ஆங்கிலம் கற்க ஆலோசனை

முதலில் அறுசுவையில் இருக்கும் அணைத்து சகோதரர் சகோதிர்களுக்கு எனது வணக்கங்கள். இப்போது எனது விஷயத்துக்கு வருவோம். ஏனோ என் மனதில் ஒரு தாழ்வு மனபான்மை ஏற்படுகிறது. முதலில் என்னைப் பற்றி சொல்லுகிறேன் நான் எட்டாவது தான் படித்து இருகின்றேன் எனது கணவரோ அதிகம் படித்தவர். எனது கணவர் அதை பெரிசாக எடுத்துகொள்ள வில்லை நானும் அதை நினைத்து வருதியதும் இல்லை ஆனால் இப்போது வருந்துகிறேன். எனது கணவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது என்னையும் அங்கு கூட்டி சென்றார் அங்கு அவருக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.நண்பர்கள் வீட்டு பார்ட்டிக்கு கூப்பிட்டு செல்வார்.அங்கு நான் யாரிடமும் பேசமால் நிற்பேன் வேடிக்கை பார்த்துகிட்டு காரணம் எனக்கு ஆங்கிலம் ஹிந்தி தெரியாது.எனக்கு தெரிந்த மொழி தமிழ் ஆனால் அவர்களுக்கு தமிழ் தெரியாது.இதனால் பல பார்ட்டிக்கு போனாலும் நான் யாரிடனும் பேசாமல் அமைதியாக இருந்துவிட்டு வருவேன் இது எனக்கு மிகிந்த மன வருத்தத்தை தருகிறது எனக்கு அவர்களிடம் பேசி பழகனும் ஆசை அனால் அவர்கள் பேசுவதே எனக்கு புரியவில்லை அப்படி இருக்கையில் நான் எப்படி அவர்களிடம் சகஜமாக பேச முடியும் இதற்க்கு வழியே இல்லையான்னு பல தடவை யோசித்து விட்டேன் ஆனால் என்னால் என்ன செய்ய முடியும் தெரியவில்லை ஆங்கிலம் கத்துக்கோ சொலுரங்க அவங்க கூட பேச பேச தானாகவே ஆங்கிலம் வந்திடும் நீயும் சரளம பேசலாம் சொல்லுரங்கள் அவங்க பேசுவதே எனக்கு புரிய வில்லை அப்படி இருக்கையில் ந எப்படி அவங்களிடம் பேசமுடியும் எனக்கும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆசை அனால் என்னால் முடியுமா ந எட்டாவது தான் படித்தே இருக்கேன் என்னால் அவங்களை போல் பேச முடியுமா இப்படி கேள்விகள் என் மனதில் தோன்டுகின்றன இதற்க்கு உங்களிடம் எதாவது பதில் கிடைக்குமானு எதிர் பார்க்கின்றேன்

உங்கள் அன்பு தோழிகளில் நானும் ஒருத்தியாக என்னி இந்த பதிவை இட்டுள்ளேன்

ஆங்கிலத்தில் பேச உதவி செய்யவும் - www.arusuvai.com/tamil/node/8219
ஆங்கிலம் பேசலாம் வாங்க தோழிகளே - www.arusuvai.com/tamil/node/16545
English கற்க websites இருக்கா - www.arusuvai.com/tamil/node/9433
ஆலோசனை வழங்குங்கள் ப்ளீஸ் - www.arusuvai.com/tamil/node/16882
~~~
மீதி... நேரம் கிடைக்கும் போது சொல்கிறேன்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப‌ நன்றி இம்மா அம்மா நிச்சியம‌ இது எனக்கு உதவும் என்னாலும் ஆங்கிலம் பேச‌ முடியும் ஒரு நம்பிக்கை வந்து இருக்கு

கவலை வேண்டாம் அக்கா போக போக அதுவே புரியும் உங்கனாளே கண்டிப்பா இங்லிஷ் பேச முடியும் என்னைக்கும் முடியாதுனு மட்டும் ஓசிக்காதிங்க அப்படி நீங்க யோசிச்ச உங்க நல எதையும் கத்துக்க முடியாது சோ உன்கனலே முடியும் நு நம்புங்க அக்கா

பை : உங்கள் நண்பன் மணி

/ஒரு தாழ்வு மனபான்மை// ம்... இதுதான் அன்றொருநாள் ஆங்கில இடுகைகளுக்கு எதிராக பதிவு போட்டதன் பின் இருந்த காரணமா ஃபிரோஸ்? :-)

//எனக்கு ஆங்கிலம் ஹிந்தி தெரியாது.// எனக்கும் ஹிந்தி தெரியாது. ஆனால் யாராவது என்னருகே வந்து ஹிந்தியில் பேசினால் அந்தச் சந்தர்ப்பத்தை வைத்துப் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. ட்ரை பண்ணிப் பாருங்க.

ஹிந்தி சினிமா பாருங்க. ஒன்றிரண்டு வார்த்தைகளாவது புரியும். (இந்தியப் பேச்சுத் தமிழில் ஏனைய இந்திய மொழிச் சொற்களையும் பல ஆங்கிலச் சொற்களையும் ஆங்காங்கே கலந்துதான் பேசுகிறீர்கள்.) காது உச்சரிப்புக்குப் பழகிவிடும். பிறகு பாஷை மெதுவே புரிய ஆரம்பிக்கும். ஆங்கிலம்... கார்ட்டூன் பார்த்தாலும் போதும்.

//எனக்கு தெரிந்த மொழி தமிழ் ஆனால் அவர்களுக்கு தமிழ் தெரியாது.// :-) பார்த்தீங்களா, நீங்க அவங்களுக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து வைத்திருக்கிறீங்க. பெருமையான விஷயம் இல்லையா? தெரியாததைப் பற்றி அவங்க வருத்தப்பட்ட மாதிரி தோணுதா? இல்லை இல்ல! நீங்க மட்டும் எதுக்காக யோசிக்கிறீங்க?

//யாரிடனும் பேசாமல் அமைதியாக இருந்துவிட்டு வருவேன்// இனி கொஞ்சம் பேச ட்ரை பண்ணுங்க. பேச்சு என்பது.... வார்த்தை மட்டும்தான் என்பது அல்ல. சைகை & முக அசைவும் கூட ஒரு வகையில் பேச்சு தான். என் முயல்குட்டி என்னோடு பேசும். 'பசி' என்குது, 'சீக்கிரம் கொடு,' என்குது, 'வேணாம்,' என்குது. ஆனால் அதுக்குத் தமிழும் தெரியாது; ஆங்கிலமும் தெரியாது. ஆனால் இரண்டும் தெரியும். :-)

//என் அத்தை ஒரு முறை இங்க வந்திருந்தாங்க. அவங்களுக்கு தமிழ் தவிர வேறு எதுவும் பேச வராது. அவர் ஆங்கிலத்தில் சொல்லும் வார்த்தை தாங்க்யூ. அந்த ஒரு வார்த்தையை ஒரு புன்னகையுடன் கலந்து வீசி, இங்கு சந்தித்த எல்லோரையும் மயக்கிவிட்டார். தினமும் கோவிலில் பூசை முடிந்ததும் ஒன்றிரண்டு பேர் அவரோடு பேசப் போவார்கள். பேசுவதை உற்றுக் கேட்பார். ஊகிக்கப் பார்ப்பார். கேட்பதைத் தமிழில்தான் கேட்பார். அவர் கேட்கும் விதத்தில் மற்றவர்களுக்குப் புரியும் போல. பதில் பெற்றுவிடுவார். புன்னகையும் தலையசைப்பும் கண்ணும் மட்டும் பேசும்.

//அப்படி இருக்கையில் நான் எப்படி அவர்களிடம் சகஜமாக பேச முடியும் இதற்க்கு வழியே இல்லையா// ஒரு பழமொழி சொல்வார்கள், 'வாயிருந்தால் வங்காளமும் போகலாம்.' :-) அதுவும் தேவையில்லை.

நியூஸிலாந்தில் உத்தியோகபூர்வ மொழிகள் மூன்று. ஒன்று ஆங்கிலம், இன்னொன்று Maori, மூன்றாவது... நியூஸிலாந்திற்குரிய பிரத்தியேகமான சைகை மொழி - குரல் இல்லாதவர்களது மொழி. இவர்களால் எந்த மொழி மக்களோடும் பேச முடிகிறது என்னும் போது குரலுள்ளவர்களால் முடியாதா? தடை... எம் எண்ணம் தான்.

உங்களுக்காக தேடப் போய், இப்போ எனக்கு ஹிந்தி பேசக் கற்கும் ஆசை வந்திருக்கிறது. :-) விடுமுறையில் கொஞ்சம் கற்பது என்று நினைத்திருக்கிறேன். யூட்யூபில் ஒரு வீடீயோ பிடித்துவைத்திருக்கிறேன்.

//ஆங்கிலம் கத்துக்கோ சொலுரங்க// ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்களா? அங்கு வந்தால் ரகசியமாக ஆங்கிலம் கற்க ஒரு யோசனை சொல்லுவேன். :-)

//அவங்க கூட பேச பேச தானாகவே ஆங்கிலம் வந்திடும்// ஆமாம், ஆனால் பிழை விடுவதைப் பற்றி யோசிக்கக் கூடாது. நம்பிக்கையோட கதைக்க வேணும். //அவங்க பேசுவதே எனக்கு புரிய வில்லை.// கொஞ்சம் ஊகிக்கப் பாருங்க.

//ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆசை அனால் என்னால் முடியுமா ந எட்டாவது தான் படித்தே இருக்கேன் என்னால் அவங்களை போல் பேச முடியுமா// ஆஹா! இது என்ன விதமான சந்தேகம்! வெள்ளையர்கள் எங்கள் நாடுகளைப் பிடித்து உள்ளே வந்தபோது எப்படி இங்குள்ளவர்கள் ஆங்கிலத்தைப் புரிந்துகொண்டார்கள்? எப்படிப் பேசினார்கள்? அவர்கள் எல்லோரும் நிறையப் படித்தவர்களாக இருந்தார்களா? உல்லாசப்பயணிகள் நடமாட்டம் உள்ள இடங்களில் வியாபாரிகள், கைடுகளைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் எல்லாம் டிகிரி முடித்துவிட்டா ஆங்கிலம் பேசுகிறார்கள்? நினைத்தால் உங்களால் முடியும்.
~~~
ஒரு அன்பு வேண்டுகோள்... என் கீபோர்ட் பழுது. இப்போ இரவு - தூக்கக் கலக்கத்தில் தட்டுகிறேன். எழுத்துப் பிழைகள் இருக்கும். நாளை வாந்து எடிட் பண்ணுவேன். அது வரை யாரும் 'பதிலளி'யில் தட்ட வேண்டாம். :-)
~~~
இழைத் தலைப்பை மாற்றுங்க. 'வணக்கம்' என்பது... பேசும் விடயத்திற்குப் பொருத்தமான தலைப்பாக இல்லை.

‍- இமா க்றிஸ்

ரொம்ப‌ நன்றி இம்மா அம்மா மணி சகோதரர் கன்டிப்ப‌ நீங்கள் சொன்னதை முயரற்ச்சி பன்னுறேன்.என் மகள்லுக்கும் வரகிற‌ பத்தாம் தேதி பிறந்தா நாள் அதனால் கொஞ்சம் வேலை இருந்தலாள் உங்களது கருத்தை பார்க்க‌ முடியாமா போயிவிட்டாது.இப்பொது தான் பார்தேன் உங்களது கருத்து எனக்கு மன‌ உருதியை குடுத்திற்க்கு கன்டிப்ப‌ அவங்களிடம் பேச‌ முயற்ச்சி செய்கிறேன்

10ம் தேதிக்கும் பின் ஃபேஸ்புக்ல தொடர்பு கொள்ளுங்க. உங்களுக்கு உதவ ஒரு நல்ல யோசனை வைத்திருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

இம்மா அம்மா உங்ளுடைய‌ பேஸ்புக் பெயர் எனக்கு தெரியாதுமா

இங்கு பதிலின் கீழ் சிவப்பு நிறத்தில் இருக்கிறது. :-)

‍- இமா க்றிஸ்

Hi firoz unga mobile la Google play store la poi hello English learn English app a download pannunga Tamil to English easy a kathukalam.

ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே. வாய் பேச‌ முடியாதவர்களும், குழ்ந்தைகளும் எந்த‌ மொழியில் பேசுகின்றார்கள். எந்த‌ மொழியும் பேச‌ பேச‌ மட்டுமே பழகலாம். மற்றபடி படித்தால் எல்லாம் வராது...

மேலும் சில பதிவுகள்