குழந்தை வளர்ப்பு

என் குழந்தை பிறந்து4 மாதம் ஆகிறது. (பெண் குழந்தை)நாங்கள் இருவரும் வெளி மாநிலத்தில் இருக்கிறோம் இங்கு குளிர் அதிகமாக உள்ளது. சில சந்தேகம் உள்ளது
1.இரவில் diper போடலாம? எவ்வளவு நேரம் போடலாம்
2.எத்தனை மாதம் வரை பேபி ஆயில் உடம்புக்கு தேக்க வேண்டும்? தலைக்கு எந்த ஆயில் தடவலாம்? முடி உதிர்வது நிற்க
தாய்பால் மாட்டும்தான் குடுக்குறேன் வேறு உணவு தரலாம?
வாயில் கைய் சூப்புகிறாள் அதை நிறுத்துவது எப்படி?அதனால் பால் சாரியாக குடிபதில்லை.
தலைக்கு எத்தனை நாளுக்கு ஒருமுறை குளிக்க வைக்க வேண்டும்?
இது எனக்கு:
காலையில் எழுந்து உட்கார்ந்து உடன் சளி தொல்லை இருக்கு அடுக்கு தும்மல் 10மணி வரை அப்புரம் சாரியகிரது ...நானா இதற்காக எத்தனை மருந்து எடுத்து இருக்குறேன் ஆனல் எதுவும் சரியகவில்லை...இந்த பிரச்சனை
குழந்தைக்கு பரவுமா?
முடி அதிகம் கொட்டுகிறது எங்கே பாத்தலும் முடி ஆக உள்ளது
வயிற்று பொருமல் வேற இருக்கு ....pls help me friends
தயவு செய்து உதவுங்கள் தோழிகளே..

1. அதிகமாக யூரின் போகும் குழந்தை என்றால் 2 முறை மாற்றி போடலாம்.. சில சமயம் ஒன்றே போதும்..

2.ஒரு வயது வரை கூட தேய்க்கலாம்.. நான் என் பெண்ணிற்கு ஒரு வயது வரை தேய்த்தேன்.. தலைக்கு சாதாரண ( ஏதும் கலக்காத) தேங்காய் எண்ணெய், அல்லது தலைக்கு தேய்க்கும் பேபி ஆயில் தேய்க்கலாம்.. இந்த காலகட்டத்தில் தொட்டியில் போடுவதால் முடி கொட்டுவது இயற்கைதான்.. சில குழந்தைகளுக்கு பின்தலை முழுவதும் முடி இருக்காது..

3. உங்கள் டாக்டரிடம் கேட்டு பிஸ்கட் ஏதாவது கொடுக்கலாம்.. இங்கே உள்ள டாக்டர்கள் ஐந்து மாதத்தில் கொடுக்க சொல்வார்கள்..

4. காலுக்கு போடுவது போல கைக்கு நல்ல புதுசாக்ஸ் போட்டு விடுங்கள்.. சீக்கிரம் மறந்து விடுவாள்.. (இது என் அனுபவம்)

5. வாரத்தில் ஒன்று, இரண்டு நாள் குளிக்க வைக்கலாம்.. குளிராக இருப்பதால் ஒரு முறை கூட போதும்..

6. கட்டாயம் பரவ சான்ஸ் இருக்கு..தும்மல் வரும் போதெல்லாம் குழந்தையை விட்டு தள்ளி வந்து விடுங்கள்..(வேறு வழிமுறை எனக்கு தெரியவில்லை வேறு யாராவது சொல்றாங்களானு பார்க்கலாம்)

7.குழந்தை பெற்ற பெண்களுக்கு முடி கொட்டுவது இயற்கையே.. எனக்கு தெரிந்து ஒன்றும் செய்ய முடியாது என நினைக்கிறேன்.. முடிந்தால் தலையை நன்கு சுத்தமாக பராமரிக்க வேண்டும்..

8. வயிற்று பொருமல் இருக்கும் போது ஒரு சிட்டிகை பெருங்காய தூளை வென்னீரில் கலந்து குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.. :-)

அவந்திகா

விரலை வாயில் வைக்கும் பழக்கம் போக‌ ‍_ நான் துணியில் சின்ன‌ சுருக்குப் பை போல் தைத்து வைத்திருந்தேன். க்ளவ் மாதிரி மாட்டலாம். அதைப் பிடுங்கி வீசும் குழந்தையாக‌ இருந்தால் வேறு வழிதான் பார்க்க‌ வேண்டும். :‍) கட்டாயம் இந்தப் பழக்கத்தை மாற்றியாக‌ வேண்டும் என்பதில்லை. தானாகவே விட்டுவிடுவார்.

//தும்மல்// தொற்றலாம். அவந்திகா சொன்னதற்கு மேலாக‌... குழந்தையைத் தூக்கும் முன் கைகளைக் கழுவுங்கள்.

//குழந்தை பெற்ற பெண்களுக்கு முடி கொட்டுவது// இயற்கைதான். ஆனால் அதிகமாகக் கொட்டினால் போஷாக்குப் போதவில்லை எனவும் கொள்ளலாம்.

‍- இமா க்றிஸ்

அவந்திகா பதில் சொல்லியிருக்கேன்.. அபி சொன்னதாக சொல்லியிருக்கீங்க :-)

அவந்திகா

அவந்திகான்னுதானே தட்டியிருக்கேன். ;))))))

சாரி, தூக்கக் கலக்கத்துல‌ தப்பா தட்டிட்டேன். ;( இப்ப‌ மாத்தியாச்சு. :‍)

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி தோழிகளே...

"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"

மேலும் சில பதிவுகள்