காலை நேரம் சமைக்க ஏதாவது சொல்லுகள்

எங்கள் வீட்டில் காலை மற்றும் இரவு நேரங்களில் டிஃபன் வகைகள் தான். இரவு பெரும்பாலும் தோசை தான். எனவே காலை நேரம் வித்தியாசமாக சத்துள்ளதாக செய்து கொடுக்க ஆசை. என்ன செய்யலாம் என கூறுங்களேன். (பின் குறிப்பு: என் கணவருக்கு உப்புமா(ரவை,சம்பாரவை),சோமியா(சாதா,கேப்பை), இட்லி, இடியாப்பம்,புட்டு, வெண்பொங்கல் என எதுவும் பிடிப்பது இல்லை. செய்து விட்டாடர்களே என்று பேருக்கு கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு போகிறார்). எனக்கு மனசே கேட்கமாடீங்குது. சப்பாத்தி,பூரி,தோசை மாவில் சுட்ட பணியாரம் என்றால் மட்டும் நன்றாக சாப்பிடுவார்.. பெரியவர்களுக்கு(அத்தை, மாமாவிற்கு)அது பிடிப்பது இல்லை. அடிக்கடி செய்ய முடியவில்லை. அவருக்கு மட்டுமாவது அளவாக செய்து கொடுக்கும் படி சத்தானதாக ஏதாவது காலை நேர உணவுகள் இருந்தால் கூறுங்கள் தோழீஸ்..

சாருதனா
வலது பக்கம் சிற்றுண்டி என ஒரு தனி பகுதியே இருக்கு.. அதற்கு மேலா ரெசிப்பி வேண்டும்.??. அதில் அத்தனை சிற்றுண்டி உணவுகள் இருக்கு.. ஒவ்வொன்றாக பாருங்ககள்.. :)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

;‍) இங்க இருந்து வலது பக்கம் பார்க்க‌ தெரியல‌ அபி. அவங்க‌ சரியான‌ ஸ்பாட்ல‌ நின்று பார்த்தால்தான் தெரியும்.

சிற்றுண்டி குறிப்புகளின் தொகுப்பு _ http://www.arusuvai.com/tamil/recipes/25

‍- இமா க்றிஸ்

நன்றிகள் அபிராஜா.ஆமாம் எனக்கு வலது பக்கம் னா எங்க போய் பார்க்கனும்னு தெரியலங்க. இமா மா உங்கள் பதிலுக்கும் நன்றிகள். நான் சமையல் பகுதியில் காலைஉணவு என தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. சிற்றுண்டி என்ற வார்த்தை தெரியாமல்... இதோ உடனே பார்த்துவிடுகிறேன்.:..

மேலும் சில பதிவுகள்