஞ்சமா எடுத்து வாய்க்குள்ள வச்சுக்கோங்க.. அவ்வளவா வராது.. 4 மாதம் வரை வாந்தி இல்லாமல் இருக்காது.. நான் ஒருநாளைக்கு 10 தடவை கூட எடுத்துருக்கேன் :(

டாக்டர் கிட்ட கேட்டால் டேப்லட் எழுதி தருவாங்க.. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் போட சொல்லி கொடுப்பார்கள்.. அவ்வளவாக வாந்தி வராது..

அவந்திகா

Hi அவந்திகா,
Thank you so much for your information.

தங்களுக்கு 45 நாட்களுக்கு பிறகு தான் பாசிட்டிவ் கிடைத்தது என்று சொன்னீர்கள். வாந்தி போன்ற அறிகுறிகள் உங்களுக்கு எத்தானாவது நாளில் இருந்து உணர முடிந்தது?

எனக்கு 50 நாளுக்கு மேல் தான் வாந்தி, மயக்கம் ஆரம்பித்தது..

அவந்திகா

தங்களின் பதிலுக்கு நன்றி. மார்பக மாற்றங்களை எப்போதிருந்து உணர முடியும் தோழி?

சரியாக சொல்ல தெரியவில்லை..ஆனால் கர்ப்ப அறிகுறிகளுள் ஒன்று.. எல்லோருக்கும் இருக்கும் என சொல்ல முடியாது.. சிலருக்கு இருக்காது..

அவந்திகா

கேட்டவுடன் பதில் அளித்தமைக்கு நன்றி. எனக்கு திருமணமாகி மூன்று வருடங்களாகிறது. வயது 27. குழந்தைக்காக முயற்சிக்கிறோம். Pcos. லேப்ராஸ்கோப்பி செய்து இரண்டு வருடங்களாகிறது. Iui தோல்வி. ஆகஸ்ட் மாதம் கிராமத்திற்கு சென்று பச்சிலை மருந்து குடித்தேன். மனமுடைந்த நேரத்தில் நண்பர் ஒருவரின் அறிவுரைப்படி பத்து நாட்கள் குலுமணாலி சென்று வந்தோம். நாட்கள் தள்ளி போகவும் 36 வது நாள் சோதனை செய்தேன். நெகட்டிவ். இன்று 42 வது நாள். எந்த அறிகுறியும் இல்லை இதுவரை. 45 நாட்களுக்கு பிறகு டாக்டரிடம் செல்லலாம் என்றிருக்கிறேன். நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

எல்லோருக்கும் அறிகுறிகள் இருக்காதுப்பா..45 நாளில் செக் பண்ணுங்கள்.. அன்று நெகட்டிவ் வந்தாலும் சரி, பாசிட்டிவ் வந்தாலும் சரி டாக்டரிடம் செல்லுங்கள்.. நெகட்டிவ் வந்தால் ப்ளட் டெஸ்ட் செய்து பார்த்து என்னவென்று சொல்லிவிடுவார்கள்.. உங்களிடம் பிடித்ததே உங்கள் நம்பிக்கை தான்..(உங்களுக்கு உடனே பதில் சொல்வதற்கும் அதான் காரணம்) :-) நிச்சயம் நல்லது நடக்கும்..

யார் என்ன சொன்னாலும் கேட்க கூடாது.. நமக்கு இப்பிடி இல்லையே, என பயம் வரக்கூடாது..பயம் நம் முதல் எதிரி.. எதற்குமே பயப்படக் கூடாது..பயமில்லாமல், யோசிக்காமல் தைரியமாக இருக்கும்.. நிச்சயம் நல்ல விஷயம் சொல்லுவீர்கள்.. :-)

அவந்திகா

நன்றி. நிச்சயம் ஒருநாள் எனக்கான நல்வழி பிறக்கும். நம்பிக்கையுடன் காத்திருப்பேன்.

டாக்டரிடம் சென்றீர்களா? திரும்பவும் டெஸ்ட் செய்து பார்த்தீர்களா?

அவந்திகா

மேலும் சில பதிவுகள்