குழந்தை motion கருப்பு கலரில் போகிறான்

எனது மகனுக்கு 8 மாதம் ஆகிறது.2 நாள் முன்பு மருத்துவமனை சென்றபோது iron syrub கொடுத்தார்.அன்றிலிருந்து குழந்தைக்கு motion கருப்பு கலரில் போகிறது.இது iron syrub னால் கருப்பாக போகிறதா அல்லது வேறு எதாவது காரணதிற்காக இவ்வாறு போகுமா?

Aamam, Iron syrub saapitaal karupu niramaga than pogum.. namaku keerai saapital patchai nirama pogumalava adhu madhriye

- பிரேமா

நன்றி prema mam.

குழந்தை இரண்டு நாளாக மோஷன் போகவில்லை எனது கணவா் கடுக்காய் வாங்கி வந்தார் அது முழுதாகவும் சற்று மஞ்சள் நிறம் கலந்தது போலவும் உள்ளது அதை அப்படியே உரைத்து அவளுக்கு தரலாமா??ப்லீஸ் பதில் சொல்லுங்க

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

அன்புள்ள‌ மைதிலிக்கு, குழந்தைக்கு எத்தனை மாதம் (வயது தெரிந்தால் மிக மிக நல்லது. கடுக்காய் மிகவும் நல்லது, கடுக்காயின் உள் பருப்பும்
இஞ்சியில் மேல் தோலும், தேங்காயின் மேலே உள்ள‌ கருப்புத் தோலும்,கட்டாயம் நீக்கப் படவேண்டியவை.
பிஞ்சுக் கடுக்காய் ச்ற்று மஞ்சள் நிறமாகத் தான் இருக்கிறது.
பருப்பை காயை உடைத்துப் பருப்பினை வெளியே எடுத்து விடவேடும்
கையில் பிடித்து இழைப்பதற்கு வசதியாக வைத்துக் கொள்ளுங்கள்.
உரைகல்லில் 3 சுற்றுக்கள் இழைத்து தேன் அல்லது வெல்லம் கலந்து
நாக்கில் தடவி விடவும். அன்புடன்
அன்புடன் பூங்கோதைகண்ண்ம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

என் மகளுக்கு ஏழாம் மாதம் நடக்கிறது.... கடுக்காயின் மேல் தோல் ரொம்ப கடினமாக இருக்கின்றது எனக்கு அதை உபயோகப்படுத்த தெரியவில்லை .. அதை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பையும் மேல் தோலையும் நீக்கி விட்டு மீதமுள்ள பகுதியை மட்டும் கொடுக்க வேண்டுமா?????

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

கடுக்காயின் கடினமான‌ மேல் தோல் தான் மருந்து. லேசில் நசுங்காது, உடையாது, உள்ளிருக்கும் பருப்பை மட்டுமே நீக்க‌ வேண்டும், நாட்டு
மருந்து கடைகளில் கடுக்காய் பொடியாகக் கிடைக்கும், அதை வாங்கி
இரண்டு சிட்டிகை அளவு தேனில் அல்லது வெல்லத்தில் கலந்து இரவில் உண்பிக்கவும்,
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மிகவும் நன்றி அம்மா
நான் நேற்று காலை கடுக்காயை கொஞ்சம் உரசி தேனில் குழைத்து ஒரு துளி( konjam doubt la ) கொடுத்து விட்டு மீதமுள்ளதை(சுவை தொிந்து கொள்ள) நான் சாப்பிட்டு பார்த்தேன் தேனில் கலந்தும் மிகவும் கசப்பாக தொண்டையை அடைப்பது போல இருந்தது அதான் பயந்து நாம் சரியாகத்தான் பிள்ளைக்கு கொடுத்தோமா என்ற சந்தேகத்தில் உங்களிடம் கேட்டேன் அம்மா :-)

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

மேலும் சில பதிவுகள்