தோழிகளே எனக்கு மிகவும் மனசு வேதனையாக இருக்கிறது,
எல்லாருக்கும் சாதரணமா கிடைக்கிற சின்ன சின்ன விஷயம் கூட எனக்கு என்னவோ கிடைக்கவே மாட்டேங்குது இது வரை,
நிறைய கஸ்டங்கள் என் மனசுல, என கஸ்டம் வீட்ல உள்ளவங்க படுற கஸ்டம் இன்னும் நிறைய ,
நானும் எவ்ளோ தான் அதை மறைச்சி சிரிச்சாலும் மனசுல கஸ்டம் அழுத்தம் அதிகமாகும் போது அழுகை தான் வருது,
இதெல்லாம் சரியாகிடும்னு என்னதான் நினைச்சாலும் அது சரி ஆகாததுனால வலிக்குது. என்ன பாவம் பண்ணேன்னு தெரில எனக்கு எந்த நல்லதுமே நடக்க மாட்டேங்குது அந்த விரக்தில இப்பலாம் அதிக கோபம் படுறேன், அழறேன்,
தனிமையை விரும்புறேன், யாரையும் பிடிக்கல எதுவும் பிடிக்கல ஏன் இப்போ கொஞ்ச நாளா ரொம்ப கும்பிடற சாமியவே பிடிக்கல. எதுக்கு சாமி கும்பிடனும்னு தோணுது.
தியானம் பண்ணாகூட மனசு செட் ஆகல, அப்போ கூட மனசு வலில கண்ல தண்ணி வருது தானா.
எனக்கே என்னை பிடிக்கல இப்போ விரக்தியா பீல் பண்றேன். எனக்கு அதிர்ஷடமே இல்ல , எப்போ சரியாகும் என் நிலைமை , நான் நினைக்கிற விசயம் நடக்கணும் அப்போ தான் எனக்கும் நிம்மதி , எங்க குடும்பத்துக்கும் நிம்மதி கிடைக்கும்.
பொதுவா நான் இப்படி நினைக்கிற ஆள் இல்ல பாசிட்டிவா மட்டும் தான் பேசுவேன், அதுக்காகவே மத்தவங்க என்னை தேடி வருவாங்க , நானும் அவங்க மனசை நிம்மதியாக்குவேன், பட் என்னால என் விசயத்துல ஒரு ஸ்டேஜ்க்கு மேல தாங்க முடில.
என் பிரார்த்தனையை கடவுள் இது வரை நிறைவேற்றல,
உங்க எல்லாரோட பிரார்த்தனையாவது அவர் காதுல விழுதா பாக்கலாம்.
என் கஸ்டம் தீரணும்னு எல்லாரும் வேண்டிக்கோங்கப்பா,
ஜ யே 123
உங்கள் பெயர் என்னவேன்று தெரியவில்லை. அதனால் பொதுவாக தோழி/தோழா
என்று குறிப்பிடுகிறேன்.
//என்ன பாவம் பண்ணேன்னு தெரில எனக்கு எந்த நல்லதுமே நடக்க மாட்டேங்குது// இந்த பூமியில் பிறந்த யாரும் பாவம் செய்யவில்லை.நல்லது நடக்கவில்லை என்றால் பாவம் செய்ததாக அர்த்தம் இல்லை.உங்களுக்கு
இறைவன் பெரிதாக ஒரு சந்தோசத்தை தரப் போகிறார் என்று அர்த்தம்
//எனக்கே என்னை பிடிக்கல இப்போ விரக்தியா பீல் பண்றேன்//அப்படி எல்லாம்
ஃபீல் பண்ண கூடாது.
உங்கள் கஷ்டம் விரைவில் சரியாகும். நம்பிக்கையோடு இருங்கள் .
(nambikai athane ellam)
உங்களுக்கு பிடித்த விஷ்யத்தில் கவன்ம் செலுத்துங்கள்
Ja 123
தங்களை பற்றி எந்த தகவல்களும் இல்லை.. உங்கள் பதிவிலிருந்து நீங்கள் எவ்வளவு மனக்கஷ்டத்தில் உள்ளீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.. எதுவாக இருப்பின் மனதை லேசாக வைத்துக் கொள்ளுங்கள் (கொஞ்சம் கடினம் தான்).. உங்கள் பிரச்சனை என்ன என்பதை நீங்கள் சொல்லவில்லை.. ஒரு வேளை சொல்லியிருந்தால் தோழிகள் உங்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் கூறுவார்கள் அது கூட உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையலாம்.
தீர்க்க முடியாத பிரச்சனை என்பது இல்லை அனைத்திற்கும் தீர்வு உள்ளது. அது நாம் கையாளும் விதத்தில் மாறுபட்டு அமையும், அதனால் நீங்கள் எதை பற்றியும் யோசிக்காமல் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து அந்த பிரச்சனைகளை எதிர் கொள்ளுங்கள் பெண்கள் நினைத்தால் முடியாத காரியம் என்று ஏதும் இல்லை. துணிவுடன் இருங்கள்.. கடவுளை நம்புங்கள். உங்களை படைத்த அவருக்கு உங்களை வழி நடத்தவும் தெரியும்.
நீங்கள் உங்கள் பிரச்சனைகளிலிருந்து விரைவில் வெளிவர கடவுளை பிரார்த்திக்கிறேன்.
- பிரேமா
Ja 123
உஙளுடைய பெயர் முழுமையாக இல்லை அதை சரி பனுங்கள் அப்பறம் யாருக்கு தான் பிரச்சனை இல்லமால் இருகிறது எல்லாரும் அதை எதிர் கொனண்டு தான் வாழ்க்கையே நடுதுகின்றன நீங்கள் கவலை பட வேண்டாம் உங்களது பிரச்சனை சீக்கிரம் தீரும் நீங்கள் முதலில் மனதை அமைதியாக வைத்து கொள்ள முயற்ச்சி செயிங்கள்.உங்கள் மேலே நீங்களே நம்பிக்கை இழக்காதீர்.பிரச்சனை என்றால் அதற்க்கு தீர்வு என்று இருக்கும் முதலில் பிரச்சனைய இருக்குனு கவலை படுவதை விட்டு விடுங்கள் அமதியாக சில நிமிடம் இருந்து பிரச்சனைக்கு என்ன தீர்வு பன்னலாம் யோசியிங்கள். கன்டிப்பாக கடவுள் உங்களது பிரச்சனையே சீக்கிரம் தீர்த்து வைப்பார் தலர்ந்து விடதீர்கள் பலவீனம் ஆகதீர்கள் உங்களால் முடியும் பிர்ச்சனையே சரி செயிங்கள்
தாரணி
ரொம்ப நன்றி. தாமதமாக சொன்னதுக்கு சாரி,
//உங்களுக்கு இறைவன் பெரிதாக ஒரு சந்தோசத்தை தரப் போகிறார் என்று அர்த்தம் // அப்படிதான் இவ்வளவு நாளா நினைக்கிறேன் பட் மனசு வெறுத்து போச்சு,
\உங்கள் கஷ்டம் விரைவில் சரியாகும். நம்பிக்கையோடு இருங்கள்/ ம்ம் நன்றி.
(nambikai athane ellam)
உங்களுக்கு பிடித்த விஷ்யத்தில் கவன்ம் செலுத்துங்கள் /// சரி முயற்சி பண்றேன் நன்றி.
பைரோஸ்
உங்கள் ஆறுதலுக்கு நன்றி.
சில காரணங்களால் பெயர் போடல,
// கவலை பட வேண்டாம் உங்களது பிரச்சனை சீக்கிரம் தீரும்// நம்புறேன்.
கடவுள் உங்களது பிரச்சனையே சீக்கிரம் தீர்த்து வைப்பார் //அவ்ர் மேலயும் நம்பிக்கை போச்சு.. இருந்தும் காத்திருக்கேன்.
jadhagam
Hi frnds yarukavadhu jadhagathula baby kidaikadhunu solli baby kidaichuruka.
Jadhagathula sonnadhuku opposite ah edhavadhu nadandhurka.pls help panunga
.manase sari illa
அன்புள்ள ஜோதிசாலை
அன்புள்ள ஜோதிக்கு சோதிடம் ஒரு மாபெருங்கடல். மிகச் சிறந்த
சோதிடர்களும் சிலர் வாழ்வில் இருக்கும் வரப்போகும் கெடுதல்களை
எக்காரணம் கொண்டும் அவர்களிடம் கூற மாட்டார்கள். நாம் கணிக்கலாம் ஆனால் பிறந்த நேரத்தைக் குறிப்பதில் பெற்றோரின் தவறு
இருந்தால், நெடுநாளாகத் திருமணம் ஆகாததால் குற்றமுள்ள சாதகத்தை
மாற்றி எழுதினால் மேலும் சில காரணங்களும் உண்டு(அவற்றை இங்கே
விவரிக்க விரும்பவில்லை) அவற்றால் அந்த சாதகரோடு சம்பந்தப் பட்டவர்களையும் அது தாக்கும். வெளிநாடுகளில் நேரக் கணக்கு இவையும் (இந்திய நேரத்திற்கு அந்த நேரத்தினை மாற்றிக் கணக்கிடனும்)
காரணமாகும். எனவேதான் தமிழர்களில் பாதிப் பேர் குலதெய்வத்தின் கோவிலில் பூ கட்டிப் போட்டு திருமணங்களை முடிவு செய்வார்கள்.
சில சோதிடர்கள் குறைகளுக்கு மிகச் சிறந்த பரிகாரங்களையும்
அவற்றை எளிமையாகச் செய்கின்ற முறைகளையும் கூறுவார்கள்.
நாம் என்ன தான் கணக்கு போட்டாலும் இறுதியில் இறைவனின் தீர்ப்பே
நமக்குக் கிடைக்கும் என்பது தான் விதி, கிடைக்காது நடக்காது என்று
எதிர்மறையானவற்றைத் தீர்மானமாகக் கூற மாட்டார்கள். அதை நாசுக்காக மறைமுகமாகத் தான் கூறுவார்கள். சிக்கலைத் தீர்க்க
முடியும் என்று தெரிந்தால் அதையும் கூறத் தயங்க மாட்டார்கள்.
இந்த விஷயத்தில் முன்னோர் சாபம் இருந்தால் அதற்கும் பரிகாரம்
கூறுவார்கள், இம்மாதிரியான பிறரின் அந்தரங்கவிஷயங்களை
இணையத்தில் நீங்கள் கேட்பது மிக மிகத் தவறானது என்பது என்கருத்து.
ஒரு தாய்க்குப் பிறந்த இரட்டையர்களின் வாழ்வில் எத்தனை மாற்றங்கள்.
சில தொலைக்காட்சிகளில் இப்படிப்பட்ட உங்கள் கேள்விகளுக்கு விடைகளுக்கு (சோழி போட்டுப் பார்த்து என்ன காரணம் என்று கூறி)
பரிகாரங்களும் சொல்லப் படுவதை நீங்கள் அறிவீர்கள். அவற்றில்
முயன்று பாருங்கள். உங்கள் வினாக்களுக்கு விடை கிடைக்கும் ,
பரிகாரமும் கிடைக்கும், நீங்கள் வேண்டியதும் கிடைக்க வாழ்த்துக்கள்
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
மன அழுத்தம்
வணக்கம் தோழிகளே ,சிறு வயதில் இருந்து அதிகமான பிரச்சனைகள்,கவலைகள் சந்தித்திருக்கிறேன் நான்..என்னுடைய அம்மா தான் என்னையும் என்னுடைய தம்பியையும் வளர்த்தார் ,என்னுடைய அப்பா பொறுப்பில்லாத மனுஷர்.என்னுடைய அப்பாவின் குடிபழக்கத்தினால் என்னுடைய அம்மா இறந்து விட்டார் ,அதுவரை அம்மாவின் அரவணைப்பில் இருந்த நானும் தம்பியும் அநாதையானது போல் உணர்ந்தோம்.உறவினர்கள் பேருக்கு மட்டுமே இருந்தார்கள் ,அப்பா அவர்விருப்பபடியே தான் இருந்தார் ,தம்பியும் எதையும் என்னிடம் share செய்வதில்லை ,நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன் என்னுடைய இருபத்தி ஆறாவது வயதில் .திருமணத்திற்கு யாரும் சம்மதிக்கவில்லை தம்பியை தவிர . தம்பியும் திருமணம் செய்து கொள் வீட்டில் பங்கு வேண்டாம் என்று எழுதி தந்துவிட்டு போ என்றான். திருமணத்தின் போது எங்களிடம் ஒன்றும் இல்லை படிப்பை தவிர இருவரும் PG முடித்திருந்தோம் .என்னவர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளவில்லை ,என்னவரும் வெளிநாட்டு வேலைக்காக போனார் ,நான் தனியாக தான் இருந்தேன்,இப்போது என்னவருடன் தான் இருக்கிறேன் ஆனாலும் எனக்கு அதிகமான கோவம் வருகிறது,self confident இல்லை, பழைய நினைவுகளையும் என்னுடைய அம்மாவையும் நினைத்து அழுகிறேன் .கோவத்தில் கையில் உள்ள பொருட்களை உடைகிறேன்,உடைத்தபின் வருத்தபடுகிறேன்,சில நேரம் என்னையே காயபடுதிக்கொள்கிறேன்.என்னவர்யா என்னை திட்டுவது கூட இல்லை. யார் மேலயும் எனக்கு நம்பிக்கை இல்லை.(என்னவரை தவிர)நாம் உண்மையாக பேசினாலும் மற்றவர்களிடம் உண்மை இல்லை அவர்கள் நம்மையே காயபடுதிகிரார்கள் என்று நான் நினைக்கிறன் .நான் என்னை செய்ய எனக்கு உதவி செய்வீர்களா
madam
madam
ungaluku kadavul nambikai undaa...
rahul
rahul
கடவுள் நம்பிக்கை நிறைய இருக்கு ராகுல் ,வருத்தமும் இருக்கு கடவுள் மேல