சகோதரிகளுக்கு வணக்கம்.

சகோதரிகளுக்கு வணக்கம்.
நீண்ட நாட்களாக அறுசுவையின் உறுப்பினர். சில பதிவுகளை அவ்வப்போது தருவதுண்டு. இப்போது எனக்கு ஏற்பட்டுள்ள மனகவலையை என்னால் சமாதானம் செய்து கொள்ள முடியாமல் அறுசுவையை நாடியுள்ளேன். எனக்கு திருமணமாகி 6 1/2 வருடங்கள் ஆகிறது.குழந்தைக்காக சிகிச்சை எடுத்து வருகிறோம். ஆறு மாதங்களுக்கு முன் லேப்ராஸ்கோபி செய்து கொண்டேன். பெரிதாக எந்த காரணத்தையும் சொல்லவில்லை. ஆனாலும் கரு தரிக்கவில்லை. அப்போதுதான் என் நெருங்கிய உறவினர் ஒரு ஆல்டர்னேடிவ் (அதாவது சித்தா, ஆயுர்வேதா மற்றும் நேச்சுரோபதி) மருத்துவரை பரிந்துரை செய்தார்.

கணவருக்கும் எனக்கும் வேறு எந்த மனக்குறையும் இல்லை. நிறைவாகவே உள்ளோம். ஒரு மாதம் மருந்து எடுத்துக் கொண்ட நேரத்தில் என் தங்கையின் தோழிக்காக மருத்துவரின் அலைபேசி எண் வேண்டும் என்று கேட்டதால் கொடுத்தேன். அவளும் மருத்துவரை அணுகி மருந்து வாங்கினாள். எனக்கு முதல் தடவை போன் செய்த போது இப்படி இருக்கிறதே என்று வருந்தி அழுதாள். நான் சமாதானப்படுத்தி மருந்து சாப்பிட சொன்னேன். மருந்து சாப்பிட்டாள். எனக்கு அடிக்கடி போன் செய்து (இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது) மருந்து சாப்பிடுவது பற்றியும், மற்ற விஷயங்களையும் பேசுவோம்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு மருத்துவரிடம் நான் பார்க்க சென்ற போது அவள் கர்ப்பமாகி இருப்பதை மருத்துவர் மூலமாக தெரிந்து கொண்டேன். மருத்துவரிடம் அவள் இவ்விஷயத்தைக் கூறும்போது என்னிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாள். ஆனால் மருத்துவரோ அவங்க இல்லாமல் நீங்க இங்க வந்திருக்க முடியாது. முதலில் அவர்களிடம் அழைத்து சொல்லுங்க என்று சொல்லியும் முடியாது என்றும் நீங்களும் சொல்ல வேண்டாம் என்றும் சொல்லி விட்டாள். அப்போது தான் மருத்துவர் சொன்னார் அவங்க முதல் தடவை வந்தபோதே நாங்க வந்ததை மட்டும் சொல்லுங்க. மருந்து வாங்கியதை சொல்ல வேண்டாம் என்று கூறியிருக்கிறாள். மருத்துவராவது என்னிடம் சொல்லாமல் இருந்திருந்தால் என் மனம் இவ்வளவு வேதனை அடைந்திருக்காது.

மறுமுறை மருத்துவரிடம் நான் சென்ற போது அவளோடு என்னை கம்பேர் செய்து (நீங்களும் அவங்களைபோல், அவங்களைப்போல் என்று....) பேசினார்கள். அவள் கன்சீவ் ஆனதால் எனக்கு மிகுந்த சந்தோஷமே. அவள் கன்சீவ் ஆனதால் எனக்கு எந்த அவசரமுமில்லை என்று கூறி விட்டு, இயற்கை எனக்கு என்ன விதித்து இருக்கிறதோ அதன்படி நடக்கட்டும் என்று மருத்துவரிடம் என் உணர்வுகளை வெளிக்காட்டாமல் வந்து விட்டேன்.

எனக்கு மிகுந்த கவலையாகி விட்டது. ஏன் என்றால் 2 வருடங்களுக்கு முன்பு எனக்கு அபார்ஷன் ஆகி இருந்தது. இந்த முறை ஆரோக்கியமான குழந்தை பிறக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். என் கணவரிடம் நான் இதைப் பற்றி பேசி மிதமிஞ்சிய வேதனை. அவரோ உலகமே இன்று இப்படித்தான் இருக்கிறது. நீ நல்லது தானே செய்தாய். கவலை படாதே என்று என்னை தேற்றுகிறார். மனக் கவலை நான் அறியாததில்லை. நிறைய அவமானங்களை சந்தித்து விட்டேன்.

காரணமே இல்லாமல் என்னை அவமானப்படுத்தி விட்டாளே என்று எண்ணி தினம் தினம் என் நிம்மதி தொலைகிறது. ஒரு வேளை நான் தான் மனமுதிர்ச்சி இல்லாமல் நடந்து கொள்கிறேனா? என் மனதை தேற்ற எதாவது வழி சொல்லுங்கள் சகோதரிகளே.

//காரணமே இல்லாமல் என்னை அவமானப்படுத்தி விட்டாளே // காரணங்கள் இல்லாமல் காரியங்கள் ஆவதில்லை சகோதரி. அவர் உங்களை அவமானப்படுத்தவே இல்லையே!! நீங்களாக எதற்கு அப்படிக் கற்பனை செய்துகொள்ள வேண்டும்!!!

//மருத்துவரிடம் அவள் இவ்விஷயத்தைக் கூறும்போது என்னிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாள்.// உங்கள் மேல் உள்ள கரிசனத்தில் சொன்னதாக எடுத்துக்கொள்ளுங்கள். தான் கர்ப்பமானது தெரிந்தால் நீங்கள் உங்கள் நிலையை நினைத்துக் கவலைப்படுவீர்களோ என்னும் எண்ணத்தில் மறைக்க நினைத்திருக்கலாம். இது மறைக்க முடியாத விடயம் என்பது அந்த நேரம் மனதில் உறைத்திருக்காது. தோழி உங்கள் நன்மைக்கு என்று நினைத்துச் செய்த காரியம்தான் இது என்பது என் எண்ணம்.

//மருத்துவர் மூலமாக தெரிந்து கொண்டேன்.// மருத்துவர்கள் ஒருவர் கதையை இன்னொருவரிடம் சொல்லக் கூடாது. குடும்பத்தாரிடம் கூட அவசியமில்லாமல் விடயங்களைப் பகிரக் கூடாது.

//மருத்துவர் சொன்னார் அவங்க முதல் தடவை வந்தபோதே நாங்க வந்ததை மட்டும் சொல்லுங்க. மருந்து வாங்கியதை சொல்ல வேண்டாம் என்று கூறியிருக்கிறாள்.// ஏதோ ஓரு காரணத்துக்காக அவர் கேட்டிருக்கிறார். டாக்டர் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்திருக்க வேண்டும். உங்களிடம் கர்ப்பம் என்பதைச் சொன்னது கூட பரவாயில்லை. இது... வேண்டாத விடயம். தப்பு.

//மறுமுறை மருத்துவரிடம் நான் சென்ற போது அவளோடு என்னை கம்பேர் செய்து (நீங்களும் அவங்களைபோல், அவங்களைப்போல் என்று....) பேசினார்கள். // கர்ர்ர்... உங்கள் தோழியை விட, இந்த மருத்துவர் செய்வது தப்பு. உங்கள் இருவரில் ஒருவருக்கும் நம்பிக்கைக்குரியவராக நடக்கவில்லை. நானானால் முதலில் டாக்டரை மாற்றுவேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இந்த டாக்டர் என் கதையையும் இன்னொருவரிடம் சொல்லுவார்.

இந்த விடயத்தை மனதிலிருந்து ஒதுக்கிவிட்டு அதே டாக்டரிடம் சிகிச்சையைத் தொடரலாம். தோழியிடம், டாக்டர் உங்களிடம் விடயங்களைச் சொல்லிவிட்டார் என்பதை மென்மையாக வெளிப்படுத்துங்கள். உங்களுக்கு இதனால் மனவருத்தம் இல்லை; சந்தோஷம் தான் என்பதைத் தெளிவுபடுத்தி உங்கள் வாழ்த்துகளைச் சொல்லுங்கள். நீங்கள் மறைத்தால், பாவம் தொடர்ந்தும் மறைக்க நினைத்து பொய்கள் சொல்ல வேஎண்டிய நிலைக்கு அவர் தள்ளப்படுவார். உங்கள் மனக் கஷ்டங்கள் அதிகரிப்பதற்கு நீங்களே காரணமாவீர்கள்.

அல்லாமல் டாக்டரை மாற்றுவதானாலும் தோழியிடம் டாக்டர் உங்களிடம் விடயங்களைச் சொல்லிவிட்டார் என்பதை மென்மையாக வெளிப்படுத்துங்கள். உங்களுக்கு இதனால் மனவருத்தம் இல்லை; சந்தோஷம் தான் என்பதைத் தெளிவுபடுத்தி உங்கள் வாழ்த்துகளைச் சொல்லுங்கள்.

அவர் ஒரு மனக் குழப்பத்தில் செய்த காரியம் இது. மன்னித்து மறந்துவிடுவது உங்கள் மனதை இலேசாக்கும். இதுதான் உங்கள் குடும்பத்திற்கும் தோழிக்கும் நல்லது.

‍- இமா க்றிஸ்

MADAM

PLEASE VISIT ''Sree karpagarachambikai'' Temple
after that you will be realise some miracle.it is really very true.
because of i had so happy things received from that temple.

இமா மேடம்
இப்படி கூட யோசிக்க வேணுமா? நம்ம மனச ரிலாக்ஷா வைக்க. great person நீங்க. என் தங்கை அந்த தோழியோட ஏற்பட்ட சில அனுபவங்களை என்னோட பகிர்ந்துகிட்ட பிறகு நீங்க நினைக்கிற மாதிரி என்னால இந்த விஷயத்தை லேசா எடுத்துக்க முடியலை. நானும் யாருக்கும் தெரிய கூடாதுன்னு நினைத்திருந்தால் இந்த மனகஷ்டம் எனக்கு வந்திருக்காது. நான் அப்படி நினைக்கவில்லை. என்னை மாதிரி கஷ்டப்பட வேண்டாமே என்று நான் நல்லது தான் செய்தேன். எனக்கு எப்படி ஆறுதல் தேடறதுன்னு தெரியலை. இதனால் என்னோட உடலும் பாதிக்கும். ட்ரீட்மென்ட் எடுத்திட்டு இருக்கும்போது இந்த கவலை நிச்சயமா எனக்கு வேண்டாததுதான்.

உங்கள் பதிவிற்கு நன்றி!
கர்ப்பரக்ஷாம்பிகை கோவிலுக்கு போய் விட்டு வந்தோம். இப்போதுதான் நெய்யும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம். நல்லது நிச்சயமாக நடக்கும். நம்பிக்கை இருக்கிறது.

//மருத்துவரிடம் அவள் இவ்விஷயத்தைக் கூறும்போது என்னிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாள்.// உங்கள் மேல் உள்ள கரிசனத்தில் சொன்னதாக எடுத்துக்கொள்ளுங்கள். தான் கர்ப்பமானது தெரிந்தால் நீங்கள் உங்கள் நிலையை நினைத்துக் கவலைப்படுவீர்களோ என்னும் எண்ணத்தில் மறைக்க நினைத்திருக்கலாம். இது மறைக்க முடியாத விடயம் என்பது அந்த நேரம் மனதில் உறைத்திருக்காது. தோழி உங்கள் நன்மைக்கு என்று நினைத்துச் செய்த காரியம்தான் இது என்பது என் எண்ணம்.// ~~ எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறீர்கள் அம்மா, இது வாழ்க்கையில் உங்களது அனுபவத்தையும் பக்குவத்தையும் காட்டுகிறது.. ஒருவர் செய்ததை இப்படியும் யோசிக்க‌ முடியும் என்பதை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். படித்ததும் மனம் அப்படியொரு பக்குவத்தை அடைந்தது.. ஆனால் எல்லோரையும் ஒரே மாதிரி நினைத்து விட‌ முடியாது. ஐந்து விரல்களும் ஒன்றாக‌ இருக்காது என்பதை போல். உண்மையில் பூர்ணிமா சொன்னது போல் நீங்க‌ கிரேட்.. உங்களது பதில்கள் அனைத்தும் எதார்த்தமாகவும் சாத்தியமாகவும் மிகவும் தெளிவாகவும் இருக்கும்.. அதனால் தான் சில‌ தோழிகள் உங்களது பதிலை முதன்மையாக‌ எதிர்பார்த்து உங்களை நினைத்து பதிவுகளை போடுகின்றனர். (என்னையும் சேர்த்து).. நீங்கள் மேன்மேலும் எங்களை உங்கள் சகோதரிகளாக‌ நினைத்து உங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி ~~

பூர்ணிமா !!

நடந்தது நடந்து விட்டது. வீணாக‌ குழம்பாதீர்கள்.. நன்மை விளைவித்தோருக்கு நன்மையே விளையும். நீங்கள் அவரை நினைத்து வருந்துவதை விட‌ அவருக்கு அந்த‌ மருத்துவம் கை கொடுத்தது போல் நமக்கும் கை கொடுக்கும் என்று நம்புங்கள். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.. கடவுள் எதாவது செய்தால் அதில் அர்த்தம் இல்லாமல் இருக்காது. உங்களுக்கு நிச்சயம் கூடிய‌ விரைவில் நல்லது நடக்கும். உங்கள் மனம் போல் உங்கள் வாழ்க்கை அமையும்.. நீங்களும் பிறரை போல் அந்த‌ உன்னத‌ செல்வத்தை பெற்று மகிழ்ச்சியாக‌ வாழ அந்த‌ இறைவனை வேண்டுகிறேன்.

விடுபட்டது (இமா அம்மா) : உங்கள் கருத்தில் இதுவரை எதிர்மறையான பதில்களையும் எண்ணங்களையும் பார்த்தில்லை.. ரியலி யூ ஆர் கிரேட் :‍) ஹாட்ஸ் ஆஃப் :‍)

- பிரேமா

பிரேமா மேடம்,
உங்க பதிவுகளை பார்க்கும்போது மனோ திடம் அதிகமாகுது. நன்றி. எனக்கு மனசு வலிக்குது மேடம். ஏன்னா குழந்தை இல்லங்கற விஷயம் என்னோட பலவீனம். அந்த விஷயத்தை தொட்டு யார் வேணும்னாலும் என் மனச புண்ணக்கிடறாங்க. இல்லைனா இவ்வளவு தூரம் நான் வேதனைப் பட வேண்டிய அவசியம் இல்லை. என்னோட நம்பிக்கை சீக்கிரம் என்னோட பலவீனமே பலமாக மாறும். என்னை bless பண்ணுங்க.

//பிரேமா மேடம்,// முதல் வார்த்தையே எனக்கு பிடிக்கவில்லை.. தோழி / சகோதரி என்று அன்பாக‌ அழையுங்களேன்.

நீங்கள் குழந்தை இல்லை என்பதையே நினைக்காதீர்கள். அது உங்களை இன்னும் பலவீனப்படுத்தும். நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள்.. முயன்றால் முடியாதது என்று ஏதுமில்லை..

// அந்த விஷயத்தை தொட்டு யார் வேணும்னாலும் என் மனச புண்ணக்கிடறாங்க.// இருக்கிறவர்கள் இல்லாதவர்களை பார்த்து இகழ்வது இயல்பு தான். இவ்வாறு உங்களை புண்படுத்தியவர்கள் நாளை உங்கள் குழந்தையை தூக்கி கொஞ்ச‌ தான் போகிறார்கள் என்பதை நீங்கள் உணர‌ வேண்டும்.. எனக்கும் ஒரு நாள் விடியும் என்றே நினையுங்கள். உங்களுக்கென்று ஒரு நாள் எழுதப்பட்டிருக்கிறது. அந்த‌ நாள் வெகு தொலைவில் இல்லை. நம்பிக்கையுடன் சிகிச்சையை தொடருங்கள்.. எத்தனையோ மருத்துவ‌ முறை வந்துவிட்டது. டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. எல்லாம் சாத்தியமே.

உங்கள் மன‌ அமைதியின்மை கூட‌ உங்களுக்கு எதிராக‌ செயல்பட‌ வாய்ப்புண்டு. அதனால் மன‌ நிம்மதியோடு சிகிச்சையை தொடருங்கள்.. உங்களுக்கு அந்த‌ செல்வம் விரைவில் கிட்டும். இறை பக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். மன‌ வலிமைக்காக‌ ஆஞ்சனேயரை வழிபடுங்கள்.

- பிரேமா

இந்த‌ ஸ்லோகத்தை தினமும் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் சொல்லுங்கள் :

கர்ப்பரட்சாம்பிகை சுலோகம்

தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திர பிரியபாமினி
விவாக பாக்யம் ஆரோக்யம்
புத்ரலாபம்ச தேஹிமே
பதிம் தேஹி சுதம் தேஹி
சௌபாக்யம் தேஹிமே சுபே
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே கர்ப்பரனுகே
காத்யாயிணி மஹாமாயே
மஹாயோகின்யதீஸ்வரி
நந்த கோப சுதம் தேவி
பதிம் மே குருதே நம

- பிரேமா

Elarudaiya nilamaium ipditha neenga feel pannathinga namma nallathu nenaithu soluvom athu namake mana kastam kudukura alauku perusa varum Elam samy um kumpidachu ini kadaul tha karunai kattanum 4 varudathtgirgu pinbu confirm as abort aeiduchu enna panna nanga 1 year before Karparatchambikai kovil Ku poeidu vanthom.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

//year before Karla watch am bikes kovil Ku poeidu vanthom // இந்த‌ கோவில் விபரங்களை தெளிவாக‌ கூறலாமே.

- பிரேமா

மேலும் சில பதிவுகள்