எனது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சென்னை பள்ளிகளின் பட்டியல் தேவை. :-)

சென்னையில் வசிக்கும் அறுசுவை அங்கத்தினர்கள் தங்களது அனுபவத்தைக் கொண்டு எனக்கு தகவல் தந்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

என்னுடைய எதிர்பார்ப்புகள் இவைதான்.

1. படிப்பிற்கு முக்கியத்துவம், படிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் என்று கூறி பிள்ளைகளை படிப்பு, படிப்பு என்று தொல்லை செய்யும் பள்ளியாக இருக்கக்கூடாது.

2. Academic அதிகம் இல்லாமல் activities ற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளியாக இருக்க வேண்டும்.

3. 7 மணி நேரம் வகுப்புகள் முடிந்த பிறகு, வீட்டில் நான்கு மணி நேரம் செய்யுமாறு ஹோம் ஒர்க் கொடுக்கும் பள்ளிகள் வேண்டாம்.

4. ஒழுக்கம் என்ற பெயரில் பிள்ளைகள் சிறைச்சாலையில் இருப்பது போன்ற உணர்வைத் தந்திடும் மிகவும் கட்டுப்பாடான பள்ளிகள் வேண்டாம்.

5. பள்ளிக்கூடம் என்பது பயமூட்டும் இடம் அல்ல என்ற உணர்வைக் கொடுக்கும் பள்ளிக்கூடமாக இருக்க வேண்டும். படிப்பு என்பது புத்தகத்தை மனனம் செய்வது மட்டுமல்ல என்பதை உணர்த்தும் பள்ளிக்கூடமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் சுய ஆற்றல், தன்னம்பிக்கையை வெளிக்கொணரும் கல்வி முறையாக இருக்க வேண்டும்.

6. நல்ல திறன் கொண்ட, குழந்தைகளுடன் சுமூகமாக பழகக்கூடிய ஆசிரியர்களைக் கொண்ட பள்ளியாக இருக்க வேண்டும்.

ரொம்ப ஓவரான எதிர்பார்ப்போ?!! :-)

Abacus (பெருங்குடி), Navadisha (வேளச்சேரி) Montessori பள்ளிகள் எனது எதிர்பார்ப்பை நிறைவு செய்வதாக இருக்கின்றன என்றாலும் இங்கே இடம் கிடைப்பது மிகவும் கடினம் என்று தோன்றுகின்றது. BVM Global (Bollineni Hillside) school போன்ற global schools எனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார்போல் உள்ளது. நீங்கள் அறிந்து இது போன்ற நல்ல பள்ளிகள், ஓரளவிற்கு எளிதாக அட்மிசன் வாங்கலாம் என்ற நிலையில் உள்ள பள்ளிகள் குறித்து தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

வகுப்பு: மூன்றாம் வகுப்பு (பெண்)
இடம்: சென்னை நகரில் எங்கிருந்தாலும் பரவாயில்லை.
கட்டணம்: பிரச்சனை இல்லையென்றாலும் மிக அதிகமாக இருக்க வேண்டாம்.
Gated community உள்ளே இருக்கும் பள்ளிகளாக இருப்பின் மிகவும் வசதியாக இருக்கும்.

Try KFI. One of the best schools in the category of your expectations, where my nephew is studying.

http://www.theschoolkfi.org/

KFI
Damodar Gardens,
Besant avenue,
Adyar,
Chennai 600020

Ph : +91 - 44 - 24915845, 24465144

Another option : Ashram Matriculation School

அட்மின்
வேளச்சேரி நவ்தீஷா நல்ல ஸ்கூல். வேளச்சேரி சன்ஷைன் ஸ்கூல், AGR Global School ம் நீங்கள் எதிர்பார்ப்பது போல இருக்கும் ஆனால் பீஸ் அதிகமாக இருக்கும்.

Sharanalaya Montessori School
Good Earth - goodearthschool.org
Vidyamandir
Sishya in OMR
Hari shree vidyalayam - R.R.Puram

நன்றி சகோதரி. KFI ஐ எனது நண்பர் ஒருவரும் பரிந்துரைத்தார். அந்த பள்ளி இடமாற்றம் செய்யப்படவுள்ளது அல்லது செய்யப்பட்டுவிட்டது என்று எண்ணுகின்றேன். இணையத்தில் சரியான தகவல் இல்லை. தற்போது அது எங்கு இயங்குகின்றது, அட்மிசன் எப்போது தொடங்குவார்கள் என்ற தகவல்களை தர இயலுமாயின் எனக்கு தெரிவிக்கவும்.

preethy1685, சதாசிவம் அவர்களுக்கும் நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள பள்ளிகள் குறித்தும் விசாரிக்கின்றேன்.

நீங்க கேட்கற எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகுமான்னு தெரில. ஆனா இங்கு வளசரவாக்கத்தில் LA chatline junior collage பள்ளியை பற்றி வெப்சைட்டில் பார்க்கலாம். ஆனால் சேர்க்கவே நிறைய ரூல்ஸ் வயது சரியாக இருக்க வேண்டும். பள்ளி சுற்றி 5 கிமி தொலைவில் இருக்க வேண்டும் இது போல். வீட்டிற்கு ஹோம்வொர்க் கிடையாது. பள்ளிக்கு புத்தகமூட்டை சுமக்க வேண்டாம் இது போல் பல வசதிகள் உண்டு. இன்னும் விசாரித்து பதிவிடுகிறேன்.

Be simple be sample

நன்றி சகோதரி.

அந்த மாதிரி பள்ளிதான் நான் எதிர்பார்க்கிறேன். அவங்க வெப்சைட் ஏற்கனவே பார்த்திருக்கேன். ஆனா அதில யூஸ்புல்லா பள்ளி பத்தி ஒரு விபரமும் இல்லை

வயது சரியாக இருக்கும். பள்ளி முடிவானா பள்ளிக்கு பக்கத்து காம்பவுண்டலேயே வீடு எடுத்துப்பேன். :-) அதனால தூரம் பிரச்சனை இல்லை. ஏரியாவும் பிரச்சனை இல்லை. சென்னை, சென்னைய ஒட்டிய புறநகர் இங்க எங்க ஸ்கூல் இருந்தாலும் பரவாயில்ல.. அதுக்காக கூடுவாஞ்சேரிய எல்லாம் சென்னையில சேர்க்கக்கூடாது. :-)

மேலும் சில பதிவுகள்