குடும்பம்

தோழிகளே, நான் அறுசுவையில் சேர்ந்து பல நாள் ஆகிறது. எனக்கு தோழிகள் யாரும் கிடைக்கவில்லை. என் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தார்கள். இப்போது அப்படி இல்லை. நிறைய சண்டை வாக்குவாதம். நிம்மதியில்லை. ஜாதகம் பார்த்தோம். என் மூத்தார் மனைவி ஏதோ செய்வினை செய்ததாக‌ கூறுகிறார்கள். இதிலிருந்து மீள வழிகூறுங்கள்.

Enaku therinthathu nandraga durga vai kumpidungala kastangal agalum

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Ungaluku kadavul nambikai irundhal daily Kanda Shasti Kavasam padinga pa. Manasuku aarudhala irukum. Also seivinai ellam vela seiyadhu. Mudindhal morning and evening vetla vilaku ethitu shasti kavasam read panunga..

What is not happened today will happen tomorrow :-)

madam

Vist once Near Kumbakonam ''Patteswaram temple''

all worries will be clear.

rahul
8098022891

//எனக்கு தோழிகள் யாரும் கிடைக்கவில்லை.// :-) தோழமை என்கிறது... தானாக அமைவது. பொறுத்திருங்கள் ராஜ்ரேணு, உங்களோடு ஒத்த எண்ணம் உடையவர்கள் தாங்களாகவே அறிமுகமாகுவார்கள்.

//என் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தார்கள். இப்போது அப்படி இல்லை.// இது சாதாரண மனித இயல்புதானே! //நிறைய சண்டை வாக்குவாதம்.// இரண்டு கைகள் தட்டினால் சத்தம் வரும். இதற்கு யாரும் 'செய்வினை' வைத்தாக வேண்டும் என்பது கிடையாது. :-) எம் மனதும் நாவும் அவற்றால் நாம் செய்யும் வினைகளும் தான் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் காரணம்.

//நிம்மதியில்லை. ஜாதகம் பார்த்தோம்.// யார் முதலில் விட்டுக் கொடுப்பது என்பதில் பிரச்சினை இருக்குமானால்.... ஜாதகம், பரிகாரம், பூஜை எதுவுமே உதவாது. நிம்மதி... எமக்குள் இருக்கிறது; நாம்தான் கண்டுகொள்வதில்லை. இருக்கும் இடத்தை விட்டு வெளியே தேடுகிறோம்.

//என் மூத்தார் மனைவி ஏதோ செய்வினை செய்ததாக‌ கூறுகிறார்கள். இதிலிருந்து மீள வழிகூறுங்கள்.// முதலில் இந்த எண்ணத்திலிருந்து மீண்டு வெளியே வாருங்கள். அல்லாமல் மீள முடியாது. எத்தனை பூஜை, பரிகாரம் செய்தாலும், உங்கள் மனதில், ''இன்னார் நமக்கு எதிராகச் செய்வினை செய்தார்,'' என்கிற எண்ணம் இருக்கும் வரை நிம்மதியாக அவரோடு பேசிப் பழக முடியாது. எல்லோருடனும் சகஜமாக இருக்கப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

//நிம்மதியில்லை. ஜாதகம் பார்த்தோம்.// யார் முதலில் விட்டுக் கொடுப்பது என்பதில் பிரச்சினை இருக்குமானால்.... ஜாதகம், பரிகாரம், பூஜை எதுவுமே உதவாது. நிம்மதி... எமக்குள் இருக்கிறது; நாம்தான் கண்டுகொள்வதில்லை. இருக்கும் இடத்தை விட்டு வெளியே தேடுகிறோம். //

அருமையான‌ கருத்துக்கள்.

- பிரேமா

ஒரே கேள்விக்கு 2 த்ரெட் போடாதீங்க. நன்றி எல்லாம் அ(இ)தே த்ரெட்ல சொல்லணும். எங்கயாச்சும் சம்பந்தமில்லாம தனி த்ரெட் ஆரம்பிச்சு நன்றி சொன்னா... யார் எவருக்கு எதுக்கு நன்றி என்று புரியலை. ;))

இப்போ அந்த ஒரு த்ரெட் வீண்தானே? உண்மையில்... 2 த்ரெட் வீண். ;(((
~~~~
இன்னொரு புதிய த்ரெட்டில் நேற்று நீங்கள் கேட்டுள்ள... //யாராவது எனக்கு பதில் கூறுங்கள். குடும்ப‌ பிரச்சனையால் எங்களுக்கு குழந்தையில்லை. உதவுங்கள்// எனும் உங்கள் கேள்வி... அர்த்தமுள்ளதாகத் தெரியவில்லை. என்ன உதவி வேண்டும்? என்ன குடும்பப் பிரச்சினை, அது எப்படி உங்கள் குழந்தைப் பேற்றை / கர்ப்பத்தைப் பாதிக்கிறது என்று சொல்லாமல் கேள்வியை வைத்தால் எப்படிப் பதில் சொல்வார்கள்?

இதே கேள்வியை ( //குடும்ப‌ பிரச்சனையால் எங்களுக்கு குழந்தையில்லை. உதவுங்கள்// ) உங்களை நோக்கி இன்னொருவர் வைத்தால் அவருக்கு நீங்கள் என்ன பதில் சொல்லியிருப்பீர்கள்? அதே பதிலை உங்களுக்கு நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்.

உங்கள் குடும்பப் பிரச்சினையை நீங்கள் தான் தீர்க்க வேண்டும். ஏற்கனவே எங்கோ நீங்கள் இதே குடும்பப் பிரச்சினையைப் பற்றிக் கேள்வி கேட்டுப் பதில் பெற்றிருப்பதாக நினைவு. புதிய இழை ஆரம்பிக்காமல் அதே இழையில் மீண்டும் தொடர்ந்திருக்கலாம். அல்லது இந்த இழையிலேயே எல்லாவற்றையும் கேட்டிருக்கலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்